Posts

Showing posts from 2024

பூங்காற்று 37

Image
  ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும் , ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு ஏதோ மீட்டிங்குக்காக அனுப்பிவிட வீட்டில் தனித்திருக்க பிடிக்காதவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். வழக்கமாக இப்படி வெளியூர் பயணங்களில் அவனுடன் அவளும் செல்வது வழக்கம். ஆனால் அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கருத்தில் கொண்டு ராகுல் அவளை   வரவேண்டாமென்று கூறிவிட்டான். சகோதரனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள பிறந்த வீட்டுக்கு வந்தவள் நீரஜாட்சியிடம் மட்டும் சற்று விலகியே இருந்து கொண்டாள். நீரஜாட்சியும் அவளை புருவ தூக்கலோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவாள். அன்றும் அப்படி நடந்த போது ஸ்ருதிகீர்த்தி நீரஜாட்சியை பார்த்தபடி நடந்து சென்றவள் தரைவிரிப்பில் கால் சிக்கிக் கொள்ள தடுமாறி விழப் போனாள். நீரஜாட்சி பதறிப் போனவளாய் ஓடி வந்து அவள் கையை பிடித்து அவளை விழாமல் நிறுத்தியவள் "உனக்கு அறிவு இல்ல ? ஆகாயத்தை பார்த்து ...

அத்தியாயம் 11

  அத்தியாயம் 11 நாம் அனைவரும் ஒரு ‘ ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி ’ யில் வாழ்ந்து வருகிறோம் . நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும் முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல் நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம் . ஏன் என்னைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்பதற்கான தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்வதில்லை . வளர்ப்பதற்கு இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிப்பதும் இல்லை .                                                           இப்படிக்கு சந்திரிகை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி , மில்லர் மெமோரியல் லைப்ரரி ... சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா . அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத் ...

அத்தியாயம் 10

  அத்தியாயம் 10 எனக்குச் சினிமா பைத்தியம் உண்டு . சினிமா நட்சத்திரங்களைப் போல பெயரும் புகழும் பெற்று வாழவேண்டுமென ஒரு காலத்தின் நான் கனவு கண்டிருக்கிறேன் . ஆனால் அக்கனவுக்கு அடிப்படையான நடிப்பு திறமை என்னிடம் இல்லை என்பதை அறிந்துகொண்ட நேரத்தில் நான் நன்றாக நடனம் ஆடுகிறேனே , இதை எப்படி மறந்தேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன் . நம்மில் பலருக்கு இந்தப் பிரச்சனை உண்டு . யாரோ ஒருவரைப் போல ஆகவேண்டுமென்ற ஆர்வத்தில் நமது திறமையை கண்டறிவதில் நாம் கோட்டை விடுகிறோம் .                                                            இப்படிக்கு சந்திரிகை சந்திரிகா சென்னையின் பழம்பெருமைமிக்க கல்லூரிகளில் ஒன்றான மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்...

அத்தியாயம் 9

  அத்தியாயம் 9 அது ஏனோ ‘yes all men’ என்று சொல்லிவிட்டால் ஆண்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது . நீங்கள் சமூக வலைதள கணக்கில் இந்த சொற்றொடரை மட்டும் பதிவிட்டுப் பாருங்கள் . உங்கள் பதிவின் கீழ் வரும் கமெண்ட்களில் முக்கால்வாசி ‘ அப்ப உன் அப்பனும் மோசமானவன்னு ஒத்துக்கிறியா ’ வகையறாவாக தான் இருக்கும் . அப்படி கேட்பவர்களுக்கு ‘the girl under the basement’ திரைப்படத்தைப் பாருங்கள் என தாராளமாக பரிந்துரைக்கலாம் . ஆஸ்திரியாவைச் சேர்ந்த எலிசபெத் ஃபிரிஜில் என்ற பெண்ணை அவளது தந்தை ஜோசஃப் வீட்டின் அடியில் கட்டியிருந்த ‘ சவுண்ட் ப்ரூஃப் பேஸ்மெண்டில் ’ வைத்து பாலியல் வன்கொடுமை செய்து ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுக்க வைத்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அது . வக்கிரங்களும் பேராசையும் கொண்ட மனம் உறவுமுறைக்கு மதிப்பளிக்காது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தச் சம்பவம் .                         ...