அலைவரிசை 59

Image
  “உலகத்துல எனக்குச் சேலஞ்சிங்கான மொமண்ட் என்ன தெரியுமா? மன்னிப்பு கேக்குறது... இட்ஸ் மே பி வியர்ட்... பட் இப்ப வரைக்கும் நான் யார் கிட்டவும் மன்னிப்பு கேட்டதில்ல, எக்சப்ட் ஷ்ரவன்... அவன் கிட்டவும் பொலைட்டா தலைகுனிஞ்சு நான் மன்னிப்பு கேக்கல... தப்பே செஞ்சாலும் ஆட்டிட்டியூடை விட்டு இறங்காம சாரி கேக்குறதுல நான் பத்மானந்தோட வாரிசு... இப்ப நான் கிருதி கிட்ட எப்பிடி சாரி கேக்குறதுனு யோசிச்சு யோசிச்சு என்னை நானே குழப்பிட்டிருக்குறேன்... ஒன் கப் ஃப்ராப்புசீனோ குடுத்து சாரி கேக்கலாமா? சப்போஸ் அதை அப்பிடியே என் முகத்துல ஊத்திட்டானா அதை விட அசிங்கம் எனக்கு வேற எதுவுமில்ல... வேர்ட்ஸை வேஸ்ட் பண்ணாம பசக்குனு ஒரு கிஸ் பண்ணி சாரி கேளுனு என் மனசாட்சி சொல்லுது... நான் கிருதி கிட்ட செருப்படி வாங்குறதுல அதுக்கு ஏன் இவ்ளோ ஆர்வம்னு தெரியல... கிஸ் பண்ணி அவளுக்குள்ள இருக்குற குட்டி விஜயசாந்திய ஆக்டிவேட் பண்ண எனக்கு விருப்பமில்ல... எந்த ஃபைட்டும் ஆர்கியூமெண்டும் இல்லாம பொலைட்டா ஒரு சாரி பார்சல்னு எனக்கு நானே ஆர்டர் போட்டுக்கிட்டு அவ கிட்ட மன்னிப்பு கேக்க ரெடியாயிட்டிருக்குறேன்... God only knows whether she wi

அலைவரிசை 58

 


“நான் ரொம்ப சரியா இருக்குறேன்னு சொல்லுறான்ல அவனை நம்பலாம்... ஆனா நான் மட்டும் தான் சரியா இருக்குறேன்னு சொல்லுறான்ல, அவன் கடைஞ்செடுத்த அயோக்கியனா இருப்பான்... ஒரு கூட்டத்துல இருக்குற நாலஞ்சு பேரை கெட்டவங்களா காட்டுனா தான் அவன் அங்க இருக்குற எல்லார் கண்ணுக்கும் நல்லவனா தெரிவான்னு தெளிவா யோசிச்சு காய் நகர்த்துற பேர்வழிங்க இங்க அதிகம்... ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க, நல்லவங்க எப்பவும் நான் நல்லவன் நல்லவன்னு ஸ்பீக்கர் வச்சு அனவுன்ஸ் பண்ண மாட்டாங்க... யார் தன்னை நல்லவங்களா அடையாளப்படுத்திக்க நினைக்குறாங்களோ அவங்க தான் அந்த அரும்பெரும் காரியத்த வெக்கமே இல்லாம செய்வாங்க... இந்த விளம்பர உலகத்துல நல்லவன்னு செல்ஃப் டப்பா அடிச்சிக்குறவனை தான் மக்களும் நம்புவாங்க... நம்பி அவனுக்காக கூவி கொடி பிடிச்சு கடைசியில அவன் கிட்டவே ஏமாந்தும் போவாங்க”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

சரணையும் கமலானந்தையும் பத்மானந்த வைத்து செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த ஷ்ரவனும் கேசவும் அவரது நடவடிக்கையில் ஏமாந்து போயினர்.

“எனக்குத் தெரியும்டா... இந்த மனுசனுக்குப் புத்தி பேதலிச்சுப் போச்சு... எல்லா ஆதாரமும் கண்ணு முன்னாடி இருக்கு, மன்னிக்கிறாராம் மன்னிப்பு... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு கத்திய எடுத்துட்டுப் போய் அப்பனையும் மகனையும் கொன்னுடலாமானு வெறியாகுது ஷ்ரவன்”

கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தான் கேசவ். ஷ்ரவனுக்கும் அவனளவுக்குக் கோபம் வந்தது தான். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

பத்மானந்தின் இந்தச் செய்கைக்கு பின்னே ஏதோ பெரிய காரணம் இருக்குமென நம்பினான் அவன். சந்திரமௌலியின் மகன் அல்லவா! பேச்சை விட செயலை நம்பும் ரகம் அவன்.

“வெயிட் பண்ணி பாப்போம் கிரிஷ்”

“இன்னும் எதுக்கு வெயிட் பண்ணணும்?”

“கொஞ்சம் பொறுமையா இருடா”



ஷ்ரவன் அவனைச் சமாதானம் செய்யும் போது கேசவின் அறைக்கதவு தட்டப்பட்டது.

யாரென திறந்து பார்த்தால், அங்கே நின்று கொண்டிருந்தவர் சந்திரமௌலி.

“என்னப்பா?”

“உங்க ரெண்டு பேரையும் ஆனந்த் கூப்பிடுறான்”

“அவரை பாக்குறதுக்கு எனக்கு விருப்பமில்ல அங்கிள்”

சட்டென வெடித்தான் கேசவ்.

சந்திரமௌலி அவனிடம் வந்தவர் “இந்த அவசரப்புத்தி தான் உன்னோட தப்பான ஜட்ஜ்மெண்ட் எல்லாத்துக்கும் காரணம் கிரிஷ்” என்று கடிந்தார்.

கேசவ் திகைக்கவும் அவனையும் ஷ்ரவனையும் கையைப் பிடித்து நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

பத்மானந்தின் அறையில் நுழைந்து கதவை அடைத்தவர் “உன் மகன் வந்துட்டான் ஆனந்த்... நீ கேக்க விரும்புறத கேளு” என்றார்.

பத்மானந்த் படுக்கையில் சாய்ந்திருந்தவர் கேசவிடம் “நான் அந்தப் பொண்ணு நிகிதாவ பாக்கணும்” என்றார்.

“எதுக்கு?” – கேசவ்.

“சரணைத் தண்டிக்க அவ தான் சரியான ஆள்னு தோணுது... ஷ்ரவன், அவளை நான் மீட் பண்ண ஏற்பாடு பண்ணு” என்றார்.

“அவளை இங்க வரச் சொல்லவா அங்கிள்?”

“வேண்டாம்... அவ வீடு வயநாடுல இருக்குனு சொன்னிங்கல்ல... நம்பிக்கையான ஆள் ஒருத்தனை என் கூட அனுப்பு... நானே நேர்ல போய் பேசிக்கிறேன்”

“என்ன பேசப்போறிங்க?” இடையிட்டான் கேசவ்.

“நான் என்ன செய்யப்போறேன்னு உனக்கு இப்போதைக்குத் தெரியவேண்டாம்... ஷ்ரவன் ஏற்பாடு பண்ணுற ஆள் கூட அங்க போய் நான் என் வேலைய முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் நீயே தெரிஞ்சிப்ப... போர்ட் மீட்டிங்குக்கு அரேஞ்ச் பண்ணுனல்ல, அதுல சரணையும் கமலையும் போர்ட்ல இருந்து டிஸ்குவாலிஃபை பண்ணுறதுக்கான வேலைய கவனி... மத்த வேலைய குமாரவேலு பாத்துப்பார்” என்றவர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பது மட்டும் அங்கிருந்த மூவருக்கும் அப்போது புரிந்துவிட்டது.

கேசவிற்கு தந்தை மீது சிறிது நம்பிக்கை உதயமானது.

“சரிப்பா” என்றவன் அறையை விட்டு வெளியேற போக அவனைக் கைப்பிடித்து நிறுத்தினான் ஷ்ரவன்.

அவனது பார்வை பத்மானந்திடம் நிலைத்தது.

“நீரவுக்கு உங்க தம்பியும் தம்பி மகனும் செஞ்ச அநியாயத்துக்கு என்ன செய்யணுமோ அதை செய்ய ரெடியாயிட்டிங்க... நீங்க கிரிஷ்கு பண்ணுன அநியாயம் ஞாபகம் இருக்குதா அங்கிள்?”

பத்மானந்த ஷ்ரவனை கூர்மையாக ஏறிட “நீங்க பாக்குறதால எதுவும் மாறிடாது... ஏன் கிருதிய பத்தி இவன் கிட்ட பொய் சொன்னிங்க?” என்றான் அவன்.

அவர் மௌனம் சாதிக்கவும் ஷ்ரவனுக்கு எரிச்சல் மிகுந்தது.

“ஏன் அங்கிள் சைலண்டா இருக்கிங்க? இன்னைக்கு கிரிஷும் கிருதியும் பிரிஞ்சு தனித்தனி தீவா இருக்குறதுக்கு நீங்க மட்டும் தான் காரணம்” என குற்றம் சாட்டினான் அவன்.

பத்மானந்த் அவனது குற்றச்சாட்டுக்கு ஆமென்றோ இல்லையென்றோ பதிலளிக்காமல் நிதானமாக அமர்ந்திருக்க சந்திரமௌலி நண்பரை அதிருப்தியோடு நோக்கினார்.

“இவன் சொல்லுறது உண்மையா ஆனந்த்? கிரிஷ் காதலிச்ச பொண்ணை அவனை விட்டுப் பிரிச்சது நீயா?” என்று அவர் கேட்க

“நான் அவங்களை பிரிக்கல மௌலி” என்றார் அவர்.

“பொய் சொல்லாதிங்க அங்கிள்... நீங்க சொன்ன பொய்யால தான் அவங்க பிரிஞ்சாங்க” என்றான் ஷ்ரவன்.

“சரியா சொன்ன... நான் ஜஸ்ட் ஒரு பொய் தான் சொன்னேன்... அவங்களுக்குள்ள ஸ்ட்ராங்கான லவ் இருந்தா ஏன் பிரியப்போறாங்க?”

வெகு இலகுவாக அவர் கேட்க கேசவின் தலையில் இடி விழுந்தது.

பொய் கூறினாரா? பிரக்ருதியிடம் இவர் பேசியது பொய்யா? அல்லது பேசும் போது பிரக்ருதி கூறியதாக இவர் சொன்ன வார்த்தைகள் பொய்யா?

தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு. 

“நீங்க பேசுறதை உங்களால ஏத்துக்க முடியுதா அங்கிள்? ஒரு பொய்யால உங்க மகனோட காதலை பிரிச்சிட்டுக் கொஞ்சம் கூட கில்டி ஃபீலிங் இல்லாம பேசுறிங்க” 

கேசவ் கேட்க வேண்டியதை அவன் சார்பாக ஷ்ரவன் கேட்டான்.

பத்மானந்த் படுக்கையிலிருந்து எழுந்தார்.

“இவனுக்கு அந்தப் பொண்ணு மேல கண்மூடித்தனமான லவ் இருந்துச்சு... எனக்கு அப்ப இவன் லவ்வை விட கம்பெனியோட வளர்ச்சி முக்கியமா பட்டதால சின்னதா ஒரு பொய் சொன்னேன்... அந்தப் பொண்ணு கிட்ட நான் யாருனு சொல்லவேல்ல... எனக்குப் பிடிக்காத பொண்ணை கிரிஷ் கல்யாணம் பண்ணுனா அவனை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வச்சிடுவேன்னு சொன்னேன்... அந்தப் பொண்ணு அதை கேர் பண்ணல... சீக்கிரம் கிரிஷை கல்யாணம் பண்ணி பேரன் பேத்திய என் கிட்ட ஒப்படைச்சிட்டு ஆர்.ஜே வேலைக்குப் போவேன்னு கிண்டலா பேசினா... அவ உன் கிட்ட பொய் சொல்லல கிரிஷ்... நான் தான் சொன்னேன்... ஐ அம் சாரி”

கேசவ் தந்தையை நம்ப முடியாமல் வெறித்தான்.



“எவ்ளோ ஈசியா சாரி சொல்லுறிங்க? நீரவ் பிரச்சனை மட்டும் வெளிய வரலனா இப்பவும் நீங்க இந்த உண்மைய சொல்லிருக்க மாட்டிங்கல்ல? உங்க பிசினஸை காப்பாத்திக்க என் காதலை பலி குடுத்துட்டிங்க... யூ ஆர் அ ரூத்லெஸ் ஹியூமன் டாட்”

வேறேதும் சொல்ல முடியவில்லை அவனால். பிரக்ருதியை வார்த்தையால் வதைத்து அவர்களின் காதலை கொன்று குழி தோண்டி புதைத்தவனின் கோபம் தந்தை என்றதும் மட்டும் ஏனோ கட்டுப்பாட்டைக் கடைபிடித்தது.

பத்மானந்த கலங்கியது எல்லாம் ஒரு கணம் தான். பின்னர் தன்னை சமனப்படுத்திக்கொண்டவர்

“நான் உன் கிட்ட சாரி கேட்ட மாதிரி நீயும் அவ கிட்ட சாரி கேட்டுட்டா பிரச்சனை முடிஞ்சிடும் கிரிஷ்... இப்ப நீ யார்னு அவளுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்,... உன்னை வேண்டாம்னு இக்னோர் பண்ணமாட்டா” என்றார்.

“அவளைப் பத்தி உங்களுக்கு இன்னும் தெரியல டாட்... அதான் இப்பிடி பேசுறிங்க” என்று மட்டும் சொன்னவன் அங்கே நிற்காமல் வெளியேற ஷ்ரவனும் அவனைத் தொடர்ந்து சென்றுவிட்டான்.

 ***** 

பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்...

பிரக்யா வைத்து கொடுத்த சூப்பை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தாள் பிரணவி. இன்னும் இரு தினங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது.

அதோடு சேர்ந்து பிருத்வியும் மகிழினியை அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வரவிருக்கிறான். அவனைப் பற்றிய சிந்தனைகளை முடிந்தளவுக்கு ஓரங்கட்டி வைத்த பிரணவி புதுவருடப்பிறப்புக்காக தங்கை எதுவும் கொண்டாட்டங்களை வைத்திருக்கிறாளா என பிரக்யாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இந்த நியூ இயருக்கு பெருசா எந்தப் ப்ளானும் இல்லண்ணி... நம்மளே நைட் ட்வெல்வ் ஓ க்ளாக்குக்கு முழிச்சு ஹேப்பி நியூ இயர்னு விஷ் பண்ணிப்போம்” என்றாள் அவள்.

பிரக்ருதி இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை. வாசனும் மனோகரும் கோவிலுக்குச் சென்றிருக்க வீட்டிலிருந்த பெண்கள் இருவரும் நேரம் போகாமல் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.

“ஷ்ரவன் முன்ன மாதிரி உன் கிட்ட பேசுறதில்ல போல”

ஒரு கரண்டி சூப்பைச் சுவைத்த பிரணவியின் நாக்கு சூப்பின் சூடோடு அக்கேள்வியைக் கேட்டது.



பிரக்யா என்னவென பதிலுரைப்பாள்? நான் அவன் மீது சந்தேகப்பட்டு கன்னாபின்னாவென திட்டியதால் எங்களுக்குள் இடைவெளி விழுந்துவிட்டதென கூறினால் பிரணவியும் பிரக்ருதியைப் போல கழுவு ஊற்றுவாள்.

“நான் ஜாபுக்கு ட்ரை பண்ணுறேன்ல அண்ணி, அவனுக்கும் இப்ப ஒர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு.. உங்களுக்கே தெரியும்ல, அவங்க கம்பெனி மேல பெரிய ஸ்காம் கம்ப்ளைண்ட் இருக்கு... அதுல இருந்து அவங்க வெளிவர்ற வரைக்கும் அவனால ரிலாக்ஸ் ஆக முடியாதுண்ணி”

உண்மையும் பொய்யுமாக கலந்து கூறி சமாளித்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் உறக்கம் கலைந்து “ஒன் கப் காபி ப்ளீஸ்” என்ற கோரிக்கையோடு வந்து நின்றாள் பிரக்ருதி.

“ப்ரஷ் பண்ணுனியாடி? கொஞ்சம் கூட கூச்சமேல்லல்ல” என பிரணவி கலாய்க்க

“இந்தக் கேள்விக்கு நாய் பூனைலாம் ப்ரஷ் பண்ணுதானு நான் கேப்பேன்... பட் அது க்ளிஷேவா இருக்கும்... சோ வேற மாதிரி கேக்குறேன்... நம்ம வீட்டு கிச்சனுக்கு அக்கேஷ்னலா விசிட் பண்ணுற காக்ரோச் பல் தேய்க்குதா? இல்லனா எத்தனை பொறியில மசால்வடை வச்சாலும் அலேக்கா வடைய மட்டும் தூக்கிட்டு ஓடுற எலி பல் தேய்க்குதா? என்னை மட்டும் கேக்குற” என்று காலையிலேயே அவள் வம்பு செய்ய ஆரம்பித்தாள்.

பிரணவி சூப் கிண்ணத்தை சோபாவில் வைத்துவிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டவள் “தெரியாம சொல்லிட்டேன்... நீ ப்ரஷ் பண்ணு, பண்ணாம போ... ஏன் குளிக்காம கூட இரு... நான் கேள்வி கேக்கவே மாட்டேன்” என்றாள்.

அவள் மீண்டும் சூப் கிண்ணத்தை எடுக்கும் முன்னர் பாய்ந்து எடுத்த பிரக்ருதி “வாவ்! ப்ரொக்கலி சூப்... யம்மி” என்று வாசனை பிடிக்க

“என் சூப்பை குடிச்சிடாதடி... நான் ஆசைப்பட்டு செஞ்சு தரச் சொல்லி சாப்பிடுறேன்” என்று கெஞ்ச ஆரம்பித்தாள் பிரணவி.

பிரக்ருதி தமக்கையை கேலியாகப் பார்த்தாள்.

“சரி! பிழைச்சுப் போ” என்றவள் பிரக்யாவிடம் பேசியபடி காபி போட ஆரம்பித்தாள்.

“நாளைக்கு ஷார்ப்பா டென் ஓ க்ளாக் ஆபிஸ்ல நீ இருக்கணும்... டென் தேர்ட்டிக்கு இண்டர்வியூ ஆரம்பிச்சிடுவாங்க” என்றாள்.

பிரக்யா பன்னாட்டு நிறுவனமொன்றில் நேர்க்காணலுக்குச் செல்லவேண்டியதை குறிப்பிட்டாள் அவள்.

“அதுல்லாம் கிளம்பிடுவேன்டி”

தோழிக்குப் பதிலளித்தவள் பிரணவி சூப் அருந்துவதில் பிசியானதும் அவளுக்குக் கண் காட்டி தனியே அழைத்துச்சென்றாள்.

“என்ன விசயம்?” காபியை அருந்திக்கொண்டு கேட்டாள் பிரக்ருதி.



“அண்ணிக்கு டவுட் வந்துடுச்சு கிருதி... ஷ்ரவன் ஏன் முன்ன மாதிரி பேச மாட்றான்னு கேட்டாங்க”

“நீ என்ன சொன்ன?”

“அவன் வேலையில பிசியா இருக்கான்னு சொல்லி சமாளிச்சேன்... இதே கேள்விய அப்பாவும் அடிக்கடி கேக்குறார்... எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியல”

“இதெல்லாம் அவனை மோசமா பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... நீ அவன் கிட்ட இப்ப வரைக்கும் சாரி கூட கேக்கல பிரகி”

“ப்ச்! நீயே யோசி... நீ லவ் பண்ணுற பையன் இன்னொரு பொண்ணோட ஹோட்டலுக்குப் போறத பாத்தா நீ என்ன நினைப்ப?”

“அவன் வேலை விசயமா வந்திருப்பான்னு நினைச்சிருப்பேன்... உன் சந்தேகம் தப்பானது பிரகி... நீ அதுக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்... ஷ்ரவன் கண்டிப்பா உன்னை மன்னிப்பான்”

தோழியர் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் சார்ஜில் கிடந்த பிரக்ருதியின் மொபைல் இசைத்தது.

அவள் ஆடி அசைந்து சென்று அழைப்பை ஏற்றாள். அழைத்தது ஷ்ரவன்.

“சொல்லு ஷ்ரவன்”

“நான் உன்னை மீட் பண்ணணும் கிருதி... இன்னைக்கு ஈவ்னிங் ஃப்ரீயா?” என வினவினான் அவன்.

“எனிதிங் இம்பார்ட்டெண்ட் ஷ்ரவன்?”

“யெஸ்... ஐ வாண்ட் டு டாக் அபவுட் பிரகி”

“ஓ.கே... நான் செவன் ஓ க்ளாக் எக்மோர் மெட்ரோல இருப்பேன்... அங்க மீட் பண்ணலாம்... என்னால லீவ் போட முடியாது ஷ்ரவன்... இல்லனா வேற ப்ளேஸ்கு வரச் சொல்லிருப்பேன்”

“இட்ஸ் ஓ.கே... உன்னை நான் மீட் பண்ணணும்... அவ்ளோ தான்... எந்த இடமா இருந்தாலும் நோ இஸ்யூஸ்”

“ஈவ்னிங் பாக்கலாம்... பை ஷ்ரவன்”

அவள் அழைப்பைத் துண்டித்தாள். பிரக்யாவிடம் போய் நின்றவள்

“ஷ்ரவன் தான் பேசுனான்... இன்னைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமானு கேட்டான்”

“என்ன விசயம்?”

“உன்னைப் பத்தி பேசணுமாம்... அவன் உனக்காக, உன் மேல இருக்குற எவ்ளோ இறங்கி வர்றான் பாரு”

பிரக்யா மௌனம் சாதித்தாள்.

“இப்ப பேசாம நில்லு... எங்க பேசக்கூடாதோ அங்க ஓவரா பேசு”

அவளைக் கடிந்தபடி ப்ரஷையும் பேஸ்டையும் எடுத்துக்கொண்டாள் பிரக்ருதி.

பிரக்யா முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டாள்.

“இன்னைக்கு ஈவ்னிங் நீயும் என் கூட வர்றியா? ஷ்ரவன் கிட்ட நீ சாரி கேக்க சரியான டைம் இது தான்”

“ஐயோ! எனக்குப் பயமா இருக்கு... நான் வரமாட்டேன்” என பம்மினாள் அவள்.

“நீ அவனை லவ் பண்ணுனல்ல, அப்ப சமாதானமும் நீ தான் பண்ணணும்” என்று முறைத்தாள் பிரக்ருதி.

“அது...”

“என்ன... அத்து... இத்து... போதி” என்று வாயில் நுரையோடு திட்டியவளிடமிருந்து

“நீ ப்ரஷ் பண்ணிட்டு வா... நான் இன்னொரு கப் காபி தர்றேன்” என்று எஸ்கேப் ஆனாள் பிரக்யா.

பிரக்ருதி தலையிலடித்துக் கொண்டு வாய் கொப்புளிக்க ஆரம்பித்தாள்.

அன்றைய மாலை சந்திப்பு ஷ்ரவன் – பிரக்ருதி காதலுக்கானது அல்ல, தனக்கும் கேசவுக்குமானது என்பதை அவள் அறியமாட்டாள் அல்லவா!

அவளுடனான சந்திப்பை உறுதி செய்த தகவலை கேசவிடம் கூறிய ஷ்ரவன் இந்தச் சந்திப்பின் போது பிரச்சனை எதுவும் வந்துவிடக்கூடாதென மனதுக்குள் கடவுளிடம் வேண்டிக்கொண்டான்.

Comments