Posts

Showing posts from January, 2025

அத்தியாயம் 10

Image
  தரங்கிணி கண் விழித்தபோது அவள் பங்களாவின் விருந்தினர் அறையில் இருந்தாள். சுற்றி யாருமில்லை. “சித்து ஹாஸ்பிட்டல்ல இருக்கான்” சாரதாவின் குரல் மீண்டும் காதில் ஒலிக்கவும் விறுவிறுவெனப் படுக்கையிலிருந்து எழுந்தாள். இந்தப் பாவிகள் என் பிள்ளையை என்ன செய்தார்களோ என்று தாய்மணம் அரற்றியது. வேகமாக லிவிங் அறைக்கு வந்தவள் “எங்க போனிங்க சாரதாம்மா? என் மகனுக்கு என்னாச்சுனு சொல்லாம எங்க ஓடி ஒளிஞ்சிருக்கிங்க?” என்று கோபமாகக் கத்தினாள். அவளது குரல் கேட்டதும் மேல்தளத்தில் சாரதாவின் முகம் தெரிந்தது. பணத்திமிர், அதிகாரவெறி எல்லாம் காணாமல் போன முகம் அது. பதற்றத்தை மறைத்தபடி அவர் கீழ்த்தளத்துக்கு வருவதைக் காலணிகளின் சத்தம் உறுதிபடுத்தியது தரங்கிணிக்கு. “எதுக்கு இப்ப கத்துற? சித்துக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல… அதனால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்” என்றபடி வந்து நின்றார் அவர். “அவனுக்கு ஹெல்த் இஸ்யூனு ஏன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணல? இப்ப அவன் எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கான்?” பரபரத்த தரங்கிணியை எப்படி கட்டுப்படுத்துவதெனத் தெரியாமல் அயர்ந்து போனார் அப்பெண்மணி. “அவனை யாரும் தொந்தரவு பண்ணக...

அத்தியாயம் 10

Image
  தரங்கிணி கண் விழித்தபோது அவள் பங்களாவின் விருந்தினர் அறையில் இருந்தாள். சுற்றி யாருமில்லை. “சித்து ஹாஸ்பிட்டல்ல இருக்கான்” சாரதாவின் குரல் மீண்டும் காதில் ஒலிக்கவும் விறுவிறுவெனப் படுக்கையிலிருந்து எழுந்தாள். இந்தப் பாவிகள் என் பிள்ளையை என்ன செய்தார்களோ என்று தாய்மணம் அரற்றியது. வேகமாக லிவிங் அறைக்கு வந்தவள் “எங்க போனிங்க சாரதாம்மா? என் மகனுக்கு என்னாச்சுனு சொல்லாம எங்க ஓடி ஒளிஞ்சிருக்கிங்க?” என்று கோபமாகக் கத்தினாள். அவளது குரல் கேட்டதும் மேல்தளத்தில் சாரதாவின் முகம் தெரிந்தது. பணத்திமிர், அதிகாரவெறி எல்லாம் காணாமல் போன முகம் அது. பதற்றத்தை மறைத்தபடி அவர் கீழ்த்தளத்துக்கு வருவதைக் காலணிகளின் சத்தம் உறுதிபடுத்தியது தரங்கிணிக்கு. “எதுக்கு இப்ப கத்துற? சித்துக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல… அதனால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்” என்றபடி வந்து நின்றார் அவர். “அவனுக்கு ஹெல்த் இஸ்யூனு ஏன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணல? இப்ப அவன் எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கான்?” பரபரத்த தரங்கிணியை எப்படி கட்டுப்படுத்துவதெனத் தெரியாமல் அயர்ந்து போனார் அப்பெண்மணி. “அவனை யாரும் தொந்தரவு பண்ணக...

அத்தியாயம் 9

Image
  அதிரதன் சென்னைக்குச் சென்று இரு வாரங்கள் தரங்கிணிக்கு ஒருவித அலைக்கழிப்புடன் கழிந்தது. அவளது அலைக்கழிப்புக்குக் காரணம் அதிரதன் இல்லை. சென்னைக்குச் சென்றால் தன்னை மறந்து போவான் என்று எண்ணியிருந்தவளை தினமும் வாட்சப்பில் பேசி தொந்தரவு செய்பவனால் அவளுக்கு என்ன அலைக்கழிப்பு வந்துவிடமுடியும்? அவளது அமைதியின்மைக்குக் காரணம் சித்தார்த். அவனது பிறந்தநாளுக்குப் பிறகு ஏனோ அவனிடமிருந்தோ கேர் டேக்கர் தமயந்தியிடமிருந்தோ எந்தவித மொபைல் அழைப்புகளும் வரவில்லை. அவர்கள் அழைக்காவிட்டால் என்ன, நாம் அழைப்போமெனத் தரங்கிணி விடுத்த அழைப்புகளும் துண்டிக்கப்பட்ட அழைப்புகளாவேப் போய்விட அவளுக்குள் கலக்கம் மையம் கொண்டது. வாரயிறுதியில் அழைப்பதாகச் சொன்ன தமயந்திக்கு என்னவானது என்று விசாரித்துச் சொல்லக் கூட யாருமில்லையே என்ற கழிவிரக்கத்தில் நாட்களைக் கழித்தவளுக்கு முதல் மாதச் சம்பளம் எப்போது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமென்ற அவசரம்! அதிரதனிடம் விசாரிக்கச் சொல்வோமா என்ற எண்ணமும் அவளுக்கு வந்தது. ஆனால் அவனுக்கு இருக்கும் பரபரப்பான வாழ்க்கையில் தன்னுடைய கவலையை அவன்மீது திணிக்கத் தோன்றவில்லை தரங்கிணிக...

அத்தியாயம் 8

Image
  தரங்கிணியின் ஆலோசனையைக் கேட்ட பிற்பாடு அதிரதன் செய்த முதல் காரியம் அன்னை மனோரதியிடம் ஸ்வராவுக்கும் தனக்குமான திருமணப் பேச்சுவார்த்தையை முறித்துவிடும்படி கேட்டுக்கொண்டதுதான். கூடவே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவுக்குமாறும் அவன் கூறிவிட்டான். மனோரதிக்கு மைந்தனின் இம்முடிவில் கொஞ்சம் கூட சம்மதமில்லை. “இது உன் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவில்ல அதி… ரெண்டு பிசினஸ் எம்பயரோட வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போற முடிவு… எடுத்தோம் கவிழ்த்தோம்னு நடந்துக்க முடியாதுப்பா… நீ சென்னைக்கு வா… ரெண்டு குடும்பமும் கலந்து பேசி…” அதிரதனின் அதிருப்தியானக் குரல் தெளிவாக அவரது பேச்சைப் பாதியாக உடைத்தது. “இனி பேசுறதுக்கு எதுவுமில்ல மாம்… எல்லாத்தையும் முடிச்சிருங்க… இல்லனா நானே ப்ரஷ்கு அபிசியல் ஸ்டேட்மெண்டை அனுப்ப வேண்டியதா இருக்கும்… என்னை அந்த நிலமைக்குத் தள்ள மாட்டிங்கனு நம்புறேன்… குட் நைட் மாம்” கறாராகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான் அவன். அடுத்த அரைமணி நேரத்தில் அவனது அறைக்கதவு படபடவெனத் தட்டப்பட்டது. வந்திருப்பவள் யாரென அவனுக்கு ஊகம் இருந்ததா...

அத்தியாயம் 7

Image
  “நான் ஸ்வராவைப் பைத்தியம் மாதிரி காதலிச்சேன் தரு… அவ கூட எப்பிடிலாம் வாழணும்னு பெரிய லிஸ்டே போட்டு வச்சிருந்தேன்… உனக்கே தெரியும்ல, நான் ஹோட்டல் இண்டஸ்ட்ரிய எந்தளவுக்கு லவ் பண்ணுனேன்னு… அதுல கவனத்தைக் குவிச்சதால காதல்ல தடுமாறிட்டேன்… தப்பு தான் தரு… பிசினஸ் பிசினஸ்னு சுத்தி என் காதலியோட எமோசன்சைப் புரிஞ்சிக்காம இருந்தது பெரிய தப்பு தான்… ஆனா அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாமே? வலிக்குது தரு” இலக்கின்றி எங்கோ வெறித்தபடி சொன்னவனின் சுருங்கிய விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளி! ஆண்கள் அத்துணை எளிதில் அழுவதில்லை. ஒரு ஆண்மகனின் கண்ணீர் சுரப்பிகள் அவ்வளவு பலகீனமானவை அல்ல. அவற்றுக்கும் ஆண்மகனின் மனதுக்கும் ஒரு இணைப்பு இருக்கும். எப்போது ஆணின் மனம் சொல்லவொண்ணா வேதனையை அனுபவிக்கிறதோ அப்போது மட்டுமே அவை கண்ணீரைச் சுரக்கும். இப்போது அதிரதனின் மனமும் மரண வேதனையில் உழலுகிறது என்பதைப் புரிந்துகொண்ட தரங்கிணி ஆறுதலாக அவனது கரத்தை அழுத்தினாள். “என்னால உன்னைப் புரிஞ்சிக்க முடியுது அதி… பார்ட்னர் நமக்குப் பண்ணுற துரோகத்தை அவ்ளோ இலேசா அலட்சியப்படுத்திட்டுப் போயிட முடியாது… கொடுமையான வலி அது… நானும் அ...

அத்தியாயம் 6

Image
  தரங்கிணி பணிவோடு நின்று கொண்டிருக்க, ஸ்வரா அவளை அலட்சியம் செய்துவிட்டுத் தனது விரல் நகங்களில் பார்வையைப் பதித்துக்கொண்டு மொபைலில் மனோரதியிடம் பேசிக்கொண்டிருந்தாள். வேண்டுமென்றே தான் அவளைக் காக்க வைத்திருந்தாள். தனக்கு முறைப்படி உணவு அனுப்பிவைக்காதது அத்துணை பெரிய தவறாகத் தோன்றியது அவளுக்கு. தரங்கிணி இம்மாதிரி செயல்பாடுகளை எல்லாம் வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்தினால் புன்னகையோடு அதை எதிர்கொள்ளவெனத் தயார்ப்படுத்தப்பட்டவள். எனவே ஸ்வராவின் சிறுபிள்ளைத்தனம் அவளுக்குக் கோபத்தை உண்டாக்கவில்லை. மனோரதியிடம் அவள் பேசி முடித்துவிட்டுத் திரும்பியதும் அதிகாரத்தொனியில் தான் கேள்வியை ஆரம்பித்தாள். “நான் எப்பவுமே கேலரி கால்குலேசன் தெரிஞ்சிக்கிட்டுச் சாப்பிடுறது வழக்கம்… இது உங்களுக்குத் தெரியாதா?” தரங்கிணி புன்னகைத்தாள். “சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் மேம்… நான் நியூவா ஜாயின் பண்ணிருக்கேன்… எனக்கு இதைப் பத்தி யாரும் இன்ஸ்ட்ரக்சன் குடுக்கல” “ரீசண்டா ஜாயின் பண்ணுனது…” என்று ஆட்காட்டிவிரலால் நெற்றியில் தட்டி யோசித்தவள் “ஓஹ்! யூ ஆர் த சீஃப் குக் ஆப் இத்தாலியன் குசைன் செக்சன்… ஆம் ஐ ரைட்?” என்று கேட்க ஆ...

அத்தியாயம் 5

Image
  ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா’ என்ற ரீதியில் தன்னெதிரே அமர்ந்திருந்த ஸ்வராவைப் பார்க்கப் பிடிக்காதவனாக முகத்தை மடிக்கணினி திரைக்குள் புதைத்திருந்தான் அதிரதன். அவனது கோபம் தணியட்டுமெனக் காத்திருந்த ஸ்வரா, பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்த அவனுடைய அமைதியை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டான் என்று எண்ணிக்கொண்டு மெதுவாக “ரதன்…” என ஆரம்பித்தது தான் தாமதம், மடிக்கணினி திரைக்கு மேல் அவனது விழிகள் மட்டும் தீச்சுடராய் ஒளிர்ந்தன. அவனுள் கனலாய் எரியும் கோபத்தின் வீரியத்தை அந்தக் கண்கள் பிரதிபலிக்கவும் ஸ்வராவின் தொண்டை கட்டிக் கொண்டது. “இப்ப என்ன ட்ராமா போடலாம்னு வந்திருக்க?” சாட்டையின் நுனியால் அடிபட்டவளைப் போல துடித்துக் கண் கலங்கினாள் ஸ்வரா. “என்னைப் பாத்தா ட்ராமா பண்ண வந்த மாதிரி தெரியுதா ரதன்? ஐ கம் ஃபார் யூ… நீ எனக்கு மறுபடி வேணும்னு வந்திருக்கேன்… ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ ரதன்” “நான் என்ன பொம்மையா? நீ வேண்டாம்னு தூக்கியெறியுறதும், அப்புறம் வேணும்னு கட்டியணைக்குறதுமா இருக்கிற… எனக்கு உன்னோட இந்த மைண்ட்செட் பிடிக்கல ஸ்வரா… எனக்குனு இல்ல, எந்த ஒரு ஆம்பளைக்கும் ஒரு பொண்ணோட ‘நேம்சேக் ஃபியான...