அலைவரிசை 56

Image
  "நேசிக்கிற ரெண்டு பேருக்கு நடுவுல கருத்து வேறுபாடு வரலாம்... மனக்கசப்பு வரலாம்... ஆனா எந்த நிலமையிலயும் வார்த்தையை சிதற விட்டுடக்கூடாது... யோசிக்காம பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ஹைட்ரஜன் பாமை விட ஆபத்தானது... அது ஏற்படுத்துற அழிவை அவ்ளோ சீக்கிரம் சரி பண்ண முடியாது... நீங்க டன் கணக்குல காட்டுன நேசத்தைக் கூட ஒரே ஒரு மோசமான வார்த்தையால ஒன்னுமில்லாம ஆக்க முடியும்... நீங்க அதுக்காக எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் அந்த வார்த்தை உண்டாக்குன அழிவுல ஒன் பர்சன்டேஜை கூட உங்களால சரிபண்ண முடியாது... எதையும் பேசிட்டு வருத்தப்படுறதை விட பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் நிதானிச்சா எவ்ளோ மோசமான பிரிவுகளை கூட அவாய்ட் பண்ண முடியும்”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் ஷ்ரவனோடு வீட்டுக்கு வந்த கேசவ் பத்மானந்தைத் தேடினான். அவரது அறைக்கதவு பூட்டியிருக்கவும் வசந்திடம் அவர் எப்போது வந்தார் என விசாரித்தான். “சார் வந்து ஹாப் அண்ட் ஹவர் ஆகுது... வந்ததும் ரூம் டோரை லாக் பண்ணுனவர் இப்ப வரைக்கும் ஓப்பன் பண்ணல கிரிஷ் சார்” “சரி... நீங்க போய் சாப்பிடுங்க வசந்த்” வசந்த் செல்லவும

அலைவரிசை 55

 



“அம்மாவும் நீரவும் ஒரே மாதிரி கேரக்டர்... ரெண்டு பேரும் மத்தவங்களை ஈஸியா நம்பிடுவாங்க... அவங்க யாரை பத்தியும் நெகடிவா பேசி நான் பாத்ததில்ல... சுசித்ரா சித்தி அம்மா கூட சண்டை போட்டப்ப கூட அதை அம்மா தப்பா பேசல... ரெண்டு பொண்ணுங்க இருக்குற குடும்பத்துல ஒருத்திக்கு மட்டும் ப்ரையாரிட்டி குடுத்தா இன்னொருத்திக்கு ஆதங்கம் வர்றது நியாயம் தானேனு என் கிட்ட ஆர்கியூ பண்ணுனவங்க என் அம்மா... நீரவ் அவங்களோட ஜெராக்ஸ் காப்பி... அவன் இது வரைக்கும் மோசமானவன்னு சொன்ன ஒரே ஒரு ஆள் சரண் மட்டும் தான்... எத்தனையோ தடவை சரணைப் பத்தி அவன் எடுத்துச் சொல்லியும் அப்பா புரிஞ்சிக்கல... எப்பவும் பாசிட்டிவா பேசுறவங்க யாரை பத்தியும் நெகடிவா ஒன்னு சொன்னா அதை காது குடுத்து கேக்கணும்... உண்மையா இல்லையானு யோசிக்கணும்... இல்லனா அதுக்கு நம்ம பெரிய விலை குடுக்க வேண்டியதா இருக்கும்”

                                              -கே.கேவின் மனதின் குரல்

பத்மானந்த் கேசவின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து குமாரவேலுவைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.

அந்தச் சந்திப்பில் 4G வழக்கில் கார்கி குழுமத்தின் நற்பெயருக்கு எவ்வித கலங்கமும் நேராமல் சாமர்த்தியமாக காய் நகர்த்தும்படி குமாரவேலுவிடம் கேட்டுக்கொண்டார் அவர்.



“புரியுது சார்... அந்த லைசென்ஸ் விவகாரம் சேர்மனான உங்க கவனத்துக்கு வராம முடிஞ்சு போன விசயம்னு நிரூபிக்கணும்... அவ்ளோ தானே... நான் பாத்துக்குறேன்... உங்க தரப்புல கம்பெனியோட போர்ட்ல என்ன செய்யணுமோ அதை நீங்க செஞ்சிடுங்க... முன்னாடி என்னை வேலை செய்ய சொல்லிட்டு பின்னாடி உங்க தம்பிய காப்பாத்த எதுவும் முயற்சி பண்ணுனிங்கனா கம்பெனி பேரும் சேர்ந்து கெட்டுப் போகும்... ஞாபகம் வச்சுக்கோங்க”

குமாரவேலு விடுத்த எச்சரிக்கைக்கு உணர்வின்றி தலையசைத்தார் பத்மானந்த்.

“உங்க நிலமை புரியுது சார்... சொந்த தம்பிய இப்பிடி ஒரு விசயத்துல மாட்டிவிடப்போறோமேனு குற்றவுணர்ச்சி வருதுல்ல... ஆனா ஒரு விசயத்தை புரிஞ்சிக்கோங்க சார், அரசியல்லயும் பிசினஸ்லயும் அன்பு, பாசம், சொந்தம் பந்தம் எதுக்கும் இடமில்ல... அரசியல்வாதிக்கு நாற்காலி முக்கியம்னா பிசினஸ்மேனுக்கு லாபம் மட்டும் தான் முக்கியம்... அதுக்காக அவன் என்ன பண்ணுனாலும் அது நியாயம் தான்”

வேறெந்த சூழ்நிலையில் இப்படி பேசியிருந்தாலும் அதை ஆமோதிக்க கூடியவர் தான் பத்மானந்த். ஆனால் இன்று அவரது மனநிலை அதை ஏற்கும் நிலையில் இல்லை.

கார்கி குழுமம் தப்பித்தால் போதுமென்ற எண்ணம் சகோதர உணர்வை பின்னுக்குத் தள்ளிவிட குமாரவேலுவிடமிருந்து விடைபெற்றார் பத்மானந்த்.

கார்கி குழுமத்தின் தலைமை அலுவலகத்தை அடைந்தவருக்கு மனம் சரியில்லை. அது எல்லாம் அபராஜித் வரும் வரை மட்டுமே.

ஷ்ரவனின் உதவியாளன் அபராஜித் இங்கே ஏன் வந்திருக்கிறான் என்ற குழப்பத்துடன் தன் முன்னே நின்றவனை இருக்கையில் அமரும்படி பணித்தவர் 

“என் கிட்ட முக்கியமா எதுவும் சொல்லணுமா?” என்க

“ஆமா சார்... ஆனா பிசினஸ் மேட்டர் இல்ல... இது உங்க பெர்ஷ்னல் சம்பந்தப்பட்டது” என்றான் அவன்.

“பெர்ஷ்னலா?” புருவத்தை இடுக்கி கேட்டவருக்கு ஆமென தலையசைத்தான் அவன்.

“இதை என் கிட்ட சொல்லுறத விட கிரிஷ் கிட்ட சொல்லிருக்கலாமே”

“கிரிஷ் சார் வாகமன் டீ எஸ்டேட் மேனேஜர் மேரேஜுக்குப் போயிருக்குறார் சார்... தட்ஸ் ஒய் ஐ கேம் ஹியர்”

பத்மானந்த் மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.

“ஸ்டாஃப் மேரேஜுக்குலாம் போகலனு யார் அழுதாங்க?”

தன்னெதிரே அமர்ந்திருந்த அபராஜித்திடம் “கேரி ஆன்” என்க அவன் சரணுக்குச் சொந்தமான இடையாத்தூர் கெஸ்ட் ஹவுஸ் சம்பந்தபட்ட ஆவணம், சரண் நீரவின் மரணத்துக்கு முன்னர் கூர்க் செல்வதாக பொய் சொல்லிவிட்டு கேரளா சென்றதுக்கு ஆதாரமாக ட்ரெயின் பயண விவரங்கள், நிகிதாவுக்கு அளித்த இரண்டு கோடி மதிப்பிலான காசோலைக்கான ஆதாரம், சில நாட்களுக்கு முன்னர் வயநாடு சென்றதற்கான ஆதாரம் அனைத்தும் அடங்கிய கோப்பினையும், நிகிதா வாக்குமூலம் கொடுத்த மொபைலையும் நீட்டினான்.

“இதுல என்ன இருக்கு? இந்த மொபைல்?”

“இந்த ஃபைல்ல சில டாக்குமெண்ட்ஸ் இருக்கு... அப்புறம் இந்த மொபைல்ல ஒரு வீடியோ இருக்கு... மொபைலுக்கு லாக் எதுவும் போடல... இதுக்கு மேல நான் சொல்லுறதை விட நீங்களே பாத்து தெரிஞ்சிக்கிறது பெட்டர்னு கிரிஷ் சார் சொன்னார்”

சரியான விடாக்கண்டன் என மனதுக்குள் அவனை வறுத்தவர் “யூ மே கோ நவ்... இதை பாத்துட்டு நான் உங்களை கூப்பிடுறேன்” என்றார்.

“ஓ.கே சார்”

அபராஜித் அறையை விட்டு வெளியேற பத்மானந்த் அந்த மொபைலில் நிகிதா பேசிய வீடியோவை ஓட விட்டார்.



“வணக்கம் சார்... நான் நிகிதா... உங்க மகன் நீரவ் லவ் பண்ணுனது என்னை தான்... அவரோட சாவுக்கு இண்டேரக்டா நானும் ஒரு காரணம்... ஆனா அதுக்கு மெயின் ரீசன்....”

நிகிதா வீடியோவில் பேச ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் இதை வேறு பார்த்து தொலைக்க வேண்டுமா என சலிப்போடு கவனித்த பத்மானந்த் நீரவின் மரணம் குறித்து அவள் பேச ஆரம்பிக்கவும் காதுகளை கூர் தீட்டிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தார்.

******

க்ராண்ட் பேலஸ் ஹோட்டல், அடையார்...

தனஞ்செயன் – அஞ்சலியின் திருமணம் சுபமுகூர்த்த நேரத்தில் நடந்தேறியது. பெரியவர்கள் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தனர்.

கேசவும் ஷ்ரவனும் தம்பதிக்குக் கொண்டு வந்திருந்த பரிசோடு மணமேடைக்குச் செல்ல காத்திருந்தனர்.

மணப்பெண்ணின் உறவுப்பெண்ணாக மஹதி அஞ்சலியின் அன்னைக்கு உதவியாக உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாள்.

கேசவும் ஷ்ரவனும் அமர்ந்திருப்பதை பார்த்ததும் “நீங்க சாப்பிட்டிங்களா சார்?” என்று இருவரிடமும் அக்கறையாக வினவ

“நாங்க கிப்ட் குடுத்துட்டுச் சாப்பிடுறோம்மா” என்றான் ஷ்ரவன்.

“அங்க இன்னும் சடங்கு முடியல சார்... நீங்க அதுவரைக்கும் வெயிட் பண்ணாம சாப்பிட்டுட்டு வந்துடுங்களேன்” என்றவள் அவர்களை சாப்பிடும் அறைக்கு அழைத்துச் செல்ல கவினை கூப்பிட்டாள்.

மஹதி தன்னை அழைத்த உற்சாகத்தில் வந்தவன் அங்கே கேசவைக் கண்டதும் “ஆத்தி! இவனா?” என்று அதிர 

“இவங்க ரெண்டு பேரும் தனா மாமாக்கு வேண்டியவங்க கவின்... நல்லா கவனிச்சிக்க” என்று அவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இடத்தைக் காலி செய்தாள் அவள்.

கவினோ “நான் எங்க கவனிக்குறது? இந்தாளு சும்மாவே என்னைய செமய்யா கவனிப்பான்” என்று மனதுக்குள் நொந்துகொண்டபடியே “சார் கிளம்பலாமா?” என்க கேசவும் ஷ்ரவனும் அவனைத் தொடர்ந்தனர்.

சாப்பிடும் அறை விஸ்தாரமாக ஏ.சியின் குளிரையும் உணவின் நறுமணத்தையும் ஈன்றபடி அமைந்திருந்தது.

கேசவையும் ஷ்ரவனையும் அமரச் சொன்னவன் கிளம்பும் தருவாயில் எங்கிருந்தோ ஓடி வந்தாள் பிரக்ருதி.

வந்தவள் கேசவைக் கவனிக்காமல் “அங்க கேசர் ஃபலூடா வச்சிருக்காங்கடா... வா ஒரு தடவை டேஸ்ட் பண்ணிட்டு வருவோம்” என்று அவனது கையைப் பிடித்து இழுக்க அவனோ திருதிருவென விழித்தான்.



“என்னடா ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கிற?” என அவள் கடிக்க

“இன்னும் கொஞ்சநேரத்துல ஒருத்தன் என்னை ஆட்டை வெட்டுற மாதிரி பார்வையாலயே வெட்டுவான்... நான் ஏன் முழிக்கிறேன்னு அப்ப தெரியும்” என்று மனதுக்குள் கவுண்டர் வசனம் பேசியவனுக்கு வெளியே சொல்ல தைரியம் இல்லை.

ஒருவழியாக கேசவும் ஷ்ரவனும் அங்கே அமர்ந்திருப்பதை பிரக்ருதி கவனித்துவிட்டாள்.

கவினின் கரத்தை இன்னும் இறுக்கமாக பற்றிக்கொண்டவள் “இங்க ஆள்நடமாட்டம் சரியில்ல... நம்ம அங்க போவோமா?” என்று மிழற்றியபடி அவனது தோளில் சாய கேசவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவன் எதற்காக சிரிக்கிறான் என புரியாமல் அவள் விழிக்க, கவினோ “சைத்தான் காலுல சலங்கை கட்டுறா இந்த பக்கி... அது என்னை சுத்தி சுத்தி அடிக்குமே” என மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

கேசவ் நமட்டுச்சிரிப்போடு “நீங்க மஹதி கிட்ட உங்க லவ்வ சொல்லிட்டிங்களா கவின்?” என்று கேட்ட பிற்பாடு அவன் நிம்மதி பெருமூச்சுவிட பிரக்ருதியோ இவனுக்கு எப்படி தெரியும் என புரியாமல் விழித்தாள்.

கவின் முகம் மலர “இன்னும் சொல்லல சார்... சரியான டைமுக்கு வெயிட் பண்ணிட்டிருக்குறேன்” என்க

“சீக்கிரமா சொல்லிடுங்க... ஏன்னா உங்களுக்குச் சேர்க்கை சரியில்ல... லவ் மட்டும் போதும்னு நினைக்குற உங்க மனசை அவங்க மாத்துறதுக்கு சான்ஸ் இருக்கு” என்று சந்தடி சாக்கில் பிரக்ருதியை குத்திக் காட்டினான் அவன்.

பிரக்ருதி சீற்றத்துடன் முறைக்க “ப்ச்! யாருப்பா ஏ.சிய குறைச்சது?” என்றவன் கைகளால் விசிற

“இங்க சென்ட்ரல் ஏ.சி சார்... கூலிங் நல்லா தான இருக்கு?” என்று வினவினான் கவின்.



“அப்பிடியா? அப்ப எனக்கு மட்டும் ஏன் அனலடிக்குது?” என்று கிண்டலாக கேட்க பிரக்ருதி தனது கோபத்தை வெளிப்படையாக காட்ட ஆரம்பித்தாள்.

“அது ஒன்னுமில்ல சார்... ஒருத்தவங்களுக்கு மனசும் மூளையும் நல்லவிதமா சிந்திச்சா அவங்க ஐஸ் க்ரீம் மாதிரி குளுகுளுனு இருப்பாங்க... பட் மனசும் மூளையும் எப்ப யாரை கவுக்கலாம், யாரை கழுவி ஊத்தலாம்னு ஃபயரா வேலை செஞ்சுதுனா அந்த ஃபயரோட டெம்பரேச்சர் பாடிய பாதிக்கும்... சோ எவ்ளோ கூலிங்கான இடத்துல இருந்தாலும் ஹீட்டா ஃபீல் பண்ண வைக்கும்” என்றவள் பற்களை நறநறத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஷ்ரவன் கேசவிடம் “ஏன்டா அந்தப் பொண்ணை இப்பிடி பேசுற?” என்று அங்கலாய்க்க

“டேய்! நான் திட்டுனாலோ கிண்டல் பண்ணுனாலோ அவ என்னமோ அழுதுட்டு ஓடுற மாதிரி பேசுற... பாத்தல்ல, நான் ஒரு வார்த்தை சொன்னா அவ நாலு வார்த்தையில பதிலடி குடுத்துட்டுப் போறா... அவ ஒன்னும் அப்பாவி இல்ல... கொஞ்சம் ஏமாந்தா நம்மளை பாத்து நாலு பேரு அடப்பாவமேனு சொல்ல வச்சிடுவா... ஷீ இஸ் சோ கன்னிங்” என்ற கேசவ் இலை விரிக்கப்படவும் சாப்பாட்டில் கவனமானான்.

ஷ்ரவன் சங்கடத்துடன் அங்கே நின்று கொண்டிருந்த கவினைப் பார்த்தான்.

“நான் கிளம்பட்டுமா சார்?”

“நீங்க கிளம்புங்க... நாங்க பாத்துக்குறோம்” என அவனை அனுப்பி வைத்தவன் கேசவிடம் பிரக்ருதியின் மனம் அவனது வார்த்தைகளால் எவ்வளவு வேதனையுறும் என்பதை எடுத்துக் கூற வேண்டுமென தீர்மானித்தான்.

சாப்பிட்டு முடித்ததும் கை கழுவிவிட்டு வந்தவனிடம் பிரக்யாவுக்கும் தனக்குமான பிணக்கையும், அதற்கு பிரக்ருதி அவளது தோழிக்குக் கொடுத்த அறிவுரையையும் விளக்கினான் ஷ்ரவன்.

“இன்னைக்கு பிரகி பண்ணுற தப்பை தான் நீ அன்னைக்குப் பண்ணிட்டியோனு எனக்குத் தோணுது கிரிஷ்” என்று இறுதியாக அவன் கூறவும் கேசவ் நண்பனை அதிருப்தியாக நோக்கியபடி நடந்தான்.

“கொஞ்சம் விட்டா அவ விரல் கடிக்க தெரியாத குழந்தைனு சொல்லுவ போல”

கிண்டலும் எரிச்சலும் அவனது குரலில் விரவிக்கிடந்தது.

“கோவப்படாத கிரிஷ்... யூ லவ்ட் தட் கேர்ள்... பட் யூ டிண்ட் பிலீவ் ஹெர்... உன் நம்பிக்கைக்குத் தகுதியில்லாதவ மேல உனக்கு எப்பிடி லவ் வந்துச்சு? கொஞ்சமாச்சும் யோசி கிரிஷ்... ஒருத்தவங்களை கை காட்டி அவங்க செஞ்சது தப்புனு பத்து பக்கத்துக்கு பேசுற நாம, அவங்க விளக்கம் குடுக்குறதுக்கு ஏன் டைம் சான்ஸ் குடுக்குறதில்ல? இவ்ளோ தானா உன் லவ்?”

“ஷ்ரவன்”

“என்னை முறைக்காம உன்னை நீயே கேட்டுக்க... யூ நோ ஒன்திங், பிரகி மட்டும் என்னை பத்தி தப்பா நினைச்சு கன்னாபின்னானு பேசலைனா இன்னைக்கு வரைக்கும் நான் கிருதியோட தரப்பை பத்தி யோசிச்சிருக்க கூட மாட்டேன்... நாம லவ் பண்ணுறவங்க கிட்ட நம்மளை நிரூபிக்குற மொமண்ட் இருக்குதே, தட்ஸ் ரியலி பெயின்ஃபுல் கிரிஷ்... நான் அந்த வேதனைய அனுபவிச்சிட்டிருக்குறேன்... அந்தப் பொண்ணுக்கும் அப்பிடி தானே வலிச்சிருக்கும்? பாவம்டா அவ... நீ அவளை மறுபடியும் லவ் பண்ணு, இன்னொரு சான்ஸ் குடுனு நான் கேக்க போறதில்ல... அன்னைக்கு என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு... தட்ஸ் ஆல்”

நண்பன் கூறியதை காது கொடுத்து கேட்டவன் “சரிடா... நீ இவ்ளோ தூரம் சொல்லுறதால, சரண் ப்ராப்ளம் ஒரு முடிவுக்கு வந்ததும் அன்னைக்கு என்ன நடந்துச்சுனு அவ கிட்ட டேரக்டாவே கேக்கப்போறேன்... அதுவும் உன் கண் முன்னாலயே... அவ சொல்லுறது உண்மைனு தோணுச்சுனா அவ கிட்ட அந்த இடத்துலயே கால்ல விழுந்து நான் மன்னிப்பு கேப்பேன்... போதுமா?” என்றான்.

ஷ்ரவன் முறுவலுடன் “அவ உன்னை அந்த எக்ஸ்ட்ரீமுக்குக் கொண்டு போக மாட்டா” என்க இருவரும் மணமக்களுக்குப் பரிசு வழங்க மேடைக்குச் சென்றனர்.

கேசவ் வழங்கியது மணமக்கள் பெயர் பொறித்த ப்ளாட்டினம் மோதிரங்கள். அதை அவர்கள் ஒருவருக்கொருவர் மாட்டிவிட்டு மகிழ ஷ்ரவன் தனஞ்செயனின் பணியுயர்வுக்கான ஆர்டரை அவனது கரத்தில் கொடுத்தான்.

அவன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனான். உணர்ச்சிமிகுதியில் பேச வார்த்தைகள் எழாமல் போனது.

“அஞ்சலி இஸ் யுவர் லக்கி சார்ம் தனா” என கூற அஞ்சலியும் மகிழ்ச்சியில் பூரித்துப்போனாள்.

பின்னர் மணமக்களிடம் விடைபெற்றுக்கொண்டனர் நண்பர்கள் இருவரும்.

செல்லும் முன்னர் கவினை பிரக்ருதிக்குத் தெரியாமல் அழைத்தான் கேசவ்.

“என்ன சார்?”

“எனக்கு கிருதியோட மொபைல் நம்பர் வேணும்”

“உங்க கிட்ட அவ நம்பர் இல்லையா?”

அவன் ஆச்சரியமாக கேட்க கேசவ் அவனை முறைத்தான்.

“அதுக்கு ஏன் சார் முறைக்குறிங்க? நான் ஒன்னும் உங்க முறைப்பொண்ணு இல்லயே... நம்பர் தான, சொல்லுறேன், நோட் பண்ணிக்கோங்க”

கவின் பிரக்ருதியின் மொபைல் எண்ணைக் கூறவும் தனது மொபைலில் சேமித்துக்கொண்டான்.

ஹோட்டலை விட்டு வெளியேறும் போது கேசவின் எண்ணுக்கு அழைத்தான் அபராஜித்.

“சொல்லுங்க அபி... என்னாச்சு?”

“சேர்மன் சார் அந்த வீடியோ எவிடென்சை பாத்துட்டார் சார்... நான் அவர் கிட்ட குடுத்துட்டுப் போன கொஞ்சநேரத்துல கோவமா வீட்டுக்குப் போயிட்டார்”

“ஓ.கே அபி... அவருக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கும்... நான் இனிமே பாத்துக்குறேன்... தேங்க்யூ சோ மச் ஃபார் யுவர் கைண்ட் ஹெல்ப்”

“இது என் கடமை சார்... நம்ம நீரவ் சாருக்காக எதுவும் செய்வேன்”

அலுவலகத்துக்குச் செல்லலாம் என்ற முடிவை மாற்றிக்கொண்ட கேசவ் வீட்டுக்குச் செல்லலாம என காரை திசை திருப்பினான்.

யாரோ ஒரு தனஞ்செயனுக்கும் அபராஜித்துக்கும் நீரவின் மீதிருக்கும் அன்பும் பாசமும் மரியாதையும், அவனது இரத்தச்சொந்தமான சரணுக்கு ஏன் இல்லாமல் போனது?

வினோதமான கேள்வி தான்! ஆனால் இரத்தச்சொந்தங்கள் அனைவருக்கும் நம் மீது உண்மையான அன்பு இருக்கவேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லையே!

மனிதர்களிடையே அன்பு மனதாலும் ஒருமித்த கருத்தாலும் ஏற்படுவதேயன்றி இரத்தச்சொந்தத்தால் ஏற்படுவதில்லை. அதன் வாழும் உதாரணம் சரணும் கமலானந்தும் தான்.

Comments

Post a Comment