அலைவரிசை 55

Image
  “அம்மாவும் நீரவும் ஒரே மாதிரி கேரக்டர்... ரெண்டு பேரும் மத்தவங்களை ஈஸியா நம்பிடுவாங்க... அவங்க யாரை பத்தியும் நெகடிவா பேசி நான் பாத்ததில்ல... சுசித்ரா சித்தி அம்மா கூட சண்டை போட்டப்ப கூட அதை அம்மா தப்பா பேசல... ரெண்டு பொண்ணுங்க இருக்குற குடும்பத்துல ஒருத்திக்கு மட்டும் ப்ரையாரிட்டி குடுத்தா இன்னொருத்திக்கு ஆதங்கம் வர்றது நியாயம் தானேனு என் கிட்ட ஆர்கியூ பண்ணுனவங்க என் அம்மா... நீரவ் அவங்களோட ஜெராக்ஸ் காப்பி... அவன் இது வரைக்கும் மோசமானவன்னு சொன்ன ஒரே ஒரு ஆள் சரண் மட்டும் தான்... எத்தனையோ தடவை சரணைப் பத்தி அவன் எடுத்துச் சொல்லியும் அப்பா புரிஞ்சிக்கல... எப்பவும் பாசிட்டிவா பேசுறவங்க யாரை பத்தியும் நெகடிவா ஒன்னு சொன்னா அதை காது குடுத்து கேக்கணும்... உண்மையா இல்லையானு யோசிக்கணும்... இல்லனா அதுக்கு நம்ம பெரிய விலை குடுக்க வேண்டியதா இருக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் பத்மானந்த் கேசவின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து குமாரவேலுவைச் சந்திக்க ஒப்புக்கொண்டார். அந்தச் சந்திப்பில் 4G வழக்கில் கார்கி குழுமத்தின் நற்பெயருக்கு எவ்வித கலங்கமும் நேராமல் சாம

அலைவரிசை 48

 


“ரிலேசன்ஷிப்ல பிரச்சனைகள் வரும்... அப்பிடி பிரச்சனை வர்றப்ப அதுக்கு ரியாக்ட் பண்ணுற விதத்துல தான் நம்மளோட மெச்சூரிட்டி இருக்கு... சில பேர் கோவத்துல வார்த்தைய விட்டுருவாங்க... அப்பிடி பண்ணுனா பிரச்சனை தீர்ந்ததுக்கு அப்புறம் அவங்களால சம்பந்தப்பட்டவங்க முகத்துல முழிக்கவே முடியாது... ஒருத்தரை உடம்புல அடிச்சா கூட அந்த வலி சீக்கிரம் மறைஞ்சிடும்... பட் வார்த்தையால அடிக்குற வலி இருக்கே, அத அவ்ளோ சீக்கிரமா மறக்க முடியாது... முடிஞ்சளவு பிரச்சனைகள் வர்றப்ப காதையும் வாயையும் யூஸ் பண்ணாம இருந்துட்டா நல்லது... அப்பிடி செஞ்சுட்டா தேவையில்லாத எதும் நம்ம காதுல விழாது... மோசமான வார்த்தை எதையும் நம்ம வாய் உச்சரிக்காது... இந்த அட்வைஸ் நல்லா இருக்கு, ஆனா இத ரியாலிட்டில ஃபாலோ பண்ணுறது ரொம்ப கஷ்டம்னு எனக்கே நல்லா தெரியும்... ஆனா ஒன்னு, ஃபர்ஸ்ட் டைம் ஃபாலோ பண்ணுறப்ப தான் கஷ்டமா இருக்கும்... அப்புறம் நமக்குப் பழகிடும்”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

நீரவின் மரணத்தைத் தொடர்ந்து கார்கியும் தற்கொலை செய்து கொண்டது ஊடகங்களின் வாய்க்கு அவல் போட்டது போலானது.

அனைவரின் கவனமும் சர்ச்சையை எழுப்பிய அலைக்கற்றை விவகாரத்தின் மீது பாய்ந்தது.

பத்மானந்த் செய்த ஏதோ ஒரு மோசடிக்கு ஒப்புக்கொள்ளாததால் அவரே மகனை கொன்றுவிட்டதாகவும், மகனின் மரணத்தைத் தாங்காமல் அவரது மனைவி கார்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி பரவியது.

இன்னொரு பக்கமோ நிறுவனத்திற்கு இருக்கும் கடன் தொல்லையால் கார்கி தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி கிளம்பியது.

இந்த செய்திகள் யாருக்கு நல்லதாக அமைந்ததோ இல்லையோ சரணுக்கும் கமலானந்துக்கும் இன்பத்தை அளித்தன.

பத்மானந்த் என்ற ஆலரமரத்தைத் தாங்கிய இரு விழுதுகள் செல்லரித்து மரித்துப் போய்விட்டதில் அவர்களை காட்டிலும் வேறு யாருக்கு ஆனந்தம் இருக்கும்?

தமையன் அறியாதவண்ணம் மைந்தனோடு உற்சாகபானம் அருந்தி அண்ணி மற்றும் அண்ணனது மைந்தனின் மரணத்தைக் கொண்டாடினார் இதயமற்ற கமலானந்த்.



சரணோ நிகிதாவோடு கொண்டாட விரும்பினான். மோசமானவளாக இருந்தாலும் ஒரு மனிதனின் மரணத்தில் சந்தோசம் காண விரும்பாத நிகிதா அலுவலகத்தில் ஆடிட் இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிட்டாள்.

யாருக்கும் தன் மீது சந்தேகம் வரக்கூடாதென மீண்டும் கார்கி தேயிலை எஸ்டேட் அலுவலகத்தின் ஜூனியர் அக்கவுண்டண்ட் பணிக்கு வர ஆரம்பித்துவிட்டாள்.

கமலானந்தும் சரணும் சந்தோசப்பட்டாலும் சுசித்ரா தமக்கையின் மரணத்தில் உடைந்து போனார். சகோதரியோடு போட்டி பொறாமை என்று இருந்தாலும் அவரது தற்கொலை சுசித்ராவின் உடல்நலத்தைப் பாதித்துவிட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்செய்தியையும் ஊடகத்தினர் விட்டுவைக்கவில்லை.

இவை அனைத்தும் பத்மானந்திற்கு அளித்த இறுக்கம் இறந்த மனைவியையும் மகனையும் வெறுக்குமளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது.

அதனால் அவரது வார்த்தைகளில் அவர்கள் மீதான எரிச்சல் அவ்வபோது வெளிப்பட்ட போது தான் கேசவ் தந்தையை முழுவதுமாக வெறுத்துப்போனான்.

பெற்றோரின் மரணத்தைப் பிள்ளைகள் பார்ப்பது நிதர்சனம். ஆனால் பெற்ற அன்னையின் தற்கொலை அத்தகையது அல்லவே! கார்கியைத் தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்ததிலிருந்து அவனது மனம் பாதிக்கப்பட்டுவிட்டது.

சென்சேஷ்னல் நியூஸ் ஒன்றே குறிக்கோளாக திரியும் ஊடகங்களும், வைரல் ட்ரென்ட் ஒன்றே முக்கியமென அலையும் சமூக ஊடகங்களும் அவனை மன அழுத்தத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல போதாக்குறைக்கு பத்மானந்த் வேறு இறந்தவர்களைப் பற்றி மோசமாக பேசியதில் அவன் கிட்டத்தட்ட பைத்தியமாக ஆன நிலை தான்.

அந்த மன அழுத்தம் கோபக்காரனான அவனை மௌனமாக்கியது. எப்போதும் உற்சாகத்துடன் இருப்பவனை ஓரிடத்தில் முடக்கிப்போட்டது. சரியான உணவு, உறக்கம், ஒழுங்கான உடை இதையெல்லாம் மறந்தவன் போதையை நாடாதது கார்கி செய்த புண்ணியமும் அவரது வளர்ப்பும் தான். 

அன்று சுசித்ரா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தார். அவரைப் பார்ப்பதற்கு சந்திரமௌலியோடு வந்திருந்தான் ஷ்ரவன். வீட்டில் பத்மானந்தும் இருந்தார். கமலானந்த் அண்ணன் பாதியில் விட்ட அரபு நாடு டீலை முடிக்க மீண்டும் அங்கே பறந்துவிட்டார்.

சரணோ கிட்டத்தட்ட டெலிகாம் நிறுவனத்தைத் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துவிட்டதால் அலுவலகமே கதியென கிடந்தான்.

எனவே வீட்டில் பத்மானந்த், சுசித்ரா மற்றும் கேசவ் மூவர் மட்டும் இருந்தனர்.

சுசித்ராவின் உடல்நலம் தேறிவிட்டதா என சந்திரமௌலி விசாரித்தார்.

“எனக்கு என்ன? எல்லா கெட்டதையும் செஞ்சுட்டு கல்லு மாதிரி இருக்குறேன்... ஆனா கடவுள் என் அக்காவ அழைச்சிட்டாரேண்ணா” 

சுசித்ரா இதுவரை சந்திரமௌலியை அண்ணன் என்றெல்லாம் விளித்ததே இல்லை. அவரது மனமும் கணவர் மற்றும் மைந்தனின் இழிகுணத்தால் பண்பட்டுவிட்டது போல. அதனால் தான் சந்திரமௌலியையும் ஷ்ரவனையும் மரியாதையோடு விளித்து தனது மனதை அரித்துக் கொண்டிருக்கும் உண்மையை வெளிப்படையாக கூறினார்.

“என்னால நிறைய விசயத்த ஓப்பனா சொல்ல முடியாது ஷ்ரவன்... என் புருசனையும் மகனையும் மாமா ரொம்ப நம்புறார்... அந்த நம்பிக்கைக்கு அவங்க கொஞ்சம் கூட தகுதியானவங்க இல்லப்பா... அவங்க அவரோட முதுகுக்குப் பின்னாடி என்னவோ பண்ணுறாங்க... இதை நான் நீரவ் இறந்ததும் மாமா கிட்ட சொன்னப்ப அவர் ஒத்துக்கவே மாட்டேனுட்டார்... அந்தளவுக்கு நடிச்சு மாமாவ அவங்க கைக்குள்ள போட்டு வச்சிருக்காங்க... என்ன மந்திரம் போடுறாங்கனு தெரியல... மாமா அவரு பெத்த புள்ளைய விட்டுட்டு இவங்களை நம்புனார்... இப்பவும் நம்புறார்”



சந்திரமௌலி புலம்பிய சுசித்ராவை பரிதாபமாக பார்த்தார்.

“ஆனந்த் மாதிரி சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இருக்குறவங்களை கைக்குள்ள போட்டுக்குறது ரொம்ப ஈஸிம்மா... அவங்களை எப்பவும் முகஸ்துதி பண்ணிட்டே இருக்கணும்... அவங்க என்ன பண்ணுனாலும், தப்பே பண்ணுனாலும் அவங்க பக்கம் நின்னு அவங்களுக்காக பேசணும்... இத நீரவும் கேசவும் செய்யல... கமலும் சரணும் செஞ்சுட்டாங்க... அவ்ளோ தான்மா... இப்ப கூட கார்கியும் நீரவும் இறந்ததுக்கு அவன் வருத்தப்படணும்... ஆனா அவங்களை பத்தி பேசுனாலே வெறுப்பா பதில் சொல்லுறான்னா அதுக்கும் அவங்க தான் காரணம்... இறந்தவங்க மேல அவனுக்குப் பரிதாபம் வந்து தன்னோட தப்ப அவன் புரிஞ்சி தெளிஞ்சிடக்கூடாதுனு அவன் மனசுல கழிவிரக்கத்த உண்டாக்குறாங்க... இப்ப பிசினஸ்ல நடக்குற பிரச்சனை, மீடியால வர்ற நியூஸ் எல்லாமே நீரவும் கார்கியும் இறந்ததால தான், பத்மானந்த் பாவம்னு அடிக்கடி அவன் காதுபட பேசுனாலே, அவனுக்கு அவங்க இறப்பு கோவத்த உண்டாக்கும்னு தெரிஞ்சு கரெக்டா நடந்துக்குறாங்க”

சுசித்ரா வேதனையுடன் அதை ஆமோதிக்கும் போது பத்மானந்த் அங்கே வந்துவிட்டார். அவரது முகத்தில் குற்றம் சாட்டும் பாவனை.

“என் வீட்டுல இருந்துட்டே என் தம்பிய பத்தி தப்பா பேசுறதுக்கு உனக்கு எவ்ளோ தைரியம் மௌலி?” குரலில் அதிகார தொனி.

சந்திரமௌலி அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் இது வாடிக்கை தான்.

“என் தைரியத்த பத்தி உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு... நான் ஒன்னும் இல்லாதத சொல்லலையே... அவங்க ரெண்டு பேரும் உன் கண்ணுல கட்டுன கருப்புத்துணி மாதிரி... அவங்க உன் பக்கத்துல இருக்குற வரைக்கும் உன்னால நியாயமான எதையும் பாக்க முடியாது”

பத்மானந்தின் பார்வை ஷ்ரவன் பக்கம் சென்றது.

“நீ என்னடா சொல்லப்போற?”

அவனும் சந்திரமௌலியையே பின்பற்றி உண்மை என்னவோ அதை கூறினான்.

“அந்தச் சரண் ஒரு ஃபோர் ட்வென்ட்டி... அவங்கப்பா ஒரு குள்ளநரி... ரெண்டு பேரும் உங்களை உங்க குடும்பத்துக்கு எதிரா மாத்திவிட்டு ரொம்ப நாளாச்சு அங்கிள்... இப்ப நானோ எங்கப்பாவோ என்ன சொன்னாலும் உங்களுக்கு அது தப்பா தான் தெரியும்”

“நான் என் குடும்பத்த எதிரியாவே நினைச்சதில்ல... அவங்க கடைஞ்செடுத்த முட்டாளுங்களா இருந்தா எப்பிடி என்னால அவங்க மேல நம்பிக்கை வைக்க முடியும்?”

“நீங்க எதை வச்சு அவங்களை முட்டாள்னு சொல்லுறிங்க அங்கிள்? நிகிதா விசயத்துல நீரவ் கொஞ்சம் சறுக்கிட்டான்... ஆனா அவளோட ரிமோட் கண்ட்ரோல் உங்க தம்பி மகன் சரண் கிட்ட தான் இருக்கு... என் கணக்குப்படி நிகிதாவ பாக்குறதுக்காக அவன் இடையாத்தூர் போனதுக்குப் பின்னாடி கூட சரண் தான் இருக்கணும்”

பத்மானந்தின் பார்வை கோபத்தில் குளித்திருந்தது.

“ஏன் நிறுத்திட்ட? அவனை நிலச்சரிவுல தள்ளிவிட்டதும், கார்கி கழுத்துல தூக்கு கயிறை மாட்டிவிட்டதும் சரண் தான்னு சொல்லு”

“அங்கிள்?”

“பேசாதடா... நான் பெத்ததுல ஒன்னு முட்டாள்னா இன்னொன்னு எமோஷ்னல் இடியட்... அம்மாவும் அண்ணனும் செத்துட்டாங்கனு ரூம்ல போய் அடைஞ்சா யார் பிசினஸை கவனிக்குறது? துளி கூட அக்கறையில்லாம கார்கியோட ஃபியூனரல் அன்னைக்கு ரூம்ல அடைபட்டவன் இப்ப வரைக்கும் கம்பெனி பக்கம் எட்டிக்கூட பாக்கல... எனக்கு அடுத்து மேக்சிமம் ஷேர்ஸை வச்சிருக்குறவன் பண்ணுற வேலை எப்பிடி இருக்கு பாத்தியா? முடிஞ்சா அவனுக்குப் புத்தி சொல்லி கம்பெனிக்கு வர சொல்லு ஷ்ரவன்... அதை விட்டுட்டு ஒழுங்கா கம்பெனிய நிர்வாகம் பண்ணுறவனை குறை சொல்லாத”

“இப்பவும் உங்களுக்குப் புரியல... சரண் தான் நிகிதாவ கண்ட்ரோல் பண்ணுறவன்”

“நான் தான் அவன் கிட்ட நிகிதாவ நீரவை விட்டு விலக்கி வைக்கச் சொன்னேன்... நான் சொன்னத அவன் செஞ்சான்... இவனுங்க ரெண்டு பேரும் எனக்கு மகனா பிறந்து என்ன பண்ணுனாங்க? இடியட்ஸ்”

“இந்த நிலமையில என்னால கிரிஷை எதுக்கும் வற்புறுத்த முடியாது அங்கிள்... நீங்க கண்மூடித்தனமா உங்க தம்பியையும் தம்பி மகனையும் நம்புறிங்கல்ல, அதோட விளைவை இனிமே தான் பாக்க போறிங்க”

ஷ்ரவனுக்கும் பத்மானந்துக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்க அந்நேரம் புயல் போல அங்கே வந்து நின்றான் கேசவ்.

எத்தனை நாட்கள் உறக்கத்தைத் தொலைத்திருந்தான் என்பதை அவனது சிவந்து தடித்த கண்ணிமைகள் சொல்லாமல் சொல்ல அவன் இருந்த கோலத்தைக் கண்டதும் ஷ்ரவனும் சந்திரமௌலியும் மனம் நொந்து போயினர்.

வந்தவன் அவர்களைப் பார்க்காமல் பத்மானந்தை வெறுப்பு பொங்கும் விழிகளால் சுட அவரோ இன்னும் அவன் மேலிருந்த ஏமாற்றம் குறையாமல் அலட்சியமாக ஏறிட்டார்.

கேசவ் அவரிடம் நெருங்கியவன் “நான் கேக்குற ரெண்டு கேள்விக்கு உண்மைய மட்டும் சொல்லுங்க... நீங்க எங்கம்மாவ நிஜமாவே விரும்பி கல்யாணம் பண்ணுனிங்களா? இல்ல காசுக்காக கல்யாணம் பண்ணுனிங்களா? செகண்ட் கொஸ்டீன், நானும் நீரவும் நிஜமாவே உங்களுக்குத் தான் பிறந்தோமா?” என்று துவேசத்துடன் கேட்க



“கிரிஷ்” என்று கோபத்துடன் அவனை அறைய கையை உயர்த்தினார் பத்மானந்த்.

கேசவ் வேகமாக அவரது கரத்தைத் தடுத்தவன் “நீங்க அடிச்சதும் வாங்கிட்டுப் போறதுக்கு நான் ஒன்னும் நீரவ் இல்ல... கிரிஷ்... என்ன குடுத்திங்களோ அதை ரெண்டு மடங்கா நான் திருப்பிக்குடுப்பேன்... பாசம் அன்பு மண்ணாங்கட்டினு பேசுறதுக்கு எனக்குள்ள ஒன்னும் கார்கியோட ரத்தம் மட்டும் ஓடல, ஆணவமும் திமிரும் நிரம்புன உங்க ரத்தமும் சேர்ந்து தான ஓடுது” என்கவும் அதிர்ந்து போனார் அவர்.

அங்கிருந்த அனைவருக்கும் அதே அதிர்ச்சி தான். 

“என் அண்ணனும் அம்மாவும் சாகுறதுக்கு நீ தான்யா காரணம்.. நீ மட்டும் தான் காரணம்... எத்தனை தடவை சொன்னேன்? அந்த நிகிதாவயும் அவனையும் பிரிக்காதிங்கனு... கேட்டியா நீ? உனக்கு உன் பிசினஸும் கௌரவமும் தான முக்கியம்... யார் எக்கேடு கெட்டுப் போனாலும் உனக்கென்ன கவலை? யூ.ஏ.ஈல இருக்குறப்ப என்ன சொன்ன? யாரும் செத்தா கூட நானே காரியத்த பண்ணணுமா? இன்னைக்கு சொல்லுறேன், உன் தம்பியும் அந்த கேடுகெட்டவனும் இந்த வீட்டுல இருந்தா நான் இங்க இருக்கமாட்டேன்”

கேசவின் பேச்சும் நடத்தையும் அங்கிருந்த அனைவரையும் திடுக்கிட வைத்தது.

ஷ்ரவன் வேகமாக வந்து அவனைத் தன் பக்கம் திருப்பினான்.

“என்னாச்சு கிரிஷ்? கோவப்படாதடா”

அவனைப் பார்த்ததும் கண் கலங்கினான் கேசவ்.

“நீ நீரவோட ஃப்ரெண்ட் தான? ப்ளீஸ் எனக்கு அவனைப் பாக்கணும்... எங்கம்மாவ பாக்கணும்... ஏதாச்சும் பண்ணு ஷ்ரவன்... அவங்க இல்லாத லைஃபை என்னால யோசிக்க முடியலடா... கூட இருந்த வரைக்கும் இவர் கூட சேர்ந்துட்டு அவங்களை நான் அவாய்ட் பண்ணிருக்கேன்... அப்பலாம் அவங்க இப்பிடி பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்கனு எனக்குத் தெரியாது”

“நம்ம நினைச்சாலும் அவங்க திரும்பி வரமாட்டாங்க கிரிஷ்... நீ உன் மனசை திடப்படுத்திக்கணும்”

“இந்த ஆளு இவனோட தம்பி அந்த சரண் இவங்களை மாதிரி கேடுகெட்டவங்கலாம் இன்னும் இருக்குறப்ப அவங்க எப்பிடி வருவாங்க? நான் இவங்களை கொன்னுட்டா அவங்க வந்துடுவாங்கல்ல” என்று கண்கள் பளபளக்க கேட்டவன் சற்றும் தாமதிக்காமல் டீபாய் மீதிருந்த அலங்கார பூஜாடியை எடுத்து பத்மானந்தை தாக்க செல்ல சுசித்ராவும் சந்திரமௌலியும் பயத்தில் உறைந்து போயினர்.

ஷ்ரவன் மட்டும் தடுக்கவில்லை என்றாலும் பத்மானந்த் நிச்சயம் அந்த பித்தளை பூஜாடி உபயத்தால் பரலோகப்ராப்தி அடைந்திருப்பார்.

ஷ்ரவன் கேசவைத் தடுத்ததோடு “இவங்களை எல்லாம் கொன்னுட்டா அவங்க திரும்பி வந்துடுவாங்களா? நீ என் கூட வா” என அவனை அழைத்துச் சென்றுவிட்டான்.

சுசித்ராவுக்கு அவனது நிலை கண்களில் இரத்தக்கண்ணீரை வரவழைத்தது.

“என்னாச்சுண்ணா இவனுக்கு?” என்று கலங்கியபடி நின்றவரிடம்

“அவங்கம்மாவ அந்தக் கோலத்துல பாத்த அதிர்ச்சி இன்னும் தீரல... சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போனா சரியாகிடும்மா... நீங்க கவலைப்படாதிங்க” என்றார் அவர்.

இன்னும் அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்த பத்மானந்திடம் என்ன சொல்லவென புரியவில்லை.

அவரது தோளைத் தட்டியவர் “நீ உன் ஒய்பையும் மகனையும் இழந்தாலும் கிரிஷ் இருக்குறான்னு நினைச்சேன்... ஆனா இப்ப தான் நீ உன் முழுகுடும்பத்தையும் இழந்துட்டனு புரியுது ஆனந்த்... தனியா வாழ பழகிக்க” என்றுரைத்துவிட்டு கேசவைக் காண சென்றுவிட்டார்.

சொன்னதோடு நிறுத்தாமல் அவரும் ஷ்ரவனும் நல்ல மனோதத்துவ நிபுணரிடம் கேசவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவனைப் பாதித்த சம்பவங்களிலிருந்து கேசவ் மீள்வதற்கு சைகோதெரபியும் மருந்து மாத்திரைகளும் அவசியமென அவர் கூறிவிட்டார்.

கேசவால் தாயும் தமையனுமற்ற வீட்டில் இனி இருக்க முடியுமென தோன்றவில்லை.

“என்னால இங்க இருக்க முடியாது ஷ்ரவன்... ப்ளீஸ் என்னை எங்கயாச்சும் கூட்டிட்டுப் போயிடு” என அவன் கண் கலங்கியதை ஷ்ரவனால் பார்க்க முடியவில்லை.

கூடவே அவனுக்கும் அடிக்கடி நீரவின் ஞாபகம் வந்து போக மனநிம்மதியை இழந்தவன் மனோதத்துவ நிபுணரின் பரிந்துரையின் பேரில் டெக்சாசில் பிரபல மனோதத்துவ நிபுணரான சுஷ்ருதா பீட்டர்சிடம் சிகிச்சை பெற அமெரிக்காவுக்குச் செல்லும் முடிவை எடுத்தான்.

அதை கேசவிடம் கூற அவனும் சம்மதித்தான்.

எதிர்ப்பு எழுந்ததென்னவோ பத்மானந்திடம் தான்.

“நீ தப்பு பண்ணுற ஷ்ரவன்... உன்னோட வேலை எவ்ளோ முக்கியமானதுனு தெரிஞ்சும் இவன் பின்னாடி போகப்போறியா?”

“டெலிகாம் கம்பெனில நான் நீரவ் கூட தான் ஒர்க் பண்ண விரும்புனேன்... சரணை என்னால பாஸா யோசிக்க கூட முடியாது... அதோட ஆன்ட்டி கிட்ட கிரிஷை நல்லா பாத்துப்பேன்னு ப்ராமிஸ் பண்ணிக் குடுத்துருக்கேன்... சோ வீ ஹேவ் டூ கோ”

“இதுக்கு மேல உன் கிட்ட கெஞ்சணும்னு எனக்கு அவசியமில்ல... கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்ல வேலை கிடைக்காதானு எத்தனை பேர் தவம் இருக்காங்க தெரியுமா? காசை விட்டெறிஞ்சா உன் வேலைக்கு ஆயிரம் காக்கா வரும்”

அப்போதும் கர்வம் குறையாமல் பேசிய பத்மானந்திடம் இனி உரையாட ஷ்ரவனுக்கு விருப்பமில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு மாதம் சரணின் கீழ் பணியாற்றியதே அவனுக்கு அவமானமாக இருக்க இனி ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டுமென எண்ணியவனாக முகப்புத்தகத்தில் அறிமுகமான அமெரிக்கனான ஜேக்கப்பை தொடர்பு கொண்டு உதவி வேண்டினான்.

அவனும் மனதாற உதவ ஒப்புக்கொள்ள தங்குமிடமும், மன திருப்திக்காக ஒரு வேலையும் தயாரானது இருவருக்கும்.

கிளம்பும் முன்னர் சந்திரமௌலியிடம் “கிரிஷோட ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் நாங்க வந்துடுவோம்பா... பத்திரமா இருங்க... இனிமே மிஸ்டர் பத்மானந்த் கூட எந்த காண்டாக்டும் வச்சிக்காதிங்க” என்று அறிவுறுத்திவிட்டு தான் ஷ்ரவன் விமானம் ஏறினான்.

விமானத்தில் ஏறியதும் கேசவ் கூறியது “இனிமே என்னை கிரிஷ்னு கூப்பிடாத ஷ்ரவன்... நீ கூப்பிடுறப்ப எனக்கு அம்மாவும் நீரவும் ஞாபகம் வர்றாங்க” என்பது தான்.

அந்தக் கணத்தில் கே.கே ஆனவன் மீண்டும் கிருஷாக மாறியது பிரக்ருதியால் தான். அவளை அளவின்றி காதலித்ததன் பலனைத் தான் இப்போது வேதனையாகவும் வெறுப்பாகவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

பழைய ஞாபகங்களிலிருந்து விடுபட்டவனின் மனம் ஏனோ நிகிதாவையும் பிரக்ருதியையும் ஒப்பிட்டது சரியென அவனுக்கு கூறவில்லை.

“அவ எப்பிடிப்பட்டவனு உன் கிட்ட எப்பவும் மறைச்சதில்லயே... நிகிதா அப்பிடியா? பணம் தான் அவளோட டார்கெட்ங்கிறத மறைச்சு அப்பாவி வேசம் போட்டவ... சோ நிகிதாவ எப்பவும் கிருதி கூட கம்பேர் பண்ணாத கிரிஷ்”

இனி அப்படி ஒப்பிட மாட்டேன் என அவன் வாக்குறுதி அளித்த பிறகு தான் அவனது மனம் சாந்தமடைந்தது.

பழைய நினைவுகளின் ஆக்கிரமிப்பு அகன்று சென்னைக்குத் திரும்பியவனுக்குத் தனஞ்செயனின் திருமண வரவேற்பு தகவல் கிடைத்தது.



அதில் கலந்துகொள்ள அவனும் ஷ்ரவனும் முடிவு செய்தனர். இரவில் வழக்கம் போல டோஷிபா ரேடியோவில் பிரக்ருதியின் குரலை கேட்டவனுக்குப் பழைய ஞாபகங்கள் உண்டாக்கிய வேதனை அடங்கியது மெதுவாக.

Comments

Post a Comment