அத்தியாயம் 6
- Get link
- X
- Other Apps
தரங்கிணி பணிவோடு நின்று கொண்டிருக்க, ஸ்வரா அவளை அலட்சியம் செய்துவிட்டுத் தனது விரல் நகங்களில் பார்வையைப் பதித்துக்கொண்டு மொபைலில் மனோரதியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
வேண்டுமென்றே தான் அவளைக் காக்க வைத்திருந்தாள். தனக்கு முறைப்படி உணவு அனுப்பிவைக்காதது அத்துணை பெரிய தவறாகத் தோன்றியது அவளுக்கு.
தரங்கிணி இம்மாதிரி செயல்பாடுகளை எல்லாம் வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்தினால் புன்னகையோடு அதை எதிர்கொள்ளவெனத் தயார்ப்படுத்தப்பட்டவள். எனவே ஸ்வராவின் சிறுபிள்ளைத்தனம் அவளுக்குக் கோபத்தை உண்டாக்கவில்லை.
மனோரதியிடம் அவள் பேசி முடித்துவிட்டுத் திரும்பியதும் அதிகாரத்தொனியில் தான் கேள்வியை ஆரம்பித்தாள்.
“நான் எப்பவுமே கேலரி கால்குலேசன் தெரிஞ்சிக்கிட்டுச் சாப்பிடுறது வழக்கம்… இது உங்களுக்குத் தெரியாதா?”
தரங்கிணி புன்னகைத்தாள்.
“சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் மேம்… நான் நியூவா ஜாயின் பண்ணிருக்கேன்… எனக்கு இதைப் பத்தி யாரும் இன்ஸ்ட்ரக்சன் குடுக்கல”
“ரீசண்டா ஜாயின் பண்ணுனது…” என்று ஆட்காட்டிவிரலால் நெற்றியில் தட்டி யோசித்தவள் “ஓஹ்! யூ ஆர் த சீஃப் குக் ஆப் இத்தாலியன் குசைன் செக்சன்… ஆம் ஐ ரைட்?” என்று கேட்க ஆமெனத் தலையாட்டினாள் தரங்கிணி.
“அப்ப உங்க கிட்ட பேச வேண்டியதில்ல… யூ மே கோ… உங்க ஜூனியர் செஃப்ஸை அனுப்பி வைங்க”
இவள் அவர்களிடம் அதிகாரமாகப் பேசி வேலை செய்வதற்காக பிரயத்தனப்பட்டு அமைத்துக்கொள்ளும் இனிய மனநிலையைக் கெடுத்துவிடுவாளே!
யோசித்த தரங்கிணி தயங்காமல் “இன்னைக்கு சென்ட்ரல் மினிஸ்டரோட ஃபேமிலி லஞ்சுக்கு வர்றாங்க மேம்… அதுக்காக ஒர்க் பண்ணுற பிசில அவங்க கவனிக்காம விட்டிருக்கலாம்… அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றாள்.
ஸ்வராவோ மறுப்பாகத் தலையசைத்தாள்.
“யார் தப்பு பண்ணுனாங்களோ அவங்க மன்னிப்பு கேக்குறது தானே முறை?”
“எனக்குக் கீழ ஒர்க் பண்ணுறவங்க செஞ்ச தப்புக்கு இங்க உள்ள புரொசிஜர்ஸ் புரியாம நான் கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தது கூட காரணமா இருக்கலாமே?”
ஸ்வராவின் குற்றம் சொல்லும் பார்வை கனிந்தது. இதழ்களில் சிரிப்பும் மலர்ந்தது.
“உங்க அசிஸ்டெண்ட்சை விட்டுக் குடுக்க மாட்டிங்க போல… எனிவே, இதுல எவ்ளோ கேலரீஸ் இருக்குனு நீங்களாச்சும் சொல்லுவிங்களா?”
அவள் இயல்பாகக் கேட்டதும் தரங்கிணியும் தயக்கமின்றி சொல்ல ஆரம்பித்தாள்.
“ரிபோலிடா சூப் நானூத்து முப்பத்தைந்து கேலரீஸ் மேம்… கார்ப்ஸும் புரோட்டீனும் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா… ட்ரிபிள் எஸ்ப்ரசோ மார்டினி எண்ணூத்தைந்து கேலரீஸ்… இதுல சேர்த்துக்குற இன்க்ரீடியண்ட்ஸ் வச்சு நான் அப்ராக்சிமேட்டா போட்ட கேலரி கால்குலேசன் இது”
ஸ்வராவின் புருவங்கள் மெச்சுதலாய் உயர்ந்தன.
“தேங்க்யூ” என்றபடி ஒரு கரண்டியால் ரிபோலிடா சூப்பை அருந்தியவள் “ம்ம்ம்… ஃபேபுலஸ்” என்று பாராட்டிவிட்டுத் தரங்கிணியைச் செல்லுமாறு சொல்லிவிட அவளும் கிளம்பினாள்.
சமையல் செய்யும் பகுதிக்கு வந்தவளிடம் உதவி சமையல் கலைஞர்கள் கவலையாய் விசாரிக்க அவளோ “ஒரு பிரச்சனையும் இல்ல… கேலரி கால்குலேசன் எவ்ளோனு நான் சொன்னதும் அவங்க அமைதியாகிட்டாங்க… இங்க யாருலாம் ரெகுலரா வருவாங்க, அவங்க என்ன மாதிரி சர்வீஸ் எதிர்பார்ப்பாங்கங்கிற டீடெய்ல்ஸ் எல்லாம் எனக்குச் சொன்னிங்கனா நல்லா இருக்கும்” என்று அவர்களிடம் தகவல் சேகரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
எங்கே ஸ்வரா ஆரம்பித்த கலகம் பெரிதாகிவிடுமோ என்று பயந்தவள் அந்நாள் சுமூகமாகப் போனது.
மனதுக்குள் ஸ்வராவைப் பாராட்டிக்கொண்டாள்.
“பிடிவாதம் இருந்தாலும் எடுத்துச் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டா… அதிக்கு ஏத்த பொண்ணுதான்… எப்பிடியோ அவங்க மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங் சரியாகி ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்கனா நல்லா இருக்கும்”
வேலை நேரம் முடிவடைந்து தனது குவார்ட்டர்சுக்குச் சென்ற பிற்பாடு வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது உதவியாளர்களில் இளம்பெண்ணொருத்தியும் அடக்கம்.
துறுதுறுவென சமையல் பகுதியில் தரங்கிணியோடு சேர்ந்து பணியாற்றுபவள் அவள். அவளோடு சேர்ந்து டவுண் பகுதிக்குச் சென்று வரலாமா என்று யோசித்தாள்.
உடனே அவளது எண்ணுக்கு அழைத்தாள்.
“சொல்லுங்க சீஃப்”
“ரொம்ப போரடிக்குது… லக்கர் பஜார் வரைக்கும் போயிட்டு வரலாமா? நீ பிசியா இருந்தா வேண்டாம் அனு”
“நான் ஃப்ரீ தான் சீஃப்… ஃபைவ் மினிட்ஸ்ல ரெடியாகிட்டு வர்றேன்”
அனு என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட அனுபமா வகேலாவிடம் பேசிவிட்டு வெண்ணிற காட்டன் குர்தி, ஸ்கின்னி ஜீன்ஸ், ஸ்வெட்டர் அணிந்து தயாரானாள் தரங்கிணி.
அவர்கள் சிம்லாவில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஞாயிறன்று லக்கர் பஜார் பகுதிக்கு வருவதுண்டு.
அங்கே கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். ஆங்காகே கிடக்கும் மர பெஞ்சுகளில் சூடான தேநீர் தம்ளரோடு அமர்ந்து உள்ளூர்வாசிகள் பரபரப்பாகக் கடைகளில் பொருட்கள் வாங்குவதைப் பார்த்தபடி அரட்டை அடிப்பார்கள் தரங்கிணியும் அவளது நண்பர் குழாமும்.
அந்த நாட்களை மீண்டும் திரும்பிப் பார்க்க விரும்பியவளாக அனுபமாவுடன் கிளம்பினாள்.
ப்ளூ பேர்ல் ஹோட்டல் அமைந்திருக்கும் தாராப்பூர் பகுதியிலிருந்து மசோப்ரா டவுன் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடப் பயணம் தான்.
அன்று மாலையில் பனிமூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் டாக்சி ஓட்டுனர் மெதுவாக அழைத்து வந்து சேர்த்தார்.
வழக்கம் போல லக்கர் பஜார் பகுதியில் ஜனத்திரள் அதிகம் தான்.
கடை கண்ணிகளில் வியாபாரிகளிடம் பேரம் பேசும் பெண்மணிகள், சிற்றுண்டி கடைகளைக் காட்டி வாங்கித் தருமாறு அடம் பிடிக்கும் குழந்தைகள், உல்லனில் செய்யப்பட்ட ஆடைகளை வாங்கி கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகள் என்று அங்கே பரபரப்புக்குக் கிஞ்சித்தும் குறைவில்லை.
அனுபமாவும் தரங்கிணியும் அவர்களைப் பார்த்தபடியே ஜனத்திரளுக்கிடையே நடந்தார்கள்.
“நான் ஆர்.எம்.எஸ்ல படிச்சப்ப வீக்கெண்ட்ல ஃப்ரெண்ட்ஸ் கூட இங்க வருவேன்… ஜாலியா டைம் பாஸ் பண்ணிட்டுப் போவோம்… அவ்ளோ அழகான நினைவுகள் இந்த லக்கர் பஜார்ல ஒளிஞ்சிருக்கு… அதோ அந்த பெஞ்ச்ல தான் நானும் என் ஃப்ரெண்ட்ஸ் சுஜாதா, நசீமா, பிஜூ எல்லாம் உக்காந்து போற வர்றவங்களைக் கலாய்ப்போம்… இங்க ‘கரம் கரம் சாய்’னு ஒரு டீக்கடை உண்டு… அங்க டீ, சமோசா சூப்பரா இருக்கும்… அதோ அங்க இருக்கு பாரு”
தரங்கிணி ஆர்வமாக ஒவ்வொரு இடமாகக் காட்டிப் பேச அனுபமா அதைக் கேட்டபடி அவளுடன் நடந்து வந்தாள்.
தரங்கிணி பேச்சு சுவாரசியத்தில் ஒரு கடை முன்னே போடப்பட்டிருந்த சிறிய நடைமேடை தட்டி சரியப் போக அவளைக் கைப்பற்றித் தடுத்து நிறுத்தினாள் அனுபமா.
“பி கேர்ஃபுல் தாரா தி (கவனம், தாரா அக்கா)”
படபடவென இமைகளைக் கொட்டிச் சொன்ன பிற்பாடு நாக்கைக் கடித்துக்கொண்டவள் “சாரி சீஃப்” என்கவும்
“முஜே தி புலா… ஐ டோண்ட் கெட் இட் ராங் (நீ என்னை அக்கானு கூப்பிடலாம்… நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்|)” என்றாள் தரங்கிணி.
அனுபமா அழைத்த விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. தரு தான் அவள் எல்லாருக்கும். முதல் முறையாக ‘தாரா’ என்ற அழைப்பு. அதனுடன் சேர்ந்து ஒலித்த அக்கா அதை இன்னும் அழகாக்கியதாகத் தோன்றியது தரங்கிணிக்கு.
அனுபமாவுக்கு அவளே அனுமதி கொடுத்ததும் சந்தோசம் தாங்கவில்லை.
“உங்களுக்கு முன்னாடி இருந்த செஃப் ரொம்ப ஆட்டிட்டியூட் காட்டுவாங்க… நாங்க அவர் கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டுத் தான் பழகுவோம்… பட் எங்களுக்குச் சமையல் நுணுக்கங்களைக் கத்துத் தர்றது எல்லாம் பெர்ஃபெக்டா செய்வார்… சுப்பீரியர் – சப் ஆர்டினேட் உறவைத் தாண்டி எங்க கூட பழக அவரோட இத்தனை வருச எக்ஸ்பீரியன்ஸ் இடம் குடுக்காம போயிருக்கலாம்… ஆனா நீங்க அப்பிடி இல்ல தாரா தி… யூ ஆர் சோ ஹம்பிள்… ஐ லைக் யூ வெரி மச்”
குழந்தைத்தனமாகப் பேசியவளின் செயல்பாடுகள் தரங்கிணிக்குச் சித்தார்த்தை நினைவுறுத்தின.
இருவரும் பேசியபடி பஜார் சாலையின் ஓரமாகப் பேருந்து ஏறுபவர்களுக்காகப் போடப்பட்டிருந்த காலி மர பெஞ்சுகளில் அமர்ந்தார்கள்.
“டீ குடிக்குறியா? ஃபர்ஸ்ட் டைம் என் கூட வந்திருக்க… என் ட்ரீட்” தரங்கிணி கேட்கவும் உற்சாகமாகத் தலையாட்டினாள் அனுபமா.
தோழமைகளுடன் படிக்கும் காலத்தில் வந்து செல்லும் தேநீர் கடைக்கு வந்த தரங்கிணி வியாபாரிக்கு வயதாகியிருப்பதையும் அவரது மகன் உதவியாக இருப்பதையும் பார்த்தபடி தேநீரை ஆர்டர் செய்தாள். கூடவே சூடான சமோசாக்களும்.
அதை வாங்கிக்கொண்டு மரபெஞ்சை நோக்கி விரைந்தவள் அனுபமாவிடம் ஒரு தம்ளரை நீட்டிவிட்டுத் தானும் அமரப்போகையில் புகைமூட்டத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த மனிதர்களிடையே நெடுநெடுவென்ற உயரத்தோடு வந்த அதிரதனைப் பார்த்துவிட்டாள்.
“அதி…” வாய்விட்டுச் சொன்னவள் இவன் ஏன் இங்கே வருகிறான் என்று யோசிக்கும்போதே அதிரதனும் அவனது உதவியாளன் விவேக்கும் அங்கே வந்துவிட்டார்கள்.
தேநீரை ஒரு மிடறு அருந்திவிட்டுச் சமோசாவைக் கடிக்கப்போன அனுபமா மேலாண்மை இயக்குனர் தங்கள் எதிரில் நிற்பதைப் பார்த்ததும் இமைக்க மறந்தாள்.
தேநீர் தம்ளரை பெஞ்சில் வைத்துவிட்டுப் பதற்றத்தோடு எழுந்தவள் “குட் ஈவ்னிங் சார்” என்று பணிவோடு சொல்லி புன்னகைக்க அவளது வணக்கத்தை ஏற்றுக்கொண்டான் அதிரதன்.
தரங்கிணி எதுவும் பேசாமல் நிற்கவும் “டீ பார்ட்டி நடக்குது போல? நாங்களும் ஜாயின் பண்ணிக்கலாமா?” என சாவகாசமாகக் கேட்டு அவளது கையிலிருந்து தேநீர் கோப்பையை வாங்கிக்கொண்டு மரபெஞ்சில் அமர்ந்தான்.
“அதி…” புரியாமல் ஒலித்த அவளது குரலைக் கேட்டவன் “வாட் சீனியர்? உன் டீயை நான் குடிக்கக்கூடாதா?” என்று இலகுவாகக் கேட்டதும் அனுபமாவுக்கு மயக்கம் வராத குறை.
“தி! ஆப் உசே பெஹலே சே பத்தா ஹே க்யா? (இவரை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அக்கா?)” என்று தரங்கிணியின் காதைக் கடித்தாள் அவள்.
அவள் அதிரதனைக் கண்டிக்கும் பார்வை பார்த்தவளாக “ஹீ இஸ் மை ஃப்ரெண்ட்… ஆர்.எம்.எஸ்ல நான் ஃபைனல் இயர் பண்ணுனப்ப சார் அங்க ஜாயின் பண்ணுனார்” என்றதும் அதிரதன் அவசரமாகச் சமோசாவை விழுங்கினான்.
“ஷீ இஸ் லையிங்… ஷீ வாஸ் மை க்ரஷ்… எனக்கு மட்டுமில்ல, மொத்த ஆர்.எம்.எஸ்கும் மேடம் தான் க்ரஷ்” என்று சொல்லி கண் சிமிட்ட தரங்கிணி அவன் தலையில் நறுக்கெனக் குட்டப் போனாள்.
“உன் கூட பேசலாம்னு இவ்ளோ தூரம் ஓடிவந்த என்னைக் கொட்டி கொட்டி விரட்டிடாத தரங்கிணி” என்று அவன் நாடக பாணியில் வசனம் பேசவும் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
இருவரும் சத்தமாக நகைப்பதை அங்கே இரண்டு ஜீவன்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தால் தானே?
அதிரதன் சிரித்து முடித்துவிட்டு “ஹேய் கய்ஸ்! என்னாச்சு? உக்காருங்க… நானும் தருவும் உங்களுக்கு ‘கரம் கரம் சாய்வாலா’ கிட்ட சூடா டீ வாங்கிட்டு வர்றோம்” என்று சொல்ல விவேக் மறுபேச்சின்றி அமர்ந்தான்.
அனுபமாவும்தான். அவளிடம் அங்கே இருக்குமாறு சைகை செய்துவிட்டு அதிரதனோடு நடக்க ஆரம்பித்தாள் தரங்கிணி.
“நீ இங்கல்லாம் டீ குடிப்பியா அதி?” என்றவளிடம்
“உன்னை ஃபாலோ பண்ணிட்டு இங்க வர்றப்ப குடிச்சிருக்கேன் தரு” என இலகுவாகப் பதிலளித்தான் அவன்.
“யூ ஸ்டாக்கர்” அவனது புஜத்தில் குத்தினாள் அவள்.
“ஸ்டாக்கரா? அந்த நேரத்துல ஒட்டுமொத்த ஆர்.எம்.எஸ்கும் நீ ட்ரீம் கேர்ள்… உன் க்ளாஸ் பசங்க தவிர வேற யார் கூடவும் நீ பேச மாட்ட… என் கிட்ட நீ பேசுனப்ப எல்லாரும் என்னை எவ்ளோ பொறாமையா பாத்தாங்க தெரியுமா? அதுக்காகவே நீ எங்க போற? என்ன பண்ணுறனு தெரிஞ்சிக்க உன்னை ஃபாலோ பண்ணுவேன்.. அப்ப கண்டுபிடிச்சது தான் இந்த ‘கரம் கரம் சாய்’ ஷாப்… அப்ப இருந்து நானும் இந்த கடைக்கு ரெகுலர் கஷ்டமர்”
பேசியபடியே இருவரும் இன்னும் இரண்டு கோப்பைகளில் தேநீரும் சமோசாக்களும் வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினார்கள்.
“என்ன விசயம் அதி? நீயே என்னைத் தேடி வந்திருக்க? எதுவும் பிரச்சனையா?” என அக்கறையாக விசாரித்தவளிடம் தனியாகப் பேச வேண்டுமென அதிரதன் சொல்ல தரங்கிணியோ அனுபமாவை அழைத்து வந்திருப்பதைக் காட்டினாள்.
“சும்மா இருந்தவளை ஊர் சுத்த கூட்டிட்டு வந்துட்டு இப்ப பாதில அனுப்பி வச்சா நல்லா இருக்காது அதி”
“நான் ரொம்ப நாளா ஒரு விசயத்தை நினைச்சுக் குழப்பத்துல இருக்கேன் தரு… உன்னால என் குழப்பத்தைப் போக்க முடியும்னு நம்பி வந்திருக்கேன்… ப்ளீஸ், இந்த ஒரு தடவை எனக்காக அந்தப் பொண்ணை அனுப்பி வைச்சிட்டு என் குழப்பத்துக்கு ஒரு தீர்வு சொல்லு”
“டாக்சில அவளை எப்பிடி தனியா அனுப்பி வைக்குறது அதி? அவளோட சேஃப்டி எனக்கு முக்கியம்”
“டாக்சில ஏன் அனுப்பி வைக்கணும்? என் கார் இருக்கு… விவேக் கூட அனுப்பி வைக்கலாம்”
நடப்பதை நிறுத்திவிட்டு அவனை நம்பாத பார்வை பார்த்தாள் தரங்கிணி. அதை அதிரதன் வேறுவிதமாகப் புரிந்துகொண்டான்.
“என்ன பாக்குற? விவேக் ரொம்ப ஜென்யூனான பையன்… என்னை விட ஒழுக்கமானவனும் கூட… நானாச்சும் உன்னை சைட் அடிச்சிருக்கேன்… அவன் இதுவரை ஒரு பொண்ணையும் ரசிச்சுக் கூட பாக்காத வினோத ஜந்து”
இவ்வாறு சொல்லி அவளிடம் இன்னும் நான்கு குத்துகளை புஜத்தில் வாங்கிக்கொண்டான் அவன்.
“அவனை நம்பலாம் தரு” என்று அதிரதன் வாக்கு கொடுத்த பிற்பாடு தரங்கிணி விவேக்கோடு அனுபமாவை அனுப்பி வைக்கும் ஏற்பாட்டுக்குச் சம்மதித்தாள்.
“அப்பிடி என்ன குழப்பம் உனக்கு? விரும்புன தொழில், அள்ள அள்ள குறையாத பணம், நினைச்சதை நடத்தி முடிக்குற செல்வாக்கு, நீ கேட்டதைச் செஞ்சு குடுக்குற பேரண்ட்ஸ், இது எல்லாத்துக்கும் மேல அழகான காதலி... இவ்ளோவும் கிடைச்ச ஒருத்தனுக்கு எந்த விசயத்துல குழப்பம்?”
அதிரதன் எதுவும் பேசாமல் கசப்பாக முறுவலித்தான்.
தரங்கிணிக்கு எதுவோ புரிந்த உணர்வு. தேநீர் கோப்பையோடு மரபெஞ்சிற்கு சென்றதும் அனுபமாவிடம் மன்னிப்பு கேட்டவள் விவேக்கோடு அனுப்பி வைக்கும் ஏற்பாட்டைத் தயங்கியபடியே கூற இளையவளோ தவறாக எடுத்துக்கொள்ளாமல் அவனோடு கிளம்பினாள்.
“சாரி அனு”
“டோண்ட் சே சாரி தி… நைட் குவார்ட்டர்சுக்கு வந்ததும் சார் உங்க கிட்ட என்ன சீக்ரேட் சொன்னாங்கனு சொல்லிடுங்க… உங்களை மன்னிச்சிடுவேன்”
கள்ளங்கபடமின்றி உரைத்தவள் விவேக்கோடு நகர அவளைக் கனிவோடு பார்த்த தரங்கிணி “என் சித்துவும் இப்பிடி தான் படபடனு பேசுவான்” என்றாள் ஏக்கத்தோடு.
அதிரதனுக்குள் சங்கடம் பரவியது. ஏற்கெனவே இழக்கக்கூடாத அனைத்தையும் இழந்து இடமாற்றம் இளைப்பாறுதல் தருமென இங்கே வந்தவளிடம் தனது பிரச்சனையைச் சொல்லி கவலைப்பட செய்வது உச்சக்கட்ட சுயநலமென அவனது மனசாட்சி அவனைக் குற்றம் சாட்டியது.
ஆனால் தரங்கிணியோ நொடிக்குள் தனது ஏக்கத்தை மறைத்துக்கொண்டு மரபெஞ்சில் அமர்ந்து தேநீரைச் சுவைத்தபடி “சொல்லு அதி? வாட் இஸ் ஈட்டிங் யூ?” என சாதாரணமாக வினவ அதிரதனின் தயக்கம் அகன்றது.
அவளருகே அமர்ந்தவன் தேநீரைச் சுவைத்துவிட்டு “நான் உன்னை என் மென்ட்டரா (mentor) நினைக்குறேன் தரு… இப்ப எனக்கு இருக்குற குழப்பத்தை நீ போக்குவனு நம்புறேன்… நான் ஒரு முக்கியமான முடிவு எடுத்திருக்கேன்… அது சரியானு நீ தான் சொல்லணும் தரு” என்று பெரிய முஸ்தீபுடன் பேச்சை ஆரம்பித்தான்.
இந்த ராஜா வீட்டுக் கன்றுக்குட்டிக்கு என்ன பிரச்சனை இருக்கப்போகிறதென சிறிதளவு அலட்சியத்தோடு அவனது பேச்சில் செவியைப் பதித்த தரங்கிணி, அதிரதன் பேச பேச திகைப்பில் ஆழ்ந்து போனாள்.
- Get link
- X
- Other Apps
Comments
Anu super character pada pattasu pola pesuraga ah aanalum indha adi ku lollu athigam than sight adika la na ra ore karanathuku vivek ah jandhu nu sollitan
ReplyDeleteRaja veetu kannukutty yezhai veedu pasumadu ellathukum problem nu onnu definite ah irukum athae pola ellamae iruku nu nenaikira indha adi ku problem um perusaa iruku pola
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)
ஸ்வரா பண்ண கூத்தை சொல்லத்தான் அதி இப்பவும் தருவை ஃபாலோ பண்ணி வந்திருக்கானோ...? ஆனா, ஸ்வரா அஜயோட ரிலேஷன்ஷிப் கதிர் ஆனதோட நிக்கலைன்னு தோணுது.
வேறெதோ ஒண்ணும் பண்ணியிருக்கா. அது அதிக்கு தெரிய வந்திருக்கு, அதனாலத்தான் அவனை அந்த விஷயம் இப்படி டிஸ்டர்ப் பண்ணுதுன்னு நினைக்கிறேன் அதனாலத்தான் அவன் இத்தனை குழப்பத்துல இருக்கான்னு தோணுது.
ஒருவேளை, ஸ்வரா அபார்ஷன் வரைக்கும் போயிருப்பாளோ..?
😯😯😯
CRVS (or) CRVS 2797
Interesting 👌
ReplyDeleteApdi yenna aachu
ReplyDelete