அத்தியாயம் 5
- Get link
- X
- Other Apps
‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா’ என்ற ரீதியில் தன்னெதிரே அமர்ந்திருந்த ஸ்வராவைப் பார்க்கப் பிடிக்காதவனாக முகத்தை மடிக்கணினி திரைக்குள் புதைத்திருந்தான் அதிரதன்.
அவனது கோபம் தணியட்டுமெனக் காத்திருந்த ஸ்வரா, பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்த அவனுடைய அமைதியை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டான் என்று எண்ணிக்கொண்டு மெதுவாக “ரதன்…” என ஆரம்பித்தது தான் தாமதம், மடிக்கணினி திரைக்கு மேல் அவனது விழிகள் மட்டும் தீச்சுடராய் ஒளிர்ந்தன.
அவனுள் கனலாய் எரியும் கோபத்தின் வீரியத்தை அந்தக் கண்கள் பிரதிபலிக்கவும் ஸ்வராவின் தொண்டை கட்டிக் கொண்டது.
“இப்ப என்ன ட்ராமா போடலாம்னு வந்திருக்க?”
சாட்டையின் நுனியால் அடிபட்டவளைப் போல துடித்துக் கண் கலங்கினாள் ஸ்வரா.
“என்னைப் பாத்தா ட்ராமா பண்ண வந்த மாதிரி தெரியுதா ரதன்? ஐ கம் ஃபார் யூ… நீ எனக்கு மறுபடி வேணும்னு வந்திருக்கேன்… ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ ரதன்”
“நான் என்ன பொம்மையா? நீ வேண்டாம்னு தூக்கியெறியுறதும், அப்புறம் வேணும்னு கட்டியணைக்குறதுமா இருக்கிற… எனக்கு உன்னோட இந்த மைண்ட்செட் பிடிக்கல ஸ்வரா… எனக்குனு இல்ல, எந்த ஒரு ஆம்பளைக்கும் ஒரு பொண்ணோட ‘நேம்சேக் ஃபியான்ஸா’ இருக்கப் பிடிக்காது”
“ரதன்…”
“டோண்ட் கால் மீ ‘ரதன்’… அதுக்கான உரிமைய நீ இழந்துட்ட ஸ்வரா… எந்தத் தைரியத்துல நீ இங்க வந்து என்னைக் கட்டியணைச்சு அழுதனு தெரியல… லிசன், நான் ரொம்ப நொறுங்கிப் போயிருக்கேன்… உன்னைப் பாக்க பாக்க என் மேல எனக்குக் கோவம் வருது ஸ்வரா… என் கோவத்தால என்னை நானே அழிச்சிப்பேனோனு கூட சந்தேகம் வருது”
கடுமையான முகத்தோடு சொன்னவனை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிப்போனாள் ஸ்வரா.
நாற்காலியிலிருந்து எழுந்தவள் அவனருகே போய் நின்றாள். மெதுவாக மடிக்கணினியின் விசைப்பலகை மீதிருந்த அதிரதனின் வலிய கரத்தைப் பற்றி அதில் தலை கவிழ்த்தியவள்
“உன்னை நான் காயப்படுத்திருக்கேன் ரதன்… எனக்குப் புரியுது… ஆனா உன்னை இழந்துட்டு வாழமுடியாதுனு அழுற என் மனசுக்கு என்னால ஆறுதல் சொல்ல முடியல… நம்ம ரிலேசன்ஷிப்ல நான் செஞ்ச முதலும் கடைசியுமான தப்பு இதுதான்… அதுக்காக என்னை மன்னிக்கலாமே?” என்று சொல்ல
“காதல் எல்லா தப்பையும் மன்னிக்க வைக்கும் ஸ்வரா… ஆனா அந்தக் காதல் பரஸ்பரம் ரெண்டு பேரோட மனசுலயும் இருக்கணும்… என் மேல உனக்கு அந்த நொடியில காதல் இருந்திருந்தா நீ அந்தத் தப்பைச் செஞ்சிருக்க மாட்ட… யூ நோ ஒன் திங்? இந்த உலகத்துல பொண்ணை விட ஆணுக்குத் தடுமாறுறதுக்கான வாய்ப்புகள் பாக்குற இடத்துல எல்லாம் கொட்டிக் கிடக்குது… எல்லா ஆண் மாதிரி எனக்கும் சபலம் எல்லாம் வரும்… அதைத் தாண்டி என்னைத் தப்பு செய்ய விடாதது எது தெரியுமா? லவ்… லவ்ங்கிறது ஒரு கமிட்மெண்ட்… வாழ்நாள் முழுக்க உனக்கு நான், எனக்கு நீங்கிற உறுதிய குடுக்குற கமிட்மெண்ட்… அது என் மனசுல அழுத்தமா பதிஞ்சதால எந்த இடத்துலயும் நான் தவறுனதில்ல… எனக்கு நம்ம காதல்ல இருந்த சீரியஸ்னெஸ் உனக்கு இல்ல ஸ்வரா… உன்னால நான் இல்லாம வாழமுடியும்… என்னை மறந்துட்டு இன்னொரு வாழ்க்கைய தேடிக்க முடியும்… ரதன் ரதன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி அழுறதால நான் இல்லாம நீ நொடிஞ்சு போயிடுவனு அர்த்தமில்ல… ப்ளீஸ், இங்க இருந்து போயிடு”
இளக்கமின்றி உரைத்தவனிடம் இனி வாதாட என்ன இருக்கிறது என்று விரக்தியுற்ற ஸ்வரா அவனது கரத்தை விடுவித்தாள்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
எதையோ தீர்மானித்தவளைப் போல நிமிர்ந்தவள் அவனைத் தீர்க்கமாக நோக்கினாள்.
“கடைசில நீயும் சராசரி ஆம்பளைனு ப்ரூவ் பண்ணிட்ட ரதன்… ஒரு பொண்ணோட காதலை மானசீகமா அளவிட எந்த ஆணுக்கும் தெரியாதுல்ல? உங்களைப் பொறுத்தவரைக்கும் காதல்ங்கிறது உடல் சார்ந்த விசயம்… ஆதிமனுசன்ல இருந்து இந்த அதிரதன் வரைக்கும் அதே எண்ணம் தான் உங்க மூளையில ஊறியிருக்கு”
அதிரதனின் பார்வை கூர்மையுற்றது. மூளை சடுதிக்குள் யோசித்து தன் மீது அவள் போடுவது அநியாயமான பழி என்பதை அவனுக்குப் புரியவைத்தது.
உதடுகள் கோணலாக வளைய “எமோஷ்னல் மேனிபுலேசன்! ஹூம்! தப்பு செஞ்சவங்களோட கடைசி ஆயுதம் இதுதான்… ஓரளவுக்கு எனக்கும் ஹியூமன் சைக்காலஜி தெரியும்… எனக்குக் குற்றவுணர்ச்சி உண்டாக்கப் பாக்குற உன் முயற்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கேலியாய்ச் சொன்னவன் அடுத்த நொடியே “விவேக்” என்று இடியாய் முழங்கினான்.
காதலர்கள் பேசிக்கொள்ளட்டுமென அந்தப் பெரிய அலுவலக அறையில் கோப்புகள் இருக்கும் பகுதியில் எதையோ தேடிக்கொண்டிருப்பவனைப் போல் பதுங்கியிருந்தவன் அதிரதனின் இடி முழக்கக்குரல் கேட்டதும் ஓடோடி வந்தான்.
“சார்…”
மூச்சிறைக்க நின்றவனிடம் உடனடியாக ஸ்வராவை இங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லுமாறு சைகை மூலமாகக் கூறினான் அவன்.
“மேடம் ப்ளீஸ்”
விவேக் பணிவாகச் சொல்ல பொங்கி வந்த சினத்தைக் காலில் அணிந்திருந்த ஸ்டில்லட்டோவில் காட்டி வெளியேறினாள் ஸ்வரா.
அவள் போய்விட்டாளென்று விவேக் சொன்னதும் “அம்மா கால் பண்ணுனாங்களா?” என விசாரித்தான்.
இல்லை என விவேக் சொன்னதும் ‘உஃப்’ என்று உதடு குவித்து பெருமூச்சு விட்டுக்கொண்டான் அவன்.
ஸ்வரா போய்விட்டாள். ஆனால் அவளது வார்த்தைகளின் தாக்கம் இன்னும் அதிரதனிடம் மிச்சமிருந்தது.
அவனது அன்னை மனோரதியுடைய தோழியின் பெண் ஸ்வரா. அவளது தந்தை மதியழகன் பிரசித்தி பெற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. ஏற்கெனவே செல்வத்தில் கொழித்தவர்கள் கோவிட் தடுப்பூசியை அவர்கள் நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்ததில் இன்னும் இலாபம் பார்த்துவிட்டார்கள்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவளை அதிரதனிடம் அறிமுகப்படுத்திவைத்தார் மனோரதி. அன்றே அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது.
ஸ்வராவின் அழகைக் கண்ட எந்த ஆண்மகனுக்குத் தான் அவளைப் பிடிக்காமல் போகும்? அதிரதனும் அவளிடம் விழுந்தான். அழகில் ஆரம்பித்த காதல் அத்தியாயம் மனப்பூர்வமாக இருவரும் புரிந்துகொண்டதில் இன்னும் ஆழமாகிவிட்டதாக அவன் கருதினான்.
‘செலிப்ரிட்டி’ ஜோடிகளைப் போல இந்த ஜோடியும் அவ்வபோது தேசிய ஊடகங்களின் கிசுகிசுக்களில் சிக்கியதுண்டு.
அதிரதனுக்கு ஸ்வராவின் மீதிருந்த காதலை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. அவளுக்கும் தனக்குமான காதலில் உறுதியாக இருந்தவன் எப்போதும் அவளிடம் எல்லை மீறி நடந்து கொண்டதில்லை.
அவன் தொழிலில் காட்டிய அதீத ஆர்வத்தால் அவளிடம் நெருங்கி பழகும் நேரமும் வாய்க்கவில்லை. சந்திக்கும் நேரங்களில் எல்லாம் தோளணைப்பு, இதழணைப்பு, கை கோர்த்து அமர்ந்து பேசுவது என்று அவர்கள் காதல் தொடர்ந்ததில் ஸ்வராவுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டியது.
சின்ன சின்ன நெருக்கங்கள் தான் காதலைச் சுவாரசியமாக்கும் என்பது அவளது எதிர்பார்ப்பு. அதற்கு மாறாக ஏனோ அதிரதனுக்கு வரம்பு மீறிப் போவதில் விருப்பமில்லை. ஆர்வமுமில்லை.
இந்நிலையில் தான் பிரபல ஆடை வடிவமைப்பாளன் அஜய் ஓபராயுடன் ஸ்வராவுக்கு அறிமுகம் நடந்தேறியது. அவளுக்கு ஆடை வடிவமைப்பில் ஆர்வம் அதிகம். சொந்தமாக ஒரு ஆடை வடிவமைப்பு ப்ராண்டும் அவளது தலைமையில் இயங்கி வருகிறது.
எனவே ஆங்காங்கே அவர்களைப் பார்த்ததாகச் சிலர் சொன்னதை அதிரதன் தவறாக எண்ணியதில்லை.
தொழில் தொடர்பான வெளிநாட்டுப்பயணங்களில் அவனுக்கும் பேரழகியான பெண்களிடம் பழகும் வாய்ப்பு கிடைக்கும். அப்போதெல்லாம் ஸ்வராவின் முகம் நினைவிலாடும். உடனே விலகி வந்துவிடுவான். அதே கட்டுப்பாடும், நேர்மையும் ஸ்வராவிடமும் இருக்குமென அதிரதன் எண்ணியதுதான் மாபெரும் பிழையாய்ப் போனது.
அஜயுடன் நட்பு பாராட்டிய ஸ்வரா ஒரு கட்டத்தில் அதைத் தாண்டி அவனுடன் நெருக்கமானாள். வெளியுலகத்துக்கு அதிரதனின் வருங்கால மனைவி மற்றும் காதலியாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும் அஜயுடனான உறவில் எல்லை மீறிவிட்டாள் அவள்.
இதை அதிரதனிடம் இரகசியமாகவே வைத்திருந்தாள். அவளையும் அஜயையும் பற்றி பரவிய கிசுகிசுக்கள், அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வலம் வர ஆரம்பித்தபோது தனது பி.ஆர் குழுவை வைத்து அவற்றை பதிவேற்றிய சமூகவலைதள பதிவர்களைக் காவல்துறையில் புகாரளித்து கம்பி எண்ண வைத்தவள் ஸ்வரா.
இத்துணை கவனமாக இருந்தும் அவள் தொழில் விசயமாக மொரிசீயஸ் சென்ற போது அஜயும் அங்கே வருகை தந்தது எப்படியோ ஊடகங்களின் கவனத்துக்குப் போய்விட்டது.
இருவரும் கடற்கரையில் நீச்சலுடையுடன் நடக்கும் காட்சிகள், சூரியக்குளியல் எடுக்கும் காட்சிகள் எல்லாம் இணையத்தில் வலம் வர ஆரம்பிக்க இம்முறை அதிரதனுக்கும் ஏதோ தவறெனத் தோன்றிவிட காதலர் தினத்தைச் சாக்காக வைத்து ஸ்வராவைக் காண மொரீசியஸ் போனவன் அவள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அஜயும் தங்கியிருக்கிறான் என்று லாபியில் சொன்னதுமே கலக்கமடைந்தான்.
அதை விட மோசமான காட்சியொன்று அவனது கண்களில் பட்டது.
அஜயின் தோளில் சாய்ந்தபடி வந்த ஸ்வரா அவனை அணைத்திருந்த விதமும், அடுத்த நொடியே அஜய் அவளது இதழில் ஆழமாக முத்தமிட்டதையும் பார்த்த பிற்பாடு மொத்தமாக உடைந்து போனான்.
அவனைக் கண்டதும் இருவரும் அதிர்ச்சியில் உறைய, அதிரதனோ மேற்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பாதவனாக அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
மொரீசியசில் அவன் தங்குவதற்கென இருக்கும் சொகுசு பங்களாவுக்குப் போனவன் அப்போதும் கூட ஸ்வராவைச் செய்த தவறை பெரிதுபடுத்தாமல் இருந்துவிட தான் நினைத்தான்.
ஆனால் அடுத்த சில மாதங்களில் அவள் செய்த இன்னொரு காரியம் அவனை ஒரேயடியாக அவளை விட்டு விலக வைத்துவிட்டது.
இப்போது நினைத்தாலும் இரத்தம் கொதித்தது அவனுக்கு. தலை விண்விண் என வலித்தது.
நம்பிக்கை துரோகங்கள் கொடுத்த வலியை விட மனிதர்கள் நம்மை முட்டாள் ஆக்க எடுக்கும் முயற்சியில் நம்மில் பலர் காயப்பட்டுப் போகிறோம்.
அதன் பிற்பாடு நம்மால் மீண்டும் அவர்களிடம் முன்பு போல பழக முடியாதல்லவா! அதிரதனால் மட்டும் முடியுமா என்ன?
அவன் இவ்வாறு தனக்குள் நொந்து போன நொடியில் ஸ்வராவோ அவனது அன்னையிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள்.
“நான் எவ்ளோ ட்ரை பண்ணியும் ரதன் என் பேச்சைக் காது குடுத்து கேக்க மாட்டேனுட்டார் ஆன்ட்டி… உங்களைத் தவிர வேற யாராலையும் என் நிலமைய அவனுக்குப் புரியவைக்க முடியாது… டூ சம்திங் ஆன்ட்டி”
அதிரதனின் அறைக்கு அடுத்த அறையில் இருந்தபடி தான் மனோரதியிடம் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.
ஹோட்டலின் இத்தாலிய உணவகத்தில் உணவு ஆர்டர் செய்திருந்தாள்.
‘ட்ரிபிள் எஸ்ப்ரசோ மார்டினி’ , ‘ரிபோலிட்டா சூப்’
ஆர்டர் செய்த உணவும் வந்தது. ட்ரேயில் எதையோ தேடியவள் தான் தேடியது இல்லை என்றதும் உணவு கொண்டு வந்த சர்வரை கோபமாய் ஏறிட்டாள்.
“இதெல்லாம் எவ்ளோ கேலரினு ஏன் நோட் வைக்கல?”
சர்வரோ திருதிருவென விழித்தார்.
“என்ன பாக்குறிங்க? எப்பவும் நான் ஆர்டர் பண்ணுன ஃபூட் எவ்ளோ கேலரினு பாத்து தான் சாப்பிடுவேன்… இது இங்க இருக்குற செஃப் எல்லாருக்கும் நல்லா தெரியும்… ஏன் கேலரி நோட் வைக்கல? கால் யுவர் செஃப் ரைட் நவ்”
அவள் முதலாளியம்மாவாக ஆணையிட்டதும் வேறு வழியின்றி தரங்கிணியைத் தேடி ஓடினார் அந்தச் சர்வர்.
பாஸ்தா போர்டில் மாவை வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தவள் மூச்சிறைக்க ஓடி வந்த சர்வரிடம் “கியா ஹூவா பாய்?” என்று கேட்க அவரோ மேலாண்மை இயக்குனரின் வருங்கால மனைவி கலோரி கணக்கு பற்றி எழுதிய துண்டுச்சீட்டு வைக்காமல் உணவு எடுத்துச் சென்ற கோபத்தில் கத்துவதாகக் கூறினார்.
“ஓஹ் காட்! ஏன் என் கிட்ட யாருமே சொல்லல? இட்ஸ் ஓ.கே… நான் போய் அவங்க கிட்ட பேசுறேன்” என்று கிளம்பினாள் தரங்கிணி.
அதிரதனுக்கும் அவனது காதலிக்கும் இடையே இந்தத் துண்டுச்சீட்டு காரணமாக வேறு எந்த விவாதமும் வந்துவிடக்கூடாதென்ற பதற்றத்தோடு ஸ்வரா தங்கியிருந்த அறையை நோக்கி ஓடினாள் அவள்.
- Get link
- X
- Other Apps
Comments
Avale oru thunder seetu pola than eruka eppo 😁😁
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)
ஓ மை காட்..! ஆனாலும் இந்த ஸ்வரா பண்ணது ரொம்பவே நம்பிக்கை துரோகம். இது நமக்கே தெரியுதுங்கிறப்ப...
ஏன் அவளுக்கு தெரியலையா ?
ஒருவேளை, அதிரதனை ஏமாந்த இளிச்சவாயன்னு நினைச்சிட்டாளோ...? இந்த அதிரதனை விட அந்த அஜய் ஓபரா பெஸ்ட்ன்னுத் தானே அவன் பின்னாடி போனா. அப்புறம் ஏன் திரும்பவும் அதிரதனுக்கு தன்னை ப்ரூவ் பண்ண நினைக்கனும்...?
ஏன், அதிரதனை விட அந்த அஜய் ஓபரா கிட்ட பணவசதி இல்லையோ...? பணத்துக்கு ஒருத்தன், ஸ்டேட்டஸ்க்கு ஒருத்தன், பேசனுக்கு ஒருத்தன்னு....? சே.. என்ன பொண்ணுங்களோ...? இப்படியும் இருக்காங்க பாருங்களேன்.
அது சரி, இவ என்னமோ அதிரதனோட பொண்டாட்டி மாதிரி இத்தனை ஆர்பாட்டம் பண்றா...? அந்த ஆ்பர் எப்பவோ புட்டுக்கிச்சுன்னு தெரியாம தருவும் பறந்தடிச்சிட்டு வரா.
ஆனா, இது மட்டும் அதிரதனுக்கு தெரிஞ்சது...
இந்த ஸ்சராவை சிம்லாவை விட்டே துரத்தப் போறான் பாருங்க.. அதுமட்டும் கன்ஃபார்ம்ட்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteAthi kita sentiment drama work out aagala nu avan amma kita recommendation ku ponathum illa ma ippo ennavo owner pola swara oda indha attitude ku definite ah athi kita vangi kattika poran
ReplyDeletesUPer
ReplyDelete