பூங்காற்று 48

Image
  நீரஜாட்சி அன்று காலையில் எழும் போதே அவளுக்கு மனது சரியில்லை. முதல் வேளையாக முகம் கழுவி விட்டு வராண்டாவில் சென்று காற்றாட அமர்ந்தவள் டியூசனுக்கு செல்லும் விக்கிக்கு டாட்டா காட்ட அவன் சைக்கிளில் ஏறியவன் "நீருக்கா! நான் இன்னும் ஒன் ஹவர்ல டியூசன் முடிச்சு வந்துடுவேன். அதுக்கு அப்புறம் மேட்சை ஸ்டார்ட் பண்ணுவோம்" என்று அறிவிப்பு விடுத்தபடி சென்றான். அவன் செல்வதை பார்த்துவிட்டு வனஜா "என்னமோ போ நீரு! இவன் பப்ளிக் எக்சாம்ல என்ன மார்க் வாங்குவானோனு அவனுக்கு பயம் இருக்கோ இல்லையோ எனக்கு டென்சனா இருக்கு. ஹாஃப் இயர்லில எய்ட்டி பர்சன்டேஜ் தான் வாங்கியிருக்கான்" என்று வருத்தமாக கூற நீரஜாட்சி "அக்கா எய்ட்டி பர்சண்டேஜ் உங்களுக்கு கம்மியா தெரியுதா ? பப்ளிக் எக்சாம் மார்க் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறது இல்லக்கா. அதை தவிர அவனோட மத்த பழக்க வழக்கங்கள் தான் அவனை நல்ல மனுசனா காட்டும். வெறும் மார்க்கை வச்சு அவனை எடை போடாதிங்க. இப்போ இல்லைனாலும் வருங்காலத்துல அவன் ஒரு நல்ல நிலமைக்கு வருவான்" என்று விக்கியை புகழ்ந்து தள்ள வனஜா "அது சரி! நீ அவனை விட்டுக...

பூங்காற்று 44



மறுநாள் காலை வீட்டில் அனைவரும் காலையுணவுக்காக ஒன்றாக அமர்ந்து விட நீரஜாட்சி மைதிலியுடன் சேர்ந்து சமையலறையில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தாள். படிகளில் தட்தட்டென்று சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள் ரகுநந்தன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி இறங்கி வருவதைக் கண்டதும் "இந்த போஸுக்குலாம் குறைச்சலே இல்ல" என்று உதட்டைச் சுழித்துக் கொண்டாள்.

அவனும் ஒரு முறைப்புடன் வந்து அமர அவள் சட்டென்று நகர்ந்து சீதாலெட்சுமியிடம் சென்று அமர்ந்து கொண்டாள். அவர் அவளுக்கு இட்லியை ஊட்டிவிட அவருடன் அரட்டை அடித்தபடி சாப்பிட்டவளை கண்ணால் சுட்டபடி அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.

வேங்கடநாதன் "ஆமா ஹர்சாவும் கிருஷ்ணாவும் ஏன் இன்னும் வரலை?" என்று கேட்கும் போதே இருவரும் படிகளில் இருந்து இறங்கி வர நீரஜாட்சி "கிருஷ்ணா இங்கே வா" என்று அக்காவை தன்னருகில் அமர வைத்தவள் சீதாலெட்சுமியிடம் ஏதோ சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள்.

அதைக் கேட்டு கிருஷ்ணஜாட்சியின் முகம் சிவக்க ஹர்சவர்தன் நீரஜாட்சியிடம் "அப்பிடி என்ன தான் பாட்டி கிட்ட சொன்ன நீ?" என்று ஆர்வம் தாங்காமல் கேட்க

நீரஜாட்சி சீதாலெட்சுமி ஊட்டிவிட்டதை விழுங்கிக் கொண்டே "அது ஒன்னும் இல்ல அத்திம்பேர். சித்தம்மாக்கு கொள்ளுப்பேரனை தூக்கி கொஞ்சணும்னு ஆசை வந்துடுச்சு. இப்போ நடக்கிறதை வச்சு பார்த்தா சித்தம்மாவோட கொள்ளுப்பேரன் ஆத்துக்குள்ள என்ட்ரி ஆகப் போற மாதிரி எனக்கு தோணுச்சு. அதை சொல்லி சிரிச்சிட்டிருந்தேன்" என்று கூற அவனும் மவுனமாக சிரித்தபடி தலையை குனிந்தான்.

கோதண்டராமன் கேலியாக "அடடா! ஹர்சா வெக்கம்லாம் படறியே கண்ணா... பேஷ் பேஷ்" என்று கூற வேங்கடநாதனும் தமையனுடன் சேர்ந்து மகனை கிண்டல் செய்ய மொத்த குடும்பமும் அந்த இளம் தம்பதியை நக்கல் செய்தபடி சாப்பிட ரகுநந்தன் மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் அமைதி காத்தது பத்மாவதிக்கு நெருடலாகத் தோன்றியது.

அவர் இளைய மகனிடம் அது குறித்து கேட்க விழைய அதற்குள் ஹர்சவர்தன் லண்டனில் நடக்கப் போகிற இண்டர்நேசனல் லெவல் ஹோட்டலியர்ஸுக்கான கான்ஃபரன்ஸை பற்றி குடும்பத்தாரிடம் கூற ஆரம்பித்தான்.

அதில் கலந்து கொள்ள தான் செல்லவிருப்பதால் கிருஷ்ணஜாட்சியையும் அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கூற அனைவருக்குமே அது சரியென்று பட்டது. பெரியவர்களும் இதற்கு சம்மதித்துவிட நீரஜாட்சி விசா மற்றும் மற்ற செயல்முறைகள் பற்றி விசாரிக்க ஹர்சவர்தன் தான் அதெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்னரே ஏற்பாடு செய்துவிட்டதாக கூறினான்.

நீரஜாட்சி கேலியாக "சூப்பர் அத்திம்பேர்...கான்ஃபரன்ஸ் போன மாதிரியும் ஆச்சு. ஹனிமூன் போன மாதிரியும் ஆச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா" என்று கண்ணை சிமிட்ட கிருஷ்ணஜாட்சி "நீரு நீ கிண்டல் பண்ணுவேனு தெரியும்டி. அதனால தான் நானும் இவரும் ஒரு முடிவு பண்ணிருக்கோம். நாங்க மட்டும் போகலை. எங்க கூடவே நீயும், அம்மாஞ்சியும் வர்றிங்க" என்று கூறிவிட்டு சாப்பாட்டில் கண் பதித்தாள்.

ஆனால் நீரஜாட்சியும் ரகுநந்தனும் ஒரே குரலில் "நான் வரலை" என்று கூற இவ்வளவு நேரம் அமைதியாக குடும்பத்தினர் செய்த கலாட்டாவை ரசித்தபடி சாப்பிட்டு கொண்டிருந்த பட்டாபிராமனின் தலை உயரந்தது.

அவர் இருவரையும் ஒரு சேர பார்த்து "ஏன் வேண்டானு சொல்லுறேள்? உங்களுக்கும் இப்போ தானே  விவாகம் ஆச்சு? போய் வெளிநாட்டை சுத்தி பார்த்துண்டு வந்தா என்ன?" என்று குரலில் அதட்டலுடன் கேட்க

நீரஜாட்சி ரகுநந்தனிடம் கண்ணாலேயே "நீ சொல்லுடா" என்று கூற அவன் தொண்டையை செறுமியபடி "தாத்தா எனக்கு வேலை நிறைய பாக்கி இருக்கு. அதுவும் இல்லாம மன்னி போயிட்டாங்கன்னா கஃபேயை மேனேஜ் பண்ண கண்டிப்பா ஒரு ஆள் வேணும். சோ நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாள் கழிச்சி போய்க்கிறோம்" என்று கூறி அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

அதை கேட்டதும் அவர் சமாதானம் ஆனாலும் பத்மாவதி மட்டும் இவர்கள் இருவரும் எதையோ மறைக்கிறார்கள் என்று புரிந்து கொண்டார். அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் பாத்திரங்களை அவரும் மைதிலியும் ஒதுங்க வைக்க மகன்களும் மருமகள்களும் அவரவர் வேலைக்கு சென்று விட்டதை உறுதிபடுத்திக் கொண்ட பத்மாவதி மைதிலியிடம் "மைதிலி நீரஜாக்கும், நந்துவுக்கும் ஏதோ பிரச்சனைனு என் உள்மனசு சொல்றதுடி..அவா ரெண்டு பேரும் முன்ன மாதிரி பேசிக்கறதில்ல..நீ அதை கவனிச்சியோ?" என்று கவலையுடன் வினவினார்.

மைதிலி "நானும் கொஞ்சநாளா அவா ரெண்டு பேரையும் கவனிச்சிண்டு தான் இருக்கேன்கா. எலியும் பூனையுமா முகத்தை தூக்கி வச்சிண்டு சுத்தறா. இதை இப்பிடியே விட்டுடா சரி படாது. இன்னைக்கு நீ நீரஜா கிட்ட விஷயத்தை கேட்டுடு" என்று சகோதரியிடம் கூற பத்மாவதியும் அதற்கு சரியென்றார்.

ஏனெனில் இன்னும் இரண்டு நாட்களில் இளையவர்களை தவிர குடும்பத்தினர் அனைவரும் திவ்வியதேசங்களுக்கு சுற்றுலா செல்ல தயாராக இருந்தனர். அதே நாளில் தான் ஹர்சவர்தன் கிருஷ்ணஜாட்சியுடன் லண்டன் செல்லப் போவதாக காலையில் அனைவரிடமும் கூறிவிட்டுச் சென்றிருந்தான்.

எனவே இப்போதே பேசி சரி செய்தால் கையோடு இவர்கள் இருவரையும் அனுப்பிவைத்து விடலாம் என்று இரு சகோதரிகளும் யோசித்து வைத்திருந்தனர்.

மாலை நீரஜாட்சி வீடு திரும்பும் போது அவளிடம் பேசுமாறு மைதிலி கூற பத்மாவதி "இப்போ தானே வீட்டுக்கு வந்திருக்கா. உடனே ஆரம்பிச்சா நன்னா இருக்காதுடி. கொஞ்சம் நேரம் ஆகட்டும்" என்று தங்கையிடம் கூறிவிட்டார்.

ஹாலில் மாமனார் மாமியாரிடம் கலகலப்பாக அவள் உரையாடுவதைக் கண்டவர் "இப்போ நன்னா தான் பேசிண்டிருக்கா. ஆனா நந்து வந்தா மட்டும் உம்மணாமூஞ்சி ஆயிடறா. ஏதோ இருக்கு" என்ற யோசனையுடன் இரவுணவை தயாரிக்க தங்கைக்கு உதவ ஆரம்பித்தார்.

அதன் பின் நேரம் கடக்க இரு புதல்வர்களும் வந்து சேர்ந்துவிட்டனர். அனைவரும் அமர்ந்து இரவுணவை முடித்துவிட்டு படுக்கச் செல்ல நீரஜாட்சி மட்டும் தோட்டத்தை நோக்கிச் சென்றாள். ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்தவள் காதில் ஹெட்போனை மாட்டிவிட்டு கண் மூடி அமர்ந்து விட்டாள்.

திடீரென்று கண்ணை திறந்தவள் தன் அருகே அமர்ந்திருந்த பத்மாவதியைக் கண்டதும் "மாமி நீங்களா? வந்து ரொம்ப நாழியாச்சா?" என்றபடி காலை மடித்து அமர

பத்மாவதி மறுப்பாய் தலையைசைத்து "ஒரு பத்து நிமிசம் ஆச்சுடிம்மா" என்றார். அவர் சொன்னதற்கு உம் கொட்டியபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போனை கழற்றியவள் "இந்த குளிர்ல ஏன் உக்காந்திருக்கிங்க மாமி?" என்றபடி எழப் போனாள்.

ஆனால் பத்மாவதி அவள் கரத்தை பற்றி "உன்னோட கொஞ்சம் பேசணும். உக்காரு" என்க மறுப்பு தெரிவிக்காமல் அமர்ந்தாள் அவள்.

அவர் சுற்றி வளைக்காமல் "நோக்கும் நந்தனுக்கும் என்ன பிரச்சனை? ஏன் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிண்டே சுத்துறேள்? அவன் என்னடான்னா வந்ததும் அந்த லேப்டாப்பை தூக்கிண்டு மாடி வராண்டால உக்காந்துக்கறான். நீ ஊஞ்சல்ல வந்து உக்காந்துக்கற. இப்பிடி ஆளுக்கு ஒரு பக்கமா இருக்கவா நாங்கல்லாம் இவ்ளோ சந்தோசமா இந்த விவாகத்தை நடத்தி வச்சோம்?" என்று நேரடியாகவே அவளிடம் வினவ

நீரஜாட்சி "மாமி கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க. நீங்க நினைக்கிற மாதிரி ஒரு பிரச்சனையும் இல்ல. நாங்க எப்போவுமே இப்பிடி தானே மாமி. அடிச்சுப்போம் அப்புறம் சேர்ந்துப்போம். எங்களுக்கு இது பழகிப் போச்சு. நீங்களும் இத்தனை வருசமா எங்களை பார்த்திட்டிருக்கிங்க. நீங்களே இப்பிடி கேட்டா என்ன அர்த்தம்?" என்று பொறுமையுடன் கூற

பத்மாவதி "என்னவோ நீ சொல்லுறதை நான் நம்புறேன்டிம்மா. ஆனா ஒன்னு நீயும் அவனும் ஒரே மாதிரி குணமுள்ளவா. ஒரே குணம் உள்ள ரெண்டு  பேர் வாழ்க்கையில சேர்ந்து வாழறது கஷ்டம்னு நேக்கு நன்னா தெரியும். உங்க விவாகத்துக்கு அப்பா தயங்குனது கூட இதுக்காக தான். எல்லாரையும் சமாளிச்சு கல்யாணம் பண்ணிண்டேள். இப்போ ஹர்சா, கிருஷ்ணா கூட சேர்ந்து நீங்களும் போயிட்டு வரலாமோன்னோ?" என்று பாயிண்டை பிடிக்க

நீரஜாட்சி "மாமி! நான் காத்தாலே சொன்ன மாதிரி நானும் கிளம்பிட்டேனா லின் மட்டும் தனியா பேக்கரி, கஃபே ரெண்டையும் பார்த்துக்கிற மாதிரி ஆயிடும். அவளால தனியா மேனேஜ் பண்ண முடியாது. இப்போ என்ன நானும் நந்துவும் ஹனிமூன் போகணும், அவ்ளோ தானே? டோண்ட் ஒர்ரி. அத்திம்பேரும் கிருஷ்ணாவும் திரும்பட்டும். அதுக்கப்புறம் நாங்க கிளம்பறோம்" என்று பேசி சமாளித்து பத்மாவதியை குளிரில் இருக்க வேண்டாமென்று கூறி உள்ளே அனுப்பிவைத்தாள்.

அவர் சென்றதும் நீரஜாட்சியின் மனம் சலிப்படைந்தது.

"இங்க நாங்க வாழற லெட்சணத்துக்கு ஹனிமூன் ஒன்னு தான் குறைச்சல். இங்கேயே அந்த முகத்தை பார்க்க பிடிக்காம தான் அவன் தூங்குனதும் ரூமுக்கே போறேன். இதுல அப்ராட் போய் அந்த மூஞ்சியை பார்க்கணுமா? கஷ்டகாலம்" என்று தனக்குள் புலம்பியபடி போனில் நேரத்தை பார்த்தாள். அது ரகுநந்தன் உறங்கிவிடும் நேரம் தான்.

அவன் தூங்கியிருப்பான் என்று எண்ணி அவர்களின் அறைக்குச் செல்ல எழுந்தாள் அவள். போனை பார்த்துக் கொண்டே அறைக்கு வந்து சேர்ந்தவள் லேப்டாப்பை வைத்துவிட்டு படுக்க வந்த ரகுநந்தனின் மீது மோதிக் கொண்டாள்.

அவளை கீழே விழாமல் கையைப் பற்றி நிறுத்தியவன் "உனக்கு கண்ணு இருக்கா? இல்லையா? பார்த்து வரமாட்டியா?" என்று கடிந்து கொள்ள

அவள் அலட்சியமாக அவனைப் பார்த்தபடி "என்னோட கண்ணுலாம் இருக்க வேண்டிய இடத்துல கரெக்டா இருக்கு. ஆனா உனக்கு தான் அறிவு இல்ல" என்று பதிலடி கொடுக்க

ரகுநந்தன் "லிசன் உன் கிட்ட வம்பு வளர்க்க எனக்கு நேரம் இல்ல. தூங்கணும்னா தூங்கு. இல்லைனா இருட்டுல தனியா உக்காந்து புலம்பு. ஐ டோண்ட் கேர்" என்றபடி விளக்கை அணைக்கப் போக

நீரஜாட்சி எரிச்சலுடன் "உங்க அம்மா நம்ம ரெண்டு பேரையும் ஹனிமூன் போகச் சொல்லுறாங்க. அவங்களை சமாளிக்க நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்" என்று சொல்லிவிட்டு போனை மேஜையில் வீசிவிட்டு விரிந்து கிடந்த கூந்தலை போனி டெயிலாக மாற்றினாள்.

"அம்மா சொன்னாங்களா? இல்ல நீயா சொல்லுறியா?"

"ஐயோ! இவர் கூட ஹனிமூன் போகணும்னு நான் தவம் கிடக்குறேன் பாரு. ஏய் நீ சும்மா சும்மா மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வச்சிட்டு சுத்துறதை பார்த்துட்டு நம்ம ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனைனு மாமி கேட்டாங்க. நான் பிரச்சனை எதுவும் இல்லனு சொன்னதுக்கு அப்போ ஹர்சா, கிருஷ்ணா கூட சேர்ந்து நீங்களும் ஹனிமூன் போங்கனு சொல்லுறாங்க. இப்போ தெரியுதா? இதுக்கும் நீ தான் காரணம். நோ நோ நோ! உன்னோட இந்த அழகு முகம் தான் காரணம்" என்று கூறிவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

அவன் எரிச்சலுடன் "ஒரு மனுசன் வீட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கணும். இங்கே தான் எல்லாம் கெட்டு குட்டிச்சுவரா ஆயிடுச்சே. அப்போ எப்பிடி முகம் தெளிவா இருக்கும்? உன் மாமி கிட்ட சொல்ல வேண்டியது தானே, உங்களை அடக்க தான் உங்க மகனை கல்யாணம் பண்ணிகிட்டேன், அது தெரிஞ்சு தான் அவன் இப்பிடி உர்ருனு சுத்துறானு" என்று பதிலுக்கு கத்திவிட்டு இன்னொரு புறம் படுத்துக் கொள்ள நீரஜாட்சி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் அவள் உறங்கிவிட ரகுநந்தன் உறக்கம் தொலைந்து எழுந்து அமர்ந்தவன் தன் அருகில் வரிவடிவமாய் உறங்கிக் கொண்டிருப்பவளைப் பார்த்ததும் அவனை அறியாமல் மனம் வலித்தது அவனுக்கு.

சிறு சுடுசொல் கூட பொறுக்காமல் முகம் இறுகுபவளிடம் தான் என்னென்ன சொற்களைக் கொட்டியிருக்கிறோம் என்று அவனுக்கும் புரியாமல் இல்லை. நாளாக நாளாக அவள் தன்னிடம் இருந்து விலகிக் கொண்டே இருக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் ஒன்றாய் இருக்கும் நேரங்கள் அற்பசொற்பமானதே அதற்கு சாட்சி.

உறக்கத்தில் அவள் புரண்டு படுக்க ஜன்னல் வழியே வந்த மெல்லிய நிலவொளியில் வாடிப் போன அவளது முகத்தோற்றம் அவன் நெஞ்சை வருத்த தான் கொஞ்சம் அதிகமாக தான் கோபப்படுகிறொமோ என்று எண்ணி அவன் வருந்த தொடங்கினான்.

இன்னொரு புறம் இந்த கோபத்தால் அவளை இழந்து விடுவோமோ என்ற பயமும் கூட. திருமணமாகி இத்தனை நாட்களில் இந்த பிரச்சனையால் அவள் தன்னிடம் இருந்து விலகி பெரும்பாலான நாட்கள் அவுட் ஹவுஸில் உறங்குவது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர்களின் பிரச்சனை யாருக்கும் தெரியவரக் கூடாது என்று அவள் கவனமாக இருந்த அளவுக்கு தான் கவனமாக இருக்க தவறிவிட்டோமோ என்ற எண்ணம் எழ சலிப்புடன் கழுத்தை தடவியவனின் கையில் சிக்கியது அவளது பெயரை பொறித்த செயின்.

அதில் இருந்த எழுத்துக்கள் அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவன் கண்ணுக்கு புலப்பட அவனருகில் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் கன்னத்தில் இருந்த கண்ணீர்க்கோடுகளின் தடம் மட்டும் அவனுக்கு ஏனோ தெரியாமலே போய்விட்டது.

எண்ணங்களின் அலைக்கழிப்பால் அவன் உறங்க நேரம் பிடிக்க காலையிலும் அவன் தாமதமாகவே விழித்தான். கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்தவனின் கண்ணில் டிரஸ்ஸிங் டேபிள் முன் நின்று காதில் கம்மலை மாட்டிக்கொண்டிருப்பவளின் தோற்றம் விழ அவனை அறியாமல் அவன் மனம் மனைவியின் அழகை ரசிக்க தொடங்கியது.

அப்போது தான் குளித்துவிட்டு வந்திருந்ததால் கூந்தலில் இருந்து நீர்த்துளிகள் சொட்ட, அவள் நின்ற தோற்றம் பனியில் நனைந்த மலரைப் போல இருக்க அவனால் கண்ணை அவளிடமிருந்து திருப்ப முடியவில்லை.

நீரஜாட்சி இது எதையும் அறியாமல் தான் அணிந்திருக்கும் டாப்புக்கு பொருத்தமாக ஒரு  துப்பட்டாவை எடுத்தவள் அதன் இரு புறங்களிலும் இருக்கும் பாசிகளில் ஒன்றுமட்டும் நைலான் விட்டு போயிருக்க மற்றவற்றையும் உதிர்க்க தொடங்கினாள்.

பாசிகள் கோர்க்கப்பட்டிருந்த நைலான் நூலை அவள் இழுத்த வேகத்தில் அது அவளது கையில் அது சிறிதாக கிழித்துவிட்டது.

"ஆவ்" என்ற சத்தத்துடன் இரத்தம் வரும் விரலை வாயில் வைத்துக் கொண்டபடி திரும்பியவள் கணவனின் ரசனைப்பார்வையில் வெட்கப்படுவதற்கு பதிலாக எரிச்சலுற்றாள்.

"பார்க்கிற பார்வையை பாரு. கண்ணை நோண்டி காக்காக்கு போடணும்" என்று முணுமுணுத்தபடி அவள் கூந்தலை உதறிவிட்டுச் செல்ல அவன் முகத்தில் தெறித்த நீர்த்துளிகளை  துடைத்துவிட்டு குளியலறையை நோக்கி சென்றான். 


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 44 & 45)

    அட ராமா..! சின்ன பசங்களை விட ரொம்ப மோசமா சண்டை போட்டுக்கிறாங்க, முகத்தை திருப்புறாங்க. இப்படியே போனா எங்க போய் முடியும்ன்னே தெரியலையே..?

    இதுக்குத்தான், ஒரே மாதிரி வேவ் லென்த் உள்ளவங்க வாழ்க்கையில இணையக் கூடாதுன்னு சொல்றாங்களோ..?
    இணைஞ்சா இப்படித்தான்
    எடக்குமடக்காவே நடந்துப்பாங்களோ...?

    இதுல நந்தன் வேற ரொம்ப வார்த்தையை விடறான், இதனால நீரு இன்னும் அப்செட் ஆகுறா. இது நந்தனோட மண்டைக்கு உறைக்குற மாதிரியே தெரியலை. இதனால அவ கொஞ்சம் கொஞ்சமா விலகி, ஒரேயடியா விலகவும் வாய்ப்பிருக்குன்னு தெரியுதா, இல்லையா..?

    அப்படி எலியும் பூனையா இருந்த ஹர்ஷா கிருஷ்ணாவே மேலுங்கிற சிச்சுவேஷனுக்கு கொண்டு வந்திடுவான் போல..?
    நந்தா கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடேன், கோபம் முற்றிலுமா உண்மையை மறைச்சிடும்ன்னு பிசினஸ் பண்ற உனக்கு தெரியலையா...?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1