அத்தியாயம் 11

Image
மனம் வெடிக்க அழுது கொண்டிருந்த தரங்கிணியை எப்படி தேற்றுவதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தான் அதிரதன். அவளருகே அமர்ந்திருந்த தமயந்தியின் ஆறுதல்களைக் கேட்கும் திடம் கூட இல்லாமல் கதறிக்கொண்டிருந்தாள் அவள். “எப்பிடி என் மகனைக் கஷ்டப்படுத்த மனசு வந்துச்சு? அவன் அவங்களுக்கு என்ன பாவம் பண்ணுனான்?” “அழாதிங்க மேடம்… கடவுள் இருக்காரு… தப்பு செஞ்சவங்களுக்கு அதுக்கான கூலிய குடுப்பாரு” “என்ன கூலி குடுத்து என்ன பிரயோஜனம்? இன்னைக்கு என் பிள்ளை சுயநினைவு இல்லாம படுத்துக் கிடக்கான்… அவன் எனக்குப் பழைய சித்துவா திரும்பிக் கிடைப்பானா? பெத்த வயிறு காந்துது தமயந்தி” அதிரதன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விவேக்கை அழைத்துக்கொண்டு சற்று தூரத்தில் சென்று நின்றான். தரங்கிணியின் கண்ணீர் அவனை ஏதோ செய்தது. வார்த்தையால் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு. “சொல்லுங்க சார்” பார்வையைத் தரங்கிணியிடமிருந்து விலக்கி விவேக்கிடம் கொண்டு வந்தான் அதிரதன். “மிஸ்டர் ஹேமசந்திரன் கிட்ட நான் பேசணும் விவேக்… தமயந்தி சொல்லுறதை பாத்தா சித்தார்த்தை யாரோ மாடில இருந்து தள்ளி விட்டிருக்காங்க… அந்தப் பையனுக்குப் பாதுகாப்பு இல்லாத ...

அத்தியாயம் 4

 



தரங்கிணி கண்ணீர் விடுவதைக் கண்டதும் அதிரதனின் மனம் அவளுக்காக வருத்தப்பட்டது. வெறும் வார்த்தைகளால் அவளை ஆறுதல் படுத்துவதால் எதுவும் மாறப்போவதில்லை என்று புரிந்துகொண்டவனுக்கு அவளது கணவனது குடும்பத்திடம் பேசி சித்தார்த்தைச் சில நாட்கள் தரங்கிணியோடு அனுப்பிவைக்க ஏதாவது ஏற்பாடு செய்யலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அந்த யோசனையின் போதுதான் அவளது கணவனது குடும்பத்தைப் பற்றி விசாரிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

“அழாத தரு… உன் எக்ஸ் ஹஸ்பெண்டோட ஃபேமிலி பேக்ரவுண்ட் என்ன?”

தரங்கிணி கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள் “பெரிய ஃபேமிலி தான்… ப்ரைம் ஸ்வான் ஹோட்டல் குரூப்போட சி.ஈ.ஓ மிஸ்டர் கமலேஷ் ஹேமசந்திரன் என்னோட எக்ஸ் ஹஸ்பெண்ட்” என்றாள்.

அதிரதனுக்கு இப்போது புரிந்தது ஏன் தரங்கிணியால் அவளது மகனின் கஷ்டடியைக் காப்பாற்ற முடியவில்லை என்று.

ப்ரைம் ஸ்வான் குழுமம் நாடு முழுவதும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், உணவகங்களும் நடத்தக் கூடிய பிரபல ஹோட்டல் குழுமம். அவ்வளவு பெரிய குடும்பத்திற்கு மருமகளாகப் போனவளுக்கு இத்தகைய அநியாயத்தை அவர்கள் செய்திருக்க வேண்டாமெனத் தோன்றியது.

“சித்தார்த் அவங்க ஃபேமிலியோட வாரிசுங்கிறதால என் கிட்ட குடுக்க முடியாதுனு பிடிவாதமா நின்னு என் கேரக்டர் மோசம்னு கோர்ட்ல நிரூபிச்சவங்க கமலேஷோட அம்மா சாரதா… எனக்காக யோசிச்சு யோசிச்சு என் பேரண்ட்சும் போய்ச் சேர்ந்துட்டாங்க அதி… இப்ப என் கிட்ட இழக்க எதுவுமில்ல… ஆனா நான் வாழ்க்கைய வெறுத்துடல… எனக்குத் தேவையான அமைதியையும் நிம்மதியையும் தேடி இங்க வந்தேன்… இங்க உன்னைப் பாத்ததுல கடவுளுக்கு என் மேல கொஞ்சூண்டு இரக்கம் இருக்குனு புரிஞ்சிக்கிட்டேன்”

அவள் பேசி முடிக்கையில் அதிரதனின் வதனம் யோசனைவயப்பட்டிருந்தது. எதையோ ஆழ்ந்து யோசிக்கிறான் போல என்று எண்ணியவளாக ரெட் ஒயினை அருந்தினாள் தரங்கிணி.

அதிரதன் ஆட்காட்டி விரலால் நெற்றிப்பொட்டில் தட்டியவன் “இப்ப வரைக்கும் நீங்க பிரிஞ்சதுக்கான காரணம் என்னனு நீ சொல்லல… உங்களோட லவ் மேரேஜா அரேஞ்ச்ட் மேரேஜா?” என்று விசாரிக்க

“ப்ச்! நான் மறக்க நினைக்குற சம்பவங்கள் அதுல்லாம்… இனி அதை பத்தி பேச என்ன இருக்கு?” என்று அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் அவள்.

அவனுக்குத் தரங்கிணியின் அசட்டையானப் பதிலில் எதையோ மறைக்கும் பாவனை தெரிந்தது. இவள் பழைய சம்பவங்களை மறக்க நினைக்கிறாளா? அல்லது மறைக்க நினைக்கிறாளா? புதிராகத் தோன்றுகிறாளே!

“என்னை விடு… நீ இன்னும் சிங்கிளா? இல்ல கமிட் ஆகிட்டியா?” இலகுவாக அதிரதனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி கேட்டாள் ஆர்வமாக.

அதிரதனின் முகத்தில் இப்போது இறுக்கம் தெரிந்தது. அந்த இறுக்கம் சுற்றுச்சூழலிலும் பிரதிபலித்தது. ஆம்! இருட்ட ஆரம்பித்து குளிரின் ஆட்சி அங்கே மெதுவாகத் தொடங்கியது.

“உள்ள போய் பேசலாம் தரு… குளிருது பாரு”

அமைதியாகச் சொன்னவன் நாற்காலி, டீபாய் இத்தியாதிகளைத் தரங்கிணியோடு சேர்ந்து உள்ளே எடுத்து வைத்தான்.

மின்சாரத்தின் உபயத்தால் மரவீட்டுக்குள் ஹீட்டரின் வெப்பம் பரவியது.

அங்கே கிடந்த மூங்கில் நாற்காலியில் அதிரதன் யோசனைவயப்பட்டவனாக அமர்ந்துவிட, தரங்கிணியோ வீட்டின் உள்கட்டமைப்பை விழிகள் விரிய இரசிக்க ஆரம்பித்தாள்.

சிறிய லிவிங் ரூம் போன்ற அமைப்பு, காலுக்குக் கீழே இராஜஸ்தானி பாணி ஓவியங்களுடன் கூடிய ஸ்ரக், அன்னத்தின் வெண்மையோடு மெத்தை தலையணையுடன் கூடிய படுக்கையறை, இன்னொரு ஓரத்தில் ஜன்னலருகே உணவுண்ணுவதற்கான மேஜை மற்றும் இரு நாற்காலிகள் என கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த மரவீடு.

அவள் வீட்டை ரசிக்கவும் தன்னிடம் கேட்டதை மறந்துவிடுவாள் என்று எண்ணிய அதிரதனின் எண்ணத்தை அடியோடு மாற்றுபவளாக “இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லல நீ” என்றாள் தரங்கிணி.

அதிரதன் அவளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தான்.

“விடமாட்டியா நீ?”

“வாய்ப்பேயில்ல” தோளைக் குலுக்கியபடி அவனது எதிர் இருக்கையில் அமர்ந்தாள் தரங்கிணி.

அதிரதனின் தாடை இறுகிய விதமும், அவனது புருவங்கள் நெறித்த விதமும் அவனது மனதில் எதையோ போட்டுக் குழப்பிக் கொள்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள்.

“ஐ அம் இன் அ காம்ப்ளிக்கேட்டட் ரிலேசன்ஷிப் சீனியர்”

சலிப்பாக அவனிடமிருந்து பதில் வரவும் தரங்கிணிக்குக் குழப்பம்!

“ரிலேசன்ஷிப்னாலே அது காம்ப்ளிக்கேட்டட் தான் அதி… அம்மா அப்பாவ தவிர மத்த யாரோடவும் நம்மளால ஈசியா ஒரு உறவை உருவாக்கிக்க முடியாது… இன் ஃபேக்ட், உருவாக்கிறதை விட அதைக் கட்டிக் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்”

அதிரதன் புருவத்தை உயர்த்தியவன் “யூ ஆர் ரைட்… இப்ப நான் ஒரு டயலமால இருக்கேன்… இந்த ரிலேசன்ஷிப்பைத் தொடரட்டுமா? இல்லனா முடிச்சுக்கட்டுமா? ஒரே குழப்பமா இருக்கு… அதைத் தாண்டி நான் எந்த இடத்துல தப்பு பண்ணுனேன்னு யோசிச்சு யோசிச்சு ஃப்ரெஸ்ட்ரேசன் வேற… உன்னால நான் சொல்ல வர்றதைப் புரிஞ்சிக்க முடியுதா தரு? ஒரு ரிலேசன்ஷிப்புக்காக நம்ம நிறைய மெனக்கிடுவோம்… அந்த உறவை சுவாரசியமா மாத்த சின்ன சின்ன பைத்தியக்காரத்தனங்களைப் பண்ணிருப்போம்… உறவைக் காப்பாத்த நம்மளோட ஹண்ட்ரெட் பர்செண்டேஜ் எஃபோர்ட்டைப் போட்டிருப்போம்… ஆனா நம்மளோட பார்ட்னர் இதே அளவுக்கு அந்த ரிலேசன்ஷிப்ல சீரியஸா இல்லையோனு ஒரு சந்தேகம் வருமே, அந்தக் கட்டத்துல நான் இப்ப இருக்கேன்” என்றதும் தரங்கிணியிடம் பெருமூச்சு வெளிப்பட்டது.

இருவரது நிலையும் வெவ்வேறு. ஆனால் இருவருக்கு இருக்கும் மனக்குறையும் கிட்டத்தட்ட ஒன்று. 

அதிரதனின் பேச்சிலிருந்தே அவன் யாரையோ தீவிரமாகக் காதலிப்பது தெரிந்தது. ஆண்களின் காதல் சுயநலமானது என்று அனுபவத்தில் அறிந்தவள் தரங்கிணி. அதிரதனின் காதலும் அதே ரகமாக இருந்தால்?

தனது நட்புக்குரியவன் என்பதால் அவனது தரப்பிலிருக்கும் அதீத எதிர்பார்ப்புகளை அவள் ஆதரிக்க முடியாதல்லவா? அதே நேரம் அதிரதனிடம் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி பேசி அவனது விரக்தியை அதிகரிக்கும் எண்ணமும் இல்லை.

மெதுவாகப் பேசி அவனது பிரச்சனை என்னவென விசாரித்து அவனுக்குத் தன்னாலான அறிவுரையைக் கொடுக்கலாமெனத் தீர்மானித்தாள்.

அன்றிரவு மரவீட்டில் தங்குவதாக அதிரதன் முடிவு செய்திருந்ததால் இரவுணவும் முன்னரே சமைக்கப்பட்டு தெர்மோக்களில் வைக்கப்பட்டிருந்தது.

“நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு அதி… நான் கிளம்புறேன்” என்று சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்ப ஆயத்தமானாள் தரங்கிணி.

அதிரதனோ ஜன்னலின் வழியே புகைமூட்டமாகத் தெரிந்த பனியைக் காட்டினான்.

“இந்தக் குளிர்ல போறது சரியில்ல தரு… மானிங் நம்ம சேர்ந்து போகலாம்…. இன்னைக்கு நைட் அவுட்னு நினைச்சுக்க” என்றான்.

தரங்கிணியோ தயங்கினாள். அவளது கண்கள் அந்த மரவீட்டை வலம் வந்தன.

அதிரதன் குறும்பு மிளிர புன்னகைத்தவன் “எதுக்கு இவ்ளோ யோசிக்குறிங்க ஆன்ட்டி? உங்களை நான் ஒன்னும் பண்ணிடமாட்டேன்… உங்க மேல ஒரு காலத்துல க்ரஷ் இருந்துச்சுங்கிறதுக்காக கிடைச்ச கேப்ல அட்வான்டேஜ் எடுத்துக்கமாட்டேன்” என்றதும் அவனைப் போலியாக முறைத்தாள் தரங்கிணி.

“நான் ஆன்ட்டியா?” என்று கண்களில் கோபத்தைக் காட்ட முயன்றாள்.

அதிரதன் அமர்த்தலாக “எட்டு வயசு பையனுக்கு அம்மா எனக்கு ஆன்ட்டி தான்” என்றதும் அவனது காது மடலை எக்கிப் பிடித்துக் குனிய வைத்து தலையில் குட்டினாள் அவள்.

“அவுச்! உங்க உலக்கை கையால என் தலைய உடைச்சிடாதிங்க ஆன்ட்டி… நான் வாழவேண்டிய பையன்” என்றவனின் அலறலைப் பொருட்படுத்தாமல் இன்னும் வலிக்க குட்டிவிட்டு அவனை விடுவித்தாள் தரங்கிணி.

“அந்தப் பயம் இருக்கணும்… மசில் வளர்த்து மலைமாடு மாதிரி ஆனதால மட்டும் நீ பெரிய இவன் இல்ல… இப்பவும் என் கண்ணுக்கு நீ அதே பழைய ஜூனியர் அதி தான்… தலையில நறுக்குனு கொட்டி கொட்டி ஃபிஷ் என் பாப்பிலோட் சொல்லிக் குடுத்தவளுக்கு இப்ப அதே பாணில மரியாதைய கத்துக் குடுக்கவும் தெரியும்”

அவளது மிரட்டலுக்கு அவன் பயந்தது போல நடிக்க, அடுத்த சில நொடிகளில் அங்கே சிரிப்பலை!

இருவரும் மனமார சிரித்தார்கள்.

“மசில் வளர்த்த மலைமாடு… நல்ல ரைமிங் சீனியர்… உன்னால ஃபிட்னெசுக்கு உண்டான மரியாதையே போச்சு”

பேச்சில் நேரம் செலவளிய தரங்கிணி அவனோடு சேர்ந்து இரவுணவை முடித்துக்கொண்டு மரவீட்டிலிருந்து கிளம்பினாள்.

அதிரதனுக்கு அவளைத் தனியே அனுப்ப விருப்பமில்லை.

இத்தனைக்கும் அவ்வளவு தொலைவில் எல்லாம் ஹோட்டல் இல்லை. இருந்தாலும் சுற்றிலும் கவிழ்ந்திருந்த இருட்டு அவனை மருட்டியது.

“இருட்டுல பேயும் பிசாசும் இருக்குனு நினைச்சு பயப்பட நான் என்ன குழந்தையா?” என்றவளிடம்

“ஐ அம் நாட் டாக்கிங் அபவுட் பாரா நார்மல் ஆக்டிவிட்டீஸ்… அனிமல்ஸ் கூட இருக்கலாமே?” என புத்திசாலித்தனமாகக் கேட்டான் அதிரதன்.

“மனுசங்களை விட மிருகங்கள் மோசமானது இல்லனு வாழ்க்கை உனக்குக் கூடிய சீக்கிரமே புரியவைக்கும் அதி… எனக்கு அந்த ஞானம் வந்து மூனு வருசம் ஆகுது… டேக் ரெஸ்ட் ஜூனியர்… நான் கிளம்புறேன்… நாளைக்கு மானிங் ஃப்ரெஷ்சா ஆரம்பிக்கணும்”

இதற்கு மேல் தரங்கிணியை வற்புறுத்தி அங்கே தங்க வைக்க அவனுக்கும் விருப்பமில்லை. இருப்பினும் தரங்கிணி அவளது குவார்ட்டர்சுக்குப் போய் பாதுகாப்பாகத் திரும்பிவிட்டேன் என்று வாட்சப்பில் செய்தி அனுப்பும்வரை அவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.

அந்தச் செய்தி வந்ததும் நிம்மதியாக இலகு உடைக்கு மாறி படுக்கையில் விழுந்தான்.

கண்களை மூடினாலோ உறக்கம் வரவில்லை. ஏன் என்று அவனுக்குத் தெரியும். அதற்கான காரணி யாரோ அந்நபரிடமிருந்து இப்போது வரைக்கும் எந்தச் செய்தியும் வரவில்லை.

தன்மீது ஏன் இத்துணை அலட்சியம்? இந்நிலையில் கூட அலட்சியம் காட்ட முடிகிறதென்றால் தன் அளவுக்கு இந்த உறவில் அந்நபர் தீவிரமாக இல்லை என்றுதானே அர்த்தமாகிறது?

புஜத்தால் மெத்தையில் குத்தி தனது கோபத்தை ஆற்றிக்கொண்டான் அதிரதன்.

வெவ்வேறு கோணங்களில் யோசித்துச் சோர்ந்து போன மூளை ஓய்வுக்கு ஏங்கியதும் உடலும் மெதுவாக ‘ஸ்லீப்பிங் மோட்’ செல்ல மெதுவாக உறக்கத்தில் ஆழ்ந்தான் அவன்.

மறுநாள் சூரியன் விழிக்கும் முன்னரே கண் விழித்து ஹோட்டலில் தனக்கான அறைக்குச் சென்றவன் வழக்கமான உடற்பயிற்சியை முடித்துக் குளித்து அலுவலகத்துக்கான உடை அணிந்து பெயரளவுக்குக் காலையுணவைக் கொறித்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

அவனது அறை இருந்த தளத்திலிருந்து மின்தூக்கி உதவியால் இறங்கி ஹோட்டலின் வரவேற்பறையான கீழ்த்தளத்துக்கு வந்தபோது ஆங்காங்கே எதிர்பட்ட ஊழியர்களின் காலை வணக்கங்களை ஏற்றுக்கொண்டு வேகமாக நடந்தவன் திடுமென ஓடி வந்து இறுக்கமாக அணைத்த பெண்ணொருத்தியின் திடீர் பிரவேசத்தால் மேற்கொண்டு முன்னேறாமல் அங்கேயே நின்றுவிட்டான்.

அந்தப் பெண் அவனை அணைத்ததோடு மட்டுமன்றி அவனது மார்புக்குள் புதைந்துவிடுபவளை போல முகம் புதைத்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்.

அதிரதனோ ஹோட்டல் ஊழியர்களின் முன்னே நடந்தேறிய இந்தக் காட்சியால் உண்டான தர்மசங்கடத்தில் நெளிந்தான்.

விசும்பலோடு “ஐ அம் சாரி ரதன்…. ஐ டோண்ட் வான்ட் டு பி அ லூசர்… எனக்கு நீ மட்டும் போதும்டா… ஐ வாண்ட் யூ அண்ட் யுவர் அன்கண்டிஷனல் லவ்… எனக்கு வேணும் ரதன்… நீ வேணும்” என்று கண்ணீர் விட்டவளை எப்படி கையமர்த்துவதெனப் புரியாமல் நின்றான்.

நல்ல வேளையாக அந்நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தாள் தரங்கிணி.

அதிரதன் யாரோ ஒரு பெண்ணின் அணைப்பில் நின்றதைக் கண்டதும் ஒரு நொடி அதிர்ந்து நின்றவள் பின்னர் எதுவோ புரிந்தது போல புன்னகைத்தாள்.

“நீ வாழுறடா” என்று சைகையில் காட்டியபடி அவர்களைக் கடக்க முயன்றவளிடம் கண்களால் கெஞ்சி இவளிடமிருந்து என்னைக் காப்பாற்றேன் என்றான் சங்கேத பாஷையில்.

தரங்கிணிக்கோ காதலர்கள் ஊடலுக்குப் பின் இணைந்திருக்கும் நிலையைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லை.

‘தம்ஸ் அப்’ குறியைக் காட்டிவிட்டு இடத்தைக் காலி செய்தாள் அவள்.

தன்னைக் கடந்து போனவளுக்குச் சாபமிட்டுவிட்டு அணைத்திருந்தவளை விலக்கி நிறுத்தினான் அதிரதன்.

விலக விருப்பமின்றி கண்களில் ஏக்கம் சூழ நின்றவளைக் கடுமையாகப் பார்த்தபடி தனது சட்டையில் அவளது கண்ணீரால் உண்டான ஒழுங்கற்ற சுருக்கங்களை அதிருப்தியோடு தட்டிவிட்டான்.

“உனக்கு இன்னும் கோவம் குறையலையா ரதன்?”

முகம் வாடக் கேட்ட அந்தப் பெண் அழகி இல்லை, பேரழகி!

சைஸ் ஜீரோ இடை ஆங்காங்கே க்ராப் டாப்பின் தயவால் தரிசனம் தர, ஹை ரைஸ் ஜீன்ஸ் எனப்படும் மேலிடுப்பு வரை அணியும் ஜீன்ஸ் அந்த தரிசனத்தை முழுவதுமாக ரசிக்க விடாமல் தடையுத்தரவு போட்டது.

அழகுக்காக லென்ஸ் மாட்டி கருவிழிகளைப் பெரிதாகக் காட்ட முயன்றிருந்தாள். உதடுகளில் ‘ரேர் பியூட்டி’ லிப் ஆயிலின் மினுமினுப்பு! கன்னங்களிலிருந்த சிவப்பு சிம்லாவின் குளிராலா அல்லது ‘சீக் டின்டின்’ உபயமா என்று தெரியவில்லை.

மொத்தத்தில் தலை முதல் கால் வரை கனகச்சிதமாகப் பராமரித்து வரும் இக்காலத்திய இளைஞி.

“இனாஃப் ஸ்வரா… என் கூட வா”

கடினமானக் குரலில் கூறிவிட்டு அவளது புஜத்தைப் பற்றியவன் தரதரவென இழுத்துச் சென்றான்.

இருவருமாகச் சேர்ந்து மீண்டும் அவனது அறைக்கு வந்ததும் மீண்டும் அணைக்க முயன்றவளை ஆட்காட்டி விரலால் ‘விலகி நில்’ என்று எச்சரித்துவிட்டு எதற்கும் இளகாதவனாக நின்ற அதிரதனை எப்படி சமாதானம் செய்வதெனப் புரியாமல் திகைத்து நின்றாள் அவனது மூன்றாண்டு காதலி ஸ்வரா. 

Comments

  1. கதை அருமை.

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  3. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 4)

    அடேயப்பா.......! ஸ்வரா..... உண்மையில் ஒரு ஹைடெக்
    காதலி தான்...! ஆனா, அதிக்கு ஏன் அவளின் மீது இந்தளவு வெறுப்பு...? ஒண்ணு தலைக்கு மேல ஒரேயடியா தூக்கி வைச்சு கொண்டாடுறது, இல்லைன்னா
    காலுக்கு கீழ போட்டு மிதிச்சு தள்ளிடறது. இந்த ஆண்களோட ஒட்டுமொத்த எகஸ்ப்ளோரிசமே ஒண்ணு ஓவர் எக்ஸ்ட்ரீம் இல்லைன்னா மாடரேட் தட் மீன்ஸ் ஆர்டினரி ஆட்டிட்யூட் காட்டறது அப்படித்தானோ...?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  4. 💕💕💕💕💕💕💕

    ReplyDelete
  5. So there is a girl in adhiradan life . Intresting

    ReplyDelete
  6. Tharangi athi nenaikirathu pola ava life la nadantha maraika than nenaikiralo ennavo
    Athi kum swara kum enna prachanai night iva message panna la than ah feel pannan ippo ipadi kobam ah irukan

    ReplyDelete
  7. Idu super twist. Adhikku yenna problem? Waiting.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 1

அத்தியாயம் 1