அத்தியாயம் 11

  அத்தியாயம் 11 நாம் அனைவரும் ஒரு ‘ ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி ’ யில் வாழ்ந்து வருகிறோம் . நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும் முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல் நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம் . ஏன் என்னைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்பதற்கான தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்வதில்லை . வளர்ப்பதற்கு இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிப்பதும் இல்லை .                                                           இப்படிக்கு சந்திரிகை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி , மில்லர் மெமோரியல் லைப்ரரி ... சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா . அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடியவாறு மிகவும் மெதுவான குரலில் சந்தோஷிடம் அவனது சோர்வுக்கான காரணத்தைக் கேட்டாள் . “ இன்னைக்கு எங்கண்ணி நான் வச்சிருந்த பி . டி . எஸ் ஆல்பம் கலெக்சன் எல்லாத்தையும் தூக்கி குப்பையில வீசிட்டாங்க சந்து ... நான் இல்லாத நேரத்துல செஞ்சிருக்காங்க ... இன்னைக்கு மானி

அத்தியாயம் 9

 

அத்தியாயம் 9

அது ஏனோ ‘yes all men’ என்று சொல்லிவிட்டால் ஆண்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. நீங்கள் சமூக வலைதள கணக்கில் இந்த சொற்றொடரை மட்டும் பதிவிட்டுப் பாருங்கள். உங்கள் பதிவின் கீழ் வரும் கமெண்ட்களில் முக்கால்வாசிஅப்ப உன் அப்பனும் மோசமானவன்னு ஒத்துக்கிறியாவகையறாவாக தான் இருக்கும். அப்படி கேட்பவர்களுக்கு ‘the girl under the basement’ திரைப்படத்தைப் பாருங்கள் என தாராளமாக பரிந்துரைக்கலாம். ஆஸ்திரியாவைச் சேர்ந்த எலிசபெத் ஃபிரிஜில் என்ற பெண்ணை அவளது தந்தை ஜோசஃப் வீட்டின் அடியில் கட்டியிருந்தசவுண்ட் ப்ரூஃப் பேஸ்மெண்டில்வைத்து பாலியல் வன்கொடுமை செய்து ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுக்க வைத்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அது. வக்கிரங்களும் பேராசையும் கொண்ட மனம் உறவுமுறைக்கு மதிப்பளிக்காது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தச் சம்பவம்.

                                                         இப்படிக்கு சந்திரிகை

சந்திரிகா தனது மதிப்பெண் சான்றிதழை வாங்கிக்கொண்டு சென்னைக்குத் திரும்பி ஒரு வாரமாகிவிட்டது. நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்ததால் பிரபல கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என தீர்மானித்திருந்தாள் அவள்.

அவளது அன்னையும் சகோதரனும் வேறுவிதமான திட்டங்களைத் தீட்டியிருந்தது சந்திரிகாவுக்கும் சட்டநாதனுக்கும் தெரியாது.

சாந்தமதியும் சர்வேஷும் தூத்துக்குடியில் நரேஷின் வீட்டில் தங்காமல் கணவரோடு சந்திரிகா கிளம்பிய செய்தியில் அதிருப்தியுற்றிருந்தனர்.

அது போதாது என்று தூத்துக்குடியிலிருந்து திரும்பியதும் இனி நரேஷ் தங்கள் வீட்டில் தங்கக்கூடாதென கறாராகக் கட்டளையிட்டுவிட்டார் சட்டநாதன்.

அதற்கு சந்திரிகா தான் காரணமென அன்னையும் மகனும் ஊகித்தனர்.

இப்படியே விட்டால் அவள் தங்களது கையை மீறிப் போய்விடுவாள் என்ற பயம். வெகுவிரைவில் சந்திரிகாவின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென தீர்மானித்திருந்தனர் இருவரும்.

அந்த முற்றுப்புள்ளி சந்திரிகாநரேஷின் திருமணம். அதைப் பற்றி பேச சாந்தமதியும் சர்வேஷும் தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

சர்வேஷோ எப்பாடுப்பட்டேனும் சந்திரிகாவைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் அவசரத்தில் இருந்தான்.

அவள் நாட்களைக் கடத்த கடத்த தானும் சரிதாவும் கபிள் வ்ளாகர் ஆகி சம்பாதிப்பதற்கான தருணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். அதற்கு அவன் அனுமதிக்கமாட்டான்.

இதை அறியாமல் சட்டநாதனும் சந்திரிகாவும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் ஆர்வத்திலிருந்தனர்,

அன்றைய தினம் சந்திரிகா நீண்டநேரம் அறைக்குள் அடைபட்டிருப்பதைக் கண்டு துணுக்குற்றுக் கதவைத் தட்டினார் சாந்தமதி.

கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் கதவை மடமடவென தட்டிய பிறகு சந்திரிகா திறந்தாள்.

என்னம்மா?”

சலிப்பாக கேட்டவளின் முகமெங்கும் வியர்வை. தலைவிரிக்கோலமாக அவள் நிற்கவும் சாந்தமதி தலையிலடித்துக்கொண்டார்.

தூங்குறப்ப தலைய கொண்டை போட்டுக்கனு சொன்னா கேக்கவே மாட்டியா பாப்பா? சரி வா, அம்மா ஜடை பின்னி விடுறேன்

நீ போம்மா... நான் வர்றேன்

சாந்தமதி கிளம்பியதும் மீண்டும் அறைக்கதவைச் சாத்தியவள் சில வினாடிகள் சென்றதும் வெளியே வந்தாள்.

சாந்தமதி தேங்காய் எண்ணெய் பாட்டிலும் சீப்புமாக தரையில் அமர்ந்திருக்க சட்டநாதன் செய்தித்தாளில் கவனமாகியிருந்தார்.

சந்திரிகா அன்னையின் அருகே தரையில் அமர்ந்தாள்.

சாந்தமதி மெதுவாக அவளது நீண்ட கூந்தலில் எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தார்.

அடுத்த வாரம் நரேஷ் வீட்டுல இருந்து வர்றாங்க... நம்ம பாப்பாக்குப் பூ வச்சிட்டுப் போறாங்களாம்

பூ வைப்பது என்றால் அவர்கள் ஊர்ப்பக்கத்தில் திருமண நிச்சயம்.

சட்டநாதன் அவர் சொன்னதைக் கண்டுகொள்ளவே இல்லை. சந்திரிகாவால் அவரைப் போல அமைதி காக்க முடியவில்லை.

நான் யூ.ஜிக்கு அப்ளிகேசன் வாங்கிட்டு வந்திருக்கேன்மா... எனக்குப் படிக்கணும், பெரிய வேலைக்குப் போகணும்னு ஆசையா இருக்கும்மா... ப்ளீஸ், இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்

கணவனின் அமைதியும் மகளின் எதிர்ப்பும் சாந்தமதிக்குச் சுர்ரென்றிருந்தது. ஆனால் இப்போது கோபப்பட்டால் காரியம் கெட்டுப்போய்விடும் என்பதால் சாமர்த்தியமாக இருவரையும் சமாளிக்க எண்ணினார்.

யாரு இப்பவே உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க? பாக்கு வெத்தலை மாத்தி உனக்கும் நரேஷுக்கும் நிச்சயம் பண்ணிப்போம் பாப்பா... நீ காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பண்ணிடுவோம்

சமாதானமாகச் சொன்னபடி மகளின் நீண்ட கார்க்கூந்தலைச் சிடுக்கெடுத்து சீப்பினால் சீவினார் சாந்தமதி.

சந்திரிகாவின் கண்கள் நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்த தந்தையை தனக்காகப் பரிந்து பேசும்படி அழைத்தது.

அவர் அதை கவனிக்காவிட்டாலும் மனைவிக்கும் மகளுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டுக்கொண்டு தானே இருக்கிறார்.

அம்மா என்ன சொன்னாலும் நம்ம நல்லதுக்காக தான் இருக்கும் பாப்பா... நீ வேலைக்குப் போய் என்ன செய்யப்போற? நம்ம நரேஷ் கிட்ட இல்லாத சொத்தா? அவ்ளோ சொத்துக்கும் நீ தான் ராணிஎன்று கடுப்போடு அன்னைக்கு ஒத்தூதினான் சந்திரிகாவின் அண்ணன் சர்வேஷ்.

அப்போதுதான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்திருந்தான். ஏன் இவன் அடிக்கடி வேலைக்கு விடுப்பு எடுக்கிறான் என எரிச்சலோடு அவனை ஏறிட்டாள் சந்திரிகா.

இவ போய் தொலைஞ்சாதான் நானும் சரிதாவும் கல்யாணம் பண்ணிக்க முடியும்... இவ நந்தி மாதிரி இருந்தா என் லைன் எப்பிடி க்ளியர் ஆகும்? எப்ப நானும் சரிதாவும் கபிள் வ்ளாகர் ஆகி சம்பாதிக்கிறது?”

 மனதிற்குள் கறுவிக்கொண்டவாறு சொம்பிலிருந்த தண்ணீரை மடமடவென அருந்தினான் சர்வேஷ்.

சந்திரிகாவுக்கோ இப்போது படிக்கவேண்டும், அவளுக்கென ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவை அடைய பணம் வேண்டும். கொஞ்சம் பிரபலத்துவம் வேண்டும். அதற்காக மட்டுமே ரீல்ஸ், சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சிங் எல்லாமே!

திருமணம் முடித்து கபிள் வ்ளாகராக காலை காபி போடுவதில் ஆரம்பித்து இரவு ஆல் அவுட் லிக்விட்டை ஆன் செய்வது வரை தனிமையில் ரசிக்கவேண்டிய அழகிய தருணங்கள் எதையும் மிச்சம் வைக்காமல் ஊரார் முன்னே கடை பரப்பும்படி வீடியோ எடுத்து காசு பார்க்க எண்ணுபவனை மணமுடிக்க அவளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

அந்த நரேஷுக்கு ஆதரவாகப் பேசி தன்னை சம்மதிக்க வைக்க எண்ணும் அண்ணன் மீது கோபம் பிறந்தது அவளுக்கு. கூடவே நரேஷும் அவனது குடும்பமும் காலிப்பெருங்காய டப்பா என்பதை வேறு கண்டுகொண்டாளே!

பணக்காரன்னு அவன் சொன்னானா? அவன் ஒன்னும் பணக்காரன் இல்ல.... பணக்காரன் மாதிரி காட்டி உங்களை மயக்கப் பாக்குற ஏமாத்துக்காரன்... சொத்து சொத்துனு சொல்லுறானே, எல்லா சொத்தும் வில்லங்கத்துல இருக்குதாம்... அவன் என்னைக் கல்யாணம் பண்ணுறது யூடியூப்ல கபிள் வ்ளாக் போட்டு சம்பாதிக்கிறதுக்காக

சந்திரிகா கோபத்தோடு சொன்னதுதான் தாமதம், தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த எவர்சில்வர் சொம்பினை அவளது கையைக் குறிவைத்து எறிந்தான் சர்வேஷ்.

குறி தப்பாமல் அவளது புறங்கையில் கனமான சொம்பு மோதிய வேகத்தில்அம்மாஆஆஆஎன அலறிக்கொண்டு கையை உதறியவாறு வலியில் துடித்தபடி எழுந்தாள் சந்திரிகா.

தம்பி என்ன காரியம் பண்ணிட்ட?” – சாந்தமதி. இவள் முடமாகிவிட்டால் யார் வ்ளாக் போடுவது என்ற அச்சம்.

சர்வேஷ் ஆவேசத்துடன் தங்கையை நெருங்கினான். கொஞ்சம் கூட இரக்கமோ பாசமோ இல்லாமல் அவளது கூந்தலைப் பற்றி இழுத்து உலுக்கினான்.

கட்டிக்கப்போறவனை அவன் இவன்னு சொல்லுற? இப்பிடித்தான் நம்ம அம்மா உன்னை வளர்த்தாங்களா? நீ மட்டும் நரேஷைக் கட்டிக்கலனா உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்என்று கேட்டு தங்கையை அறைய கை ஓங்கினான்.

சந்திரிகா அன்று சர்வேஷின் சுயரூபத்தைப் பார்த்தாள். பணத்தாசை எப்பேர்ப்பட்டவனையும் அரக்கனாக்கி விடும் என்பதை அனுபவத்தில் அறிந்தவளுக்கு அண்ணன் இப்படி மாறிப்போனதில் மனம் இரணமானது.

சந்திரிகாவை அறைய சர்வேஷ் கை ஓங்கிய கணத்தில் அவனது கையைப் பிடித்தார் சட்டநாதன்.

சர்வேஷின் கண்களில் கோபவெறி. மகளோ எவர்சில்வர் சொம்பு மோதியதால் வீங்கிய கரத்தை ஊதிக்கொண்டு அழுதாள்.

மகளின் கண்ணீருக்குக் கலங்காத தந்தை உண்டோ!

விட்டார் பளாரென ஒரு அறை சர்வேஷின் கன்னத்தில்.

அவர் அறைந்த வேகத்தில் சுழன்று போய் விழுந்தான் அவன்.

சாந்தமதி பதறிப்போனவர் ஓடிப்போய் மகனைத் தூக்கினார்.

என்ன காரியம் பண்ணுறிங்க? யாராச்சும் தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைய அறைவாங்களா?” என மைந்தனை தூக்கியபடி கணவரிடம் எகிறினார் அவர்.

சீ! வாயை மூடு... உன் மகன் என் பிள்ளை கையை உடைச்சு சோலிய முடிக்க பாத்தானே... அப்ப நீ கோமாலயா இருந்த? இன்னொரு தடவை அம்மாவும் மகனும் என் பிள்ளை மேல கை வச்சு பாருங்க, அப்ப தெரியும் இந்தச் சட்டநாதன் யாருனு

அப்ப உங்க மகளுக்குக் கல்யாணம் ஆகக்கூடாதுனு நினைக்கிறிங்களா?” துவேசம் பொங்கியது சாந்தமதியின் குரலில்.

கல்யாணம் தானே... அதுக்கான காலம் வந்ததும் தன்னால நடக்கும்... அதுவரை என் மகள் படிப்புல மட்டும் தான் கான்சென்ட்ரேட் பண்ணுவா... உன் மகனை அடக்கி வை... இல்லனா என் கையால அடிபட்டுச் செத்துடப்போறான்... ஜாக்கிரதை... என் பிள்ளைய இன்னொரு தடவை அழ வச்சிங்க, ரெண்டு பேருக்கும் மரியாதை கெட்டுப்போயிடும்

 கை வலி உயிர் போனாலும் தந்தையின் ருத்ராவதாரத்தில் அன்னையும் அண்ணனும் கதி கலங்கி நிற்பது சந்திரிகாவின் மனதுக்கு நிம்மதியளித்தது. அதே நேரம் அன்பான குடும்பம் இப்படி துண்டாகிவிட்டதே என்ற வருத்தம் அந்த நிம்மதியைத் துடைத்தெறிந்தது.

********

ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், ஹப்ஜியோங், சியோல்

சி..ஓ லீ ஹோ சூக்கின் அறையில் அவன் முன்னே நின்று கொண்டிருந்தனர்ப்ளாக் ஆலீவ்இசைக்குழுவின் உறுப்பினர்களான ஐவரும்.

அவர்களில் சீனப்பெண்ணான லிசி மட்டும் தலையைக் குனிந்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

மற்ற நால்வரும் அவளையும் லீஹோவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களின் இதயம் தடதடத்துக்கொண்டிருந்தது. அவர்களின் டாமெட்ரிக்குப் பொறுப்பாளரான பெண்மணியும் அழைக்கப்பட்டிருந்தார்.

லிசியின் கண்ணீருக்குக் காரணமான நிறுவன ஊழியன் மட்டும் வரவில்லை.

இது என்ன விசாரணை? தவறென்றால் இருபக்கமும் தீரவிசாரிக்க வேண்டும். லிசியையும் தங்களையும் மட்டும் அழைத்தவர்கள் அந்த ஊழியனை ஏன் அழைக்கவில்லை?

மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் முட்டிக்கொண்டிருந்தன வோல்க்வாங்கிற்கு.

அதை வெளிப்படையாகக் கேட்க முடியாமல் ஐடல் ட்ரெயினி எனும் ஸ்தானம் கட்டிப்போட்டிருந்தது.

பொறுப்பாளர் பெண்மணி லீஹோவிடம் பணிவாகப் பேசிக்கொண்டிருந்தார்.

ஓல்ட் டார்ம்ல இருந்தப்ப மிஸ் லிசி அடிக்கடி பிரச்சனை பண்ணுவாங்க... எப்பவும் மிஸ் க்வாங் மேல ஏதோ ஒரு பழிய போட்டு என் கிட்ட சிக்கவைப்பாங்க... முதல்ல அதை நான் நம்பிட்டேன்... அப்புறம் தான் இவங்க பொய் சொன்னதை நான் கண்டுபிடிச்சேன்... எங்க யாருக்கும் தெரியாம இவங்க அடிக்கடி வெளிய போயிருக்காங்க... நம்ம ஸ்டாஃப் கூட டேட்டிங் பண்ணிருக்காங்க

லிசியின் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் வடிந்து கன்னத்தைத் தொட்டது.

லீ ஹோ சூக் அனைவரையும் பொறுமையாகப் பார்த்தான். பின்னர் தொண்டையைச் செருமியவன்

ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் ஆடிசன்ல செலக்ட் ஆகமாட்டோமானு உலகம் முழுக்க இருக்கிற யங்ஸ்டர்ஸ் ஏங்கிட்டிருக்காங்க... ஆனா நீங்க கிடைச்ச வாய்ப்பை ஒழுங்கா பயன்படுத்திக்காம கம்பெனியோட கான்ட்ராக்ட் ரூல்ஸை மீறிருக்கிங்க... போதாக்குறைக்கு டாம்-மேட் மேல பொய்யா பழி போட்டிருக்கிங்கஎன்று கடினக்குரலில் பேச லிசியோடு சேர்த்து மற்ற நால்வருக்கும் ஏ.சி அறையில் வியர்த்தது.

சஜங்நிம் (சி..) ...”

ஏதோ சொல்ல வந்த லிசி லீஹோவின் கூரியப் பார்வையில் அமைதியாகிவிட்டாள்.

பொதுவா இங்க ரூல்ஸை மீறுனவங்களை நாங்க தயவு தாட்சணியம் பாக்காம வெளிய அனுப்பிடுவோம்... அப்பிடி அனுப்புற ட்ரெயினிய வேற எந்த கம்பெனிலயும் எடுக்க முடியாதளவுக்கு செய்யுறது வழக்கம்... ஆனா இந்தப் பிரச்சனைல கம்பெனி ஸ்டாஃபோட பேர் இன்வால்வ் ஆகுறதால கொஞ்சம் சாஃப்டா ஹேண்டில் பண்ணலாம்னு இருக்கேன்... இன்னொரு தடவை இந்த மாதிரி கம்ப்ளைண்ட் உங்க மேல வந்துச்சுனா டெபியூ கனவை மறந்துடணும்... அதுக்கு அப்புறம் உங்க லைஃப்ல ஐடல் ஆகணும்ங்கிற ஆசைய துறந்து வாழணும்... என்ன சொல்லுறிங்க மிஸ் லிசி?”

மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரமும், பயமும் அகல இனி இப்படிப்பட்ட தவறு நடக்காதென உறுதியளித்தாள் லிசி. பொறுப்பாளர் பெண்மணியோடு மற்ற நால்வரை மட்டும் அனுப்பி வைத்த லீஹோ வோல்க்வாங்கை அங்கேயே இருக்கும்படி பணித்தான்.

மற்றவர்கள் சென்றதும் அவளிடம் சில புகைப்படங்களைக் கொடுத்தான்.

அதில் வோல்க்வாங்கும் ஹெங்பொக்கும் இருந்தார்கள். இருவரும் வாரவிடுமுறையில் ஊர் சுற்றிய சமயங்களில் யாரோ அவர்களுக்குத் தெரியாமல் யாரோ புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். யாராக இருக்கும்?

பதற்றத்துடன் ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்தாள் வோல்க்வாங்.

ஐடல் ட்ரெயினிஸ் டேட்டிங் போகக்கூடாதுங்கிறது கான்ட்ராக்ட் ரூல்... இந்த போட்டோஸை ஆதாரமா வச்சு உன்னையும் ஹெங்பொக்கையும் என்னால ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டை விட்டு நிரந்தரமா துரத்த முடியும்... வேற எண்டர்டெயின்மெண்ட் ஏஜென்சில மறுபடி நீங்க ரெண்டு பேரும் சேர முடியாதபடி பண்ணவும் முடியும்...

பட் நீ என்னோட டிமாண்டுக்கு ஓ.கே சொன்னா அப்பிடி ஒரு இண்சிடெண்ட் நடக்காம பாத்துக்கலாம்... என்ன சொல்லுற க்வாங் பேபி?”

என்ன பிரச்சனை நடந்தாலும் இவன் தன்னை கட்டம் கட்டி மிரட்டுவதை நிறுத்தவே மாட்டான் போல. வழக்கமாய் வரும் பயமும் அழுகையும் ஏனோ வரவில்லை வோல்க்வாங்குக்கு.

நீங்க அப்பிடி செய்யமாட்டிங்க லீஹோ... ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டோட ட்ரெய்னிஸ் டேட்டிங் போனாங்கனு மீடியால வந்தா கம்பெனியோட நேம் ஸ்பாயில் ஆகிடும்னு இப்ப தானே சொன்னிங்க

வெகு சாமர்த்தியமாக அவள் பேச லீஹோவின் புருவங்கள் மெச்சுதலாக உயர்ந்தது. இனி இவளை இப்படியெல்லாம் பயமுறுத்த முடியாது என்பதை புரிந்துகொண்டான் அவன்.

வோல்க்வாங்கை தனது ஆசைக்கு இணங்க வைக்க வேறு உபாயம் கண்டுபிடிக்கவேண்டுமென அவனது மூளை அறிவுறுத்தியது.

நீங்க என் கிட்ட தப்பா நடந்துக்கிட்டிங்கனா உங்களை கம்பெனியோட சி..ஓ பதவியில இருந்து ரிமூவ் பண்ணக்கூட வாய்ப்பிருக்கு... இப்ப தான் இங்க இருக்கிற சட்டம், கார்பரேட் லா பத்தி நான் தெரிஞ்சிக்கிட்டேன்... சோ இனிமே என்னை டெபியூ பண்ணவிடமாட்டேன்னு நீங்க மிரட்ட முடியாது... என்னோட திறமை என்னனு ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்டுக்கு நல்லா தெரியும்... எந்தக் காரணம் சொன்னாலும் என்னை பேண்ட்ல இருந்து உங்களால ரிமூவ் பண்ணமுடியாது சஜங்நிம்... கம்ஷாஹம்னிடா

நிமிர்வோடு பதிலளித்துவிட்டு லீஹோவின் அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் வோல்க்வாங்.

அவளுக்குத் தெரியாது, லீ ஹோ சூக் என்ற ராஜதந்திரியின் புத்திசாலித்தனத்தையும் ஈகோவையும் தனது வார்த்தைகள் எந்தளவுக்குச் சீண்டி விட்டிருக்கும் என்பது. அதன் விளைவு எந்தளவுக்குப் பாதகமாகும் என்பதை அறியாமல் தன்னை பயன்படுத்திக்கொள்ள பார்த்தவனுக்குத் தக்க பதிலடி கொடுத்துவிட்ட நிம்மதியோடு வோல்க்வாங் டாமெட்ரிக்குப் போய்விட்டாள்.

அவளால் சீண்டப்பட்ட லீ ஹோ சூக்கின் ஈகோவுக்கு அவளது பயமும் கையறுநிலையும்தான் தீனி! அந்த இரையைச் சுவைக்க எதையும் செய்யும் லீ ஹோ சூக்கின் ஈகோ!

Comments