அத்தியாயம் 10

Image
  தரங்கிணி கண் விழித்தபோது அவள் பங்களாவின் விருந்தினர் அறையில் இருந்தாள். சுற்றி யாருமில்லை. “சித்து ஹாஸ்பிட்டல்ல இருக்கான்” சாரதாவின் குரல் மீண்டும் காதில் ஒலிக்கவும் விறுவிறுவெனப் படுக்கையிலிருந்து எழுந்தாள். இந்தப் பாவிகள் என் பிள்ளையை என்ன செய்தார்களோ என்று தாய்மணம் அரற்றியது. வேகமாக லிவிங் அறைக்கு வந்தவள் “எங்க போனிங்க சாரதாம்மா? என் மகனுக்கு என்னாச்சுனு சொல்லாம எங்க ஓடி ஒளிஞ்சிருக்கிங்க?” என்று கோபமாகக் கத்தினாள். அவளது குரல் கேட்டதும் மேல்தளத்தில் சாரதாவின் முகம் தெரிந்தது. பணத்திமிர், அதிகாரவெறி எல்லாம் காணாமல் போன முகம் அது. பதற்றத்தை மறைத்தபடி அவர் கீழ்த்தளத்துக்கு வருவதைக் காலணிகளின் சத்தம் உறுதிபடுத்தியது தரங்கிணிக்கு. “எதுக்கு இப்ப கத்துற? சித்துக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல… அதனால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்” என்றபடி வந்து நின்றார் அவர். “அவனுக்கு ஹெல்த் இஸ்யூனு ஏன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணல? இப்ப அவன் எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கான்?” பரபரத்த தரங்கிணியை எப்படி கட்டுப்படுத்துவதெனத் தெரியாமல் அயர்ந்து போனார் அப்பெண்மணி. “அவனை யாரும் தொந்தரவு பண்ணக...

அத்தியாயம் 1


 அத்தியாயம் 1

 

சங்கீத மேகம்

தேன் சிந்தும் நேரம்

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்!

நாளை என் கீதமே 

எங்கும் உலாவுமே

நாளை என் கீதமே

எங்கும் உலாவுமே

என்றும் விழாவும் என் வாழ்விலே!

ஆப்பிள் ஏர்பாட் உதவியால் காதுகளில் எஸ்.பி.பியின் குரல் தேனிசையைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, உதரவிதானம் சுருங்கி விரிய புஜங்களின் தசைகள் இறுக டம்பிள்சை வைத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் அவன்.

நல்ல உயரம், உடற்பயிற்சியால் உறுதியாகியிருந்த தேகம்! தேகத்தின் இறுக்கம் முகத்திலும் தெரிந்தது. அத்துணை வசீகரத்திலும் அந்த இறுக்கம் மட்டும் துறுத்திக்கொண்டிருந்தது.

கண்கள் கண்ணாடி ஜன்னலின் வழியே தூரமாகத் தெரியும் இமாலய மலைத்தொடர்களைத் தொட்டுத் தழுவிய மஞ்சு கூட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தன.

அங்கே புகை போல மிதந்த பனி, இறுக்கத்தைத் தாண்டியும் அவனை ரசிக்கத் தூண்டியது. காதுகளில் இளையராஜாவின் இன்னிசையோடு எஸ்.பி.பியின் தேன்குரலும் சேர்ந்துகொள்ள சில மில்லிமீட்டருக்கு இதழ்கள் விரிய டம்பிள்சை ஏற்றியிறக்கிக் கொண்டிருந்தான் அவன், அதிரதன். 

வயது முப்பது. இந்தியாவெங்கும் இருபதுக்கும் மேற்பட்ட ஹோட்டல்களை இயக்கும் ‘ப்ளூபேர்ல்’ குழுமத்தின் மேலாண்மை இயக்குனர். 

இருபது ஹோட்டல்களில், அவன் தற்போது இருக்கும் ‘சன் டியூ ஹோட்டல்’ அவனுக்கு மிகவும் பிடித்தமானது.

சிம்லாவின் மசோப்ரா பள்ளத்தாக்கில் கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டாயிரத்து நூறு மீட்டர் உயரத்தில் சுற்றிலும் மலைச்சிகரங்கள் அரணாய் இருக்க அந்த ஹோட்டல் கம்பீரமாக நிற்கும் காட்சி தூரத்தில் இருந்து பார்த்தாலே நெஞ்சை அள்ளும்!

கிட்டத்தட்ட நாற்பத்தெழு அறைகள், குடும்பத்துடன் தங்குவதற்கான பத்துக்கும் மேற்பட்ட ஷூட்கள் கொண்ட அந்த ஹோட்டல் ஆங்கில எழுத்தான ‘யூ’ வடிவில் வளைந்திருக்கும். அதன் நிர்வாகப் பகுதி இரண்டு மாடி கட்டிடங்களுடன் தனியே நிற்கும்.

சிம்லா வரும்போது பெரும்பான்மையான நேரங்களில் அதிரதன் அங்கிருப்பதே வழக்கம். ‘சன் டியூவில்’ அவனுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறையில் தங்கிக்கொள்வான்.

இம்முறைதான் கொஞ்சம் அதிகநாட்கள் தங்கியிருக்கிறான். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்கள் கடந்தும் சென்னைக்குச் செல்லும் விருப்பமில்லை அவனுக்கு.

அவனது மன இறுக்கம் கொஞ்சமேனும் குறைந்தால்தானே போவதைப் பற்றி அவனும் சிந்திப்பான்! சிங்காரச் சென்னைக்குச் சென்றால் அவன் இறுகி இறுகியே நொறுங்குவது திண்ணம்! 

ஏதோ மனதை முரண்ட ஏர்பாட்களைக் கழற்றியவனின் செவிகளில் அப்போதுதான் அக்குரல் கேட்டது.

“அர்னால்ட் ப்ரஷ் பண்ணுறப்ப ஹேண்ட் பொசிசன் முக்கியம்… உங்க ஆர்ம்ஸ் ஷோல்டர் கிட்ட இறங்கி வர்றப்ப, டம்பிள்சோட சேர்ந்து உங்க கை ரெண்டும் உங்களைப் பாக்க திரும்பியிருக்கணும்”

இந்தக் குரல் இங்கே எப்படி? ஒரு நொடி யோசிக்க மறந்து போனான் அதிரதன். கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களுக்கு முந்தைய சில நினைவுகளின் இழைகளை மீட்டியது அக்குரல். 

அதிரதனுடைய மூளையின் சாம்பல் நிறச் செல்களைச் செயலிழக்கச் செய்தது அக்குரல்!

சட்டெனத் திரும்பியவன் அங்கே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் பேச வார்த்தை எழாமல் திகைத்து நின்றான்.

இது அவள்தானா? உறக்கத்தில் வரும் கனவு இப்போது விழித்திருக்கையில் வர ஆரம்பித்துவிட்டதோ? ஏனெனில் இவள் கனவில் வருவதுதானே வழக்கம்! 

ஒரு கையில் டம்பிள்சைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் பின்னந்தலையை அழுந்தக் கோதி உதடுகளை அவன் கடித்தபோதே அவள் அவனை நெருங்கிவிட்டாள்.

கனவு பிம்பத்துக்கு நிழல் இருக்குமா? அவள் நகர நகர அவளோடு நகர்ந்த நிழலைப் பார்த்தபடி யோசித்தான் அதிரதன்.

அந்தப் பிம்பம் அவனருகே வந்து அவனிடமிருந்து டம்பிள்சை வாங்கவும் அதிரதனின் இதயம் ஒரு நொடி அவனை மீறி வெளியே வரும் அளவுக்குத் துடித்தது.

“இப்பிடி செய்யணும்”

இரண்டு கரங்களிலும் டம்பிள்சை வைத்து ‘அர்னால்ட் ப்ரஷ்’ எனப்படும் புஜம் மற்றும் தோளுக்கான உடற்பயிற்சியைச் செய்து காண்பித்தாள் அவள்.

அதிரதனால் தன் கண் முன்னே நடப்பதை நம்பவே முடியவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல பதிமூன்று ஆண்டுகள் கழித்து அவளைப் பார்க்கிறான் அல்லவா!

அந்த அவள் தரங்கிணி. பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவனது பதின்வயதின் இறுதி பருவத்தை வண்ணமயமாக்கியவள்! 

எல்லா இளைஞர்களுக்கும் அந்த வயதில் கனவுக்கன்னியாகவோ ஈர்ப்பாகவோ ஒரு பெண் இருப்பாளே, அப்படி ஒருத்தியாக அதிரதனின் மனதையும் கனவுகளையும் ஆக்கிரமித்தவள் தரங்கிணி!

“ஹலோ!”

அதிரதன் தன்னைக் கவனிக்கிறானா என்று பரிசோதிக்க தனது கரத்தை அவனது முகத்துக்கு எதிரே ஆட்டிக்காட்டினாள் அவள்.

“ஹான்”

இப்போதுதான் சிலைக்கு உயிர் வந்தது. எதிர்பாராத நேரத்தில், என்றேனும் ஒரு முறையாவது பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிய பெண் அவன் எதிரில் நிற்பதை முதலில் புரிந்துகொள்ளவே இத்தனை சிரமம் என்றால், இனி அவள் இதே ‘சன் டியூ’ ஹோட்டலில் தலைமை சமையல் கலைஞராகப் பணியாற்றப்போகிறாள் என்பது தெரிந்தால் எப்படி அதை எடுத்துக்கொள்வான் அதிரதன்?

ஆம்! தரங்கிணி அங்கே வந்திருப்பது பணி நிமித்தமாக! அவளுக்கு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் அதிகம். தினசரி உடற்பயிற்சியை எப்போதுமே தவறவிடாதவள் ஹைதராபாத்திலிருந்து சிம்லாவுக்கு வந்ததும் பணியிடத்தில் தேடியதே உடற்பயிற்சிக்கூடத்தைத் தான்.

வந்தவளின் பார்வையில் ஆழ்ந்த சிந்தனையோடு ‘அர்னால்ட் ப்ரஷ்’சைக் கவனக்குறைவாகச் செய்துகொண்டிருந்த அதிரதன் பட்டுவிடவே அவனது தவறைச் சொல்லித் திருத்தினாள்.

அவன் தன்னை வைத்தக் கண் வாங்காமல் பார்க்கவும் கொஞ்சம் சங்கடமாகிப் போனது.

“உங்களை ஒர்க் அவுட் டைம்ல டிஸ்டர்ப் பண்ணுனது தப்புனு புரியுது… பட் எதைச் செஞ்சாலும் கச்சிதமா செய்யணும், சின்ன தப்பு கூட ஒரு பெரிய காரியத்தைக் குலைச்சிடும்னு எங்கப்பா சொல்லுவார்… அதனால கரெக்ட் பண்ணுனேன்… டோண்ட் மிஸ்டேக் மீ”

கோல்கேட் புன்னகையோடு பேசியவளின் கண்களில் புதிய நபரிடம் பேசும் பாவனை தெரிந்தது. 

“இட்ஸ் ஓ.கே” என்றவனுக்கு இவளுக்கு என்னை ஏன் அடையாளம் தெரியவில்லை என்ற கேள்வி உதிக்காமல் இல்லை.

“நீங்க?” என்று அவன் ஆரம்பிக்கவும்

“ஐ அம் தரங்கிணி ரவிசந்திரன்… இந்த ஹோட்டல்ல காண்டினெண்டல் குசைன் செக்சன்ல இட்டாலியன் ரெஸ்ட்ராண்ட்ல சீஃப் செஃபா ஜாயின் பண்ணிருக்கேன்… உள்ள வர்றப்ப ஸ்டாஃப் ஒருத்தர் ஜிம்ல இருக்குறவரும் தமிலியன்னு சொன்னார்… அதான் எந்த ஃபார்மல் ஸ்பீச்சும் இல்லாம பேசிட்டேன்” என்றவளிடம் இன்னுமே புதியவனிடம் உரையாடும் பாவனையே தெரிந்தது.

அடுத்து அவன் கருத்தில் உறுத்தியது ‘தரங்கிணி ரவிசந்திரன்’ என்ற அவளது பெயர். இன்னும் இவள் தரங்கிணி ரவிசந்திரனாகவே இருக்கிறாளா?

சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆர்வமாக முரண்டிய மனசாட்சியைத் தலையில் தட்டி அமர வைத்தான்.

அவளுக்குத் தன்னை யாரென்றே தெரியவில்லை என்ற உண்மை கசந்தது அதிரதனுக்கு. அப்படி இருக்கையில் எந்த உரிமையில் மேற்கொண்டு பேசுவதென்ற குழப்பம்!

ஆனால் ஒன்று, இத்தனை நாட்களாக இருந்த இறுக்கம் சற்று தளர்வது போன்ற உணர்வு! தரங்கிணியின் பிரசன்னம் அவனுக்குள் ஒளிந்திருந்த பதினேழு வயது அதிரதனை இழுத்து வந்தது. 

புதிதாகப் பணியில் சேர்ந்தவள் எப்படியிருந்தாலும் மேலாண்மை இயக்குனர் என்ற முறையில் தன்னிடம் மனிதவளத்துறை மேலாளரால் அறிமுகப்படுத்தப்படுவாள் என்ற நம்பிக்கையில் புன்னகையை மட்டும் பதிலாக ஈந்துவிட்டு “யூ கேரி ஆன்” என்று கை காட்டியவன் அங்கிருந்து கிளம்பினான்.

வாயில் வரை போனவன் ஒரு நொடி நின்று திரும்பிப் பார்த்தான்.

தரங்கிணி அங்கிருந்த எலிப்டிக்கல் ட்ரெய்னரில் ஏறி நின்று உடற்பயிற்சியை ஆரம்பித்திருந்தாள்.

 மசோப்ரா பள்ளத்தாக்கில் கவிழ்ந்திருந்த பனிப்புகையும் அதன் குளிர்ச்சியும் தன்னுள் நிரம்புவதைப் போல உணர்ந்த அதிரதன், மெல்லிய உற்சாகத்துடன் அங்கிருந்து தனக்கென இருக்கும் சகல வசதிகள் கொண்ட அறைக்குச் சென்றான்.

அதே நேரம் தரங்கிணி தனது செவிகளில் ஏர்பாட் மாட்டியிருந்தவள் ஜானகியின் குரல் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டபடி உடற்பயிற்சியில் கவனமானாள்.


புத்தம்புது காலை பொன்னிற வேளை

என் வாழ்விலே 

தினந்தோறும் தோன்றும்

சுகராகம் கேட்கும்

எந்நாளும் ஆனந்தம்!


ஒவ்வொரு நாளுமே அவளுக்குப் புதிய நாள். அப்படி எண்ணினால் மட்டுமே தரங்கிணியால் சில தேவையற்ற நினைவுகளையும், தேவையற்ற மனிதர்களையும் மறக்கமுடியும்!

என்னதான் மனதைத் தனக்கு ஏற்றபடி பழக்க நினைத்தாலும் பழகிய இடமும், பழகிய மனிதர்களும் வேண்டாத நினைவுகளை அவளுக்குள் கிளர்ந்தெழச் செய்வதால் எதுவும் வேண்டாமென உதறித் தள்ளிவிட்டு இந்த மலை பிரதேசத்தில் சரணாகதி அடைந்திருக்கிறாள் அவள்.

இடமாற்றம் வேண்டுமெனத் தீர்மானித்தவள் குறிப்பாகச் சிம்லாவைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம் உண்டு.

சிம்லாவும் அவளுக்கு நன்கு பழகிய இடமே! இந்த இடத்தில் அவளுக்குக் கசப்பான நினைவுகள் எதுவுமில்லை! சொல்லப் போனால் அவளது வாழ்க்கையின் அழகான நாட்கள் என்று சிம்லாவில் படித்த நாட்களைத்தான் தரங்கிணி கூறுவாள்.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகள்! அவளது பதினேழு வயதிலிருந்து இருபது வயது வரை இளங்கலை ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் பற்றிய படிப்பை சிம்லாவிலிருக்கும் பிரபலமான ‘ஆர்.எம்.எஸ் இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்’ கல்வி நிறுவனத்தில் படித்தவள் தரங்கிணி.

பிடித்த படிப்பு, அழகான நட்புகள், மனதுக்கு நிறைவான பகுதி நேர வேலை, வாரயிறுதியில் ஊர் சுற்றும் படலமென அவளது வாழ்க்கை எனும் இதிகாசத்தில் ‘சிம்லா காண்டம்’ அதீத மகிழ்ச்சியைக் கொடுத்த பகுதி என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

அதற்கு பின்னர் இரையைத் தனது வலைக்குள் இழுத்துக்கொள்ளும் சிலந்தியைப் போல இயல்பான வாழ்க்கைச்சுழல் அவளைத் தனக்குள் இழுத்துக்கொண்டது. 

பதிமூன்று ஆண்டுகள் கழித்து அவள் சிம்லா மண்ணை மிதித்திருக்கிறாள். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தைத் தனக்குள் அடக்கியிருந்தாலும் அன்றும் இன்றும் சிம்லா அதே அழகோடுதான் தெரிந்தது தரங்கிணியின் கண்களுக்கு!

பிடித்த ஊர், புதிய பணியிடம், புதிய மனிதர்கள் – இந்தச் சூழலில் இயல்பாக மூச்சு விடுவது போல தோன்றியது தரங்கிணிக்கு.

‘எலிப்டிக்கல் ட்ரெய்னரில்’ உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவள் மொபைல் சிணுங்கவும் தொடுதிரையைப் பார்த்தாள்.

“சித்து கண்ணா காலிங்’

ஏர்பாடில் தட்டி அழைப்பை ஏற்றாள்.

“மம்மி நீ இனிமே என்னைப் பாக்க வரமாட்டியா?”

அழுகையோடு கேட்டது ஒரு சிறுவனின் குரல்.

நெஞ்சை ஏதோ இழுத்துப் பிடிப்பது போல உணர்ந்த தரங்கிணி உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டுப் பேச ஆரம்பித்தாள்.

“யார் சித்து கிட்ட பொய் சொன்னது? ஹான்?”

விளையாட்டு போல அவள் கேட்டாள். அவளுக்குள் இருந்த தவிப்பை அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.

“பாட்டி சொன்னாங்க… இனிமே நீ இங்க வரமாட்டியாம்… இந்த வீக்கெண்ட் உன்னைப் பாக்கணும்னு ஆசையா இருந்தேன் மம்மி”

அவன் பேச பேச தரங்கிணியின் இதயத்தில் அடக்கவொண்ணா வலி எழுந்தது. எங்கே அழுதுவிடுவோமோ என்று பயந்தவள், உடற்பயிற்சிக்கூடத்துக்குள் ஹோட்டலில் தங்கியிருக்கும் நபர்கள் வரவும் சுதாரித்து அங்கிருந்து வெளியேறினாள்.

பெரிய மூச்சுகளை எடுத்துவிட்டுத் தன்னைச் சமனப்படுத்திக்கொண்டாள்.

“மம்மிக்கு சிம்லால ஜாப் கிடைச்சிருக்கு சித்து… நான் இங்க இருந்தா தானே குட் கேர்ளா வொர்க் பண்ண முடியும்? அதான் வந்திருக்கேன்… சித்து குட் பாய் தானே? பிக் பாய் தானே? அழுறதை நிறுத்து பாப்போம்”

அவள் சொன்ன விதத்தில் அவனது அழுகை நின்றது.

“அப்ப நானும் உன் கூட வந்துடட்டுமா மம்மி?”

ஏக்கத்தோடு கேட்டான் சித்தார்த்.

எப்படி அவனைத் தன்னோடு வைத்துக்கொள்ள முடியும்? தரங்கிணிக்கு என்னவோ ஆசைதான். ஆனால் சட்டம் அனுமதிக்க வேண்டுமே!

மகனிடம் மறுப்பு கூற வலித்த இதயத்தைக் கட்டுப்படுத்தியபடி “இல்லடா கண்ணா… நீ இனிமே மம்மி இல்லாம வாழப் பழகிக்கணும்” என்றாள்.

கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி கூறினாள் தரங்கிணி.

“மம்மி”

“சித்து எய்ட் இயர்ஸ் ஓல்ட் பிக் பாய் தானே? இனிமே அவனுக்கு அம்மாவோட துணை தேவையில்ல… சித்து கூட அப்பா, பாட்டி, தாத்தா எல்லாரும் இருக்காங்க… அவங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க… நான் மாசத்துக்கு ஒரு தடவை உன்னை மீட் பண்ண வருவேன்… சரியா? அழக்கூடாது”

மறுமுனையில் அழுகையைக் கட்டுப்படுத்துவது அவனது குரலில் தெரிந்தது. 

“உன் கஷ்டடிய இழந்துட்டு நிக்குற என்னால இதுக்கு மேல என்ன செய்ய முடியும்டா கண்ணா?” ஊமையாய் அரற்றியது அவள் மனம்.

“சரி மம்மி… நீ நெக்ஸ்ட் மன்த் என்னைப் பாக்க வருவல்ல… அப்ப சிம்லால இருந்து ஏதாச்சும் வாங்கிட்டு வருவியா?”

“கண்டிப்பா” என்று அவள் சொல்லும்போதே மறுமுனையில் ஒரு முதிய குரல் கேட்டது.

“மானிங்கே மொபைலை எடுத்துட்டியா? வெரி வெரி பேட் ஹாபிட் சித்து… வேர் இஸ் தமயந்தி? நீ மொபைல் எடுத்ததைக் கூட கவனிக்காம என்ன செய்யுறா அவ? கவர்னெஸ்னு எதுக்கு இருக்குறாளோ? காலை கட் பண்ணு”

சிடுசிடுவெனக் கேட்ட குரலுக்குச் சொந்தக்காரர் சாரதா. தரங்கிணியின் முன்னாள் மாமியார். சித்தார்த்தின் தந்தைவழி பாட்டி.

தன்னால் மகன் திட்டு வாங்க வேண்டாமென அழைப்பைத் துண்டித்த தரங்கிணியின் இதழில் விரக்தி சிரிப்பு.

அன்னையிடமிருந்து மகனைப் பிரித்து யாரோ ஒரு கவர்னெஸ்சிடம் அவனை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்த தனது முன்னாள் கணவன் மற்றும் மாமனார் மாமியாரின் செயலை மடமை என்பதா? அல்லது செல்வச்செருக்கு என்பதா?

யாரோ ஒருத்தியை வைத்து வளர்க்கவா ‘கஷ்டடிக்கு’ அவ்வளவு போராடினார்கள்? வெல்கம் ஹோட்டல் குழுமத்தின் வாரிசுடைய கஷ்டடியை கேவலம் ஒரு சமையல்காரியிடம் இழக்க விரும்பவில்லை என்று சாரதா மணமுறிவுக்கு விண்ணப்பித்த போதே கூறினாரே!

அப்படி என்ன ஈகோ? என் பிள்ளையைக் கௌரவச் சின்னமாக மட்டுமே கருதும் அந்த மனிதர்களோடு அவன் இருக்க வேண்டியதில்லை என்று தரங்கிணி போராடி ஓய்ந்து கஷ்டடியை அவர்களிடம் ஒப்படைக்கும் வரை அந்தப் பெண்மணி அடங்கவில்லையே!

தரங்கிணியால் தங்களது வாரிசை நல்லபடியாக வளர்க்க முடியாது என்று அவளது பொருளாதார நிலையைச் சுட்டிக்காட்டி வாதாடினார்கள். அதையும் தாண்டி ஒரு காரணத்தைச் சொல்லி சித்தார்த்தின் கஷ்டடியைத் தன்வசப்படுத்திக்கொண்டான் தரங்கிணியின் முன்னாள் கணவன் கமலேஷ்.

தரங்கிணியும் ஒரு கட்டத்தில் போராடி சோர்ந்துவிட்டாள். விவாகரத்தாகி மூன்று வருடங்களை சென்னையில் கழித்தவளுக்கு இனி அங்கே தனக்கென யாருமில்லை என்ற மனவிரக்தி உண்டானது. அப்படிப்பட்ட இக்கட்டான நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள் எனலாம்.

எங்கிருந்தாலும் என் பிள்ளை என்னை மறக்க மாட்டான் என்று ஆணித்தரமாக நம்பியவள் இதோ சிம்லாவில் வேலையைத் தேடிக்கொண்டு வந்துவிட்டாள்.

இப்போது அவளுக்குத் தேவை மறதி! அவள் சென்னையை மறக்க வேண்டும்! கமலேஷ் மற்றும் அவன் குடும்பத்தை மறக்க வேண்டும்! பணத்திமிரில் அவர்கள் சித்தார்த்தை அவளிடமிருந்து குறுக்கு வழியில் பிடுங்கிக்கொண்டதை மறக்க வேண்டும்! எல்லாவற்றுக்கும் மேலாக சிலரின் துரோகங்களை அவள் மறந்தேயாக வேண்டும்!

மறதி எனும் மாபெரும் மருந்து மட்டும் இல்லையெனில் நம்மில் பலருக்கு வேண்டாத நினைவுகள் கொடுக்கும் தொந்தரவால் மனஅழுத்தம் வந்திருக்கும். இன்னும் சிலரோ நம்மை நாமே மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்!

தரங்கிணிக்கு வேண்டிய மறதியையும் மனநிம்மதியையும் சிம்லாவும் மசோப்ரா பள்ளத்தாக்கும் கொடுக்குமா? அவளைத் துச்சமாக ஒதுக்கிய அற்பப்பதர்களின் மத்தியில் அவளது வருகையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட அதிரதன் அவளுக்கு அந்த மறதியைக் கொடுத்து ஆசுவாசப்படுத்துவானா? 

Comments

  1. Super super super super super super super

    ReplyDelete
  2. Very entrastink super super super

    ReplyDelete
  3. 👌🏻👌🏻👌🏻

    ReplyDelete
  4. சொல்லவே இல்ல.. திடு திப்பு னு வந்திருக்காங்க.. Anyway எங்களுக்கு double treat தான்.. enjoying

    ReplyDelete
  5. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 1)

    அதிரதன்.... பேரே அசத்துது. இதுல ஆளும் அசத்துறான்.
    ஆனா, அத்தனை பெரிய நிறுவனத்துக்கு சொந்தக்காரன் ஏன் பாறையாய் இறுகி போயிருக்கிறான்னு தெரியலையே...?

    அச்சோ..! தரங்கிணி ஒரு டிவோர்ஸியா...? எட்டு வயசுல சித்துங்கிற மகனை வேற வளர்க்கிற பொறுப்பை இழந்துட்டு நிற்கிறாளா...?
    ம்... ரொம்பவே பாவம் தான். வேறென்ன மகன் குருவிக்கு இறக்கை முளைச்சிட்டதால... தாய்க்குருவியோட உறவையே அறுத்து விட்டுட்டாங்க போல. போகட்டும்.... இப்படியொரு அருமையான பொண்ணோடவே குப்பை கொட்ட முடியாத அந்த கமலேஷையெல்லாம் எதுல வைச்சு சேர்க்குறதுன்னு தெரியலை...?

    உண்மை தான்...! மறதி எனும் மாபெரும் மருந்து மட்டும் இல்லையெனில், நம்மில் பலருக்கு வேண்டாத நினைவுகளும், நினைவுகளின் பாரங்களும், சோகங்களும் கொடுக்கும் மனவழுத்தமும் நிம்மதியின்மையும் மிகவும் அதிகம் தான். எல்லாத்தையும் மறந்துட்டு, ஒரு காத்து மாதிரி கொஞ்ச நேரம் நம்மையும் இழந்து, தூக்கத்தை விலை கொடுத்து வாங்க மாட்டோமா என்கிற அவல நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது
    இந்த நினைவுகள்.

    சில நேரம் நினைவுகளே வரங்களாக இருக்கும்போது, பலநேரங்கள் வரங்களே சாபங்களாகவும், பாரங்களாகவும் மாறிவிடும்
    கொடுமை தான் என்னவோ என்று நிலைத் தடுமாற வைத்து விடுகிறது. அந்த மாதிரி கணமான பொழுதுகளில், மறதி ஒரு வரப்பிரசாதம் மாதிரி தான்.

    "எங்கே நிம்மதி...
    எங்கே நிம்மதி....
    அங்கே என்க்கோர் இடம் வேண்டும்...!
    அங்கே என்க்கோர் இடம் வேண்டும்...! "

    என்று பல நேரங்களில், பல இடங்களில் பாடத் தோணுகிறது
    இந்த மறதி மட்டும் இல்லையெனில்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சிஸ்... மறதி ஒரு வரம்

      Delete
  6. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  7. Romba super ah irundudu. Ippave simla ku pona mari. Tarangini name super ma. Ramani amma novel ku appuram romba years kalichu inda name ah feel pannaren. First episode la ye tarangini with 8 year son, divorcy nu twist kudutiteenga. Super ma

    ReplyDelete
    Replies
    1. Ramani amma vacha names la antha name enaku fav🤩

      Delete

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 1