அத்தியாயம் 11

Image
மனம் வெடிக்க அழுது கொண்டிருந்த தரங்கிணியை எப்படி தேற்றுவதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தான் அதிரதன். அவளருகே அமர்ந்திருந்த தமயந்தியின் ஆறுதல்களைக் கேட்கும் திடம் கூட இல்லாமல் கதறிக்கொண்டிருந்தாள் அவள். “எப்பிடி என் மகனைக் கஷ்டப்படுத்த மனசு வந்துச்சு? அவன் அவங்களுக்கு என்ன பாவம் பண்ணுனான்?” “அழாதிங்க மேடம்… கடவுள் இருக்காரு… தப்பு செஞ்சவங்களுக்கு அதுக்கான கூலிய குடுப்பாரு” “என்ன கூலி குடுத்து என்ன பிரயோஜனம்? இன்னைக்கு என் பிள்ளை சுயநினைவு இல்லாம படுத்துக் கிடக்கான்… அவன் எனக்குப் பழைய சித்துவா திரும்பிக் கிடைப்பானா? பெத்த வயிறு காந்துது தமயந்தி” அதிரதன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விவேக்கை அழைத்துக்கொண்டு சற்று தூரத்தில் சென்று நின்றான். தரங்கிணியின் கண்ணீர் அவனை ஏதோ செய்தது. வார்த்தையால் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு. “சொல்லுங்க சார்” பார்வையைத் தரங்கிணியிடமிருந்து விலக்கி விவேக்கிடம் கொண்டு வந்தான் அதிரதன். “மிஸ்டர் ஹேமசந்திரன் கிட்ட நான் பேசணும் விவேக்… தமயந்தி சொல்லுறதை பாத்தா சித்தார்த்தை யாரோ மாடில இருந்து தள்ளி விட்டிருக்காங்க… அந்தப் பையனுக்குப் பாதுகாப்பு இல்லாத ...

அத்தியாயம் 3

 




சன் டியூ ஹோட்டலின் இத்தாலிய உணவகமான ‘பெல்லா இட்டாலியா’வில் தரங்கிணியின் முதல் நாள் ரம்மியமாகவும் பரபரப்பு குறையாமலும் கழிந்து கொண்டிருந்தது.

அவள்தான் அங்கே தலைமை சமையல் கலைஞர். அவளுக்கு உதவியாக ஐந்து உதவி சமையல் கலைஞர்கள் இருந்தார்கள். 

அவர்களுக்குச் சமைப்பதற்கான கட்டளைகளைக் கொடுத்தபடி தானும் சில வேலைகளைக் கவனித்தவளுக்கு நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஆசுவாசமான மனநிலை.

இத்தாலியன் சீசனிங்கின் மணம், நோச்சி, ரவியோலி என கண்களை நிறைக்கும் உணவுகள், சூடு பறக்கும் செங்கல் ஓவன்களில் வெந்து கொண்டிருந்த பீட்சாவின் மெல்லிய வாசனை, பாஸ்தா போர்டுகளில் மாவை வைத்து தேய்க்கும் ஓசை, சிறிய செராமிக் குடுவையில் கொதிக்கும் ஆலிவ் எண்ணெய்யில் ரோஸ்மேரி துணையோடு பொன்னிறத்தில் ஹிப்ஹாப் ஆடும் பூண்டுகளின் நடனம் என ஒவ்வொன்றையும் ரசித்தாள் தரங்கிணி.

இடையிடையே வந்த வாடிக்கையாளர்களிடம் இன்முகமாகப் பேசியதில் புது மனிதர்களிடம் அளவளாவிய புத்துணர்ச்சி!

மாலையில் அவளது பணி நேரம் முடியும் தருவாய். ஏப்ரனைக் கழற்றி முகம் கழுவி விட்டு கிளம்ப எத்தனித்தவளின் மொபைலில் இதுவரை அறியாத புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் யாராக இருக்கக்கூடுமென்ற கேள்வியோடு அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ”

“நான் அதி பேசுறேன் தரு… உன் கிட்ட பேச காத்திருக்கேன்”

அதிரதனின் குரல் கேட்டதும் மெல்லிய முறுவல் அவளது இதழில். 

“நீ மறந்திருப்பனு நினைச்சேன் ஜூனியர்”

“மறக்குறதுக்கு நான் ஒன்னும் தரு இல்ல, அதி… முக்கியமானவங்களை என் மனசு அவ்ளோ சீக்கிரம் மறந்துடாது”

அவனை மறந்து தடுமாறியவளுக்கு ஒரே நாளில் எத்துணை முறை மானசீகக் குட்டு விழுமோ! 

“ப்ச்! போதும் போதும்… இதுக்கு மேல கொட்டுனா என் மண்டை மவுண்ட் எவரேஸ்டொட மவுண்டெய்ன் பீக்ஸ் மாதிரி அங்கங்க வீக்கம் கண்டுடும்… நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்… எங்க நம்ம மீட்டிங்கை வச்சுக்கலாம்?”

சினேகமாகப் பேசியபடி ஹோட்டல் ஊழியர்களுக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்குச் செல்ல துவங்கினாள் தரங்கிணி.

“அது சர்ப்ரைஸ்”

“சர்ப்ரைஸா? இப்பிடி ஒரு லொகேசன் எங்க இருக்கு?”

“இந்த ஜோக்குக்கு இன்னும் நாலு வருசம் கழிச்சு சிரிக்குறேன்… நீ சீக்கிரம் ரெடியாகி ஹோட்டலோட என்ட்ரென்ஸ்ல இருந்து, வெளிய வர்ற பாதைக்கு லெப்ட்ல போகுதே ஒரு காட்டுப்பதை அங்க வா… ஐ அம் வெய்ட்டிங் ஃபார் யூ தேர்”

“ஓ.கே”

கேட்ட உடனே சம்மதித்துவிட்டாள் என்று அதிரதனுக்கு வேண்டுமானால் தோன்றியிருக்கலாம். தரங்கிணிக்குத் தோன்றவில்லை.

அன்றும் இன்றும் அவனை அவள் ஜூனியராகவே பாவிப்பதில் மாற்றம் ஏதும் இல்லாதபோது பழகும் முறையில் மட்டும் ஏன் பேதம் காணப்போகிறாள்?

ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட மூன்று வயது அவளை விட அதிரதன் இளையவனாயிற்றே! அந்த வாஞ்சை எப்போதுமே தரங்கிணிக்கு அவன் மீதுண்டு.

வாழ்க்கையோட்டத்தில் அவள் சந்தித்த புயல்களும், கடந்து வந்த முட்பாதையும், தனக்குத் தானே போட்டுக்கொண்ட இரும்பு வேலியும் மனரீதியான வாதையைக் கொடுத்ததில் இத்தனை ஆண்டுகாலத்தில் அவனைப் பற்றி சில நொடிகள் கூட சிந்தித்ததில்லை தரங்கிணி.

நாம் அனைவரும் அப்படிதான். ஒரு காலத்தில் நமக்கு நெருக்கமானவர்களாக உலா வந்தவர்களை காலவோட்டத்தில் மறந்து போய்விடுவோம். தொடர்பு கொள்வதற்கான வழிகளும், வாய்ப்புகளும் இருந்தாலும் அன்றாட வாழ்க்கை ஒரு சுழல் போல நம்மை இழுத்துக்கொள்ளும்.

அதிலும் பெண்களுக்குப் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று திருமணமான பிற்பாடு குடும்பச்சுமை, குழந்தை, குடும்பத்தலைவி எனும் பாத்திரம் கொடுக்கும் பொறுப்பு என எத்துணை புதிய விடயங்கள் முக்கியமானவையாக முளைத்துவிடுகின்றன.

அவற்றைத் தாண்டி எந்தப் பெண்ணுக்கும் தன்னுடன் படித்தவர்களைப் பற்றியோ, ஒரு காலத்தில் தனக்கு வேண்டியவர்களாய் இருந்தவர்களைப் பற்றியோ சிந்திக்க நேரமேது?

ஆனால் என்றேனும் ஒரு நாள் அந்நபரைச் சந்திக்க நேர்ந்தால் எந்தப் பெண்ணும் கண்டுகொள்ளாமல் போவதில்லை. மனதுக்குள் கல்வெட்டு எழுத்தாய் பொறிக்கப்பட்ட நட்பு உயிர்த்தெழுந்து அந்நாளைய நினைவுகளைத் தட்டி எழுப்பும் தானே!

ஒரு சிரிப்பு! சினேகமான நலம் விசாரித்தல்! அக்கறையான சில நிமிட பேச்சு! மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரியாவிடை! இவை போதும் சில நட்புகளும் நேசங்களும் உயிர்ப்புடன் வாழ்வதற்கு!

அதே உணர்வுடன்தான் அதிரதனுடனான தனது உறவை அணுக முடிவு செய்தாள் தரங்கிணி.

மாலை நேரமே குளிருக்கான முகாந்திரம் தெரிந்ததால் மணிக்கட்டு வரை இழுத்துவிட்ட ஸ்வெட்டர், முரட்டு ஜீன்ஸ், மலைப்பகுதியில் நடக்க ஏதுவான பூட்ஸ்கள், குளிரில் சருமம் வறண்டுவிடாமல் இருக்க மாய்சுரைசர், உதடுகளில் லிப் பாம், உயரத்தூக்கி குதிரைவாலாகக் கட்டிய கூந்தல் அலங்காரத்துடன் அதிரதன் அவளை வரச் சொன்ன இடத்தை அடைந்தாள்.

அங்கே அவளுக்காகக் காத்திருந்தவன் பளீர் புன்னகையோடு கைகளை கேமராவாக்கி ‘க்ளிக்’ செய்வது போல காட்ட தரங்கிணி விளையாட்டாக அவனது தோளில் அடித்தாள்.

“நீ கொஞ்சம் கூட மாறல அதி”

“நீ மட்டும்தான் இப்பிடி சொல்லுற சீனியர்… எதை வச்சு நான் மாறலனு சொல்லுற?”

“உன்னை விட மூனு வயசு பெரியவளை இப்பவும் நீ வா போனு சிங்குலர்ல கூப்பிடுறியே, அதை வச்சு சொல்லுறேன்”

பேசியபடியே பைன் மரக்கூட்டங்கள் நிறைந்த பகுதிக்குள் நடக்கத் தொடங்கினார்கள் இருவரும்.

“நான் உன்னை மறுபடி பாப்பேன்னு நினைச்சதே இல்ல தரு”

அப்படியா என்பது போல பார்த்தவளுக்கும் அதே எண்ணம்தான். ஆனால் வாய் விட்டுச் சொல்லவில்லை.

“பட் டெய்லி ஒரு தடவையாச்சும் உன்னைப் பத்தி நினைப்பேன்… நீ என்ன பண்ணுற? உன் கரியரை நெக்ஸ்ட் லெவலுக்குக் கொண்டு போயிட்டியா? உனக்குக் கல்யாணம் ஆகிருக்குமா? ப்ளா ப்ளா ப்ளா… ஆனா நீ என்னை ரொம்ப ஈசியா மறந்துட்டல்ல”

குறைபட்டவனிடம் கை கூப்பியபடி நடந்தாள் தரங்கிணி.

“லைஃப்ல ரொம்ப அடி பட்டுட்டேன் அதி… அந்த வேதனைல சில நேரம் தரங்கிணினு ஒருத்தியா வாழணும்ங்கிறதையே நான் மறந்து போயிருக்கேன்… இந்த மூனு வருசமாதான் மூச்சு விடுறேன்… ஆனா அதுவும் முழுமையா இல்ல”

சிரிப்பைப் பூசியபடி அவள் சொன்னாலும் அதிரதனுக்கு அவள் சொன்ன தகவல்கள் கொடுத்த அதிர்ச்சி அதீதம். 

இருவரும் நடந்தபடியே வந்து நின்ற இடம் அழகான ஒரு மரவீடு. அதை நோக்கி கை காட்டினான் அதிரதன்.

“இங்க வந்தா ரிலாக்ஸ் பண்ணுறதுக்காக கட்டுன வுட் ஹவுஸ்… இதுக்குள்ள யாரையும் அழைச்சிட்டு வந்ததில்ல… நீ தான் முதல் கெஸ்ட்… உள்ள வா… அப்புறமா எல்லாத்தையும் பேசிக்கலாம்”

இருவருமாகச் சேர்ந்து மரவீட்டின் படிகளில் ஏறினார்கள். தரங்கிணிக்கு உயரம் என்றால் பயம். ஆனால் இப்போது பிடித்திருந்தது.

பைன் மரங்களுக்கு நிகராக தானும் வளர்ந்தது போன்ற பிரமை அவளுக்கு.

வீட்டின் வராண்டா பகுதியில் படிகள் முடிவடைந்தன. அது கிட்டத்தட்ட ஒரு சிட்டவுட் போல இருந்தது. அங்கே நின்றபடி பைன் இலைகளிடையே கண்ணாமூச்சி ஆடிய மலைச்சிகரங்களை ரசித்தவள், அதிரதன் வீட்டின் கதவைத் திறந்து ஒரு மர டீபாயையும் மூங்கில் நாற்காலிகளையும் எடுத்துச் சிட்டவுட்டில் போடவும் அதில் அமர்ந்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் ரெட் ஒயின் அடங்கிய கண்ணாடி குவளைகள் ‘கிணிங்’ என்ற ரிதத்துடன் மோதிக்கொள்ள இருவரும் பேச ஆரம்பித்தனர்.

“இட் சீம்ஸ் லைக் அ டேட்” விசமப்புன்னகையுடன் அதிரதன் கூற சத்தமாக நகைத்தாள் தரங்கிணி.

“யாஹ்! அ டிவோர்சி விமன் டேட்ஸ் தி மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்”

அவள் கேலியாகச் சொல்லவும் மறுப்பாய் தலையசைத்தான் அதிரதன்.

“நோ”

“ஏன் நோ? நீ மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் தானே?”

“நான் பேச்சிலர் தான்… ஆனா நீ இன்னும் டிவோர்சி இல்ல… கம் ஆன் லேடி, யூ ஆர் சிங்கிள் நவ்”

“அஹான்”

மனதுக்குள் மெதுவாய் முணுமுணுக்கத் தொடங்கிய நினைவுகளைக் கட்டிப்போட்டுவிட்டு ரெட் ஒயினை ஒரு மிடறு அருந்தினாள் தரங்கிணி.

அதிரதன் அவளைக் கண்கள் கனிய பார்த்தான்.

நீண்டதொரு பெருமூச்சுடன் “த ஹெல் இஸ் எம்ப்டி, ஆல் த டெவில்ஸ் ஆர் ஹியர்” என்றாள் அவள்.

சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்தவள் கண்ணீரை விழுங்குகிறாளோ என்ற ஐயம் அவனுக்கு.

“ஆர் யூ ஓ.கே தரு?”

தரங்கிணி எதுவும் பேசாமல் ரெட் ஒயின் இருந்த குவளையின் விளிம்பை தனது விரலால் வட்டமிட்டாள்.

“என்னாச்சு தரு? தரங்கிணி ரவிசந்திரன்னு நீ சொன்னதும் ஒரு செகண்ட் சந்தோசப்பட்டாலும் ஐயோ என்னாச்சுனு மனசு தவிச்சு போச்சு தரு”

உணர்ச்சிவசப்பட்ட குரலில் அதிரதன் பேசவும் தரங்கிணி கண்ணாடி குவளையிலிருந்து பார்வையை உயர்த்தி அவனை விசாரிக்கும் பார்வை பார்த்தாள்.

அதை உணர்ந்தவனாக “ஓ.கே… ஓ.கே… நான் சந்தோசப்பட்டேன்… போதுமா? என் மனசு சந்தோசப்படுறதுக்காக நீ தனியாளா நிக்கணும்னு யோசிக்குற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல தரு… என்ன நடந்துச்சு? சொல்லு… என்னாலான முயற்சிய பண்ணி உன்னையும் உன் ஹஸ்பெண்டையும் சேர்த்து வைக்குறேன்” என்றான் மெய்யான அக்கறையோடு.

தரங்கிணியிடமிருந்து மீண்டும் பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.

“தட்ஸ் நாட் பாசிபிள் அதி… கமலேஷோட அத்தியாயம் என் வாழ்க்கைய பொறுத்த வரைக்கும் முடிஞ்சு போச்சு… மூனு வருசம் அவரோட நிழல் கூட என் மேல படாம ரொம்ப சுதந்திரமா வாழுறேன் தெரியுமா? டிவோர்ஸ்னு கோர்ட்ல சொன்னதும் அவ்ளோ சந்தோசம்… பட் இந்தச் சந்தோசம், சுதந்திரம் இது எல்லாத்தையும் என்னால முழுமையா அனுபவிக்க முடியலடா”

ஆற்றாமை தொனிக்க அவள் கூறவும் அதிரதனின் மனதில் ஆயிரம் கேள்விகள்! விவாகரத்துக்கான காரணத்தை வற்புறுத்திக் கேட்க தோன்றவில்லை. அது நாகரிகமாக இருக்காது. ஆனால் அவளது மனக்குறையைப் போக்கலாமே!

அவனை அடுத்தக் கேள்வி கேட்கவிடாமல் தனது மனக்குறைக்கான காரணத்தைக் கூற விரும்பியவள் தன்னுடைய மொபைலை எடுத்து அதிலிருந்த புகைப்படம் ஒன்றைக் காட்டினாள்.

“இவன் என் பையன், சித்து… என்னோட சித்து கண்ணா… இவனை என்னால என் கூட வச்சுக்க முடியல அதி… கஷ்டடிய இழந்துட்டேன்… அவனுக்கு என் கூட வரணும்னு ஆசை… ப்ச்… சட்டத்துக்குக் குழந்தையோட ஆசையும் புரியல, அம்மாவோட பாசமும் தெரியல… அதிகார வர்க்கம் நுழைஞ்சு போறதுக்காக ரெடிமேட் ஓட்டைகளை ஏற்படுத்த மட்டும் அதுக்குத் தெரிஞ்சுது… என்னால என் பிள்ளைக்குச் சரியான வாழ்க்கைய அமைச்சு தரமுடியாதுனு சொல்லி அவனை என்னை விட்டுப் பிரிச்சிட்டாங்க”

தரங்கிணியோடு சேர்ந்து சிரிக்கும் சிறுவனை உற்றுப் பார்த்தான் அதிரதன். அப்படியே தரங்கிணியின் முகச்சாயலில் பூவாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான்.

அன்னையோடு அவன் கை கோர்த்து நின்ற விதமே எந்தளவுக்கு அவள் மீது அன்பு வைத்துள்ளான் என்பதைக் காட்டியது.

“ஹீ இஸ் யுவர் ஜெராக்ஸ் காப்பி”

“ம்ம்… நானும் கமலேஷும் பிரிஞ்சப்ப சித்துக்கு அஞ்சு வயசு… இப்ப எட்டு வயசு பையன் அவன்… மூனு வருசத்துல அடிக்கடி அவனைப் போய் பாப்பேன்… அவன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன்… என் கூட வச்சுப்பேன்… ஆனா நிரந்தரமா அவனை என் மகனா கூடவே வச்சுக்க முடியாத வருத்தம் எனக்குள்ள இருக்கு அதி… எனக்குனு இருக்குற ஒரே ஒரு குழந்தையோட வாழ முடியாத இந்த வேதனை என்னை மரணப்படுக்கை வரைக்கும் தொடரும்”

அதிரதனின் மனம் வெகுவாய்க் காயப்பட்டது அந்தக் கடைசி வார்த்தையில் தான்.

“ஹே தரு”

ஆறுதலாக அவளது கையைத் தட்டிக்கொடுத்தவனால் இதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. மகனைப் பிரிந்து ஒரு தாய் தனியாய் வாழ்வது எத்துணை பெரிய துன்பம்! இந்தத் துன்பம் தரங்கிணியை எப்படிப்பட்ட மனவேதனைக்கு ஆளாக்கியிருக்கும்! எவ்வளவு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்! இதிலிருந்து மீள அவள் எவ்வளவு போராடியிருப்பாள்! 

இந்தப் போராட்டத்தின் நடுவே அவளுக்கு வேறு எதையும் சிந்திக்க நேரமிருந்திருக்காது. உடைந்து போன தன்னைச் சீரமைக்க முயலும் பெண்ணால் தனது முயற்சியைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியாது. ஏன் அவள் தன்னை அடையாளம் காணத் தடுமாறினாள் என்பதை இப்போது பரிபூரணமாக உணர்ந்துகொண்டவனுக்கு அவளது முன்னாள் கணவன்மீது கொலைவெறியே வந்தது. 

எவ்வளவு அற்புதமான பெண்ணை இப்படி நொறுக்கிவிட்டாயே மூடா என அவனைத் தூக்கிப் போட்டுப் பந்தாட அதிரதனின் உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்தது.

அதிரதனைப் பொறுத்தவரை தரங்கிணி ஒரு தேவதை பெண். அவனது இளம்பருவத்தில் முதன் முதலில் ஈர்ப்பு, ரசனை என்ற உணர்வை அவனுக்குள் விதைத்தவள் அவள். அவளது அழகு, அறிவு, கம்பீரம் என அனைத்தையும் பார்த்து வியந்தவன் அவன்.

அவளைப் போல குணாதிசயம் கொண்ட பெண்கள் வாழ்க்கையில் கட்டாயம் சாதிப்பார்கள் என்று பேராசிரியர்கள் சொல்ல கேட்டிருக்கிறான். சாதனைப்பெண் என்றால் குடும்ப வாழ்க்கை இல்லாதவள் என்று அர்த்தமில்லைதான். நல்லதொரு குடும்பம், கச்சிதமான வேலை என அழகான வாழ்க்கையை வாழ அத்துணை தகுதியும் படைத்தவள் தரங்கிணி.

அவளது வாழ்க்கை இப்படி அந்தரத்தில் நிற்பதை அவனால் சீரணிக்க முடியவில்லை.

அவனது நெஞ்சத்தில் ஆயிரம் தேள் கொட்டும் வாதையை அனுபவித்த போதிலும் தரங்கிணியின் துன்பத்திற்கான காரணத்தை அறியத் துடித்தான் அதிரதன். காரணம் அவள் மீதான அவனது அபிமானம்! 

அதை நட்பு என்று சொல்ல இயலாது! காதல் என்று சொன்னால் அபத்தம்! 

வாலிப வயதில் சிலரின் மீது நமக்கு அபரிமிதமான பிரியம் உண்டாகும்! அவர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் நமக்கே நடந்தது போல பூரிப்போம். அவர்கள் வேதனையுற்றால் நமக்கும் வலிக்கும். அவர்களின் வெற்றியை நமது வெற்றியாக எண்ணி கொண்டாடித் தீர்ப்போம். 

அந்த உணர்வுக்கு இன்னதென பெயரிட இயலாது. அப்படிப்பட்ட உணர்வினால் கட்டமைக்கப்பட்ட உறவுக்கும் பெயரில்லை.

அவ்வாறு ஒரு அரிதான உணர்வும், அழகான உறவும் தரங்கிணி – அதிரதனுக்குள் வாடாத துளிராக இருப்பதை இருவரும் அறிவார்கள்.

அதனாலேயே உலகத்தாரின் பார்வைக்கு அஞ்சாமல் அவன் அழைத்ததும் மரவீட்டுக்கு அவள் வந்து சேர்ந்தாள்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளில் எதற்கும் கண்ணீர் சிந்தாதவள் அவன் முன்னிலையில் தனது பலவீனம் இன்னதெனக் காட்டி அமர்ந்திருக்கிறாள். இந்த உறவுக்கு இனியாவது பெயர் சூட்டப்படுமா? 

Comments

  1. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 3)

    எதுக்கு பெயர் சூட்டனும்...? பெயர் தெரியாத உறவாவே இருந்துட்டு போகட்டுமே...? பெயர் வைச்சு கொண்டாடினாத்
    தான் அந்த உறவு நிலைக்குமா என்ன..? மனிதர் உணர்ந்துக் கொள்ள இந்த உறவை ஒரு பெயரால் அடக்க முடியாது, அதையும் தாண்டி புனதமானதுன்னு..... சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம். எதுவா இருந்தாலும் நம்ம மனசுக்கு தெரிஞ்சா போதும், நம்ம மனசு சுத்தமா இருந்தா போதும். நம்ம மனசு சங்கடப்படாம இருந்தா போதும்.

    ஆனா, எனக்கென்னவோ தரங்கிணி & சித்தார்த் விஷயத்துல அதியால ஹெல்ப் பண்ண முடியும்ன்னு தோணுது.
    ஒருவேளை, தரங்கிணி கஷ்டப்படறச்ச, பக்கத்துல அதி இருந்திருந்தா... அப்பவே இந்த பிரச்சினையை களைஞ்செடுத்திருப்பான்னும் தோணுது. அதனாலேயே, அன்னைக்கு விட்டதை இன்னைக்கு பிடிச்சு காட்டுவான்னும் தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. Super adhiran tharangini life le oru best friend a irundu avaluku help pannuvana

    ReplyDelete
  3. Pavam tharangini
    Athi ethavathu seithe agavendum

    ReplyDelete
  4. True ma. Oru male, female pesinale love. Or friend ah than irukkanumnu avasiyam illa. Inda uravukku ulagil peyar illa

    ReplyDelete
  5. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  6. Athi kum Tharangi kum ulla relationship ah ithu than define panrathu kastam than pola yen na ella anbu kum per vaikka mudiyathu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அத்தியாயம் 1

அத்தியாயம் 1