அலைவரிசை 52

Image
  “எந்த ஒரு வேலையையும் செய்யுறதுக்கு முன்னாடி யோசிக்கிறதுல அர்த்தம் இருக்கு... ஆனா செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம் ஏன்டா செஞ்சோம்னு யோசிக்கிறது முட்டாள்தனம்... அதே மாதிரி ஒரு முடிவெடுத்துட்டா அதை ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணுங்க... சரியோ தப்போ எடுத்த முடிவுல உறுதியா இருக்குறவங்க தான் தொழில்லயும் சரி, லைஃப்லயும் சரி முன்னேறிப் போவாங்க... இண்டிசிஷிவ் நேச்சர் அதாவது முடிவெடுக்க தயங்குற குணம் இருக்குறவங்க எந்த முடிவுலயும் உறுதியா நிக்கவும் மாட்டாங்க... அவங்களை நம்புறது மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்குறதுக்குச் சமம்... சோ சரியோ தப்போ எதையும் செய்யுறதுக்கு முன்னாடி தீர யோசிச்சு முடிவெடித்து டைம்கு செஞ்சு முடிங்க... அதோட விளைவுகள் எப்பிடி இருந்தாலும் அதை ஃபேஸ் பண்ண தயாராகுங்க”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் க்ராண்ட் பேலஸ் ஹோட்டல், அடையார்... நான்கு ஏக்கரில் பரந்து விரிந்த அந்த ஹோட்டலின் பார்ட்டி ஹால் டி.ஜேவின் இசை வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.  தனஞ்செயனும் அஞ்சலியும் தனது திருமண நிகழ்ச்சிக்காக ஹோட்டலின் அறைகளை புக் செய்திருந்தனர். முந்தைய தினம் மெஹந்தி நிகழ்

அலைவரிசை 44

 


“பிருத்வி மாமா அடிக்கடி சொல்லுற வார்த்தை என்ன தெரியுமா? நான் நவிக்குக் குடுத்த மாதிரி எந்தப் புருசனும் அவனோட பொண்டாட்டிக்கு சுதந்திரம் குடுத்திருக்க மாட்டான்ங்கிறது தான்... அவர் அப்பிடி சொல்லுறப்ப எனக்குச் சிரிப்பு வரும்... இன்னும் எத்தனை வருசத்துக்கு ஆம்பளைங்க அவங்க தான் பொண்ணுங்களோட சுதந்திரத்துக்கு முதலாளினு நினைச்சுப்பாங்க? உலகத்துல பிறக்குற எல்லா மனுச உயிருக்கும் ஜெண்டர் டிஃபரன்ஸ் இல்லாம தனக்குப் பிடிச்ச மாதிரி வாழுற சுதந்திரம் பை பெர்த்லயே உண்டு... மனுசங்க எல்லாரும் சமமானவங்க தானே... சமமானவங்க எப்பிடி ஒருத்தருக்கு ஒருத்தர் சுதந்திரம் குடுத்துக்க முடியும்? எங்க சுதந்திரத்த கேட்டு வாங்க வேண்டிய கட்டாயமோ, ஒருத்தர் இன்னொருத்தருக்குக் குடுக்க வேண்டிய கட்டாயமோ வரும் தெரியுமா? எந்த இடத்துல அடிமைத்தனம் இருக்குதோ, எங்க ஒருத்தர் இன்னொருத்தரால ரெண்டாம்பட்சமா குறைச்சு மதிப்பிடப்படுறாங்களோ அங்க தான் சுதந்திரத்த போராடியோ கேட்டோ வாங்கணும்... ஃபார் எக்சாம்பிள், பிரிட்டிஷ் பீபிள் நம்மளை அடிமையா நடத்துனதால நம்ம போராடி சுதந்திரம் வாங்குனோம்... எங்க வீட்டுல எனக்கு எல்லா சுதந்திரமும் குடுத்திருங்காங்கப்பானு சொல்லுற ஒவ்வொருத்தரும் இத பத்தி யோசிங்க”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

“நான் சொன்னா நீ நம்ப மாட்டியா ஷ்ரவன்? அந்தப் பொண்ணும் சரணும் பேசிக்கிட்டத ஆபிஸ் ஸ்டாஃப்ஸ் பாத்துருக்காங்க... அவங்க காஸிப் பேசுறத கேட்டுட்டு தனா எனக்கு இன்ஃபார்ம் பண்ணுனார்”

ஷ்ரவனிடம் நிகிதா – சரண் சந்திப்பு குறித்து கூறினான் கேசவ். 

“அவன் பேசுனான்ங்கிறதுக்காக நிகிதாவ எப்பிடி தப்பா நினைக்க முடியும்?”

“ஊப்ஸ்! உங்க ரெண்டு பேருக்கும் அறிவே இல்லடா... அவ ட்ராமா பண்ணுறான்னு ஓப்பனா தெரியுது... ஆனா நீங்க ரெண்டு பேரும் அவ விசயத்துல நான் என்ன சொன்னாலும் நம்பக்கூடாதுனு பிடிவாதமா இருக்கிங்க” எரிச்சல் மண்ட கூறினான் கேசவ்.

“அப்பிடி இல்ல கிரிஷ்... இது ஒரு பொண்ணோட கேரக்டர் சம்பந்தப்பட்ட விசயம்... எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேச முடியாதுல்ல... அதோட நீரவ் அவளை ரொம்ப லவ் பண்ணுறான்டா”

“லவ்வாம் லவ்... மண்ணாங்கட்டி லவ்... அவன் மட்டும் உண்மையா லவ் பண்ணுனா போதுமா? அவளும் அந்தளவு உண்மையா இருக்கணும்ல” 



“லவ் பண்ணுறவனுக்குத் தெரியாதா கிரிஷ்?”

“காதலுக்குத் தான் கண்ணு, மூக்கு, வாய், அறிவு ஒன்னுமே இல்லையே... அப்ப எப்பிடி அவனுக்குத் தெரியும்?”

எளிதில் யாரையும் நம்பாத குணம் கேசவுடையது. அதனாலே அவன் நிகிதாவைத் தேவையின்றி சந்தேகப்படுகிறான் என எண்ணினர் ஷ்ரவனும் நீரவும்.

கூடவே செல்வநிலை கண்டு பழகுவதில் அவன் அப்படியே பத்மானந்தின் வாரிசு. எனவே கேசவும் நிகிதா பணக்காரப்பெண் இல்லை என்ற காரணத்தால் வேண்டுமென்றே அவளை நிராகரிக்கிறான் என்ற எண்ணமும் தோழர்களுக்கு உண்டு.

இருப்பினும் தனஞ்செயன் ஏன் பொய் சொல்லப்போகிறான் என்ற கேள்வி ஷ்ரவனுக்குள் உதயமானதால் வேறு வழியின்றி நிகிதாவிடமே அதை பற்றி விசாரித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

அவனிடம் நிகிதாவின் மொபைல் எண் இருப்பதால் உடனே அவளது எண்ணுக்கு அழைத்தவன் லவுட் ஸ்பீக்கரில் போட்டான்.

“சொல்லுங்கண்ணா”

“உன் கிட்ட ஒரு கேள்வி கேப்பேன் நிகிதா... நீ உண்மைய மறைக்காம சொல்லணும்”

“என்ன விசயம்ணா?”

“உன்னை சரண் மீட் பண்ணுனானா?”

மறுமுனை அமைதியாகிவிடவும் கேசவ் வெற்றிப்புன்னகை பூத்தான். ஆனால் அவனது புன்னகை மாயமாகும் வண்ணம் ஒரு பதில் கூறினாளே நிகிதா.

“ஆமாண்ணா! ஆபிஸ்ல வந்து என்னை மீட் பண்ணுனார்”

“என்ன பேசுனான் அவன்?”

“அவங்க பெரியப்பா எங்க லவ்வை ஒத்துக்க மாட்டார்... நீரவ் லைஃபை விட்டு விலகிடுனு மிரட்டுனார்ணா... அவங்கப்பாவை சமாளிச்சு நீரவ் என்னை கல்யாணம் பண்ணிப்பார்னு சொல்லிட்டு நான் வெளிய வந்துட்டேன்”

சாமர்த்தியமாக நடந்ததை தனக்குச் சாதகமாக திரித்துக் கூறினாள் நிகிதா. நீரவையும் விட மனமில்லை. அதே சமயம், சரணையும் பகைத்துக்கொள்ளக்கூடாது.



“நல்லதும்மா.. அவனுக்கு எப்பிடி உங்க லவ் மேட்டர் தெரிஞ்சுதுனு புரியல... பட் அவன் இனிமே உன்னை மீட் பண்ண வந்தா எனக்கோ நீரவுக்கோ இன்ஃபார்ம் பண்ணு”

“சரிண்ணா”

அழைப்பைத் துண்டித்தான் ஷ்ரவன். கேசவ் இப்போதும் நிகிதாவை நம்பவில்லை.

“லுக் கிரிஷ்... எல்லாரையும் சந்தேகக்கண்ணோட பாக்காதடா... சாரி... பாக்காத”

அறிவுரை கூறிவிட்டு நகர்ந்தான் ஷ்ரவன்.

கேசவோ நிகிதாவின் நாடகத்தில் எரிச்சலுற்று பற்களைக் கடித்தான்.

ஷ்ரவன் அச்சம்பவத்தை அப்படியே விட்டுவிடவில்லை. நீரவிடம் மறைக்காமல் கூறிவிட்டான். நீரவ் அடைந்த சினத்துக்கு அளவில்லை.

வீட்டுக்கு வந்ததும் சரண் எங்கே என தேடி சென்றவன் அவனது அறைக்குள் புகுந்து சரமாரியாக சரணை அடிக்கத் துவங்கினான்.

“டேய் ஏன்டா என் மகனை அடிக்குற?” என அவனை விலக்க சுசித்ரா எடுத்த முயற்சிகள் யாவும் வீணாயின.

அவனை அடித்து நொறுக்கி கை வலித்த பிறகு விலகிய நீரவ் சரணை எச்சரித்தான்.

“இன்னொரு தடவை உன் பெரியப்பா ஏவுனார்னு என் நிகிதா கிட்ட நீ பேசுனேன்னா உன் உயிர் உனக்குச் சொந்தமில்ல”

சொன்னதோடு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அன்றைய இரவு பத்மானந்த் வந்ததும் வீடே சுசித்ராவின் கூப்பாட்டால் போர்க்களமானது. கேசவும் நீரவும் கை கட்டி நடப்பதை கமலானந்துடன் சேர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க கார்கி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார்.

“ஆளாளுக்கு என் பிள்ளைய அடிக்கிறத கேக்குறதுக்கு இங்க யாருமில்ல... இப்பிடியே நடந்துச்சுனா என்னால இந்த வீட்டுல இருக்க முடியாது... எங்களோட ஷேர்சை பிரிச்சுக் குடுத்துடுங்க... நாங்க தனியா போயிடுறோம்”

அவரது கூப்பாட்டாலும், சரணின் காயத்தாலும் எரிச்சலுற்ற பத்மானந்த் நீரவை அழைத்து நடந்தது என்னவென விசாரித்தார். ஆனால் கோபத்தோடு விசாரித்தார்.

“என் நிகிதா கிட்ட இவன் ஏன் பேசுனான்? பேசுனா நான் இப்பிடி தான் நடந்துப்பேன்”

“சரண் உன் அண்ணன்... அவனை விட உனக்கு அந்தப் பொண்ணு முக்கியமா போயிட்டாளா?”

“ஆமா”

வீடே அதிரும்படி கத்தினான் நீரவ்.

அந்தளவுக்கு நிகிதா மீதான காதலில் அவனது அறிவு மழுங்கிவிட்டிருந்தது. அது பத்மானந்தின் கோபத்தைத் தூண்டிவிட வாழ்நாளில் முதல் முறையாக நீரவிடம் கைநீட்டிவிட்டார் அவர்.

அவனது கன்னத்தில் பளாரென அறைந்த போது பத்மானந்தின் மனம் என்ன பாடுபட்டது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு 

“இன்னொரு தடவை அந்தப் பொண்ணோட பேரை கூட நீ சொல்லக்கூடாது... அந்தப் பொண்ணு தான் வேணும்னா கம்பெனிய, ஷேர்ஸை மறந்துடு... பத்து பைசா சொத்துல இருந்து உனக்கு வராது” என்று எச்சரித்துவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டார் பத்மானந்த்.

தந்தை அறைந்த அதிர்ச்சியை நீரவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவனுக்கு கேசவ் ஆறுதல் கூற விரக்தி புன்னகையுடன் அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

கேசவ் தனது அறைக்கு வரும் போது பத்மானந்திடம் பேசிக்கொண்டிருந்த சரண் அவனது கண்களில் பட்டான்.

“நீரவால என் மானம் போறதுல எனக்கு இஷ்டமில்ல சரண்... நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது... அந்தப் பொண்ணு இனிமே நீரவ் பக்கம் வரக்கூடாது... டூ சம்திங்”

“நீங்க கவலைப்படாதிங்க பெரியப்பா... நான் பாத்துக்குறேன்” என சரண் உத்திரவாதம் கொடுப்பதை கண்டு யோசனையோடு தனது அறைக்குச் சென்றான் கேசவ்.

பின்வந்த நாட்களில் நீரவும் பத்மானந்தும் அவர்களின் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காமல் நடமாட கேசவ் சரணைக் கண்காணிக்க ஆரம்பித்தான்.

அவனது செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருப்பதை ஷ்ரவனிடம் பகிர்ந்து கொண்டான். பத்மானந்தும் ஒரேயடியாக சரண் பக்கம் சரிவது அவனுக்கு வருத்தமளித்தது.

அந்த நிகிதாவுக்குப் பணம் இருந்தால் தனது தமையனுக்கு அவள் உண்மையாக இருப்பாள். அவள் தான் நீரவின் மகிழ்ச்சி என்று தெரிந்த பிறகு ஏன் அவளையும் நீரவையும் பிரிக்க வேண்டும்?

கேசவ் அந்த முடிவுக்கு வந்துவிட்டான். அதை பத்மானந்திடம் கூறிய போது அவர் இளையமகனையும் காய்ச்சி எடுத்துவிட்டார்.

“அவன் முட்டாள்னா நீ அடிமுட்டாளா இருக்க... வாகமன்ல ஏதோ ஒரு மூலைல கிடந்த அந்த பொண்ணு எனக்கு மருமகளா? நெவர்... ஐ வோண்ட் அக்ரி தெயர் லவ்”

“நீரவுக்காக கொஞ்சம் யோசிங்க டாட்”

“ரிமெம்பர் திஸ்... எனக்கு பிசினஸும் என் கௌரவமும் தான் முக்கியம்... இந்த பிசினஸும் பணமும் குடுத்த கௌரவபோதைய உங்க யாரோட காதலும் குறைக்காது மகனே.. இறங்கி வரவேண்டியது நான் இல்ல... உனக்கு பத்து நிமிசத்துக்கு முன்னாடி பிறந்தானே ஒருத்தன், அவன் தான்”

“நீரவ் ஏதாவது செஞ்சுப்பானோனு பயமா இருக்கு டாட்”

“அவன் அந்த முடிவுக்கு வந்தாலும் நான் ஒன்னும் பண்ணமுடியாது”

நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார் பத்மானந்த்.

இந்தப் போராட்டத்தில் மனம் நொந்தவர் என்னவோ கார்கி தான். கணவன் ஒரு பக்கம், பிள்ளை ஒரு பக்கம்! யாருக்கு ஆதரவாக நின்றாலும் இன்னொருவருக்கு எதிராக நிற்க வேண்டிய கையறுநிலை அவருக்கு.

அவருக்காக தான் கேசவ் கூட நிகிதாவை ஏற்றுக்கொள்ளும்படி தந்தையிடம் நீரவுக்காக பரிந்து பேசினான். அவன் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைய என்ன செய்வதென அவனுக்குப் புரியவில்லை.

அதே நேரம் நீரவ் நிகிதாவை அடிக்கடி வாகமனில் சந்திக்க செல்வான். அவர்களின் காதல் ஆழமாவதாக அவன் நம்ப நிகிதாவோ எங்கே பத்மானந்த் சொத்தும் கிடையாது ஒன்றும் கிடையாதென இவனைத் துரத்திவிடுவாரோ என்ற பயத்தோடு அவனிடம் பழகினாள்.

தன் மீதான மயக்கம் தீராதவண்ணம் அவனிடம் நெருங்க எத்தனையோ முறை அவள் முயன்றும் நீரவின் சுயக்கட்டுப்பாடு அதை அனுமதிக்கவில்லை.

காதல் என்பது கன்னத்து முத்தத்தோடு போதும்; கல்யாணத்திற்கு பிறகே மற்ற அனைத்தும் என்ற கொள்கையில் அவன் வழுவவில்லை.

ஆனால் நீரவின் அருகாமை நிகிதாவின் இளமையைச் சோதித்தது. காதல் என்ற போர்வையில் அவனிடம் நெருங்க எத்தனையோ முறை முயன்று தோற்றாள்.

“ச்சே! இவ்ளோ அழகான பொண்ணு பக்கத்துல இருந்தும் இவனால எப்பிடி கண்ட்ரோலா இருக்க முடியுது? இவன் ஒரு உணர்ச்சிக்கெட்ட ஜென்மமா இருப்பானோ?”

வெட்கமின்றி அவளது மனம் யோசித்ததை அவள் வெளியே சொல்லவில்லை. அவளுக்கு அவனிடம் தோன்றிய உணர்வு காதலில்லை காமம் என்பதை நீரவ் புரிந்துகொண்டால் விலகிவிடுவானே என்ற பயம் அவளது ஆசைக்குக் கடிவாளம் இட்டது.

இவை அனைத்தையும் தனக்கு வேண்டிய ஒருவன் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்தான் சரண்.

அந்நபரிடமிருந்து நிகிதாவின் மொபைல் எண்ணை எப்படியோ வாங்கியவன் அவளை நீரவிடமிருந்து விலகி தன்னிடம் தஞ்சமடைய செய்வதற்கான அஸ்திரங்களை ஒவ்வொன்றாக பிரயோகிக்க ஆரம்பித்தான்.

நிகிதாவை மொபைலில் தொடர்பு கொண்டவன் “பயத்தோட நீரவ் கூட பழகுற போல? உன் பயம் நியாயமானது தான் நிகி... ஏன்னா பெரியப்பா அவரோட முடிவுல ஸ்ட்ராங்கா இருக்குறார்... நீரவுக்கு கடைசில எதுவும் மிஞ்சாது” என்க

“எந்த அப்பாவும் மகனை அப்பிடியே விட்டுட மாட்டாங்க... நீங்க என்னை குழப்பலாம்னு நினைக்காதிங்க சார்” என்றாள் அவள் அலட்சியமாக.

“அப்பிடியா? நீரவுக்கே அந்த சந்தேகம் இருக்க போய் தான் உன் கிட்ட நெருங்காம விலகி நிக்குறான்”

இப்போது நிகிதாவிடம் பதிலில்லை.

“என்ன பேச்சுமூச்சு இல்ல? இவ்ளோ அழகான பொண்ணு வாண்டடா நெருங்கி வந்தும் அவன் விலகி நிக்குறான்னா என்ன காரணம்? உனக்காக அவங்கப்பாவ பகைச்சுக்க விரும்பலனு அர்த்தம்”

அவனது பேச்சில் நிகிதா கதிகலங்கினாள். இப்படி ஆகிவிட்டால் நீரவ் தன்னைவிட்டு போய்விடுவானே என்ற பயத்தில் அடிவயிறு கலங்கியது.



“நீங்க.... பொய்....” என அவள் தடுமாற 

“அப்பவும் உனக்கு நான் ஆதரவா இருப்பேன்” என்றான் சரண்.

நிகிதா அமைதியாகிவிட “உன்னால என்னை நம்ப முடியல தானே? இது வரைக்கும் நீரவ் உனக்குனு என்ன செஞ்சிருக்கான்? சொல்லு... நான் நினைச்சா உன்னை மகாராணி மாதிரி வச்சிப்பேன்” என்றான் அவன்.

“எதையும் சொல்லுறது ஈஸி... செய்யுறது கஷ்டம்”

சட்டென பதிலுரைத்தாள் நிகிதா.

“நான் செஞ்சு காட்டுறேன்... உனக்காக முழுசா ரெண்டு கோடி குடுக்குறேன்... நீ என் கூட வந்துடுறியா?”

இம்முறை அவன் பிரயோகித்த அஸ்திரத்தில் நிகிதா அடியோடு வீழ்ந்தாள். சந்தோசத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் 

“உங்களால செய்ய முடிஞ்சா நம்புறேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

சரண் வெற்றிப்புன்னகையோடு மொபைலைப் பார்த்தபடி திரும்பியவன் அங்கே நின்று கொண்டிருந்த கமலானந்தைக் கண்டதும் அதிர்ந்தான்.

“யாருக்குடா ரெண்டு கோடி குடுக்குறதா பேசிக்கிட்டிருந்த?” என அவர் உறும விக்கித்துப் போனான் சரண்.

“அப்பா... ரெண்டு கோடி... நிகிதா...” என அவன் தடுமாற

“யாரு அந்த நிகிதா?” என மீண்டும் உறுமலோடு கேட்டார் கமலானந்த்.

“நிகிதா தான் நீரவோட லவ்வர்” 

“அவ கிட்ட உனக்கு என்ன பேச்சு?”

அவரிடம் எதையும் மறைக்க விரும்பாமல் அனைத்தையும் கூறியவன் இன்னும் அவர் முறைப்பதை நிறுத்தாமல் இருக்கவும் தனது பக்கத்து விளக்கத்தைக் கூற ஆரம்பித்தான்.

“நான் ஒன்னும் நிகிதாவ லவ் பண்ணலப்பா... பட் ஐ வாண்ட் ஹெர்... ஏன்னா நீரவ் அவளை லவ் பண்ணுறான்... அவன் லவ் பண்ணுறவளை நான் அடைஞ்சிட்டா அதை விட அவனுக்கு வேற அவமானம் இருக்காது... பெரியப்பா நிகிதா பிரச்சனைய சால்வ் பண்ணுறதுக்கு என்ன வேணும்னாலும் செய்ய ரெடியா இருக்குறார்... அவர் கிட்ட டூ க்ரோர்ஸ் அவளுக்குச் செட்டில்மெண்ட் பண்ணுறதுக்காக வாங்கி நானே அவளுக்கு குடுக்குற மாதிரி செட் பண்ணிட்டேன்னா அவ என் கிட்ட விழுந்துடுவா... பெரியப்பாவோட நம்பிக்கையையும் இதனால ஜெயிச்சிடுவேன்... நீரவுக்கும் அசிங்கமாகிடும்... அவனால இதை தாங்கிக்கவே முடியாது... மனசு உடைஞ்சு அவன் சாகுறதுக்குக் கூட வாய்ப்பு இருக்குப்பா... அவன் செத்துட்டான்னா கேசவும் பெரியப்பாவும் நொந்து போயிடுவாங்க... பெரியம்மாவ பத்தி கேக்கவே வேண்டாம்... அப்புறம் எல்லாம் நம்ம கைக்கு வந்துடும்”

அவனது விளக்கத்தைக் கேட்டதும் கமலானந்தின் முகம் பூரித்துப் போனது.

“சபாஷ்! இப்ப தான் நீ என் மகன்னு ப்ரூவ் பண்ணிருக்க... மூத்தவன் மூத்தவன்னு எங்கம்மா எல்லாத்தையும் அண்ணனுக்கே குடுத்தாங்க... அதே மாதிரி உனக்கும் நடக்கக்கூடாது... நீ நடக்கவிடமாட்டனு நம்புறேன்... உனக்கு எதுவும் ஹெல்ப் வேணும்னா நான் இருக்கேன்... தயங்காம உன் வேலைய ஆரம்பி சரண்... இதுல யார் தலை உருண்டாலும் நமக்கு லாபம் தான்”

தந்தையை மகிழ்ச்சியுடன் கட்டியணைத்தான் சரண்.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையைக் கேட்ட இன்னொரு ஜீவன் பூமி இரண்டாக பிளந்தது போல அஞ்சி நடுங்கி நின்றது. அது வேறு யாருமல்ல, சுசித்ரா தான்.

சுசித்ராவுக்குத் தமக்கையின் மைந்தர்கள் மீது கோபம் இருக்கலாம். சகோதரி மீது பொறாமை இருக்கலாம். மாமா மீது வருத்தம் இருக்கலாம்.. ஆனால் அதற்காக அவர்கள் யாருமே சந்தோசமாக வாழக்கூடாது என திட்டம் தீட்டுமளவுக்கு அவர் கொடியவர் இல்லை.

என்ன இருந்தாலும் சரணைப் போலவே நீரவையும் கேசவையும் அவர் கைகளில் தூக்கி வளர்ந்திருக்கிறாரே! அவரது மனம் கணவர் மற்றும் மைந்தனின் இக்கொடிய திட்டத்தால் பயம் கொண்டுவிட்டது.

Comments