அலைவரிசை 56

Image
  "நேசிக்கிற ரெண்டு பேருக்கு நடுவுல கருத்து வேறுபாடு வரலாம்... மனக்கசப்பு வரலாம்... ஆனா எந்த நிலமையிலயும் வார்த்தையை சிதற விட்டுடக்கூடாது... யோசிக்காம பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ஹைட்ரஜன் பாமை விட ஆபத்தானது... அது ஏற்படுத்துற அழிவை அவ்ளோ சீக்கிரம் சரி பண்ண முடியாது... நீங்க டன் கணக்குல காட்டுன நேசத்தைக் கூட ஒரே ஒரு மோசமான வார்த்தையால ஒன்னுமில்லாம ஆக்க முடியும்... நீங்க அதுக்காக எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் அந்த வார்த்தை உண்டாக்குன அழிவுல ஒன் பர்சன்டேஜை கூட உங்களால சரிபண்ண முடியாது... எதையும் பேசிட்டு வருத்தப்படுறதை விட பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் நிதானிச்சா எவ்ளோ மோசமான பிரிவுகளை கூட அவாய்ட் பண்ண முடியும்”                                              -கிருதியின் கிறுக்கல் மொழிகள் ஷ்ரவனோடு வீட்டுக்கு வந்த கேசவ் பத்மானந்தைத் தேடினான். அவரது அறைக்கதவு பூட்டியிருக்கவும் வசந்திடம் அவர் எப்போது வந்தார் என விசாரித்தான். “சார் வந்து ஹாப் அண்ட் ஹவர் ஆகுது... வந்ததும் ரூம் டோரை லாக் பண்ணுனவர் இப்ப வரைக்கும் ஓப்பன் பண்ணல கிரிஷ் சார்” “சரி... நீங்க போய் சாப்பிடுங்க வசந்த்” வசந்த் செல்லவும

அலைவரிசை 54

 


“ஒவ்வொரு பேரண்ட்சுக்குள்ளவும் ஒரு குழந்தை ஒளிஞ்சிருக்கும்... அந்தக் குழந்தைய கவனிச்சிக்குற பொறுப்பு நம்ம சொந்தக்கால்ல நிக்குறப்பவே நமக்கு வந்துடும்... என் பொண்ணு வளர்ந்துட்டா, இனிமே காதுக்கு வளையம் போட்டா நல்லாவா இருக்கும்னு பிடிச்ச கம்மலை விட்டுட்டு தோடு மாட்டிக்கிற அம்மா, பொண்ணு ஆசைப்பாட்டானு காஸ்ட்லி டிசைனர் வேர் வாங்கிக் குடுக்குறதுக்காக பைக்கை விட்டுட்டு லோக்கல் ட்ரெய்ன்ல ஆபிஸ் போற அப்பானு அவங்க நமக்காக செஞ்ச சின்ன சின்ன தியாகங்கள் நிறைய இருக்கும்... அவங்களோட பசங்க வளர்ந்துட்டாங்கனதும் எல்லா பேரண்ட்சும் தங்களுக்குள்ள இருக்குற குழந்தைய வெளிக்காட்டிக்கிறதில்ல... அந்தக் குழந்தைக்கு சின்ன சின்ன ஆசை இருக்கும்... விளையாட்டுத்தனமான நிறைவேறாத கனவுகள் இருக்கும்... சோ அவங்களோட பிள்ளைங்களான நம்ம தான் அதை புரிஞ்சிக்கணும்... வாய் விட்டு சொல்லலனாலும் புரிஞ்சிக்க ட்ரை பண்ணணும்... அப்பிடி ரொம்ப நாளா அப்பாவ அப்சர்வ் பண்ணுனதுக்கு அப்புறமா அவருக்கு கேக் வெட்டி பர்த்டே கொண்டாடணும்ங்கிற ஆசை ரொம்ப நாளா இருக்குனு நான் கண்டுபிடிச்சேன்... சோ ஒரு முறைக்கு ரெண்டு முறையா அவரோட பர்த்டேவ கொண்டாடலாம்னு ப்ளான் பண்ணிருக்குறேன்... சோ உங்க பேரண்ட்சுக்கும் இந்த மாதிரி குட்டி குட்டி ஆசை இருக்கலாம்... அதை நிறைவேத்த ட்ரை பண்ணுங்க”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

ரூஃப்டாப்பில் காற்று சிலுசிலுவென வீசிக்கொண்டிருந்தது. அங்கே அலங்காரமாக போடப்பட்டிருந்த கூடாரம் போன்ற அமைப்புக்குள் ‘Happy birthday’ என்ற ஆங்கில வார்த்தைகளோடு பலூன்களும், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜை மற்றும் நாற்காலிகளும் கிடந்தன.

தரையெங்கும் பலூன்கள் சிதறிக்கிடக்க விளக்குகளால் அந்த இடம் ஜொலித்தது.

வாசன் அங்கே செய்யப்பட்டிருந்த அலங்காரங்களை ரசித்துக்கொண்டிருந்தார். நண்பரிடம் இளையமகளின் ஏற்பாட்டைக் காட்டி பெருமையாக அவர் பேச பிரணவி அங்கிருந்த காட்சியை வீடியோவாக்கும்படி பிரக்யாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இந்த போஸ்ல ஒரு போட்டோ எடு”

இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது பிரக்ருதி கூடாரத்திற்குள் நுழைந்து பலூன்களை தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தாள்.

ஹோட்டல் சிப்பந்தி அங்கே வந்து பிரக்ருதியிடம் ஏதோ கூற “நோ தேங்க்ஸ்... எங்கப்பாக்கு ஆல்கஹால் சுத்தமா பிடிக்காது... நீங்க பைனாப்பிள் ஜூஸ் மட்டும் அனுப்பி வைங்க” என்க

“ஓ.கே மேடம்... இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடும்” என்று விடைபெற்றார் ஹோட்டல் சிப்பந்தி.

அவர் சென்றதும் தந்தையிடம் வந்து நின்றாள் பிரக்ருதி.

“கேக் வெட்டலாமாப்பா?”

அவளது குதூகலம் வாசனையும் தொற்றிக்கொண்டது.

“வாங்க வாங்க... கேக் கட் பண்ணுவோம்”

அனைவரும் கூடாரத்திற்குள் நுழைந்து கொண்டனர்.



வாசன் குழந்தையின் குதூகலத்துடன் கேக்கை வெட்ட ‘Happy birthday’ பாடல் பின்னணியில் ஒலித்தது.

வெட்டப்பட்ட கேக் துண்டுகளோடு அன்னாச்சிபழச்சாறை ஆளாளுக்கு ருசிக்க ஆரம்பிக்க பிரக்யாவும் பிரக்ருதியும் பிரணவியிடம் கேக்குக்காக உரிமைப்போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

“சரி சரி... ரொம்ப அழாதிங்க... உங்களைப் பாக்க பாவமா இருக்கு... இந்தத் தடவை நீங்களே கேக்கை வச்சுக்கோங்க” என்று அவள் பெரிய மனது பண்ணி விட்டுக்கொடுத்தாள்.

அன்றைய இரவுணவில் அனைத்தும் வாசனுக்குப் பிடித்தவையே.

“கஷ்மீரி புலாவ் டேஸ்ட் நாக்குலயே நிக்குது” என்று வாயாரப் புகழ்ந்தார் வாசன்.

பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து அனைவரும் ஹோட்டலை விட்டு வெளியேறும் முன்னர் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என கீழ்த்தளத்தில் அமர்ந்திருந்த போது தான் பிரக்யாவின் கண்களில் ஒரு பெண்ணோடு அங்கே வந்த ஷ்ரவன் சிக்கினான்.

பிரக்ருதி கூறிய அறிவுரையைக் கேட்டு தனது செயல்பாடுகளை சுயமதிப்பீடு செய்து கொண்டிருந்தவள் மீண்டும் பிடிவாதத்தின் உச்சியில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

கடுப்பு மேலிட முகத்தை அவள் சுளிக்க அக்காட்சி பிரக்ருதியின் கண்களில் தப்பாமல் மாட்டியது.

ஆனால் அதை கவனிக்க முடியாமல் மனோகரின் பேச்சின் சாராம்சம் அவளது கவனத்தைத் திருடிக்கொண்டது.

“இன்னைக்கு மாதிரி வாசன் சந்தோசமா இருந்து நான் பாத்ததே இல்ல கிருதி”

வாசனும் நண்பரின் பேச்சை ஆமோதிப்பது போல சிரிப்போடு தலையசைத்தார்.

பிரக்ருதி வாசனைப் பார்த்து புன்னகைத்தவள் “இப்ப சொல்லுப்பா... நீ நினைச்சதையெல்லாம் நடத்தி வைக்க ஆம்பளை பையனால மட்டும் தான் முடியுமா?” என்று கேட்டாள்.

வாசன் திகைப்பில் விழி விரித்தார்.

“இது உனக்கு எப்பிடி தெரியும்?” 

“நீ மனோ அங்கிள் கிட்ட பேசுனத நான் கேட்டேன்... உனக்குச் சின்ன வயசுல இருந்து கேக் வெட்டி பர்த்டே செலிப்ரேட் பண்ணணும்னு ஆசை தான? அதை எங்க கிட்ட சொன்னா நாங்க செய்ய மாட்டோமா? ஆம்பளை பசங்க மட்டும் தான் அப்பா அம்மாக்கு வேண்டியத செய்வாங்கனு நீ எப்பிடி நினைக்கலாம்? பொண்ணுங்களும் பேரண்டோச ஆசைய நிறைவேத்தலாம்... அதை பேரண்ட்சும் ஏத்துக்கலாம்... பொண்ணுங்க கிட்ட எதையும் கேட்டு வாங்குறது கௌரவக்குறைச்சல்னு அந்தக் காலத்து பூமர் பேரண்ட்ஸ் மாதிரி யோசிக்காம இனியாச்சும் மாடர்ன் அப்பாவா யோசி”

“கேட்டியாடா? இது தான் பெண்குழந்தைங்க மனசு” என மனோகர் கூற வாசனுக்கு நெகிழ்ச்சியில் பேச்சு வரவில்லை.

ஐஸ்க்ரீம் வந்துவிட அனைவைரும் அதை சாப்பிடுவதில் முனைந்துவிட பிரக்யாவோ வேண்டாவெறுப்பாக சாப்பிட்டாள்.

அவளது மனம் தான் ஷ்ரவனோடு வந்த பெண் யார் என்பதிலேயே நிலைத்திருந்ததே. 

அவள் ஐஸ்க்ரீமை சாப்பிடாமல் கரண்டியால் அலைவதை பார்த்த பிரக்ருதி அப்போதைக்கு எதுவும் கேட்காமல் இருக்க பிரக்யா எழுந்தாள்.

“நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வர்றேன்” என்றவள் வேகமாக சென்றுவிட பிரக்ருதியும் மற்றவர்களோடு சென்றவள் திரும்பட்டுமென காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஆனால் போனவள் திரும்பி வருவதற்கு தாமதமாகவும் “நான் போய் அவளை அழைச்சிட்டு வர்றேன்... மொபைலை கூட எடுத்துட்டுப் போகல பாருங்க” என்றபடி அவளைத் தேடி சென்றாள்.

மாறாக செல்லும் வழியிலேயே காரசாரமாக வாக்குவாதம் செய்தவாறு நின்று கொண்டிருந்தனர் ஷ்ரவனும் பிரக்யாவும்.

“அந்த கேர்ளுக்கும் எனக்கும் நீ நினைக்குற மாதிரி எந்த கனெக்சனும் இல்ல பிரகி... இருக்குற பிரச்சனைல நீ வேற ஒவ்வொரு விசயத்துக்கும் குத்தம் கண்டுபிடிக்காத”



“நான் குத்தம் கண்டுபிடிக்கிற மாதிரி தான உன் நடவடிக்கையும் இருக்குது ஷ்ரவன்... அவளுக்கும் உனக்கும் எந்த கனெக்சனும் இல்லனா ஏன் அவ யார்னு சொல்ல தயங்குற?”

“அது கொஞ்சம் சென்சிடிவான மேட்டர்... புரிஞ்சிக்க பிரகி”

“என்னடா சென்சிடிவ்? என் கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்னு சொன்ன... இப்பிடி எத்தனை விசயத்தை என் கிட்ட மறைச்சிருக்க?”

“இது கிரிஷ் சம்பந்தப்பட்ட மேட்டர்... அவனோட பெர்மிஷன் இல்லாம உன் கிட்ட எதையும் என்னால ஓபனா சொல்ல முடியாது”

“கிரிஷ் பேரை சொன்னதும் நான் சைலண்ட் ஆகிடுவேன்னு நினைச்சல்ல... நீ என்னை ஏமாத்துற ஷ்ரவன்... உன்னால ஒரு பொண்ணுக்கு உண்மையா இருக்க முடியாதுனா ஏன்டா லவ் பண்ணுற? இங்க வந்ததுல இருந்து நீ என்னை அவாய்ட் பண்ணுனதுக்கான ரீசன் என்னனு இப்ப புரிஞ்சிடுச்சு”

“பிரகி அவசரப்படாத”

பேச்சின் வேகத்தில் அவளது கரத்தைப் பற்றினான் ஷ்ரவன். பிரக்யா கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் அவனது தொடுகையில் எரிச்சலுற்று கையை உதறினாள்.

“நான் ரொம்ப பொறுமையா இருந்துட்டேன்... திஸ் இஸ் த ஹை-டைம் டு ப்ரேக்கப்”

அவள் கூறியதைக் கேட்டு ஷ்ரவனுக்கு அதிர்ச்சி என்றால் பிரக்ருதிக்கோ தூக்கி வாரிப்போட்டது.

என்ன ஏதென்று விசாரிக்காமல் பிரிந்துவிடலாம் என்கிறாளே என்ற ஆதங்கத்துடன் அவர்களை வேக எட்டுகளுடன் நெருங்கினாள்.

பிரக்யா அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவள் திடுமென வந்து நின்ற பிரக்ருதியைக் கண்டதும் அமைதியானாள்.

ஷ்ரவனோ ஓய்ந்து போனவனாக அவளைப் பார்த்தான்.

“என்னாச்சு பிரகி? ஏன் இவ்ளோ அவசரப்படுற?”

“இப்பவும் நான் அவசரப்படலனா, இவனோட கேர்ள் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல நானும் ஒருத்தியா மாறிடுவேன் கிருதி... பத்தோட பதினொன்னா நான் இருக்கணுமா? அப்பிடி எந்த அவசியமும் எனக்கு இல்ல... எனக்கு இவனை மாதிரி ஒரு சீட்டர் தேவையே இல்ல கிருதி... இவனை மாதிரி ஆளுக்கு லவ், மேரேஜ், ஃபேமிலி இதெல்லாம் செட் ஆகாது... இஷ்டத்துக்கு வாழுற கேஸ்வல் லைஃப் தான் இவனுக்குலாம் சரி”

பிடிவாதமாக பிரக்யா பேச ஷ்ரவனின் கண்களில் வலியோடு கண்ணீரும் அரும்பியது.

பிரக்ருதிக்கு அவனது கண்ணீரைக் கண்டதும் இரக்கம் மேலோங்கியது.

கடந்தகால சம்பவங்களுக்காக அவளும் ஒருவனிடம் அவமானப்பட்டிருக்கிறாளே! தன்னைப் போல கூனி குறுகி நிற்கும் இன்னொரு ஜீவனைக் கண்டதும் அவளது மனம் அவனுக்காக வேதனையுற்றது.

“டோண்ட் ஸ்பில் வேர்ட்ஸ் பிரகி”

தோழியை எச்சரித்தாள் அவள்.

“உன்னை மாதிரி தான் எப்பவோ நடந்த ஒரு விசயத்த பாயிண்ட் அவுட் பண்ணி ஒருத்தன் என்னை அசிங்கப்படுத்துனான்... அவன் மட்டும் என்னை முழுசா நம்பியிருந்தா இந்நேரம் என்னோட லவ் உயிர்ப்போட இருந்திருக்கும்... அவன் பண்ணுன அதே தப்பை தான் நீயும் பண்ணுற... இந்த ப்ரேக்கப் ஷ்ரவனுக்கு மட்டுமில்ல, உனக்கும் வலியை குடுக்கும்... உனக்கு அவனை லவ் பண்ணவும் ப்ரேக்கப் பண்ணவும் மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு... அவனோட கேரக்டரை பத்தி அசிங்கமா பேசுறது தப்பு... பாவம் ஷ்ரவன்... நீ அவனை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு பிரகி”

தனக்காக பிரக்ருதி பரிந்து பேசுவதை கேட்ட ஷ்ரவன் அவளது பேச்சின் சாராம்சத்தில் இருந்து, இன்னும் கேசவின் வார்த்தைகள் அவளை உள்ளிருந்து வதைப்பதை புரிந்து கொண்டான்.

இந்தப் பெண் மெய்யாகவே எந்த தவறும் செய்திருக்க மாட்டாளோ? தன்னைப் போல சூழ்நிலை கைதியாக அவளும் மாட்டிக்கொண்டாளோ?

இத்தனை நாட்கள் கேசவிற்காக வருந்திய உள்ளம் இன்று பிரக்ருதிக்காக யோசித்தது.

அவளை நன்றியோடு ஏறிட்டான் ஷ்ரவன்.

“தேங்க்ஸ்” என்றான்.

“இட்ஸ் ஓ.கே... நீ கிளம்பு ஷ்ரவன்... பிரகி கன்ஃபியூசன்ல இருக்குறா... சீக்கிரம் அது க்ளியர் ஆகும்னு நம்புவோம்”

ஷ்ரவன் அவள் கூறியதை கவனியாமல் “நீ அவசரபுத்திக்காரினு கிரிஷ் சொல்லி கேட்டுக்குறேன்... அது உண்மை இல்ல... உன்னால தெளிவா நிதானமா யோசிக்க முடியும்... கிரிஷ் இன்னொரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சப்ப கூட நீ அவனுக்கு கங்கிராட்ஸ் சொன்னியாம்.. இவளுக்கு அவ்ளோ பெரிய மனசுலாம் இருக்கணும்னு நான் ஆசைப்படல... இவளைத் தவிர இன்னொருத்திய என் லைஃப்ல அலோ பண்ணமாட்டேன்னு கொஞ்சம் ஸ்ட்ராங்கா நம்பியிருக்கலாம்.... ப்ச்! இனிமே இந்த டாபிக்கை பத்தி நான் பேசப்போறதில்ல... பட் என்னால ஒரு விசயத்த ஸ்ட்ராங்கா சொல்ல முடியும்... நான் இப்பவும் பிரகிய மட்டும் தான் லவ் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் சென்றுவிட்டான்.

பிரக்ருதி பிரக்யாவை வெறுமெனே பார்க்க அவளோ குழப்பத்துடன் நின்றாள்.

அவள் தன்னைப் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையோடு ஹோட்டலின் தரிப்பிடத்துக்கு வந்து சேர்ந்த ஷ்ரவன் அங்கே நின்ற தனது காரை கிளப்பினான்.

மனம் பிரக்யாவின் பேச்சை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வலுக்கட்டாயமாக அவளது பேச்சிலிருந்து தனது யோசனையை கேசவ் கொடுத்த வேலை மீது திருப்பினான்.

அவன் ஹோட்டலுக்கு வந்தது ஒரு பெண்ணைச் சந்திக்கவே. அவள் கார்பரேட் லாபியிஸ்ட் சபீனா சர்மாவின் உதவியாளினி ஹீரா.



அவளிடம் பணம் கொடுத்து சபீனா சர்மாவின் வீட்டின் சி.சி.டி.வி பதிவுகளையும், அலுவல்ரீதியான மொபைல் பேச்சு பதிவுகளையும் வாங்குவதற்காக அங்கே வந்திருந்தான் அவன்.

அவளும் வாங்கிய பணத்துக்கு உண்மையாக ஷ்ரவன் கேட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் அனைத்தையும் கொடுத்தாள்.

“இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... வேற எந்த ஹெல்பும் எதிர்பாக்காதிங்க சார்”

இதோடு என் வேலை முடிந்தது என எச்சரிக்கையாக கழன்று கொண்டாள் அவள்.

இந்த ஆதாரங்கள் போதும். கமலானந்தையும் சரணையும் நிரந்தரமாக சிறைச்சாலையின் கம்பிகளுக்குப் பின்னே நிற்க வைக்கும் அற்புதத்தை செய்யவிருக்கும் அந்த ஆதாரங்களை வாங்கிய தகவலை கேசவிடம் மொபைல் அழைப்பு வாயிலாக தெரிவித்தான்.

அதே நேரம் வயநாட்டில் அபராஜித் நிகிதாவின் வீட்டில் இருந்தான். இன்னும் உடல்நிலை பழையபடி தேறாத நிகிதா சோர்வாக அமர்ந்து சரண் செய்த அநியாயங்கள், அவனோடு கூட்டு சேர்ந்து செய்த பாவங்களை வாக்குமூலமாக கொடுத்துக் கொண்டிருந்தாள்.

வாக்குமூலத்தின் முடிவில் அடக்கமாட்டாமல் அழுதாள் அவள்.

“நீரவ் மாதிரி நல்லவரை பணத்துக்காக ஏமாத்துன பாவத்துக்கு இன்னை நான் என் குழந்தைய இழந்து நிக்குறேன்... இந்த வீடு வாங்குறதுக்கு சரண் குடுத்த பணம், எங்க ஊர்ல அவர் வாங்குன கெஸ்ட் ஹவுஸ் டாக்குமெண்டோட டூப்ளீகேட்ஸ் எல்லாம் இதுல இருக்கு... முடிஞ்சா நீரவோட அப்பாவ என்னை மன்னிச்சிட சொல்லுங்க”

கரம் கூப்பினாள் அவள்.

அபராஜித் அவளது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட கையோடு அவள் கொடுத்த ஆவணங்களையும் வாங்கிக்கொண்டான்.

பின்னர் கேசவ் கொடுத்துவிட்டதாக பணக்கட்டு ஒன்றினை நீட்டினான். நிகிதா அதை வாங்கிக்கொள்ளவில்லை.



கரம் கூப்பி மறுத்தவள் “நான் எல்லாத்தையும் இழந்துட்டேன் சார்... இனிமே பணத்த வச்சு என்ன பண்ணப்போறேன்? இதை கிரிஷ் சார் கிட்டவே குடுத்துடுங்க” என்றாள் கண்ணீருடன்.

அபராஜித் அங்கிருந்து கிளம்ப நிகிதாவின் கரங்கள் வேதனையோடு வயிற்றைத் தடவிக்கொண்டன.

பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள். ஆனால் மரணத்தின் வலியையும், அதன் கொடுமையையும் முன்பின் அனுபவித்து அறியாத காரணத்தால் மனிதர்கள் பாவம் செய்ய தயங்குவதில்லை. ஆனால் அவர்களுக்கான தண்டனையை காலம் மட்டும் உடனுக்குடன் கொடுக்குமாயின் மனிதர்கள் நெறி தவறாமல் வாழ வாய்ப்புண்டு.

நிகிதாவைப் போன்ற சிலர் அந்த தண்டனைகளுக்குப் பிறகு திருந்துவர். ஆனால் சரணைப் போன்ற ஜென்மங்களோ அந்த தண்டனைகளுக்கெல்லாம் அடங்காமல் இன்னும் அழுத்தமாக அடுத்தடுத்த பாவங்களைச் செய்ய தயாராவார்கள்.

Comments

Post a Comment