Posts

Showing posts from April, 2025

ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

மழை 6

Image
 இந்தக் கதை இனி எனது தளத்தில் வரும். தொடர்ந்து படிக்க  NM தமிழ் நாவல் தளத்தில்  ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்! இனி எனது ஆன்கோயிங் மற்றும் ரீரன் நாவல்கள் அனைத்தும் தளத்தில் மட்டுமே வரும். தளத்தின் இணைப்பு 👇 NM தமிழ் நாவல் தளம் - Online comunity for Tamil Novels “2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்த வருடம் போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதென மனநல நிறுவனத்தின் துணை கண்காணிப்பாளரான மருத்துவர் பூர்ணசந்திரிகா தெரிவித்துள்ளார். அதிலும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (NCB) கூற்றுப்படி சமீப காலத்தில் சென்னையில் பார்ட்டி டிரக்ஸ் எனப்படும் எல்.எஸ்.டி, கொகைன், எம்.டி.எம்.ஏவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. -18.03.2019, சிட்டிசன் மேட்டர்ஸ் மீடியாவின் ரிப்போர்ட்டர் லாஸ்யா சேகர் ஹோட்டல் கோல்டன் கிரவுன்... வானளாவிய கட்டிடங்களுடன் பல ஏக்கர் நிலபரப்பை விழுங்கி பசுமையான சூழலுக்கு நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருந்த அந்த ஹோட்டலின் வாகனத் தரிப்பிடத்தில் வந்து நின்றது சித்தார்த்தும் மாதவனும் பயணித்த பி.எம்.டபிள்யூ. அதிலிருந்து இறங்கியவர்...

மழை 5

Image
  “பெண்களுக்கு மத்தியில் போதைப் பழக்கத்தை கண்டறிவது இன்னும் கடினமாக உள்ளது. பெண்களின் போதைப் பழக்கம் பெரும் களங்கமாக கருதப்படுகிறது. எனவே மக்கள் அதை மறைக்க முற்படுவதுடன், அப்பழக்கத்துக்கு ஆளான பெண்களை மருத்துவர்களிடமும் அழைத்து செல்வதில்லை” -முக்தா பன்டம்பேகர், முக்தாங்கன் போதை மறுவாழ்வு மையம் சவி வில்லா... அந்த மாளிகையின் மூன்றாம் தளத்தைத் தனதாக்கிக் கொண்டிருந்த சித்தார்த் அவனது அறையினுள் அனுமதியின்றி கண்ணாடி ஜன்னல்களின் உதவியுடன் அத்துமீறி நுழைந்த ஆதவனின் கதிர்கள் செய்த குறும்பினால் கண் விழித்தான். துயில் சிறிது கலைந்தாலும் படுக்கை அவனை விடுவேனா என அடம்பிடிக்க சிறிதுநேரம் அப்படியே படுத்திருந்தான். காலைநேரத்தில் உறக்கம் கலைந்தும் கலையாமலும் இருக்கும் இரண்டுங்கெட்டான் நிலையில் கண் மூடி கிடக்கும் சுகத்துக்கு ஈடு இணை எதுவும் இவ்வுலகில் இல்லை. அதை அனுபவித்தபடி படுத்திருந்தவனின் மனம் வழக்கம் போல அமைதியாக இருந்தது. அன்றைய தினம் ஷூட்டிங் எதுவுமில்லை. எனவே தாமதமாக எழுந்தாலும் ஒரு பாதகமும் நேரப்போவதில்லை. அவனது அந்த இனிய மனநிலையைப் பாதியில் துண்டித்தது மொபைல் போனின் செல்லச்சி...

மழை 4

Image
போதைக்காக சிறுவர்கள் ஒயிட்னர், இருமல் மருந்து, பெவிகால், பெட்ரோலை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் சக நண்பர்களிடையே தனது ஹீரோயிசத்தைக் காட்டுவதற்கென முதலில் போதைப்பழக்கத்தைத் துவங்குகின்றனர். பிறகு படிப்படியாக அதற்கு அடிமையாகி விடுகின்றனர். -தினகரன் 04.04.2018 லோட்டஸ் ரெசிடென்சி.. பல ஏக்கர் பரப்பில் விரிந்திருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு பிரிவிலும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளைப் போல வீடுகள் அமைந்திருந்தன. அதன் ஒரு பக்கத்தில் பசும்புல்வெளியுடன் சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்காவும், இன்னொரு பக்கத்தில் நீச்சல்குளமும் அமைந்திருந்தன. அந்த லோட்டஸ் ரெசிடென்சியின் நுழைவு வாயிலுக்குள் ஸ்கூட்டியுடன் நுழைந்தாள் சாருலதா. வாகன தரிப்பிடத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தனது பேக் மற்றும் மொபைல் சகிதம் மின்தூக்கிக்குள் நுழைந்தவளை இரு கதவுகளைத் திறந்து அரவணைத்துக் கொண்டது அந்த மின்தூக்கி. C பிரிவின் மூன்றாவது தளத்தில் மின் தூக்கி நிற்கவும் அதிலிருந்து இறங்கியவள் தங்களின் வீடு அமைந்திருந்த வராண்டாவில் நடக்கத் துவங்கினாள். அவர்களின் ஃப்ள...

மழை 3

Image
“போதைக்கு அடிமையாவதில் முக்கியக் காரணி தனிமனித குணாதிசயம். பிடிவாதம், தனிமனிதக்கட்டுப்பாடின்மை, தனிமை, பெற்றோரின் வழிக்காட்டுதலின்மை போன்றவை பதின்பருவத்தினர் போதையில் விழுவதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. அவர்கள் சார்ந்திருக்கும் சமூக அமைப்பும், நண்பர்கள் வட்டாரமும் அவர்களுடைய பாதையை நிர்ணயிக்கின்றன” -எழுத்தாளர் சேவியர் கே.ஆர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை…. “மிஸ் யசோதராவோட பிசிக்கல் ஹெல்த்தும் சரி, மெண்டல் ஹெல்த்தும் சரி... இன்னும் ஃபுல்லா ரெகவர் ஆகல... கோமால இருந்து மட்டும் தான் அவங்க ரெகவர் ஆயிருக்காங்க... அவங்களோட ஹெல்த் இன்னும் பழையபடி ஆகல... சோ ரொம்ப உடம்பை அலட்டிக்காம பாத்துக்கணும்... இன்னும் ஒன் வீக் அவங்க எங்க அப்சர்வேசன்ல இருக்கணும் விஷ்ணு சார்” மருத்துவர் சொன்னதைக் கேட்டுவிட்டு யோசனையுடன் நெற்றியில் கீறியபடி புருவம் சுருக்கி அமர்ந்திருந்தான் அவன். அவனருகில் அமர்ந்திருந்தனர் ஒரு நடுத்தரவயது தம்பதியினர். அந்த ஆணுக்கு ஐம்பந்தைந்து வயது இருக்கலாம். ஆனால் ஆய்ந்து ஓய்ந்து போன தோற்றம். அவரருகில் அமர்ந்திருந்த பெண்மணிக்கோ முகத்தில் கவலை தனது நிரந்தரமான தடத்தைப் பதித்திருந்தத...

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.