அத்தியாயம் 11

Image
மனம் வெடிக்க அழுது கொண்டிருந்த தரங்கிணியை எப்படி தேற்றுவதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தான் அதிரதன். அவளருகே அமர்ந்திருந்த தமயந்தியின் ஆறுதல்களைக் கேட்கும் திடம் கூட இல்லாமல் கதறிக்கொண்டிருந்தாள் அவள். “எப்பிடி என் மகனைக் கஷ்டப்படுத்த மனசு வந்துச்சு? அவன் அவங்களுக்கு என்ன பாவம் பண்ணுனான்?” “அழாதிங்க மேடம்… கடவுள் இருக்காரு… தப்பு செஞ்சவங்களுக்கு அதுக்கான கூலிய குடுப்பாரு” “என்ன கூலி குடுத்து என்ன பிரயோஜனம்? இன்னைக்கு என் பிள்ளை சுயநினைவு இல்லாம படுத்துக் கிடக்கான்… அவன் எனக்குப் பழைய சித்துவா திரும்பிக் கிடைப்பானா? பெத்த வயிறு காந்துது தமயந்தி” அதிரதன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விவேக்கை அழைத்துக்கொண்டு சற்று தூரத்தில் சென்று நின்றான். தரங்கிணியின் கண்ணீர் அவனை ஏதோ செய்தது. வார்த்தையால் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு. “சொல்லுங்க சார்” பார்வையைத் தரங்கிணியிடமிருந்து விலக்கி விவேக்கிடம் கொண்டு வந்தான் அதிரதன். “மிஸ்டர் ஹேமசந்திரன் கிட்ட நான் பேசணும் விவேக்… தமயந்தி சொல்லுறதை பாத்தா சித்தார்த்தை யாரோ மாடில இருந்து தள்ளி விட்டிருக்காங்க… அந்தப் பையனுக்குப் பாதுகாப்பு இல்லாத ...

அத்தியாயம் 8

 


தரங்கிணியின் ஆலோசனையைக் கேட்ட பிற்பாடு அதிரதன் செய்த முதல் காரியம் அன்னை மனோரதியிடம் ஸ்வராவுக்கும் தனக்குமான திருமணப் பேச்சுவார்த்தையை முறித்துவிடும்படி கேட்டுக்கொண்டதுதான்.

கூடவே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவுக்குமாறும் அவன் கூறிவிட்டான்.

மனோரதிக்கு மைந்தனின் இம்முடிவில் கொஞ்சம் கூட சம்மதமில்லை.

“இது உன் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவில்ல அதி… ரெண்டு பிசினஸ் எம்பயரோட வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போற முடிவு… எடுத்தோம் கவிழ்த்தோம்னு நடந்துக்க முடியாதுப்பா… நீ சென்னைக்கு வா… ரெண்டு குடும்பமும் கலந்து பேசி…”

அதிரதனின் அதிருப்தியானக் குரல் தெளிவாக அவரது பேச்சைப் பாதியாக உடைத்தது.

“இனி பேசுறதுக்கு எதுவுமில்ல மாம்… எல்லாத்தையும் முடிச்சிருங்க… இல்லனா நானே ப்ரஷ்கு அபிசியல் ஸ்டேட்மெண்டை அனுப்ப வேண்டியதா இருக்கும்… என்னை அந்த நிலமைக்குத் தள்ள மாட்டிங்கனு நம்புறேன்… குட் நைட் மாம்”

கறாராகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான் அவன். அடுத்த அரைமணி நேரத்தில் அவனது அறைக்கதவு படபடவெனத் தட்டப்பட்டது.

வந்திருப்பவள் யாரென அவனுக்கு ஊகம் இருந்ததால் நிதானமாகவே கதவைத் திறந்தான்.

முகமெங்கும் கோபச்சிவப்பேறி பார்க்கவே அக்னி பிழம்பு போல காட்சியளித்த ஸ்வரா பாய்ந்து வந்து அவனது இரவுடையான டீசர்ட்டைக் கொத்தாகப் பற்றினாள்.

“யூ ஸ்கவுண்ட்ரல்… என்னை விட்டு நீ விலகிடுவியா?” என்று ஆவேசமாகக் கேட்டபடியே அதிரதனின் இதழைத் தன் வசமாக்கி விட்டாள்.

அதிரதன் இதை எதிர்பார்க்கவில்லை. ஸ்வரா திடுதிடுப்பென அணைப்பது, முத்தமிடுவது எல்லாம் அவர்கள் காதலர்களாக உலாவிய காலங்களில் அவனுக்குப் பழக்கமான அன்பு செய்கைகளே! ஆனால் எப்போது அஜய் ஓபராயுடன் நெருங்கினாளோ அப்போதே அதிரதனிடமிருந்து உடலளவில் விலகிவிட்டாள் என்று சொல்லலாம்.

மூச்சு திணற அவனை இதழணைப்பில் மூழ்கடித்தவள் கண்ணீர் பொங்க அவனை விடுவித்தாள்.

அதிரதன் கோபத்தோடு ஏதோ சொல்ல வரும் முன்னர் அவனது உதட்டில் ஆட்காட்டிவிரலை வைத்து பேசாதே என்று தடுத்தாள்.

இன்னொரு கரம் அவனது தாடையை வருடியது. அதில் சுத்தமாகக் காமம் இல்லை. நீ எனக்கானவன் என்ற உரிமையுணர்வு மட்டுமே தெரிந்தது அவளின் ஸ்பரிசத்தில்.

“எனக்கும் அஜய்குமானது ஜஸ்ட் அ சிச்சுவேசன்ஷிப் (situationship) ரதன்… ஒய் டோண்ட் யூ அண்டர்ஸ்டாண்ட் திஸ்? அவனால ப்ரெக்னெண்ட் ஆகிட்டு அந்தப் பழிய உன் மேல தூக்கிப் போட்டது பெரிய தப்பு… அப்ப அவசரத்துல முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன் ரதன்… எனக்குப் பயத்துல என்ன பண்ணனும்னு தெரியல… நம்ம பேரண்ட்ஸ் இதை தப்பா புரிஞ்சிப்பாங்களோனு அவசரப்பட்டு உன்னை மிரட்டிட்டேன்… ஐ அம் சாரி ரதன்… உனக்காக அந்த பேபிய அபார்ட் பண்ணுனதுக்கு அப்புறம் ஏன் உன் கோவம் குறையல?”

அழுதபடியே அணைத்தவளை நினைத்தால் அதிரதனுக்குப் பரிதாபம் உண்டானது. ஆனால் அடுத்த நொடியே இவள் ஊடகங்கள் முன்னே என்னைத் தவறாகச் சித்தரிக்கப் பார்த்தவள் ஆயிற்றே என்று சுதாரித்துக்கொண்டான்.

அவளை விலக்கி நிறுத்தினான்.

“எல்லாத்தையும் முடிச்சிக்கலாம் ஸ்வரா… இதுக்கு மேல நம்ம ரிலேசன்ஷிப்பை தொடர்ந்தோம்னா அதுக்கு அர்த்தமே இருக்காது… வாழ்க்கைத்துணைக்கான உன்னோட எதிர்பார்ப்புகள் எந்தக் காலத்துலயும் என் குணத்தோட ஒத்துப் போகாது… நம்ம மறுபடி சேரலாம்… ஆனா, இன்னும் சில வருசத்துல மறுபடியும் உனக்கு என் மேல சலிப்பு வரும்… ஏன்னா நீ எதிர்பாக்குற ஸ்டீமி லவ்வருக்கான எந்த அடிப்படை குணமும் என் கிட்ட இல்ல… நம்ம உறவுல என்னைக்குமே நீ எதிர்பாக்குற சுவாரசியம் கிடைக்காது ஸ்வரா… எனக்காக மட்டுமில்ல, உனக்காகவும் யோசிச்சு தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன்… உன்னோட மேனிபுலேட்டிவ் நேச்சரை கொஞ்சம் மாத்திக்க… உனக்கு என்னை விட நல்ல பார்ட்னர் கிடைப்பான்”

ஸ்வரா பேயறைந்தாற்போல விழித்தாள். அணைத்து முத்தமிட்டால் வழிக்கு வருவான் என அவள் செய்த கணக்கு தப்பாய்ப் போனதால் உண்டான அதிர்ச்சியில்லை இது.

எப்படியாவது இவனை வளைத்துத் தனக்கேற்றவனாக மாற்றிக்கொள்ளலாமென அவள் போட்ட திட்டத்தைத் தவிடுபொடியாக்கிய அவனது முதிர்ச்சியான அணுகுமுறையால் உண்டான அதிர்ச்சி!

அவளுக்கு தாமரை இலை மேல் தண்ணீர் வகையறா உறவுமீது பிடித்தமில்லை. காதலியிடம் நெருக்கம் காட்ட தயங்கும் காதலன் எல்லாம் என்ன ஆண்மகன் என்ற எண்ணப்போக்கு அவளுடையது.

அதிரதன் காட்டிய ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ காதலை எப்படியாவது மாற்றிவிடவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு தான் சிம்லா மண்ணை மிதித்திருந்தாள்.

இதோ பனி விழும் இரவின் மோனத்தில் அவனது மனதில் தனது எண்ணங்களை விதைத்துத் தனக்கேற்றவனாக மாற்றிக்கொள்ளலாமென நினைத்தவளுக்கு இடியாய் இறங்கியது மனோரதியிடமிருந்து வந்த மொபைல் அழைப்பு.

அதிரதன் அதிகாரப்பூர்வமாக அவர்களின் உறவை முறித்துக்கொள்ள விரும்புவதாக அவர் கூறியதும் பொம்மையை இழந்த குழந்தை போல பரிதவித்தவள் தனது திட்டத்தோடு கொஞ்சம் கண்ணீரையும் கலந்து அதிரதனைச் சாய்த்துவிடலாமென நினைத்தாள்.

அவனோ ஸ்திரமாய் நின்று இந்த உறவு இருவருக்கும் நல்லதில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டான். இனி யோசிக்க என்ன இருக்கிறது என்றே ஸ்வராவுக்கும் தோன்ற ஆரம்பித்தது.

இப்போது அவள் மொபைலில் அழைத்தால் கூட ‘கட்டளையிடுங்கள் ஆலம்பனா’ என ஓடோடி வருவான் அஜய் ஓபராய். அப்படி ஒரு ப்ரேமை அவள் மீது அவனுக்கு.

‘எப்படி கொண்டாடப்பட வேண்டியது எனது அழகு. இந்த மடையனை மணந்தால் வாழ்நாள் முழுமைக்கும் நான் ஏங்கியே சாகவேண்டியது தான்’ 

ஏதோ தீர்மானித்தவளாகக் கண்ணீரைத் துடைத்தாள் அவள்.

“நீ சொல்லுறதும் நியாயமான பாயிண்ட்ஸ் தான் ரதன்… எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் குடு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் ஸ்வரா.

அவள் யோசிக்க அவகாசம் கேட்டதே அதிரதனுக்குப் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் எவ்வித மனவுளைச்சலுமின்றி நிம்மதியாக உறங்கினான் அவன்.

மறுநாள் விடியலில் ஸ்வரா ஹோட்டலில் இல்லை. இரவோடு இரவாக அஜய் ஓபராய் வந்து அழைத்துப் போனதாக விவேக்கிடமிருந்து செய்தி கிடைத்தது.

அதிரதனின் இதழில் முறுவல் பூத்தது. சுழலில் இருந்து விடுபட்டவனைப் போல ஆசுவாசமாக உணர்ந்தான். உற்சாகத்துடன் அலுவலகம் செல்லத் தயாரானான்.

தரங்கிணியும் அன்றைய நாளை உற்சாகமாகவே ஆரம்பித்திருந்தாள். அன்று சித்தார்த்தின் பிறந்தநாள். அவனருகில் இருக்க முடியாத சூழல். ஆனால் சாரதாவும் ஹேமசந்திரனும் அவனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். 

காலையிலேயே சித்தார்த்தின் கேர்டேக்கரான தமயந்தி அவளது மொபைலுக்கு வீடியோ கால் மூலம் அழைப்பு விடுத்து சித்தார்த்தைப் பேச வைத்துவிட்டார்.

சித்தார்த்துக்கும் முதல் வாழ்த்து அன்னையிடம் இருந்து வந்த மகிழ்ச்சி. குழந்தையின் கண்களில் ஆனந்தக் கண்ணீரைக் கண்டதும் தரங்கிணிக்கு மனம் பாகாய் உருகிப்போனது.

“உங்களுக்கு ஜிபேல மனி ட்ரான்ஸ்பர் பண்ணிருக்கேன் தமயந்தி… சித்தார்த் கேட்ட ப்ளே ஸ்டேசனை அவங்க தாத்தா பாட்டி பெர்மிசனோட வாங்கி குடுங்க”

“கண்டிப்பா மேடம்”

தமயந்தி சந்தோசமாகவே சொன்னாலும் அவரது கண்களில் ஏதோ ஒரு இரகசியத்தை விழுங்க நினைக்கும் பாவனை தெரிந்தது அவளுக்கு. என்னவென விசாரித்ததும் 

“இந்த வீக்கெண்ட் உங்களுக்குக் கால் பண்ணுறேன் மேடம்… உங்க கிட்ட நிறைய பேசணும்” என்றார். கூடவே “எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க… அம்மா கூட இருக்குறதை விட வேற எதுவுமே குழந்தைங்களுக்குப் பெருசில்ல மேடம்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

அந்த ஒரு விசயம் தான் தரங்கிணிக்கு உறுத்தலாக இருந்தது.

முதல் மாதச் சம்பளம் வாங்கிய பிறகு வார விடுமுறையில் சித்தார்த்தைப் பார்க்க சென்னைக்கு விமானம் ஏறும் எண்ணம் அவளுக்கு. 

மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பணிக்குச் சேர்ந்திருந்தவளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் பாக்கி இருக்கிறதே என்ற ஏக்கம் வேறு!

இருப்பினும் தொழில் மீதான காதல் அனைத்தையும் ஒதுக்கிவிட்டது.

‘மெஜலூனா’ எனப்படும் அரைநிலா வடிவ கத்தியின் இரு பக்கத்து மரப்பிடிகளையும் பிடித்தபடியே பீட்சாவைத் துண்டங்களாக்கினாள் அவள்.

அந்த இத்தாலிய உணவகப் பகுதியில் இளையராஜாவின் மெல்லிசைப் பாடல்கள் மெல்லிய சப்தத்தில் ஒலித்துக்கொண்டிருந்தன.

‘ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்’ என்று சுவர்ணலதாவின் குரல் செவியை நனைத்துக்கொண்டிருந்தது.

பாடலின் ரிதத்துக்கு ஏற்றபடி மெல்லிய அசைவுகளுடன் வேலையில் உற்சாகமாக ஆழ்ந்திருந்தார்கள் அனைவரும்.

அந்தப் பாடலில் இடையே மெட்டு மாறும். மெல்லிசை துள்ளல் இசையாக மாறும். அந்த மாற்றம் தரங்கிணிக்குப் பிடிக்கும். அந்த இடத்தில் ஒலிக்கும் வரிகள் அவளுக்கு அத்துப்படி.

“ஓடைமீது ஓடம் போல ஆடவா, லால லால லால லால லால லா” என்று கோரஸ் பாடியபடி பீட்சா துண்டுகளை அழகாய் தட்டில் வைத்துக் கையில் எடுத்து மெல்லிய நடன அசைவோடு அவள் சுழற்றிய நேரத்தில் யாரோ அங்கே வந்தார்கள்.

அவளோடு பின்னணியின் ‘ஹம்மிங்’ செய்த ஏனைய குரல்கள் நின்றுவிட தரங்கிணி என்னவாயிற்று என்பது போல திரும்பிப் பார்த்தாள்.

அங்கே மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் அதிரதன். தரங்கிணியின் கரங்கள் தானாக தட்டுடன் கீழிறங்கின.

அதிரதன் உதடு பிரிக்காமல் சிரித்தவன் சமையல் மேடையில் இரு கரங்களையும் ஊன்றி எதிர்பக்கம் இருந்த தரங்கிணியை நோக்கி தலையை நீட்டி அவள் விட்ட இடத்தில் தொடர்ந்தான்.

“காதல் கன்னிகை

காமன் பண்டிகை

காணுகின்ற காலமல்லவா!”

அந்த வரியைப் பாடுகையில் அவனது ஒரு கண் மட்டும் சிமிட்ட அங்கிருந்தவர்கள் பார்வை தங்கள் இருவரின் மீதும் திகைப்போடு குவிவதை உணர்ந்தாள் தரங்கிணி.

அவள் பதறுவதை விரும்பாதவனாக “ஷீ இஸ் மை சீனியர் இன் ஆர்.எம்.எஸ்… வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ்” என்று சொல்லிவிட இப்போது இதர சமையல் கலைஞர்களின் வித்தியாசமான பார்வை மறைந்தது.

 “இஃப் யூ டோண்ட் மைண்ட், உன் பிசியான ஒர்க்கை ஒதுக்கி வச்சிட்டு ஃபைவ் மினிட்ஸ் என் கூட பேச முடியுமா?” என்று கேட்டான் அவன் அதே இலகு பாவனையில்.

தரங்கிணி பீட்சா இருந்த தட்டை மேடையின்மீது வைத்துவிட்டு “கேரி ஆன் கய்ஸ்… ஐ வில் பி ஹியர் விதின் ஃபைவ் மினிட்ஸ்” என்று சொன்ன கையோடு அவனை அழைத்துக்கொண்டு வெளியேறினாள்.

கண்களில் சிறு கண்டனத்தோடு “ஒரு தண்டோரா வாங்கி தரட்டுமா அதி? தனித்தனியா எல்லார் கிட்டவும் நீயும் நானும் ஒரே இடத்துல படிச்சோம்னு சொல்ல வேண்டிய சிரமம் இருக்காது” என்று அவள் சொன்னதும் சத்தமாக நகைத்தான் அவன்.

“சிரிக்காத”

புஜத்தில் அடித்தவளைக் கனிவாகப் பார்த்தவன் “நான் சென்னைக்குக் கிளம்புறேன் தரு” என்றான்.

தரங்கிணியின் முகத்திலிருந்த கண்டிப்பு மறைந்தது. வாட்டம் குடியேறியது அங்கே.

“ஹே என்னாச்சு?” என்றவனிடம் ஒன்றுமில்லை என்று மறுப்பாகத் தலையசைத்தாள்.

“இவ்ளோ பெரிய பிசினஸை கட்டிக் காப்பாத்துறவன் நீ… ஒரே இடத்துல இருக்க முடியாதுல்ல… எனிவே, இங்க உன்னை மீட் பண்ணுனதுல ரொம்ப சந்தோசம் அதி” 

நட்பாய் கரம் நீட்டினாள் அவள். அதிரதன் அவளது கரத்தைப் பற்றி குலுக்கினான்.

“இன்னொரு நியூஸும் இருக்கு… நான் மறுபடியும் சிங்கிள் ஆகிட்டேன்” 

“இதுதான் உண்மையான குட் நியூஸ்… உனக்கான ஒருத்திய சீக்கிரமே மீட் பண்ணி காதல்ல மூழ்கி பைத்தியமாக வாழ்த்துக்கள்”

“நீ வாழ்த்துறியா? சபிக்குறியா சீனியர்?”

“அது உன்னோட பார்வைய பொறுத்தது ஜீனியர்”

விளையாட்டுப்பேச்சை நிறுத்திவிட்டு அவனது கரத்தை ஆதுரத்துடன் தட்டிக்கொடுத்தாள் தரங்கிணி.

“உனக்கான சரியான வாழ்க்கைத்துணைய நீ தேர்ந்தெடுத்து நல்லபடியா வாழ்ந்தா ஐ ஃபீல் வெரி ஹேப்பி அதி… யூ டிசர்வ் தி பெஸ்ட் விமன் இன் தி வேர்ல்ட்” 

அதிரதனின் கண்களில் மகிழ்ச்சி! கூடவே தரங்கிணியின் மீதான அவனது அபிமானமும்!

“அப்ப நான் உன்னைத் தான் டேட் பண்ணனும் தரு… பிகாஸ் என்னைப் பொறுத்த வரைக்கும் நீ தான் பெஸ்ட் விமன் இன் த வேர்ல்ட்… என்னோட க்ரஷ் வேற… உனக்கு ஓ.கேனா சொல்லு”

“போடா கழுதை… நீ சின்னப்பையன்னு அடிக்கடி ப்ரூவ் பண்ணுற”

“சரிங்க ஆன்ட்டி… இந்தச் சின்னப்பையனுக்கு நீங்க சரியான நேரத்துல குடுத்த அட்வைசுக்குக் கைமாறா ஏதாச்சும் பதில் உபகாரம் பண்ணனும்னு தோணுது… என்ன வேணும்?”

தரங்கிணி மறுப்பாகத் தலையசைத்தாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம் அதி… நீ இப்ப ஹேப்பியா இருக்கல்ல? இது போதும்… உன்னோட அட்ரஸ் மட்டும் குடு… என் பையனைப் பாக்க சென்னை வந்தேன்னா உன்னை மீட் பண்ணுவேன்… இங்க மாதிரி சென்னைல பப்ளிக் ப்ளேஸ்ல உன் கிட்ட பேசுற தைரியம் எனக்கு இல்ல”

“வாட்சப் பண்ணிடுறேன் தரு… ஒன்ஸ் அகெய்ன் தேங்க்ஸ்”

நட்பும் நன்றியுமாகப் புன்னகைத்தவன் அவளை ஒரு பக்கத் தோளோடு அணைத்து விடை பெற்றுக்கொண்டான்.

அதிரதன் அங்கிருந்து கிளம்பியதும் தரங்கிணி நிம்மதி பெருமூச்சோடு ‘பெல்லா இட்டாலியா’வின் சமையலறைக்குப் போனாள்.

அதிரதனிடம் முகவரி வாங்கினாலும், தான் நினைக்கும் நேரத்தில் எல்லாம் அவனைச் சந்திக்க முடியாதென தரங்கிணிக்குத் தெரியும். மீண்டும் அவன் சிம்லாவுக்கு வந்தால், அவனுக்கு நேரம் வாய்த்தால் மட்டுமே சந்திப்புக்கான சந்தர்ப்பம் அமையுமென்பது அவளது எண்ணம்.

எப்படியோ அவன் வாழ்க்கை இனி நல்லவிதமாகப் போகுமென்ற நம்பிக்கை தரங்கிணிக்கு.

இனிதான் அதிரதனுக்கான சோதனைக்காலம் ஆரம்பிக்கவிருக்கிறது என்பதையும், அதோடு சேர்த்து தரங்கிணியின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை வரப்போகிறது என்பதையும் அழுத்தமாக அவர்களது தலைவிதியின் எழுதி வைத்தார் கடவுள் எனும் கதாசிரியர்.

Comments

  1. யுத்த காண்டத்துக்கு பின்னாடி எப்ப வரும் எப்ப வரும்னு காக்க வைக்கும் கதை.வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  2. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 8)

    அப்பாடா..! இப்பவாவது ஸ்வரா 'ஹீ இஸ் நாட் மை மென்'னு உணர்ந்தாலே அதுவே போதும்.
    எங்க கழுத்துல கட்டின கல்லா
    அவனை ஒரு வழி பண்ணிடுவாளோன்னு நினைச்சு ரொம்பவே பயந்திட்டேன். அதி எஸ்கேப்ட்.

    அது சரி, சென்னையில சித்து வீட்ல என்ன தப்பு நடக்குதுன்னு தெரியலையே..? ஒருவேளை, கமலேஷ்க்கு ரீ மேரேஜ் பண்றாங்களோ..? அப்படி பண்ணா சித்துவோட நிலைமை ரொம்பவே கஷ்டம் தான். அதுக்குத்தான் தமயந்தி குழந்தை பெத்த தாயோட இருக்கிறது தான் பெஸ்ட்ன்னாளோ...?

    அது சரி, இந்த அதி படையப்பா படத்துல வர டயலாக் மாதிரி..
    மாப்பிள்ளை அவரு தான், அவர் கட்டிக்கிட்டிருக்கிற வேஷ்டி மட்டும் என்னோடது' தான்னு
    இவங்க ரெண்டு பேரும் மீட் பண்ற சந்தர்பத்துல எல்லாம் ஏலம் விடற மாதிரி ஆர்எம்எஸ்ல தரு எனக்கு சீனியர், நான் அவளுக்கு ஜூனியர்ன்னு
    டமாரம் அடிக்கிறதை நிறுத்தவே மாட்டானோ...?

    அதி, சென்னைக்கு போறான்..
    பின்னாடியே தருவையும் ப்ளைட் புக் பண்ணி வர வைச்சிடுவானோ...?
    அட.. பிரச்சினை அவன் கூடவே வருதுன்னு சொன்னிங்களே..
    அதான் கேட்டேன்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. Andha caretaker sonnathu ah vachi partha anga sidhu ku yetho oru issue iruku nu thonuthu
    Athi chennai ku ella prachanai yum mudinchiduthu nu nimathi ah poran aana ithuku appuram.than aarambam nu avanukku theriya la

    ReplyDelete
  4. Super intresting . Avanga thalai yezhuthu maara povudu na marupadiyum swara or tarangini husband ale edavadu prachnaya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 1

அத்தியாயம் 1