அத்தியாயம் 11

  அத்தியாயம் 11 நாம் அனைவரும் ஒரு ‘ ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி ’ யில் வாழ்ந்து வருகிறோம் . நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும் முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல் நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம் . ஏன் என்னைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்பதற்கான தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்வதில்லை . வளர்ப்பதற்கு இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிப்பதும் இல்லை .                                                           இப்படிக்கு சந்திரிகை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி , மில்லர் மெமோரியல் லைப்ரரி ... சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா . அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடியவாறு மிகவும் மெதுவான குரலில் சந்தோஷிடம் அவனது சோர்வுக்கான காரணத்தைக் கேட்டாள் . “ இன்னைக்கு எங்கண்ணி நான் வச்சிருந்த பி . டி . எஸ் ஆல்பம் கலெக்சன் எல்லாத்தையும் தூக்கி குப்பையில வீசிட்டாங்க சந்து ... நான் இல்லாத நேரத்துல செஞ்சிருக்காங்க ... இன்னைக்கு மானி

அத்தியாயம் 7

 



பெண்களின் அச்சத்தைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்வதுஹீரோயிசமாகஒரு காலத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் அது ஒரு ஆணின் பலவீனமென இந்தக் காலத்துப் பெண்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது. எந்த ஆணால் நேர்மறையான முறைகளில் ஒரு பெண்ணின் மனதை ஜெயிக்க முடியவில்லையோ, எவனொருவன் அவளைப் பயமுறுத்தி தனக்குச் சொந்தமாக்க எண்ணுகிறானோ அவன் பலவீனமானவன், அவனை கதாநாயக பிம்பமாக பார்ப்பது நகைப்புக்குரியது

                                                         இப்படிக்கு சந்திரிகை

சரிதாவிடம் தனது எதிர்கால திட்டங்களை விவரித்துக்கொண்டிருந்தான் சர்வேஷ்.

பாப்பாவோட பேங்க் அக்கவுண்ட் என் கண்ட்ரோல்ல இருக்கு... அதுல எவ்ளோ பணம் இருக்குனு கூட அவளுக்குத் தெரியாது... நம்ம சேனலுக்கு வேண்டிய எக்யூப்மெண்ட்ஸ் எல்லாத்தையும் அந்தப் பணத்துல வாங்கிக்கலாம்... ப்ராங்க் வீடியோ, ஷாப்பிங் வ்ளாக், குக்கிங் வ்ளாக், ஃப்ரிட்ஜ் டூர், பாத்ரூம் டூர்னு இப்ப இருந்தே கொஞ்சம் கொஞ்சமா வீடியோ போடுவோம்... நம்ம அப்பப்ப அவுட்டிங் போறதையும் வீடியோவா போட்டு இப்பவேசர்வ்ரிதாங்கிற அடையாளத்தை ஸ்ட்ராங்கா உருவாக்கணும்

அது என்னசர்வ்ரிதா’?”

புரியாமல் கேட்டாள் சரிதா.

சர்வேஷ்சரிதா, இந்த பேரோட காம்பினேசன்சர்வ்ரிதா’... இப்ப இது தான் ட்ரெண்ட் சரிதா... இந்த காம்பினேசன் நேமை பாத்ததும் நம்ம ஓருடல் ஈருயிரா வாழுற மாதிரி நினைச்சிப்பாங்க... யூ கய்ஸ் ஆர் மேட் ஃபார் ஈச் அதர்னு கமெண்ட்ல புகழ்ந்து தள்ளுவாங்க... ஏற்கெனவே நரேஷ் அவனோட சேனல்ல இந்த ட்ரெண்டை ஆரம்பிச்சிட்டான்... ‘ரேஷ்ரிகாகபிளாம் அவங்க

வெட்கமே இல்லாமல் கூறினான் சர்வேஷ்.

இப்பவேவா?”

ஆமா! அவனும் பாப்பாவும் நேத்து கபே காபிடேக்குப் போன வீடியோவ கூட போட்டிருக்கான்... பாரேன்

சரிதாவிடம் நரேஷின்வித் லவ் நரேஷ்சேனலில் அவன் பதிவேற்றியிருந்த கபே வ்ளாகைக் காட்டினான் சர்வேஷ்.

அதில் சந்திரிகா சிந்தனைவயப்பட்டவளாக இருக்க அவளெதிரே அமர்ந்து கேப்புசீனோவை அருந்திக்கொண்டிருந்த நரேஷ் அவளைக் காதல் பார்வை பார்த்தான்.

பின்னணியில் ஒலித்த இசை அந்த வ்ளாகை என்னவோ இருவரின்ரொமாண்டிக் டேட்என்று தான் பார்ப்பவர் மனதில் தோன்ற வைக்கும்.

ஐம்பத்தைந்து வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவை யூடியூப் ஷார்ட்சில் போட்டிருந்தான் நரேஷ்.

சரிதா அதற்கு இலட்சக்கணக்கில் பார்வைகள் வந்திருக்கவும் வாயைப் பிளந்தாள்.

இவருக்குச் சப்ஸ்கிரைபர்ஸ் கம்மி தானே... எப்பிடிடா இவ்ளோ வியூஸ் வந்துச்சு?”

கூட இருக்குறது என் தங்கச்சியாச்சே... ஆல்ரெடி எங்க ஃபேமிலி கூட இருக்கிற வீடியோஸ் எல்லாம் நரேஷ் அப்லோட் பண்ணிருக்கான்... எல்லாரும் நரேஷும் பாப்பாவும் லவ் பண்ணுறதா நினைச்சிட்டிருக்காங்க

எப்பிடிடா இதெல்லாம் நம்புறாங்க?” சரிதாவுக்குச் சந்திரிகாவின் மனநிலை என்ன என்பதை ஏற்கெனவே சர்வேஷ் கூறியிருந்ததால் நரேஷின் வீடியோக்கள் எதுவுமேரொமண்டிக் ஃபீல்கொடுக்கவில்லை.

ஏதோ கட்டாயத்திற்கு அமர்ந்திருப்பவளைப் போல சந்திரிகா சுரத்தின்றி இருக்க நரேஷ் தான் வேண்டுமென்றே அவளை ஒட்டியமர்ந்து நெருக்கம் போல காட்டிக்கொள்ள முயன்றதாக தோன்றியது அவளுக்கு.

கமெண்ட் செக்சனைப் பார்த்தவளுக்குத் தலை சுற்றியது.

சூப்பர் அண்ணா, அண்ணியும் நீங்களும் செம பேர்

அண்ணா நீங்க தாம்பரமா? நாங்களும் அங்க தான் இருக்கோம்... அண்ணிய ஒரு தடவை சூப்பர்மார்க்கெட்ல பாத்தோம். நீங்க மேட் ஃபார் ஈச் அதர் அண்ணா

யாருக்குலாம் அண்ணா அண்ணியோட ஷாப்பிங் வ்ளாக் பாக்கணும்னு ஆசையா இருக்கு?”

இதெல்லாம் கமெண்டில் இருந்த நகைச்சுவைகள்.

உண்மையான அன்பும் அழகான காதலும் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை என்பதை அறியாத ஈராயிரத்தின் குழவிகள் கமெண்டில் செய்திருந்த இந்த நகைச்சுவைகளைப் பார்த்ததும் சரிதாவுக்குச் சிரிப்பு தான் வந்தது.

இருவரிடமும் ஆளுக்கொரு துப்பாக்கியைக் கொடுத்தால் மாறி மாறி சுட்டுக்கொள்ளுமளவுக்குக் ஒருவர் மீது மற்றொருவருக்குக் கோபம் இருக்கிறது. ஆனால் இந்தச் சிறுபிள்ளைகள் இந்த சில நிமிட வீடியோக்களை வைத்து அவர்களை ஆதர்ச தம்பதிகளாகவே சித்தரித்துவிட்டனரே!

அதை சர்வேஷிடமும் சொல்லிச் சிரித்தாள் அவள்.

எதுக்குச் சிரிக்கிற? நம்மளும் இன்னும் கொஞ்சநாள்ல கபிள் வ்ளாகர் ஆகப்போறோம்... அதை மறந்துடாத

டார்லிங்! நம்ம நிஜமான காதலர்கள்டா... உன் தங்கச்சியும் நரேஷ் அண்ணாவும் அப்பிடியா?”

உண்மையான லவ்வர்ஸா இருந்தாலும் நம்ம மட்டும் ரியாலிட்டியவா வ்ளாகா எடுக்கப்போறோம்? ஆல்ரெடி கேமரா செட் பண்ணி வச்சிட்டு எடுக்குற வீடியோவ ப்ராங்க்னு சொல்லப்போறோம்... ஸ்க்ரிப்ட் எழுதி வச்சு நடிக்கப்போறதைஎங்கள் வாழ்வில் ஒருநாள் வ்ளாக்னுவாய்க்கூசாம பொய் சொல்லப்போறோம்... நம்ம செய்யப்போறதும் நரேஷ் மாதிரி கபிள் வ்ளாகர் பிசினஸ் தான் பேபி

சரிதாவுக்குக் கொஞ்சம் சுருக்கென்றது. ஆனால் அவளும் பிரபலமாகவேண்டுமே. அடுத்த ஆண்டுஒயிட் ஹார்ஸ்யூடியூப் சேனலின் விருது வழங்கும் விழாவில்சிறந்த கபிள் வ்ளாகருக்கானவிருதை வாங்கவேண்டும். அதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டவளுக்குச் சுருக் உணர்வெல்லாம் மறைந்துபோனது.

நீ சொன்னா சரியா தான் இருக்கும் சர்வேஷ்

சரிதாவிடம் கடலை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவனை வெறும் வீடு வரவேற்றது.

அப்பாவும் அம்மாவும் தங்கையை அழைத்துக்கொண்டு அப்பாவின் சகப்பணியாளருடைய வீட்டு புதுமனை புகுவிழாவுக்குச் சென்றிருந்தனர்.

நரேஷ் எங்கே என தேடினான் சர்வேஷ்.

அவன் சர்வேஷின் அறையில் அடுத்த வீடியோவை எடிட் செய்துகொண்டிருந்தான்.

கணினி முன்னே கருமமே கண்ணாக அமர்ந்திருந்தவனின் முதுகில் விளையாட்டாக அடித்துவிட்டு அவனது பக்கத்து நாற்காலியில் அமர்ந்தான் சர்வேஷ்.

இந்த வீடியோவை எப்போது எடுத்தான் என திகைப்போடு கணினி திரையையும் நரேஷையும் மாறி மாறி பார்த்தான் அவன்.

திரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் சந்திரிகாவோடு சேர்ந்து சாந்தமதி ஆடிக்கொண்டிருந்தார்.

மால டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்

புதுமனை புகுவிழாவுக்குச் செல்வதற்காக அணிந்த ஆடை அணிகலன்களோடு பார்க்கையில் ஏதோ திருமணவீட்டிற்கு செல்ல தயாரானவர்களைப் போல காட்சியளித்தனர் இருவரும்.

எப்போதும் சர்வேஷ் தான் எடிட்டிங் வேலையைச் செய்வான். ஆனால் இன்று நரேஷே செய்து கொண்டிருந்தான்.

தேங்க்ஸ் மாப்பிள்ளை

இட்ஸ் ஓ.கே மச்சான்

பின்னர் இன்னொரு வீடியோ எடிட்டிங் ஆரம்பித்தான்.

அதில் சந்திரிகா அவள் பாட்டிற்கு எங்கோ பார்த்துக்கொண்டிருக்க சோபாவில் சாய்ந்து சோகமாக காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தான் நரேஷ். இப்போது ட்ரெண்டிலிருக்கும் ரீல்ஸ் அது.

அதைப் பார்த்ததும் சர்வேஷுக்கு நரேஷ்மீது இரக்கம் பிறந்தது. அவனுக்கும் சரிதாவுக்குமான திருமணத்தை மனதில் வைத்து மட்டும் நரேஷை சந்திரிகாவுக்கு மணமுடிக்க அவன் யோசிக்கவில்லை.

தங்கை மீது அளவுக்கடந்த காதல் வைத்திருப்பதாக நரேஷ் சொன்னதை அப்படியே நம்பியதும் சர்வேஷின் முடிவுக்குக் காரணம்.

முரண்டுப் பிடித்தாலும் அன்னை விளக்கிய பிறகு நிலமையைப் புரிந்துகொண்டு தந்தை நரேஷ் வீட்டு சம்பந்தத்தை ஏற்றுக்கொண்டார். சந்திரிகா மட்டும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிக்கிறாள். பாவம் நரேஷ்! எவ்வளவு காதலை மனதில் தேக்கிவைத்திருக்கிறான்!

நன்றாகப் படித்திருக்கிறான். கிராமத்தில் இருக்கும் நிலபுலன்களும் வீடும் மட்டுமே கிட்டத்தட்ட இரண்டரை கோடி பெறும். அப்படிப்பட்டவன் தங்கையின் காதலுக்காக தங்கள் வீட்டில் தங்கியிருக்கிறான்.

சர்வேஷின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டவனைப் போல நரேஷும் குட்டையைக் குழப்ப ஆரம்பித்தான்.

எங்க கல்யாணத்துக்கு அப்புறம் சந்துவோட யூடியூப் வருமானத்தை உங்க வீட்டுக்கு அப்பிடியே குடுக்கச் சொல்லிட்டேன் மச்சான்... பாவம், நீங்களும் சரிதாவும் கல்யாணம் பண்ணி ஒரு நிலைக்கு வர்றதுக்கு முன்னாடி உங்களுக்கும் முதல் தேவைப்படும்ல... அத்தை மாமாவ அம்போனு விட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கனுமானு சந்து யோசிக்கிறா... நான் அவங்களை என்னைப் பெத்தவங்களை மாதிரி பாத்துப்பேன் மச்சான்... கொஞ்சம் யோசிங்க, நாங்க ரெண்டு பேரும் ஒரு ஜோடி, நீங்களும் சரிதாவும் இன்னொரு ஜோடி... ரெண்டு ஜோடியும் சேர்ந்து கபிள் வ்ளாகிங்ல கலக்கலாம்னு நான் நிறைய ஐடியாஸ் வச்சிருக்கேன்... ஹூம்... இதுக்கெல்லாம் முதல்ல சந்து ஒத்துக்கணுமே

நரேஷ் விவரித்த காட்சி சர்வேஷின் கண் முன்னே விரிந்தது.

இது மட்டும் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? யூடியூப் வருமானத்தில் சொந்தமாக கார் வாங்கலாம். வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லலாம். சரிதாவுக்கு மாலத்தீவு செல்லவேண்டுமென்ற ஆசை நீண்டநாட்களாக இருக்கிறது.

இப்போது இன்ஸ்டாக்ராம் பிரபலங்கள் வேறு மாலத்தீவு ரீல்ஸ்களாக போட்டுத் தள்ளி அவளது ஆசைக்கு நெய் ஊற்றியிருந்தனர்.

நரேஷ் சொன்னது மட்டும் நடந்துவிட்டால் பணம் பற்றிய கவலை சிறிதுமின்றி சரிதாவின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிவிடலாம்.

நடந்தால் என்ன நடந்தால்? நடத்திக்காட்ட வேண்டுமென்ற உறுதி பிறந்தது அவனுக்குள்.

சர்வேஷை தனது சூழ்ச்சி வலைக்குள் வசமாக சிக்கவைத்துவிட்ட திருப்தியோடு வீடியோ எடிட்டிங்கைத் தொடர்ந்தான் நரேஷ்.

******

ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், ஹப்ஜியாங், சியோல்...

அந்த வாரயிறுதியில் ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்டின் பெண்கள் இசைக்குழுவின் ஐடல்கள் வருகை தரவிருந்தார்கள். அவர்களை வைத்து பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் ட்ரெயினிகளுக்கு சில முக்கியமான குறிப்புகளையும் வழங்குவார்கள். நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பார்கள்.

டாமெட்ரியிலிருந்த ட்ரெயினிகளில் பெரும்பாலானவர்கள் அந்த குஷியில் இருந்தனர்.

வோல்க்வாங்குக்கு அதோடு சேர்த்து இன்னொரு மகிழ்ச்சியும் இருந்தது.

அன்று ஹெங்பொக் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் ஆடிசனுக்காக வருகை தந்திருக்கிறான். சிறுவயதிலிருந்தே அவனுக்கும் கே-பாப் என்றால் உயிர். சொல்லப்போனால் வோல்க்வாங்குக்கு கே-பாப் ஆர்வமிருப்பதை அறிந்து ஐடல் பயிற்சிக்கான ஆடிசனில் பங்கேற்க ஊக்குவித்தவனே ஹெங்பொக் தான். அதுவரை கே-பாப் ஐடல்களுக்கு விசிறியாக மட்டுமிருந்த வோல்க்வாங் அவனது ஊக்கத்தினாலும் நம்பிக்கையாலும் மட்டும் தான் ஆன்லைன் ஆடிசனில் பங்கேற்று இன்று ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டில் ட்ரெயினியாக இருக்கிறாள்.

இந்நேரம் ஹெங்பொக்கின் ஆடிசன் ஆரம்பித்திருக்கும். அவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டு இசைப்பயிற்சிக்காக மியூசிக் ரூமுக்குச் சென்றாள் அவள்.

பதினைந்து நிமிடம் தான் பயிற்சி எடுத்திருப்பாள். அதற்குள் பணியாளர் ஒருவர் வந்து வோல்க்வாங்கை சி..ஓ பார்க்க விரும்புவதாக கூற அங்கிருந்த ட்ரெயினிகள் தமக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.

வோல்க்வாங் வழக்கம் போலஹேய் பூமாதேவி என்னை முழுங்கிக்கஎன வேண்டிக்கொள்ளாத குறையாக கூனிக் குறுகினாள்.

பயிற்சியாசியர் செல்லும்படி பணிக்கவும் அவளும் கிளம்பினாள்.

லீஹோவின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவள் இன்று என்ன செய்யக் காத்திருக்கிறானோ என்ற பயத்துடன் அவன் முன்னே நின்றாள்.

இருப்பினும் வாரயிறுதியில் ஷி வொன் கொடுத்த தைரியத்தில் நிமிர்வாக நின்றாள் அவள்.

வோல்க்வாங்கின் நிமிர்வைக் கண்டு ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேலியாகப் பார்த்தான் லீஹோ.

இன்னைக்கு நீ ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி தோணுச்சு... சோ உன்னோட சந்தோசத்தை நானும் ஷேர் பண்ணிக்கலாம்னு இங்க வரச் சொன்னேன்

அப்பிடி ஒன்னுமில்ல

இன்னைக்கு ஆடிசனுக்கு நிறைய பேர் வந்திருக்காங்க... அதுல ஹெங்பொக்னு பேர் வச்ச ஒரு பையனை உன்னோட எங்கயோ பாத்திருக்கேன்

ஹெங்பொக் என்ற பெயரைக் கேட்டதும் அதிர்ந்தாள் வோல்க்வாங்.

அதிர்ச்சியை மறைத்தபடி அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்.

என்ன பேச்சைக் காணும்? உன்னோட ஃப்ரெண்ட் ஹெங்பொக்கை பத்தி தான் பேசுறேன்

இதற்கு மேல் மறைக்க என்ன இருக்கிறது? அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள் வோல்க்வாங்.

அவன் என்னை விட டேலண்டானவன்... கண்டிப்பா ஆடிசன்ல செலக்ட் ஆகிடுவான்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு... பட் அவனைப் பத்தி நீங்க ஏன் பேசுறிங்கனு புரியல

அவன் ஆடிசன்ல செலக்ட் ஆவான்னு அவ்ளோ நம்பிக்கையா? டூ யூ னோ ஒன்திங்? ஆடிசன்ல செலக்ட் ஆகப்போற ட்ரெயினிசோட ஃபைனல் லிஸ்டை தீர்மானிக்கப்போறவன் நான்... அதை மறந்துடாத

அவனை மாதிரி திறமையான ஒரு ஐடலை இழந்திங்கனா நீங்க ஃபியூச்சர்ல ரொம்ப வருத்தப்படுவிங்க லீஹோ

குரலில் உஷ்ணமும் பதற்றமும் ஒருங்கே கலந்திருக்க அவசரமாக அவள் பதிலளித்த விதமும் தனது பெயரை உச்சரித்த விதமும் லீஹோவை சொல்லவொண்ணா பரவசத்தில் ஆழ்த்தியது.

கிட்டத்தட்ட பைத்தியக்காரத்தனமான சந்தோசம். இவ்வளவு அற்பமாக நடந்துகொள்கிறோமே என அவனுக்கும் தோன்ற தான் செய்தது.

தன் முன்னே காட்டுப்பூனையாய் சீறிக்கொண்டு நிற்பவளைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.

என்னோட டிமாண்ட் என்னனு உனக்கே நல்லா தெரியும்... நீ என் டிமாண்டுக்கு ஓ.கே சொன்னாதான் உன் ஃப்ரெண்ட் ஃபைனல் லிஸ்ட்ல வருவான்னு ஒரு கண்டிசன் போட்டா உன்னோட பதில் என்னவா இருக்கும் க்வாங்?”

வோல்க்வாங்கின் கண்கள் அவனது சீண்டலில் கலங்கியது. தன்னை விட ஹெங்பொக் தகுதியானவன். தன்னால் அவனது ஐடல் கனவு சிதைந்துவிடுமோ?

கையாலாகாப்பார்வை ஒன்றை லீஹோமீது வீசினாள் அவள்.

கண்கள் கலங்க நாசி விடைக்க அவள் நின்ற கோலம் லீஹோவுக்குச் சுவாரசியத்தைக் கொடுத்தது. தாடையைத் தடவிக்கொண்டவன் கண்கள் இடுங்க சிரித்தான்.

கம் ஆன்! ஐ வாண்ட் யுவர் ரிப்ளை... உன் பதில் தான் என் முடிவைத் தீர்மானிக்கப்போகுது

ஷி வொன் தென்கொரியாவின் சட்டத்தைப் பற்றி சொன்னது வோல்வாங்குக்கு நினைவுக்கு வந்தது.

நீங்க என் கிட்ட செக்சுவல் ஃபேவர் எதிர்பாத்திங்கனா நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுப்பேன் லீஹோ

வாட்? கம் அகெய்ன்

பதற்றமின்றி கிண்டலாக காதருகே கரம் குவித்துக் கேட்டான் லீஹோ.

மானம் போய்விடுமென இவனுக்குப் பயமில்லையா? அல்லது அவ்வாறு நடிக்கிறானா? எதற்கும் இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாக சொல்லிப் பார்ப்போம்.

நான் போலீஸ்ல உங்க மேல செக்சுவல் ஹராஸ்மெண்ட் கம்ப்ளைண்ட் குடுப்பேன்னு சொன்னேன்

வோல்க்வாங் சொன்னது தான் தாமதம், லீஹோ சத்தமாக நகைத்தான். அவனது சிரிப்புச்சத்தம் அந்த சவுண்ட் ப்ரூஃப் அறையைத் தாண்டி வெளியே போகாது தான். ஆனால் உள்ளே நிற்பவளின் வயிற்றைப் பிசைகிறதே!

சிரிப்பதை நிறுத்தியவன் அவளை ஏற இறங்க பார்த்தான்.

செக்சுவல் ஹராஸ்மெண்ட்னா என்னனு தெரியாம பேசாத... பை த வே, நீ போலீஸுக்குப் போவேன்னு அடம்பிடிச்சா நானும் உன்னை ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டை விட்டு வெளியே அனுப்புவேன்... அதுவும் சும்மா இல்ல... இத்தனை மாசம் உனக்குச் செலவளிச்ச எல்லா பணத்தையும் குடுத்தே ஆகணும்ங்கிற நிபந்தனையோட அனுப்பி வைப்பேன்... ஒரு மாசம் உன்னை மாதிரி ட்ரெயினிக்கு எவ்ளோ செலவாகுதுனு தெரியுமா?”

சிம்மக்குரலில் கர்ஜித்தவன் அவள் திகைத்து நிற்கையிலேயே தனது மேஜையிலிருந்த கோப்பு ஒன்றை வோல்க்வாங் முன்னே வீசினான்.

எடுத்துப் பாரு... உங்க எல்லாருக்கும் இந்தக் கம்பெனி எவ்ளோ செலவு பண்ணுதுனு தெரியும்

வோல்க்வாங் அந்த கோப்பினை புரட்டிப் பார்த்தான்.

கே-பாப் ஐடலுக்கான பயிற்சியில் இருக்கும் ஒரு ட்ரெயினிக்கு ஆகும் செலவை அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

தங்குமிடம், உணவு, இசைப்பயிற்சி, மொழிப்பயிற்சி, நடனப்பயிற்சிக்கு செலவளிக்கும் தொகை, உடை மற்றும் அலவன்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ட்ரெயினிக்கு குறைந்தபட்சம் ஐந்தும் லட்சம் வொன் (தென்கொரிய பணம்) அதிகபட்சம் இருபது லட்சம் வொன் வரை செலவாகிறது என துல்லியமாக கணக்கிட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு வொன் ஒரு அமெரிக்க டாலருக்குச் சமம். வோல்க்வாங்கின் மனம் பணத்தின் மதிப்பைக் கணக்கிட்டு மலைத்துப் போனது.

மீண்டும் கையாலாகாப்பார்வை பார்த்தவளை கோப்பினை கொண்டு வரும்படி கூறினான். அவளும் அவனிடம் ஒப்படைத்தாள்.

ரொம்ப யோசிக்காத... உன் ஃப்ரெண்டுக்கு டேலண்ட் இருந்துச்சுனா அவனை நாங்க விடமாட்டோம்... லைக்வைஸ், நீ லீகலா மூவ் பண்ணுனேனா நானும் மூவ் பண்ணுவேன்... எதுக்கு இந்த எலி பூனை விளையாட்டு? ஒய் டோண்ட் யூ அக்செப்ட் மை டிமாண்ட்?”

பழைய இடத்திலேயே அவன் வந்து நிற்கவும் வோல்க்வாங்கிற்கு அயர்வாக இருந்தது. சும்மா தன்னை சீண்டிப்பார்க்க அழைத்திருக்கிறான்! அது சரி! தென்கொரியாவின் மிகப்பெரிய எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி..ஓவுக்கு சீண்டுவதற்கு சொல்லியா தரவேண்டும்?

லீஹோவிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல் இசைப்பயிற்சிக்குக் கிளம்ப எத்தனித்தாள் வோல்க்வாங்.

எனக்கு மியூசிக் கிளாசுக்கு டைம் ஆகுது சஜங்நிம்... கம்ஷாஹம்னிடா

யூ மே கோ நவ்

அவள் கிளம்பியதும் லீஹோவின் காதுகளில் இன்னும் அவள் சொன்ன புகார்க்காரணமே ஒலித்தது. தன்னை நினைத்து இவளுக்குப் பயமில்லை. பயத்தை உருவாக்கிவிட்டால் அஞ்சி ஒடுங்கி வழிக்கு வந்துவிடுவாள் என அவனது குறுக்குப்புத்தி கணக்கு போட்டது.

Comments