பூங்காற்று 43

அந்த ஆடியோவால் நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்கும் இடையே சத்தமே இல்லாமல் ஒரு பனிப்போர் ஆரம்பித்தது. இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடியே திரிய ரகுநந்தன் இப்போதெல்லாம் பெரும்பாலான நேரத்தை அலுவலகத்திலேயே கழித்தான். ஆனால் அலுவலகத்தில் கூட கணவனும் மனைவியும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. நீரஜாட்சி அவனை ஏளனமான உதட்டுவளைவுடன் கடந்துவிட அவனால் தான் எதையும் மறக்க முடியவில்லை. அவள் இந்த பிரச்சனையை இலகுவாக எடுத்துக் கொண்டதற்கும் அவனது புத்தி தப்பர்த்தம் செய்து கொண்டது. " அது சரி! நான் மட்டும் தானே லவ் பண்ணுனது. அவ தான் என்னை பத்தி நினைச்சு கூட பார்த்தது இல்லையே. அப்புறம் எப்பிடி அவளுக்கு வருத்தமா இருக்கும் ?" என்று அவன் நினைத்துக் கொள்ள நீரஜாட்சியோ "உண்மையை சொல்ல சொல்ல கேக்காம போனா நான் இவன் பின்னாடியே போய் கெஞ்சணுமாக்கும் , பெரிய இவன்! உண்மையை புரிஞ்சுகிட்டு தானா பேசுனா பேசுறான் , இல்லைனா வாழ்க்கை முழுக்க இப்பிடி முசுடாவே இருந்துட்டு போறான். எனக்கு என்ன வந்துச்சு ?" என்று சிறிதும் தனது நிலையை விட்டு விலகாதவளாய் அவனை சமாதானம் செய்ய முயலவில்லை. அவளின் விலக...
Comments
Post a Comment