அத்தியாயம் 2
- Get link
- X
- Other Apps
a
இசை! நாகரிமடைந்த மானிட சமூகம் மீண்டும் கற்காலத்திற்குப் போய்விடாமல் தடுக்கும் மருந்து.
மனதின் வேதனையைப் போக்கும் வலிநிவாரணி.
உற்சாகத்தை
உண்டாக்கும் செவிவழி டானிக். அதன் பிறப்பிடம் புல்லாங்குழலோ பியானோவோ, பிறப்பின் நோக்கமென்னவோ மனிதர்களின் செவிவழி மனம் புகுந்து இதம் தந்து தற்காலிக மோனநிலையில் அவர்களை
வைத்திருப்பதுதான்.
இப்படிக்கு சந்திரிகை
சட்டநாதன் மார்த்தாண்டனிடம் கூறிய
முன்கதை…
Smooth like butter, pull you in like no other
Don't need no Usher to remind me you got it bad
Ain't no other that can sweep you up like a robber
Straight up, I (got ya)
Making you fall like that (break it down)
BTSன் பட்டர் ஆல்பம் பாடலுக்கு
அதற்கேற்ப மேக்கப் மற்றும் ஆடையணிந்து ரீல்ஸ் செய்து கொண்டிருந்தாள் சந்திரிகா.
நீண்ட கூந்தல் போனிடெயிலாக மாறியிருந்தது. வெண்ணிற
சட்டை கருப்புவண்ண பேண்ட் அணிந்து உடலை ரப்பராக வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.
சமீபத்தில் ரீல்ஸ் உலகை ஆட்டிப்படைக்கும் பாடல்
அது. அதற்கு அவள்
ரீல்ஸ் செய்யவில்லை என்றால் ‘சோசியல் மீடியா ஸ்டார்’ என ஃப்ரன்ட்வுட் (Frontwood) யூடியூப் சேனல்
அவளுக்கு வழங்கிய விருதுக்கு என்ன மரியாதை இருக்கிறது சொல்லுங்கள்!
வயது பதினேழு. பள்ளியில் படிக்கும் போதே
டிக்டாக்கில் அவள் பிரபலம். இப்போதோ தமிழ்நாட்டில் இளசுகளுக்குப்
பரிச்சயமான சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்.
ரீல்ஸின் முடிவில் பெருவிரலையும் ஆட்காட்டிவிரலையும் ‘V’ வடிவத்தில் வைத்து
‘லிட்டில் ஹார்ட்’ சிம்பலைக் காட்டி ஒற்றைக் கண்ணைச்
சிமிட்டவும் கதவு படபடவென தட்டப்படவும் சரியாக இருந்தது.
மெத்தையில் இறைந்து கிடந்த BTS ஆல்பத்துடன் வாங்கிய லிமிட்டட்
எடிசன் போஸ்டர் மற்றும் ஆல்பம் பாடல் வரிகளுக்கான கார்டுகள், கிராபிக் ஸ்டிக்கர்களை மடமடவென பொறுக்கி அதற்கான இடத்தில் ஒளித்துவைத்துவிட்டுக்
கதவைத் திறந்தாள் சந்திரிகா.
கதவின் அருகே நின்று கொண்டிருந்தார் அவளது
அன்னை சாந்தமதி. மகளைச் சந்தேகத்துடன் நோக்கினார்.
“என்னாச்சு பாப்பா? ரொம்ப நேரமா கதவை பூட்டி வச்சிருக்க?”
“ரீல்ஸ் பண்ணிட்டிருந்தேன்மா”
“சரிம்மா கண்ணு... அம்மா வேலைய முடிச்சிட்டு வர்றேன்... நம்ம ரெண்டு பேரும்
சேர்ந்து ஒட்டகத்தைக் கட்டிக்கோ பாட்டுக்கு ரீல்ஸ் பண்ணுவோம்... இப்ப அதுதான் ட்ரெண்டாம்ல” என்று சொல்லிவிட்டுப் போனார்
அவளது அன்னை சாந்தமதி.
சாந்தமதி வீடே உலகமென வாழ்ந்து வந்த பெண்மணி. நேரம் கிடைக்கும் போதெல்லாம்
சமூக வலைதளங்களில் வலம் வந்து அங்கிருக்கும் பூமர் குழுக்களில் பகிரப்படும்
‘இந்த புகைப்படத்தைப் பகிர்ந்தால் பத்து நாட்களுக்குள் நல்ல செய்தி வந்து
சேரும்’ என்ற வகையறா பதிவுகளை நம்புமளவுக்கு அப்பாவியாக இருந்தவர்
இன்று ரீல்சில் மகளோடு நடனமாடும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் என்றால் அதற்கு காரணம்
சந்திரிகாவுக்குக் கிடைத்த திடீர் சமூக ஊடக பிரபலத்துவம்.
ஏதோ நேரப்போக்குக்கு ஆடி பாடி நகைச்சுவையாக
நடிக்கிறாள் என்று அசட்டையாக இருந்தவர்,
மகள் அதில் சம்பாதிக்க ஆரம்பிக்கவும் மெதுவாகத் தனது கவனத்தை அவள் பக்கம்
திருப்பினார்.
ரீல்ஸ் மோகம் அவரையும் பிடித்தது. நம்மை நான்கு பேர் பாராட்டிவிட்டால்
கிடைக்கும் போதை அலாதியானது. மனிதமனம் அதை அவ்வளவு எளிதில் இழக்க
விரும்பாது. சாந்தமதியும் சராசரி மனுசிதானே. கூடவே கணவர் மற்றும் மைந்தன் ஒரு மாதம் கடினமாக உழைத்தால் வரும் சம்பளத்தை
விட சந்திரிகாவுக்கு யூடியூபில் கிடைக்கும் வருமானம் அதிகம்.
ஒப்பிட்டுப் பார்த்தவருக்கு வேறு எதுவும் பெரிதாகத்
தோன்றவில்லை. மகளோடு
சேர்ந்து அவ்வபோது ரீல்ஸ் செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டார்.
இதோ இப்போது நடந்ததைக் கவனித்த சட்டநாதன் சந்திரிகாவைக்
கண்டிக்கும் பார்வை பார்த்தார்.
“படிக்கிற வயசுல இதுல்லாம் தேவையா
பாப்பா?” என்ற கேள்வி அவரிடமிருந்து பிறந்தது.
சந்திரிகா பதிலளிக்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள்.
அப்போது அவளது அண்ணன் சர்வேஷ் ஓடோடி வந்தான்.
“இங்க பாரு பாப்பா, டாமா எர்த் ஸ்கின்கேர்ல இருந்து பி.ஆர் அனுப்பிருக்காங்க”
என்று கையோடு வந்த பார்சலைக் காட்டினான்.
அதில் சரும பாதுகாப்பு லோசன்கள், சீரம்கள், மாய்சுரைசர்கள், ஃபேஸ்வாஷ்கள் என டாமா எர்த் சரும பாதுகாப்பு
நிறுவனத்தின் சமீபத்திய புதுவரவு தயாரிப்புகள் அனைத்தும் இருந்தன.
பி.ஆர் என்பது சம்பந்தப்பட்ட நிறுவனம் இம்மாதிரி சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள்
மூலமாக தங்களது தயாரிப்புகளுக்குச் செய்துக்கொள்ளும் விளம்பரம்.
அவர்கள் கொடுக்கும் பொருட்கள் விலையுயர்ந்த
ஆடையாக இருக்கலாம். அல்லது அழகு சாதன பொருட்களாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட
சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் அவற்றை உபயோகித்து கண்டெண்ட் தயாரித்து அதை அவர்களின்
சமூக வலைதள கணக்குகளில் பதிவேற்றி தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு அப்பொருட்களை விளம்பரப்படுத்த
வேண்டும். முக்கியமாக இன்ஸ்டாக்ராம் மற்றும் யூடியூப் சேனல்களில்
விளம்பரப்படுத்த வேண்டும்.
தமிழகத்தின் தலைசிறந்த சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்
என்ற முறையில் சந்திரிகாவுக்கு இம்மாதிரியான பி.ஆர் பார்சல்கள் அடிக்கடி வரும். அவளும் அதற்காக விளம்பரம் செய்துவிடுவாள்.
சந்திரிகாவுக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு மூலதனமே பளிங்கு
போன்ற முகச்சருமம்தான். எனவே அந்தச் சரும பாதுகாப்பு பொருட்களை
ஆசையாகப் பார்த்தவள் தந்தையின் கண்டிப்பை மறந்து போனாள்.
அவளது அண்ணன் சர்வேஷ் பி.ஆர் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்களை
எல்லாம் கவனித்துக்கொள்கிறான். சில ரீல்ஸ்களில் அவனும் முகம்
காட்டுவதுண்டு.
ஐ.டி கம்பெனியில் டெட்லைன், எஸ்கலேசன் மெயில் என்று மிகவும்
அவதிப்பட்டுப்போனவனுக்கு இந்த ரீல்ஸ் இளைப்பாறுதலாக இருந்தது.
அவளது வங்கிக்கணக்கு, வலைதள கணக்குகள் சர்வேஷின்
மேற்பார்வையின் கீழே தான் இயங்கி வருகின்றன.
இதுவரை வேறுவிதமான தொந்தரவுகள் இல்லாததால்
சட்டநாதனும் மனைவி மக்களின் சந்தோசத்துக்குத் தடையாக நிற்கவில்லை.
இப்போது கூட சர்வேஷ் சந்திரிகாவிடம் ‘ஸ்பான்சர்’ வகையறா விளம்பரங்களையும், கொலாபரேஷன்களையும் செய்யும்படி
கேட்டுக்கொண்டதைக் கவனித்துவிட்டு அமைதியாய்தானே இருக்கிறார்.
மதியம் உணவருந்துகையில் சந்திரிகா கார் வாங்கலாமா
என்ற கேள்வியை ஆசையோடு எழுப்பினாள்.
“இப்ப எதுக்குமா கார்?”
என சட்டநாதன் மறுக்க
“இருக்கட்டுமேங்க… நம்ம பாப்பாக்குக் கல்யாணம் வச்சா பொண்ணழைப்புக்குச் சொந்தக்கார்ல அனுப்பி
வச்சோம்னா எல்லாரும் நம்மளை பெருமையா பேசுவாங்க” என்றார் சாந்தமதி.
“பாப்பா இப்ப தான் ஸ்கூல் முடிச்சிருக்கா…
அடுத்த வாரம் பிறந்தநாள் வந்தா அவளுக்குப் பதினெட்டு ஆகப்போகுது…
அதுக்குள்ள நீ ஏன் கல்யாணப்பேச்சு எடுக்குற சாந்தா? அவ படிச்சு நல்லவேளைக்குப் போய் சொந்தக்கால்ல நிக்கணும்”
சட்டநாதனின் கண்டிப்பான பேச்சில் சாந்தமதியின்
முகம் சுண்டியது. சந்திரிகாவுக்கோ திருமணம் பற்றிய பேச்சில் அக்கறை இல்லை. ஆனால் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை.
அந்தக் கனவில் இருந்ததால் அன்னையும் அண்ணனும்
பார்வை பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.
சாப்பிட்ட பிறகு சட்டநாதனிடம் தனது கார் ஆசையை
வெளிப்படுத்தினாள் சந்திரிகா.
“ப்ளீஸ்பா” என்று அவள் சொல்லவும் ஒரு நிபந்தனைக்குட்பட்டு சம்மதித்தார் சட்டநாதன்.
ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகுதான் காரை ஓட்டவேண்டும்
என்பதே நிபந்தனை! சந்திரிகாவும் சரியென சம்மதிக்க அன்றிரவே குடும்பத்தோடு கார் ஷோரூம் சென்று
ரெனால்ட் க்விட் கார் ஒன்றை புக் செய்தார்கள்.
சிங்கிள் பேமெண்டில் தொகை செலுத்தியதும் சட்டநாதனுக்கே
பெருமையாக இருந்தது.
அவரது பெயரில்தான் வாங்கவேண்டுமென அடம்பிடித்து
சந்திரிகா வாங்க வைத்துவிட்டாள்.
அதில் சர்வேஷுக்கு ஏமாற்றமே.
“அப்பா தான் காரை ஃபர்ஸ்ட் ஓட்டணும்”
என்று வேறு கூறியிருந்தாள் அவள்.
காரின் அனைத்து டாக்குமெண்ட்களையும் தந்தை
பெயரிலேயே வாங்கியவள் அன்று நிம்மதியாக உணர்ந்தாள்.
சட்டநாதனும் மகளை எண்ணி பெருமிதம் கொண்டார்
அந்நாளில்.
********
ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட்,
ஹப்ஜியோங், மாபோ மாவட்டம், சியோல்…
கண்ணாடியால் இழைக்கப்பட்ட பதினான்கு மாடி கட்டிடம்
இரண்டு லட்சம் சதுர அடிகளில் சூரிய ஒளியில் கண்ணைப் பறித்தபடி நின்றது.
தென்கொரியாவின் மிகப்பெரிய எண்டர்டெயிண்ட்
நிறுவனம் அது. அதில் மட்டும் கிட்டத்தட்ட ஏழு இசைக்குழுக்கள் இயங்கி வந்தன. நான்கு ஆண்கள் இசைக்குழு. மூன்று பெண்கள் இசைக்குழு.
அது போக எண்ணற்ற கொரியன் நடிகர்களும் அந்த எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தோடு
ஒப்பந்தம் செய்திருந்தனர்.
சமீபத்தில் கலைக்கப்பட்ட பெண்கள் ஐவரைக் கொண்ட ‘ப்ளாக் ஆலீவ்’ இசைக்குழுவில் ஒன்றுக்குத் தேவையான ட்ரெயினிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆடிசன்
இப்போது நடைபெறப்போகிறது.
உலகளவில் நடந்தேறிய முதல் கட்ட ஆன்லைன் ஆடிசனில்
தேர்வாகி தென்கொரியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தவர்களுக்கான ஆப்லைன் ஆடிசன் அது.
ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டை பொறுத்தவரை அவர்கள்
தேர்ந்தெடுக்கப்போகும் ட்ரெயினிகளின் உடல் தோற்றமும், எடையும், அழகும் முக்கியம். அதற்கடுத்து அவர்களின் தனித்திறமைகளான
ராப் பாடுவது, வோக்கல் மற்றும் நடனத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.
வோல்க்வாங் பர்பிள் பயிற்சி பள்ளியில் சொல்லிக்கொடுத்த
ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்துகொண்டதால் பதற்றமின்றி காணப்பட்டாள். ஆனால் ஆடிசனுக்கான அறைக்குள்
நுழைந்ததும் வியர்வை ஊற்றாக பெருகியது. லப்டப் என்ற இதயத்துடிப்பின்
இலயம் மாறி டொம்டொம்மென முரசு கொட்டுவது போல அவளது காதில் ஒலித்தது.
“பயப்படாம பெர்ஃபார்ம் பண்ணு…
நீ டென்சனா இருந்தாலும் அந்த டென்சனை ஃபேஸ்ல காட்டிடாத… இந்த வாய்ப்பு மறுபடி கிடைக்கணும்னா அதுக்கு ரொம்ப போராடணும்… சோ கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணிக்க க்வாங்… இத்தனை நாள்
பட்ட கஷ்டத்தை உன்னோட டென்சன் வீணாக்கிடக்கூடாது”
தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டு நிமிர்வாய்
நின்றாள் வோல்க்வாங்.
ஆடிசனில் பாடுவதற்காக தற்போது ஆசிய நாடுகளில்
ஹிட்டான எக்ஸ் இன் (X:In) பேண்டின் ‘கீப்பிங் த ஃபயர்’ ஆல்பம்
பாடலுக்காக பயிற்சி செய்து பார்த்துவிட்டுத் தான் வந்திருந்தாள் அவள்.
இம்மாதிரி ஆடிசன்களில் தோற்றத்தை அளவிடுவார்கள். எனவே ஆடை அதிக ஆடம்பரமாக இருக்கக்கூடாதென
ஷி வொன் சொல்லியனுப்பியதால் ஜீன்சும், சாம்பல் வண்ண ஃப்ரன்ட்
நாட் டாப்பும் அணிந்திருந்தாள்.
நடுவர்களாக ஐவர் அமர்ந்திருந்தார்கள். முதலில் அவளைப் பற்றிய விவரத்தைக்
கேட்டறிந்தார்கள். தோற்றத்தை அளவிட்டார்கள்.
“அன்னியோங்காசேயோ (வணக்கம்)”
இடைவரை குனிந்து கொரியர்களின் பாணியில் ஐவருக்கும்
வணக்கம் சொன்னவளை அவர்களுக்கு எதிரே கிடந்த இருக்கையில் அமரச் சொன்னார்கள்.
முதலில் அடிப்படையான கேள்விகள் கேட்பார்கள்
என்று ஹெங்பொக் சொல்லியிருந்தான்.
ஏன் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டில் சேர விரும்புகிறாள்? விருப்பமான உணவு எது?
கொரியன் இசை குழுக்களில் எது பிடிக்கும்? எந்த
இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியும்? ஒருவேளை அவளை அறிமுகப்படுத்தினார்கள்
என்றால் என்ன தீம் பாடலில் அவள் அறிமுகமாக விரும்புவாள்?
இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதற்றமின்றி
தெளிவான ஹங்குல் மொழியில் (கொரியர்களின் மொழி) பதிலளித்தாள் க்வாங்.
நடுவர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் பெண்.
அவர் வோல்க்வாங்கிடம்
“உங்க ஃபேஸ் ரொம்ப அழகா இருக்கு…
ஐடலுக்கு வேண்டிய முதல் தகுதியே அழகான முகம்தான்… அது உங்க கிட்ட இருக்கு… இனி மத்த தகுதிகளை பாக்கலாமா?”
என்க அவளும் அருகே இருந்த மேடையில் ஏறினாள்.
தன் முன்னே இருந்த ஐவரையும் மறந்து போனாள். ஆறாவதாக நின்ற கேமராமேனையும்
கண்டுகொள்ளவில்லை.
கரோகே பாருக்குப் போன அனுபவத்தால் ஆல்பம் பாடலுக்கான
பின்னணி இசை ஒலிப்பதை போல மனதில் கற்பனை செய்துகொண்டு பாடல் வரிகளை அதற்குரிய ஸ்தாயியில்
பாட ஆரம்பித்தாள் வோல்க்வாங்.
Keeping the fire
Nananana nananana (fire)
Nananana keeping the fire
Nananana nananana
Keeping the fire keeping the fire
உடலை வளைத்து இலாவகமாக ஆடினாலும் பாடலில் ஒரு
வரி கூட பிசகவில்லை. உச்சஸ்தாயியிக்கு ஏற்ற நடன அசைவுகள், மூச்சு வாங்காமல்
தொண்டை கட்டாமல் அவள் பாடிய விதம் என அனைத்தையும் கவனித்து நடுவர்கள் மதிப்பெண் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
பாடல் வரிகளில் ஆங்கிலமும் ஹங்குல் மொழியும்
கலந்து வரும். இரண்டையும் அவள் தெளிவாக உச்சரித்த விதத்தையும் கவனித்தார்கள். பாடல் ஆரம்பித்த போது இருந்த ஸ்டாமினாவோடு முடியும்வரை ஆடி முடித்தவள் இரு
கால்களையும் விரித்து மேடையில் அமர்ந்து “keeping the fire” என
அவள் முடித்தபோது ஐந்து நடுவர்களும் கை தட்டிப் பாராட்டினார்கள்.
“வெல்டன்… நல்லா பெர்ஃபார்ம் பண்ணுனிங்க… உங்களுக்கான பதில் உங்க
மெயில்ல வரும்” என்று கூறினார்கள்.
“கம்ஷாஹம்னிடா (நன்றி)” என்றாள் வோல்க்வாங்.
அவள் ஆடியதை வீடியோவாக்கி இருந்தார்கள். நிறுவனத்தின் சி.ஈ.ஓ பயிற்சிக்குரிய நபர்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.
எப்படியும் அதற்கு ஒரு வார காலமாவது பிடிக்கும். சில நேரங்களில் மாதக்கணக்கில் கூட நேரம் எடுத்துக்கொள்வார்கள்.
ஆடிசனுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையை
வைத்து பதிலளிப்பதற்கான காலக்கெடு மாறுபடுமென பர்பிள் பயிற்சி பள்ளியில் கூறியிருந்தார்கள்.
அந்த இடைப்பட்ட காலத்தில் பயிற்சி பள்ளிகளில்
வழங்கப்படும் பயிற்சிகள் இன்னும் கடுமையாக்கப்படும். எனவே சீக்கிரம் ஆடிசன் முடிவுகள் வந்துவிடவேண்டுமென
விரும்பினாள் வோல்க்வாங்.
கையில் வைத்திருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறதே! ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திலிருந்து பைக் டாக்சி புக் செய்து ஹப்ஜியாங் ரயில் நிலையத்துக்கு விரைந்தவளுக்கு அவளது ஆடிசனை சி.ஈ.ஓ லைவாகக் கண்டுகளித்தது தெரியாது.
கே-பாப் இசையுலகில் ஐடலாக மாறும் கனவு நிறைவேற வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டபடி நடந்தவளுக்கு ஆடிசனில் அவளது அழகை ரசித்த கண்களுக்குச் சொந்தக்காரனால் நேரப்போகும் அனர்த்தங்களை அந்த விதியாவது எடுத்துச் சொல்லியிருக்கலாம்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment