அத்தியாயம் 11

  அத்தியாயம் 11 நாம் அனைவரும் ஒரு ‘ ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி ’ யில் வாழ்ந்து வருகிறோம் . நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும் முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல் நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம் . ஏன் என்னைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்பதற்கான தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்வதில்லை . வளர்ப்பதற்கு இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிப்பதும் இல்லை .                                                           இப்படிக்கு சந்திரிகை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி , மில்லர் மெமோரியல் லைப்ரரி ... சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா . அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடியவாறு மிகவும் மெதுவான குரலில் சந்தோஷிடம் அவனது சோர்வுக்கான காரணத்தைக் கேட்டாள் . “ இன்னைக்கு எங்கண்ணி நான் வச்சிருந்த பி . டி . எஸ் ஆல்பம் கலெக்சன் எல்லாத்தையும் தூக்கி குப்பையில வீசிட்டாங்க சந்து ... நான் இல்லாத நேரத்துல செஞ்சிருக்காங்க ... இன்னைக்கு மானி

அத்தியாயம் 6

 



திறமையற்றவர்களைக் கடவுள் படைப்பதே இல்லையாம். ஆனால் தன்னிடமுள்ள திறமையை அடையாளம் காணும் புத்திக்கூர்மையைச் சிலருக்கு மட்டும் தான் கொடுப்பாராம். அடையாளம் கண்டுகொண்டாலும் தனது திறமையை உலகுக்குப் பறைச்சாற்ற போராடும் குணத்தை வெகு சிலருக்கு மட்டுமே அளிப்பாராம்.

                                                         இப்படிக்கு சந்திரிகை

கபே காபிடே...

தன் முன்னே வைக்கப்பட்டிருந்த கேப்புசீனோவில் வரையப்பட்டிருந்த இதயத்தை அழிக்க மனமின்றி பார்த்துக்கொண்டிருந்தாள் சந்திரிகா. காற்றெங்கும் காபியின் நறுமணம். சிற்றுண்டிகள் பேக் செய்யும் வாசம் நாசியை நிமிண்டியது. மதியவுணவைச் சாப்பிடாமல் வந்ததால் சிறுகுடலும் பெருங்குடலும் ஒரு வாய் காபியைக் குடியேன் என அகிம்சையாய் இரைந்து கொண்டிருந்தன.

ஆனால் அவளோ காபியை வெறிக்க வெறிக்க பார்த்தாளே தவிர ஒரு மிடறு கூட அருந்தவில்லை.

அவளெதிரே அமர்ந்திருந்த நரேஷோ பாதி கோப்பையை அதற்குள் காலி செய்துவிட்டான்.

ஏன் குடிக்காம வேடிக்கை பாக்குற சந்து பேபி?” என்ற கேள்வி வேறு.

சந்திரிகா வெறுமெனே தலையசைத்தாள். வந்த காரியத்தை முடிக்காமல் அவனுடைய விருந்தோம்பலில் திளைக்க விரும்பவில்லை அவள்.

நரேஷ் முழு கோப்பையையும் காலி செய்த பிறகு மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல நரேஷ்

எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த நரேஷ் இதை எதிர்பார்த்தவன் போல நகைத்தான். இதில் சிரிக்க என்ன இருக்கிறது என எரிச்சல் மூண்டது சந்திரிகாவின் மனதில்.

என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?” அமர்த்தலாக கேட்டான் அவன்.

எனக்கு நிறைய படிக்கணும்... பெரிய வேலைக்குப் போகணும்... அப்பா அம்மாவ சந்தோசமா வச்சிக்கணும்... இப்பவே கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்ல... நான் சொன்ன எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் மெச்சூர்டான பிறகு கல்யாணத்தை பத்தி யோசிப்பேன்

மூச்சுவிடாமல் அவனிடம் ஒப்பித்தாள் சந்திரிகா. அவள் கூறியதை பொய்யான மெச்சுதலோடு பார்த்தான் நரேஷ்.

ஊப்ஸ்

உதடு குவித்து ஊதியவன் சந்திரிகாவின் பக்கம் குனிந்தான்.

நீ சொல்லுற நாள் வரைக்கும் என்னால வெயிட் பண்ணமுடியாது பேபி... உன்னோட படிப்பு வேலை எல்லாத்தையும் கல்யாணத்தை முடிச்சிட்டுப் பாரேன்... நான் உன் வேலைக்குத் தடையா நிக்கமாட்டேன்என்றான் தாராள பிரபுவாக.

தட்ஸ் நாட் பாசிபிள்... கல்யாணம் ஆகிடுச்சுனா ஃபேமிலி புருசன் பிள்ளைங்க இந்த மாதிரி ரெஸ்பான்சிபிளிட்டி வந்துடும்... அப்புறம் என்னால படிக்கமுடியாது... ப்ளீஸ்! நீங்க வேற பொண்ணை பாத்துக்கோங்க

வேற பொண்ணா?” ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தவன் கோணலாகச் சிரித்தான்.

உன்னை மாதிரியே சோசியல் மீடியால சம்பாதிக்கிறவ எவளையாச்சும் எனக்குச் செட் பண்ணி விடு... உன்னை நான் விட்டுடுறேன்என்றான் வக்கிரமாக.

அவனது வெளிப்படையான பேச்சில் சந்திரிகா அதிர்ந்து போனாள். இதுநாள் வரை இப்படிப்பட்ட அநாகரிகமான வார்த்தைகளைக் கேட்டதில்லை அவள்.

நரேஷின் வார்த்தைகளே அவனது நோக்கத்தைப் படம் போட்டுக் காட்டிவிட்டது.

நான் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்ங்கிறதால தான் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புனிங்களா?”

வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள் சந்திரிகா. இனி மேல்பூச்சோடு பேச என்ன இருக்கிறது இந்தக் கேவலமானவனிடம் என்ற வெறுப்பு அவளது குரலில் விரவிக் கிடந்தது.

ஆமா! எனக்கும் சோசியல் மீடியால ஃபேமஸ் ஆகணும்னு ஆசை... ஆனா ஆம்பளைப்பசங்க கஷ்டப்பட்டு கண்டெண்ட் ரெடி பண்ணி யூஸ்ஃபுல்லா வீடியோ போட்டா எவன் பாக்குறான்? உன்னை மாதிரி பொண்ணுங்க பின்னாடி தான வழிஞ்சுகிட்டு ஓடுறானுங்க

சந்திரிகாவிடம் மேலும் மேலும் அநாகரிகமாக பேசினான் அவன். நரேஷின் சுயரூபம் தெரிந்து அதிர்ந்துபோனாள் அந்தச் சின்னப்பெண்.

பொண்ணுங்களை பத்தி எவ்ளோ கேவலமான மைண்ட் செட் வச்சிருக்கிங்க!  உங்களை இந்த ஜென்மத்துல நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்... எங்க அம்மாவும் அண்ணனும் உங்களை நல்லவன்னு நினைச்சிட்டிருக்காங்க.. அவங்க கிட்ட உங்க சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுறேன்என சவால் விட்டாள் அவனிடம்.

நரேஷோ பெரிய நகைச்சுவையைக் கேட்டவனைப் போல ஆணவத்தோடு சிரித்தான்.

உன் அண்ணனா? அவன் ரூட் எப்ப காலியாகும்னு காத்திருக்கான்... அவன் கிட்ட போய் என்னைப் பத்தி தப்பா சொன்னேனு வையேன், உன்னை அவன் கொலை கூட பண்ணிடுவான் பேபி... சாரோட மனசு முழுக்க இப்ப சரிதா இருக்கா... எப்ப அவளைக் கல்யாணம் பண்ணி ஹனிமூன் வ்ளாக், ப்ரெக்னென்சி வ்ளாக் போடலாம்னு கணக்கு போட்டு திரியுறவன் கிட்ட என்னை பத்தி தப்பா சொல்லி கல்யாணத்தை நிறுத்தலாம்னு கனவு கூட காணாத பேபி

என் கிட்டவே என் அண்ணனை பத்தி தப்பா சொல்லுறிங்களா? உங்களோட நோக்கம் தெரிஞ்சா அவன் உங்களை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுவான்

ரோசத்தோடு கத்தினாள் சந்திரிகா. அந்நேரம் கபேயில் ஆள்வரத்து இல்லை. அங்கிருந்த சப்ளையர்களின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது.

குரலைத் தணித்துக்கொண்டவள்அப்பிடியே என் அண்ணன் உங்க வலையில விழுந்தாலும் எங்கப்பா அம்மா இருக்காங்க... அவங்களை வச்சு உங்களை வீட்டை விட்டு வெளிய அனுப்பிக்காட்டுறேன்என்றாள்.

நரேஷ் சாவகாசமாகஉன்னால முடிஞ்சா செஞ்சு காட்டுஎன்கவும் சந்திரிகா கோபத்துடன் எழுந்தாள்.

பில் கொண்டு வந்த சப்ளையரின் ஸ்வாப்பிங் மெஷினில் கார்டைத் தேய்த்து பணம் செலுத்திவிட்டு நரேஷை திரும்பிக்கூட பார்க்காமல் கபே காபிடேயை விட்டு வெளியேறினாள்.

காரை அடைந்தவள் கார்ச்சாவி நரேஷிடம் உள்ளதென ஞாபகம் வரவும் தலையில் குட்டிக்கொண்டாள்.

உன் தலையில கொட்டுனா எனக்கு வலிக்கும் பேபிஎன சினிமா வசனம் பேசிக்கொண்டு பின்னே வந்து நின்றான் நரேஷ்.

அவனை தீப்பொறி தெறிக்கும் விழிகளால் பார்த்தவள்சாவியைக் குடுங்கஎன கைநீட்ட அவனோ பொறுமையாகக் சாவியிலிருந்த சுவிட்சை அழுத்த கார் திறந்துகொண்டது.

சந்திரிகா அவனைப் பார்க்க பிடிக்காமல் காரின் பின்பக்க இருக்கையில் அமர நரேஷும் காரை தமிழ்பூங்கா நகரை நோக்கி செலுத்தினான்.

பாதிவழியில் திடீரென கார் நிற்கவும் சந்திரிகா திகைத்து விழிக்க நரேஷோ காரை ஆள்நடமாட்டமற்ற இடத்தில் ஓரங்கட்டிவிட்டுப் பின்பக்க கதவைத் திறந்தான்.

தன்னை நடுரோட்டில் இறக்கிவிடுவானோ என பயந்து போன சந்திரிகாவை இடித்தபடி அமர்ந்தவன்

கபேல என்னமோ சொன்னியே... அதை இன்னொரு தடவை சொல்லுஎன்று கேட்டான்.

அப்போது இருந்த அலட்சியம் அவனிடம் இல்லை. கண்களில் கோபாக்கினி வீசியது. சந்திரிகாவா அதைக் கண்டு அஞ்சுவாள்?

எங்கம்மா அப்பா கிட்ட உங்களைப் பத்தி சொல்லி வீட்டை விட்டுத் துரத்துவேன்னு சொன்னேன்... ஏன் காது கேக்கலையா?” என நிமிர்வாக உரைத்தாள்.

சட்டென அவளது மோவாயைப் பற்றினான் நரேஷ்.

என்னடி விட்டா ஓவரா சீன் போடுற? நீ கெட்ட கேட்டுக்கு உன்னை எவன் கல்யாணம் பண்ணிப்பான்னு ஒப்பாரி வச்சது உன் அம்மா... ஏதோ இரக்கப்பட்டு வாழ்க்கை குடுக்கலாம்னு பாத்தா ரொம்ப பிகு பண்ணுற... நான் காசுக்காகவும் புகழுக்காகவும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொன்னல்ல... ஆமா, அதோட இன்னொரு பாயிண்டையும் சேர்த்துக்க... உன் அழகுக்காகவும் தான்... உன்னை மாதிரி ஒருத்திய மிஸ் பண்ணுறதுக்கு நான் என்ன முட்டாளா? அஞ்சரை அடி தங்கச்சிலைய விட்டுட்டு ஊர்க்காட்டுல ஆடு மேய்க்கிறவளை கட்டிக்கவா நான் இவ்ளோ கஷ்டப்பட்டேன்? உங்கப்பன் கிட்ட மட்டும் நீ உண்மைய சொன்னனு வையேன், இந்த நரேஷோட சுயரூபத்தை நீ பாப்ப... இவன் என்ன பண்ணிடுவான், பேபி பேபினு வழிஞ்சிட்டு பின்னாடியே சுத்துவான்னு தப்புக்கணக்கு போடாத... என்னைக்கு இருந்தாலும் நீ எனக்குத் தான் சொந்தம்... என்னை மீறி நீ ஏதாவது செஞ்சதா கேள்விப்பட்டேன், தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை

உறைந்து போய் அமர்ந்திருந்த சந்திரிகாவின் கரத்திலிருந்த மொபைலைப் பிடுங்கி இவ்வளவு நேரம் அவனது பேச்சு பதிவாகிக்கொண்டிருந்த வீடியோவை அனாயாசமாக அழித்தான் நரேஷ்.

மொபைலை அவளிடம் கொடுத்தவன் சந்திரிகாவின் கண்கள் இயலாமையில் கலங்கவும் நக்கலாகச் சிரித்தபடி தோளோடு அணைத்தான்.

அழுறப்ப கூட நீ அழகி தான்என்று புகழ்ந்தவன் கன்னத்தில் முத்தமிட முயல தனது கையை வைத்துத் தடுத்தாள் சந்திரிகா.

திமிறி அவனிடமிருந்து விலகி கார்க்கதவை திறக்கப்போனவளின் கையைப் பற்றியவன்

இது வெறும் சேம்பிள்... என்னைப் பத்தி நீ ஏதாச்சும் உளறி வச்சனு தெரிஞ்சுதுனா உன்னை மட்டுமில்ல உன் குடும்பத்தையே சும்மா விடமாட்டேன்என்று மிரட்டிவிட்டு பிடித்த கையில் முத்தமிட்டான்.

சந்திரிகா கையை இழுத்துக்கொள்ளவும் கார்க்கதவைத் திறந்து முன் இருக்கையில் அமர்ந்தான் அவன்.

வேற எங்கயும் போகணுமா பேபி?”

வீட்டுக்குப் போங்க

அலட்சியச்சிரிப்போடு காரைக் கிளப்பினான் நரேஷ்.

*****

ஜி.எஸ்23 கன்வீனியன்ஸ் ஸ்டோர், டாங்கியோ, சியோல்...

கே-பாப் ட்ரெயினிகளுக்கு ஞாயிறன்று முழு விடுமுறை. அன்றும் அவர்கள் விரும்பினால் பயிற்சி எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் அந்நாளைத் தூங்குவதற்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.

வோல்க்வாங் ஒவ்வொரு ஞாயிறன்றும் தன் நண்பர்களைக் காண டாங்கியோவுக்குச் சென்றுவிடுவாள்.

ஷி வொன் மற்றும் ஹெங்பொக்கோடு சேர்ந்து அம்யூஸ்மெண்ட் பார்க், கடைவீதி, கரோகே பார் என கால் ஓயுமட்டும் சுற்றுவாள்.

அவளுக்கு ட்ரெயினி அலவன்ஸ் கொடுக்கப்படுவதால் அவளால் கொஞ்சம் செலவளிக்க முடிகிறது.

ஜி.எஸ்25 கன்வீனியன்ஸ் ஸ்டோரில் பனானா மில்க் ஒன்றை வாங்கிக்கொண்டு அதை அருந்தாமல் அமர்ந்திருந்தவளை ஷி வொன்னும், ஹெங்பொக்கும் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

தென்கொரியாவின் மிகப்பெரிய எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தில் பயிற்சி பெறுகிறாள். முன்னை விட அவளது நடனத்திறமையும் பாடும் திறமையும் மெருகேறியிருப்பதாக கூறுகிறாள். அப்படி இருந்தும் சமீப நாட்களாக அவளது முகத்தில் வெறுமை சூழ்ந்திருக்கிறது.

உனக்கு எதுவும் பிரச்சனையா க்வாங்? உன் கனவோட வாசல்படியில நிக்கிற, ஆனா அதுக்கான சந்தோசம் உன் முகத்துல இல்லையே... உன்னால பிரஷரை தாங்கிக்க முடியலையா?”  ஆதுரமாகக் கேட்டாள் ஷி வொன்.

இல்லையென மறுப்பாக தலையசைத்தாள் வோல்க்வாங்.

ட்ரெய்னிங் ப்ரஷரை விட அங்க என்னைச் சுத்தி இருக்குறவங்க குடுக்குற ப்ரஷர் அதிகமா இருக்கு... அதை என்னால ஹேண்டில் பண்ண முடியலஎன்றாள் பொத்தாம்பொதுவாக.

சி..ஓ லீஹோவுக்கு என் மீது ஒரு கண் என்று அவளால் வெளிப்படையாகக் கூறமுடியாது. ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்டுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் நிறுவனத்தைப் பற்றியோ அதன் தலைமையைப் பற்றியோ மதிப்பு குறைவாகப் பேசக்கூடாதென்ற நிபந்தனை குறிப்பிடப்பட்டிருக்கிறதே! பின்னர் எப்படி அவள் கூறுவாள்?

ஷிவொன்னும் ஹெங்பொக்கும் அதை வேறுவிதமாக எடுத்துக்கொண்டனர். அவளுடன் டாமெட்ரியில் தங்கியிருப்பவர்களைப் பற்றி சொல்லுகிறாள் போல என்று நினைத்தனர் இருவரும்.

இப்ப தான அங்க போயிருக்க... உன் டேலண்டை பாத்து சமயத்துல நாங்களே பொறாமைப்பட்டிருக்கோம், தெரியுமா? அவங்களுக்கும் அந்த மாதிரி பொறாமையா இருக்கும்... போகப்போக உன்னோட நல்ல குணம் தெரிஞ்சு அவங்க உனக்கு ஃப்ரெண்ட் ஆகிடுவாங்கஎன சமாதானம் செய்தனர்.

சக ட்ரெயினிகளைப் பற்றி தெரியாமல் பேசுகிறார்களே என நொந்துகொண்டாள் வோல்க்வாங்.

லீஹோவின் பார்வை வோல்க்வாங்கின் மீது பட்டது தான் அவர்களின் பொறாமைக்குக் காரணமேயொழிய அவளது திறமையல்ல என்பதை எப்படி கூறுவாள் அவள்?

பெருமூச்சு விட்டவள் ஹெங்பொக்கைப் பார்த்து சிரித்தாள்.

கே-பாப் ஐடல்ஸை பாத்து எவ்ளோ ஃபயர் விட்டிருப்போம்? அவங்களை மாதிரி நம்மளும் ஆகணும்னு எவ்ளோ கனவு கண்டிருப்போம்? பட் மேடையில ஜொலிக்கிற ஒவ்வொரு ஐடலுக்குப் பின்னாடியும் இவ்ளோ கஷ்டம் இருக்கும்னு இப்ப தானே புரியுது... இது புரியாம ஒரு பேண்டோட ஃபேன்ஸ் இன்னொரு பேண்ட் மெம்பரை தரக்குறைவா பேசுறது, ஸ்லட்சேம் செய்யுறது, அவங்க செக்சுவாலிட்டிய சொல்லி கிண்டல் பண்ணுறதுனு நிறைய ஃபேன்ஸும் ஆன்ட்டி-ஃபேன்சும் கே-பாப் ஐடல்சுக்கு சைக்காலஜிக்கலி எவ்ளோ பெரிய ப்ரஷரைக் குடுக்குறாங்க? இந்த ப்ரஷரை ஹேண்டில் பண்ணமுடியாம தான் சிலர் சூசைட் பண்ணிக்கிறாங்க போல

ஹெங்பொக் வோல்க்வாங்கின் பேச்சில் திடுக்கிட்டான். அவளது கையைப் பற்றினான்.

ஆர் யூ ஓ.கே க்வாங்? உனக்குப் பிரச்சனைனா எங்க கூட ஷேர் பண்ணிக்க... தப்பான முடிவு எதையும் எடுத்துடாத... ஐடல் ஆகலனா வாழ்க்கை ஒன்னும் முடிஞ்சிடாது... நமக்குனு வேற மாதிரியான எதிர்காலம் காத்திருக்கும் க்வாங்

நம்பிக்கையூட்டும் விதமாக அவன் பேசினான்.

ஷி வொன்னுக்கும் வோல்க்வாங்கின் பேச்சு அதிர்ச்சியே!

நான் ட்ரெயினிங்ல இருந்து ட்ராப்-அவுட் ஆகிட்டேன்... என்ன செத்தா போயிட்டேன்? டாக்சிக் சரவுண்டிங்ல சர்வைவ் ஆகுறது கஷ்டம் தான்... பட் யூ ஆர் வெரி வெரி ஸ்ட்ராங்

நண்பர்கள் கொடுத்த ஆறுதலுக்குப் பிறகு தனது மனதை அழுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தை ஷி வொன்னிடம் கேட்டாள் வோல்க்வாங். அவள் தானே தென்கொரிய பிரஜை.

சப்போஸ் ட்ரெய்னிங் பீரியட்ல வேற மாதிரியான ஃபேவர் எதிர்பாத்து வர்ற ஸ்பான்சர்ஸ் மேல லீகல் ஆக்சன் எடுக்க முடியுமா?”

தாராளமா எடுக்கலாம்... சாலிட் எவிடென்ஸ் இருந்துச்சுனா யாராவது உனக்குத் தொந்தரவு குடுத்தா அவங்க மேல நீ போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கலாம்... அவங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சௌத் கொரியன் கவர்மெண்ட் அவங்களை சும்மா விடாது

ஷி வொன்னின் வார்த்தைகள் நம்பிக்கையையும் தெம்பையும் கொடுக்க வாங்கி வைத்திருந்த பனானா மில்கை காலி செய்தாள் வோல்க்வாங்.

பின்னர் என்ன? நண்பர்களுடன் ஊர் சுற்றுவதில் நேரம் கழிந்தது. ஹெங்பொக் அடுத்த வாரம் ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்ட் ஆடிசனில் கலந்துகொள்ள தேர்வான சந்தோசத்தை ஃப்ரூட் சோஜூ குடித்து கொண்டாடினார்கள் மூவரும்.

ஹெங்பொக்குடன் அவள் சேர்ந்திருக்கும் காட்சிகள் புகைப்படமாக எடுக்கப்படுவதை அறியாதவளாக நண்பனோடு பேச்சில் மூழ்கியிருந்தாள் வோல்க்வாங்.

அந்தப் புகைப்படங்கள் எல்லாம் உடனுக்குடன் லீஹோவின் மொபைலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றை வரிசையாகப் பார்த்தவனின் விழிகள் பூவாய் சிரித்த வோல்க்வாங்கை விட்டு அகல மறுத்தன.

எல்லார் கூடவும் சிரிச்சு பழகுறா... என் கிட்ட வந்தா மட்டும் பயமும் அழுகையுமா எரிச்சல்படுத்துறாஎன்றபடி புகைப்படத்தில் இருந்த வோல்க்வாங்கின் செவ்விதழ்களை வருடினான் அவன்.

இப்படி வெறும் சிரிப்பால் தன்னை வசப்படுத்தமுடியுமென யாரேனும் சில நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் அவன் நம்பியிருக்கவேமாட்டான்.

இத்தனை ஆண்டுகளில் யார் மீதும் இவ்வளவு பைத்தியக்காரத்தனமான விருப்பம் அவனுக்கு வந்ததில்லை.

எத்தனையோ பிரபல நடிகைகள் பிசினஸ் ஆளுமைகளுடன் டேட்டிங் செய்திருக்கிறான். காதலித்த அனுபவமும் அவனுக்கு இருந்தது. அப்படிப்பட்டனிடம் அவனை விட பன்னிரண்டு வயது சிறுபெண் எவ்வளவு ஆட்டம் காட்டுகிறாள்? மற்ற பெண்களிடம் காட்டிய முரட்டுத்தனத்தை அவளிடம் காட்ட ஏனோ லீஹோவுக்கு மனம் வரவில்லை.

சாமர்த்தியமாக தான் அவளைத் தன் வழிக்குக் கொண்டுவரவேண்டும் என அவளைக் கண்காணிக்க ஆளை நியமித்திருந்தான் அவன்.

அந்த நபரும் வோல்க்வாங் வாரயிறுதியில் டாங்கோ செல்ல ரயில் ஏறியதிலிருந்து அவளைத் தொடர்ந்தான். தேவையான கோணங்களில் புகைப்படங்களை எடுத்து அதை லீஹோவின் மொபைலுக்கு அனுப்பியும் வைத்தான்.

இந்தப் புகைப்படங்களை வைத்தும், வோல்க்வாங்குடன் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்தை வைத்தும் அவளுக்குச் செக் வைக்க தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தான் லீஹோ.


Comments