அத்தியாயம் 11

Image
மனம் வெடிக்க அழுது கொண்டிருந்த தரங்கிணியை எப்படி தேற்றுவதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தான் அதிரதன். அவளருகே அமர்ந்திருந்த தமயந்தியின் ஆறுதல்களைக் கேட்கும் திடம் கூட இல்லாமல் கதறிக்கொண்டிருந்தாள் அவள். “எப்பிடி என் மகனைக் கஷ்டப்படுத்த மனசு வந்துச்சு? அவன் அவங்களுக்கு என்ன பாவம் பண்ணுனான்?” “அழாதிங்க மேடம்… கடவுள் இருக்காரு… தப்பு செஞ்சவங்களுக்கு அதுக்கான கூலிய குடுப்பாரு” “என்ன கூலி குடுத்து என்ன பிரயோஜனம்? இன்னைக்கு என் பிள்ளை சுயநினைவு இல்லாம படுத்துக் கிடக்கான்… அவன் எனக்குப் பழைய சித்துவா திரும்பிக் கிடைப்பானா? பெத்த வயிறு காந்துது தமயந்தி” அதிரதன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விவேக்கை அழைத்துக்கொண்டு சற்று தூரத்தில் சென்று நின்றான். தரங்கிணியின் கண்ணீர் அவனை ஏதோ செய்தது. வார்த்தையால் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு. “சொல்லுங்க சார்” பார்வையைத் தரங்கிணியிடமிருந்து விலக்கி விவேக்கிடம் கொண்டு வந்தான் அதிரதன். “மிஸ்டர் ஹேமசந்திரன் கிட்ட நான் பேசணும் விவேக்… தமயந்தி சொல்லுறதை பாத்தா சித்தார்த்தை யாரோ மாடில இருந்து தள்ளி விட்டிருக்காங்க… அந்தப் பையனுக்குப் பாதுகாப்பு இல்லாத ...

அத்தியாயம் 7

 



“நான் ஸ்வராவைப் பைத்தியம் மாதிரி காதலிச்சேன் தரு… அவ கூட எப்பிடிலாம் வாழணும்னு பெரிய லிஸ்டே போட்டு வச்சிருந்தேன்… உனக்கே தெரியும்ல, நான் ஹோட்டல் இண்டஸ்ட்ரிய எந்தளவுக்கு லவ் பண்ணுனேன்னு… அதுல கவனத்தைக் குவிச்சதால காதல்ல தடுமாறிட்டேன்… தப்பு தான் தரு… பிசினஸ் பிசினஸ்னு சுத்தி என் காதலியோட எமோசன்சைப் புரிஞ்சிக்காம இருந்தது பெரிய தப்பு தான்… ஆனா அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாமே? வலிக்குது தரு”

இலக்கின்றி எங்கோ வெறித்தபடி சொன்னவனின் சுருங்கிய விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளி!

ஆண்கள் அத்துணை எளிதில் அழுவதில்லை. ஒரு ஆண்மகனின் கண்ணீர் சுரப்பிகள் அவ்வளவு பலகீனமானவை அல்ல. அவற்றுக்கும் ஆண்மகனின் மனதுக்கும் ஒரு இணைப்பு இருக்கும். எப்போது ஆணின் மனம் சொல்லவொண்ணா வேதனையை அனுபவிக்கிறதோ அப்போது மட்டுமே அவை கண்ணீரைச் சுரக்கும்.

இப்போது அதிரதனின் மனமும் மரண வேதனையில் உழலுகிறது என்பதைப் புரிந்துகொண்ட தரங்கிணி ஆறுதலாக அவனது கரத்தை அழுத்தினாள்.

“என்னால உன்னைப் புரிஞ்சிக்க முடியுது அதி… பார்ட்னர் நமக்குப் பண்ணுற துரோகத்தை அவ்ளோ இலேசா அலட்சியப்படுத்திட்டுப் போயிட முடியாது… கொடுமையான வலி அது… நானும் அதை அனுபவிச்சிருக்கேன் அதி”

அதிரதனின் பார்வை சட்டெனத் தரங்கிணியின் பக்கம் திரும்பியது. அவனது விழிகளில் புரியாத பாவனை!

“வாட்? நீயும்னா என்ன அர்த்தம்?”

தரங்கிணி கசந்த புன்னகையோடு தேநீரை விழுங்கினாள்.

“இன்னுமா புரியல?” தலைசாய்த்துக் கேட்டாள் அவனிடம்.

அதிரதன் கரங்களை இறுக மூடி ‘உஃப்’ என்று பெருமூச்சு விட்டான்.

பின்னர் தரங்கிணியைத் தீர்க்கமாக நோக்கி “எப்பிடி இந்த மாதிரி ஒரு குப்பைய கல்யாணம் பண்ணுன தரு?” என ஆற்றாமையோடு வினவினான்.

தரங்கிணி பெருவிரலால் நெற்றியில் கோடிழுத்துக் காட்டினாள்.

“தலைவிதி மேல பழி போடாத… தப்பான ஆளுங்களை வாழ்க்கைத்துணையா தேர்வு செஞ்சது நம்மளோட முட்டாள்தனம்… விதிக்குத் தேவையில்லாம க்ரெடிட் குடுக்காத”

தரங்கிணி தேநீர் கோப்பையின் விளிம்பை ஆட்காட்டி விரலால் வருடியவள் “அதுவும் சரிதான்… பட் முட்டாள்களுக்கு அடுத்தவங்களை கண்மூடித்தனமா நம்புற வியாதி தீவிரமா வரும்… அதனால தான் நம்ம அதுல மாட்டிக்கிட்டோம் பங்கு” என்று சொல்லிச் சிரிக்க அதிரதன் அவளை அதிருப்தியாகப் பார்த்தான்.

“உன் லைஃபே போன அப்புறமும் எப்பிடி உன்னால சிரிக்க முடியுது? எனக்குலாம் மண்டை வெடிக்குற அளவுக்கு மன அழுத்தம்”

“எந்த ஒரு தனிநபரும் என் வாழ்க்கையோட போக்கைத் தீர்மானிக்க முடியாதுனு நான் நம்புறேன் அதி… கமலேஷை கல்யாணம் பண்ணிருக்கலாம், அவரோட வாழ்ந்திருக்கலாம், அவரை நம்பிருக்கலாம்… அந்த நம்பிக்கைக்கு அவர் உண்மையா இல்லாத பட்சத்துல நாங்க பிரிஞ்சோம்… அந்த இடத்துலயே கமலேஷ்ங்கிற மனுசனோட பிரசன்னம் என் வாழ்க்கைய விட்டு போயாச்சு… அந்தாளோட செயல் என்னை வாழ்க்கை முழுக்க ஹாண்ட் (haunt) பண்ண விடுறளவுக்கு நான் பலகீனமானவ இல்ல… இன்னைக்கும் என்னை வீக் ஆக்குற ஒரே விசயம் சித்து… அவனைத் தவிர வேற யாருக்காகவும் இனி நான் யோசிக்கப்போறதில்ல… நமக்குத் துரோகம் பண்ணுன வாழ்க்கைத்துணைக்கு நம்மளோட சிந்தனைல கூட இடம் தராம இருக்குறதுதான் மனோதிடம் அதி… ஒன்னு நீ அதை வளத்துக்கணும்… இல்லனா ஸ்வராவ மன்னிச்சு உங்க உறவைத் தொடரணும்”

அதிரதனின் முகத்தில் அருவருப்பு பரவியது. முடியவே முடியாது என்பது போல மறுத்தான் அவன்.

“உன்னை விட்டுட்டு இன்னொருத்தனோட உறவு வச்சுக்கிட்டதால அவளை வெறுக்கிறியா ஜூனியர்? உன் மனசுல இருந்த காதலை அந்த ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ உறவு முடிவுக்குக் கொண்டு வந்துடுச்சுனு நினைக்குறியா?”

தயக்கமின்றி நேரடியாகக் கேட்டே விட்டாள் தரங்கிணி. அவனுக்கு வலிக்கும் தான். ஆனால் முழுதாக அவனுக்குள் இருக்கும் காயம் சீழ் பிடித்துவிடாமல் இருக்க இந்த வார்த்தை அறுவைச்சிகிச்சை அவசியமே! அவன் மனதிலிருப்பதைச் சொல்லட்டுமெனக் காத்திருந்தாள்.

“காதல்னு வந்ததுக்கு அப்புறம் என் மனசுல இந்த மாதிரி சின்னத்தனமான எண்ணங்களுக்கு இடமில்ல தரு” பெருமூச்சுடன் சொன்னான் அதிரதன்.

“அப்புறம் ஏன் இந்த விலகல்? எனக்குப் புரியல… உன்னால அவளை மன்னிக்க முடியாதா?”

“முடியாதுனு தோணுது… அவ என்னை ஏமாத்துனதை விட முட்டாள் ஆக்குன விதத்துல ரொம்ப காயப்பட்டுட்டேன் தரு… என்னை விட்டுட்டு இன்னொருத்தன் கூட அவ உறவு வச்சுக்கிட்டதை என்னால இக்னோர் பண்ண முடிஞ்சுது… ஆனா…” 

பாதியில் நிறுத்தியவனின் கரம் கண்ணாடி கோப்பையை இறுக்கியது. எங்கே கோபத்தால் அதை உடைத்துவிடுவானோ என்று பயந்த தரங்கிணி அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள்.

“ரிலாக்ஸ் அதி”

சிகையைக் கோதிவிட்டாள் அவள். அதிரதனின் உடல் ஆசுவாசத்தை உணர்ந்தாலும் மனம் ஸ்வரா செய்த துரோகத்தை எண்ணி கொதித்தது.

கண்களில் கண்ணீருடன் தரங்கிணியைப் பார்த்தான் அவன். விளையாடும் போது அடிபட்ட பிள்ளை அன்னையிடம் அழும் பாவனை அவனது வதனத்தில்!

“அந்த உறவுல வந்த பேபிய என் குழந்தைனு சொல்லி தலையில கட்டப் பாத்தா தரு… என் கிட்ட அவ உண்மைய சொல்லிருக்கலாம்… ஒரு நிமிச சலனத்துல தவறிட்டேன் அதினு அவ சொல்லிருந்தா அப்பிடியே அள்ளியணைச்சு அவளோட சேர்த்து அந்தக் குழந்தையையும் சந்தோசமா என் வாழ்க்கைக்குள்ள இணைச்சிருப்பேன்… என் குழந்தைனு பொய் சொல்லி, அதை மீடியா வரைக்கும் கொண்டு போய் என்னை முட்டாள் ஆக்க பாத்ததை என்னால ஏத்துக்க முடியல… இப்ப அவளை விட்டு விலகியிருக்கேன்… பட் மூவ் ஆன் ஆகுறது நரகவேதனையா இருக்கு… இந்தக் காதல் ஏன் இப்பிடி வேதனைய குடுக்குது தரு?”

ஸ்வரா அதிரதனைப் படுத்திய பாடு அறிந்ததும் அதிர்ந்த தரங்கிணி அதிர்ச்சியை மறைத்து முறுவலித்தாள். பின்னர் அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள்.

“காதலைப் பத்தி எதுவுமே தெரியாத ஆள் கிட்ட இந்தக் கேள்விய கேக்குறியே ஜூனியர்”

அதிரதன் புரியாத பாவனையோடு அவளைக் கண்களைச் சுருக்கி நோட்டமிட்டான்.

“ஏன் இந்த ஆராய்ச்சி பார்வை?”

சிரித்தபடியே வினவியவளிடம் “கல்யாணம் ஆகி ஒரு பையனுக்கு அம்மாவா இருக்குறவ காதலைப் பத்தி தெரியாதுனு சொல்லுறியே… அதான் ஆச்சரியமா இருக்கு” என்றான் அவன்.

இப்போது தரங்கிணியின் சிரிப்பு சத்தம் இமாலய சிகரங்களில் பட்டு எதிரொலிக்காத குறை! அத்துணை சத்தமாக நகைத்தாள் அவள்.

பரபரப்பான லக்கர் பஜாரின் சாலைகளில் சென்ற சில நபர்கள் அவளை வினோதமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தார்கள்.

இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்பது போல பார்த்தான் அதிரதன்.

தரங்கிணி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்து முடித்தாள். இன்னும் ஆராய்ச்சிப்பார்வை மாறாமல் அமர்ந்திருந்த அதிரதனைக் கண்கள் கனிய நோக்கினாள் அவள்.

“கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு அம்மா ஆக காதலிக்கத் தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்ல ஜூனியர்… எல்லா திருமண உறவுகளும் காதலால அடுத்தக் கட்டத்துக்குப் போறதில்ல… என்னோட திருமண வாழ்க்கையும் அப்பிடிப்பட்டதா அமைஞ்சது என் துரதிர்ஷ்டமா இல்ல தலைவிதியானு தெரியல… இப்ப வரைக்கும் ஒரு ஆணோட காதல் எப்பிடி இருக்கும்னு எனக்குத் தெரியாது… யூ நோ ஒன்திங்? செக்சுக்கு ‘லவ் மேக்கிங்’னு புனைப்பெயர் வச்சவன் மட்டும் என் கையில கிடைச்சான்னா அவன் செத்தான்”

தனது வேதனையை மறைத்து விளையாட்டு போல கூறினாள் தரங்கிணி.

யாரும் தன் மேல் பரிதாபம் கொள்வது தரங்கிணிக்குப் பிடிக்காது. எனவே பரிதாப்பார்வையை மாற்றிக்கொண்டான் அதிரதன்.

காதலே இல்லாத திருமணவுறவு எந்திரத்தனமானது; அங்கே தாம்பத்தியம் சத்தமில்லாமல் கேலிக்கூத்தாகிறது. உலகத்தார் பார்வை படாத இடங்களில் எல்லாம் அன்பும் நேசமும் அற்ற காமம் மட்டுமே கோலோச்சும் அத்தகைய வாழ்க்கை எந்தப் பெண்ணுக்கும் அமைந்துவிடக்கூடாதென அப்போதும் எண்ணினாள் தரங்கிணி. 

காமமா? உன் விஷயத்தில் அது கூட கலப்படமானது தானே பெண்ணே என்றது மனசாட்சி. சுளீர் வலி தரங்கிணியின் இதயத்தில்.

அதை மறைக்க கண்களைத் தூரத்தில் தெரிந்த இமயலமலை சிகரங்களின் மீது பதித்துக்கொண்டாள்.

தனது குழப்பத்துக்குத் தரங்கிணியிடம் தீர்வு கேட்டு வந்தவன் இப்போது அவளுக்கு நேர்ந்த துன்பங்களைக் கேட்டறிந்ததும் தன் வேதனை மறந்து அவளை எண்ணி வருந்த ஆரம்பித்தான்.

வெகு சிலரால் மட்டுமே தன்னுடைய வேதனையின் போது கூட அடுத்தவரின் துன்பத்தை எண்ணி வருந்த முடியும். அதிரதனைப் போல!

தரங்கிணி தன்னைச் சமாளித்துக்கொண்டு “சின்ன தப்புக்காக ஒருத்தரை வெறுத்து ஒதுக்குறது சரியில்ல அதி… ஆனா அந்த ஒருத்தர் செஞ்ச தப்புக்காக வருத்தப்படாம, அதோட விளைவுகளை நம்ம கணக்குல எழுத நினைச்சா, யோசிக்காம அவங்களை விட்டு விலகிடலாம்… உன்னை விட பெரியவளா இப்பிடி ஒரு அட்வைஸை நான் உனக்குக் குடுக்கக் கூடாது… ஆனா மேற்கொண்டு உன்னோட பிசிக்கல் அண்ட் மெண்டல் ஹெல்த் பாதிக்கப்படக்கூடாதுனு நினைச்சனா, யூ ஷூட் ஹேவ் டூ எண்ட் யுவர் ரிலேசன்ஷிப் வித் ஸ்வரா” என்று சொல்லிவிட்டாள்.

அதிரதனின் கண்கள் இறுக மூடித் திறந்தன.

சிவந்த அந்த விழிகள் அவனுடைய மனம் கொண்ட வேதனையின் அடையாளம்! இருப்பினும் இதழில் மெல்லிய முறுவல்!

“நீயாச்சும் என்னைப் புரிஞ்சிக்கிட்டியே தரு” என்றான் அவன்.

“வாட் யூ மீன்?”

“என் பேரண்ட்ஸ் ஸ்வரா செஞ்சதை மறந்துட்டு அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுறாங்க சீனியர்… அவ அந்த பேபிய அபார்ட் பண்ணிட்டானு சொல்லி என்னைச் சமாதானம் பண்ண முயற்சி பண்ணுறாங்க… அந்தக் கோவத்துல தான் நான் இங்க வந்தேன்”

தரங்கிணியின் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி! 

“மில்லியனர் ஃபேமிலிஸ்ல எல்லாமே கால்குலேசனோட தான் நடக்கும்… காதல், கல்யாணம், குழந்தை இவ்ளோ ஏன் இங்க நட்பா பழகணும்னா கூட அதுக்கு ஆயிரம் கணக்கு உண்டு… எனக்கும் ஸ்வராக்கும் நடக்கப்போற கல்யாணத்தை அவங்க ரெண்டு பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தோட சங்கமமா பாக்குறாங்க… ஸ்வரா செஞ்சது தப்பாவே இருந்தாலும் அதனால அவங்க பேசி வச்ச அலையன்ஸ் முறிய வேண்டாம்னு என்னைச் சமாதானப்படுத்தப் பாக்குறாங்க… இப்பவும் சொல்லுறேன், ஸ்வரா என்னை மேனிபுலேட் பண்ண நினைச்சதை, என் கௌரவத்தோட விளையாட நினைச்சதை என்னால சாகுற வரைக்கும் மறக்க முடியாது… அப்ப எப்பிடி என்னால அவ கூட வாழ முடியும் தரு? சொன்னா அவங்க புரிஞ்சிக்க மாட்றாங்க”

தரங்கிணி அவனை இரக்கத்தோடு பார்த்தாள். செல்வந்தக் குடும்பத்தில் மருமகளாக இருந்தவள் தானே அவளும்! கௌரவத்தைக் காக்கவென கமலேஷின் குடும்பத்தார் அவளுக்குச் செய்த அநீதியை மறக்க முடியுமா?

அதற்கு சற்றும் குறையாத அநீதியை அதிரதனின் பெற்றோரும் அவனுக்குச் செய்ய நினைப்பதை அவளால் நம்ப முடியவில்லை.

தன் இரத்தமென்ற உணர்வைக் கூடவா அவர்களின் அந்தஸ்து மோகம் மறைத்துவிடும்?

ஆம் என்றான் அதிரதன். 

“அம்மா கிட்ட நான் பேசி எத்தனை நாளாகுது தெரியுமா? ஐ மிஸ் ஹெர்… பட் பேசுனா மறுபடி ஸ்வராவ என் தலைல கட்டப் பாப்பாங்களோனு பயமா இருக்கு தரு”

“ப்ச்! மில்லியனர் வீட்டு மருமகளா இருக்குறதுதான் கஷ்டம்னு நினைச்சேன்… மகனா இருக்குறது அதைவிட கஷ்டம் போல” என்றவளிடம் 

“இந்தப் பணம், பதவி, எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு ஒரு சிம்பிளான வாழ்க்கைய வாழ ஆசையா இருக்கு தரு… எனக்குப் பிடிச்ச மாதிரி வாழணும்… அம்மா சொல்லுறாங்க, அப்பா சொல்லுறார்னு பிடிக்காத விசயத்தைச் செய்யாம மறுக்குற சுதந்திரம் வேணும்… பட் இதெல்லாம் கனவுல கூட என்னை மாதிரி ஒருத்தனுக்கு நடக்காது” என்று ஏக்கத்தோடு சொன்னான் அதிரதன்.

தரங்கிணி அவனிடமிருந்து காலி கோப்பைகளை வாங்கிக்கொண்டாள்.

“மனமிருந்தால் மார்க்கமுண்டு அதி” என்று சொன்னவள் அவனை யோசிக்கச் சொல்லிவிட்டுத் தேநீர் கடையை நோக்கிச் சென்றாள்.

அவள் திரும்பி வந்த போது அதிரதனின் முகத்தில் தீவிர பாவனை.

“தேங்க்ஸ் தரு” என்றான் அவன்.

“இதுக்கு ஏன் தேங்க்ஸ்? என்னையும் ஒரு மனுசியா மதிச்சு அட்வைஸ் கேட்ட பாரு, என் மனசு நிறைஞ்சு போச்சு” 

அவள் விளையாட்டாகச் சொல்லவும் சிரித்தான்.

“என் கிட்ட ஓப்பனா சொன்ன மாதிரி உன் பேரண்ட்ஸ் கிட்டவும் உன்னோட மனசுல என்ன இருக்குனு சொல்லிடு அதி… அவங்க நீ சொல்லுறதை ஏத்துக்கலனாலும் பரவால்ல… அட்லீஸ்ட் உன்னால அவங்க சொல்லுற எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு தலையாட்ட முடியாதுங்கிற சின்ன புரிதலாச்சும் அவங்களுக்குக் கிடைக்கும்… நிறைய நேரங்கள்ல பேரண்ட்சுக்காகப் பிடிக்காத விசயத்தை வேற வழியில்லாம செய்யுற நம்ம தான் இன்னும் இன்னும் அவங்க இஷ்டத்துக்கு வளைக்குறதுக்கான சுதந்திரத்தை பேரண்ட்சுக்குக் குடுத்துடுறோம் அதி… நம்ம சரியா இருந்திருந்தா அவங்களும் நமக்குப் பிடிக்காததைச் செய்ய சொல்லி வற்புறுத்தாம விட்டிருப்பாங்களோ என்னவோ! முதல்ல, பிடிக்காத ஒரு விசயத்தை ‘பிடிக்கல’னு பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிப் பழகணும்… அதுக்கான சுதந்திரத்தை இந்தியக் குடும்பங்கள் குடுக்காதுதான்… ஆனா இந்த விதிமுறையும் மாறித் தானே ஆகணும்?”

அதிரதனுக்கு அவள் சொல்ல வருவது என்னவெனப் புரிந்தது. ஸ்வரா அவனது வாழ்க்கையில் இனி வரப்போவதில்லை என்பதை அவன் மட்டும் தீர்மானித்தால் போதாது, அவனது பெற்றோரிடமும் தெள்ளத்தெளிவாக உரைத்துவிடுவது சிறந்து என்பது தரங்கிணியின் கூற்று! 

அதை அன்றே செய்து முடிக்கவேண்டுமென்ற தீர்மானத்தோடு தரங்கிணியோடு லக்கர் பஜாரிலிருந்து கிளம்பினான் அதிரதன்.

இருவரும் கால் டாக்சியில் ஏறியபோது மீண்டும் தரங்கிணியிடம் நம்பாத பார்வை!

படித்த போது தனது காரை ஒரு மாணவன் தொட்டதற்கு அவனை அடித்துக் காயம் செய்த அதிரதன், இன்று கால் டாக்சியின் அவளுடன் ஏறுகிறான். காலம் தான் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறது! 

ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு அவனோடு டாக்சியில் ஏறிய தரங்கிணிக்கு, அதிரதனின் மாற்றம் இதோடு நிற்கப்போவதில்லை என்பது தெரியாது.

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2048157835942609

Comments

  1. Spr going interesting

    ReplyDelete
  2. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 7)

    சூப்பர்..! சூப்பர்..! சரியான நேரத்துல, சரியான வழி நடத்தல். உண்மையிலேயே தரங்கிணி அழகா வாழ்வியலை எடுத்து சொல்லியிருக்கா. நிச்சயம் இந்தவொரு விஷயமே அதிரதனை அழகா வழிநடத்தும்.

    ஆனாலும், ஸ்வரா இப்படி பண்ணியிருக்க வேணாம். அதி தான் அவ எப்படியிருந்தாலும்
    அப்படியே ஏத்துக்க தயார் தானே..? ஆனா, யாரோ ஒருத்தர் சுமையை இன்னொருத்தர் தலையில ஏத்த நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்...? அதுவும் சம்பந்தப்பட்டவருக்கு அது தெரியாம போகுமா என்ன..? இதைத்தான் பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்கிறாங்களோ..?

    அதி தெளிஞ்சிட்டான், இனி நல்ல முடிவுகளையே எடுப்பான். பட்.. ஸ்வரா அத்தனை சீக்கிரம் விட்டுக் கொடுத்துடுவாளா என்ன ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. Athi oda mudivu rombhavae seri than avan ozhukam.ah irukum pothu atha avan oda patner kita expect panrathu la enna thappu swara eppo innoruthar kooda relationship la irundha lo appovae athi oda love anga illama poiduthu athu ku appuram andha kuzhandhai ah athi oda thu frame pannathu uravu oda base ah na nambikai ah odaikirathuku samam ithu ellam panniru ippo vandhu nan thappu panniten enna accept panniko nu sollurathu ah illa ketka kooda avalukku epudi thonuthu athukku oru karanam athi oda parents avanga paiyan oda unarvu ah purinchikama business deal mathiri marriage deal pesina ipadi than irukum.

    ReplyDelete
  4. துரோகம்செய்தவர்களை சிந்தனையில் கூட வரவிடக்கூடாது.
    அருமையான வரிகள்.

    ReplyDelete
  5. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 1

அத்தியாயம் 1