பூங்காற்று 47

Image
  ரகுநந்தன் சோஃபாவில் சாய்ந்தபடி   கண்ணாடி கதவுகளின் வழியே வெளியே தெரியும் காட்சிகளைக் கண்டபடியே "இவ்ளோ நடந்தும் எப்பிடி கேதரினை கல்யாணம் பண்ணிகிட்ட ? என்னால இதை இப்போ வரைக்கும் நம்ப முடியலைடா" என்று ஆற்றாமையுடன் கூறிக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிர்ப்புற சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து காபியை அருந்திக் கொண்டே கண்ணாடிக்கதவின் வழியே தோட்டத்தில் எதையோ சீரமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அழகை கண்களால் பருகியபடியே "நடந்த எல்லா விஷயத்தையும் என்னால மறக்கவும் மன்னிக்கவும் முடிஞ்சதுக்கு ஒரே ஒரு காரணம் தான் நந்து. நான் கேதரினை எந்த அளவுக்கு காதலிக்கிறேனோ அதே அளவுக்கு அவளும் என்னை காதலிக்கிறா" என்று உணர்ச்சிப்பூர்வமான குரலில் கூற ரகுநந்தன் வெகுண்டவனாய் " நீ லவ் பண்ணுனது டோட்டல் லண்டன் சிட்டிக்கும் தெரியும்டா. பட் அவ உன்னை லவ் பண்ணுனானு நீ எதை வச்சு சொல்லுற ? உனக்கே நல்லா தெரியும் , அவ உன் லைஃப்ல வந்ததே உன் ஃபேக்டரி ப்ராடெக்டோட ஃபார்முலாவை திருட தானு. அப்புறம் நீ எப்பிடி அவளோடது லவ் தானு நம்புன ?" என்று படபடவென்று பொறிய அவனை கையமர்த்தினா...

பூங்காற்று 42

 



நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை.

அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற "டாம்'ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன.

ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது.

ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத்து வைத்திருப்பது பிடிக்கவில்லை.

அதனால் இந்த திறப்புவிழா களேபரங்கள் முடியட்டும் என்று அவள் காத்திருந்தாள்.

அதே நேரம் கிருஷ்ணஜாட்சியுடனான ஹர்சவர்தனின் உறவு முன்பு போல இல்லாது சிறிது முன்னேறியிருந்தது. முன்பு போல அவள் தொட்டதுக்கெல்லாம் கோபப்படவில்லை. தினமும் காலை அவனது அணைப்பில் கண் விழிப்பது, அலுவலகம் செல்வதற்கு முன் நெற்றியில் அவன் இடும் முத்தம் இது எல்லாமே அவளுக்கு பழகிப் போய் விட்டது. அவளது மனமும் ஹர்சவர்தனின் பால் சிறிது சிறிதாக சரிய தொடங்கியிருந்தது.

இதற்கு சிகரம் வைத்தாற்போல அவனது பிறந்தநாள் வரவே ஹர்சவர்தனுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசித்து பார்த்தவள் கரோலினின் ஆலோசனையின்படி கைக்கடிகாரம் ஒன்றை வாங்கினாள். பிறந்தநாளுக்கு முந்தைய இரவு பன்னிரெண்டு மணிக்கு அவனை எழுப்பியவள் தன் கையால் செய்த கேக்கை(எக்லெஸ் தான்) தயக்கத்துடன் அவனிடம் நீட்டி "ஹேப்பி பர்த்டே ஹர்சா" என்று கூற ஹர்சவர்தனுக்கு இதை விட சிறந்த பரிசு வேறு என்ன இருக்க முடியும்?

சந்தோசமாக கேக்கை வெட்டியவன் அதை மனைவிக்கும் ஊட்டிவிட எந்த பிறந்தநாளும் தராத மகிழ்ச்சியை இந்த பிறந்தநாள் அவனுக்கு அளித்துவிட்டது. மறுநாள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி அன்னையின் கையால் செய்த இனிப்பை சாப்பிட்ட பின் ஹோட்டலுக்கு செல்ல தயாரானவனுடன் தானும் வருவதாக கிருஷ்ணஜாட்சி கூறவே அவனும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்பவனாய் அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான். இருவரும் காரை நோக்கி செல்ல நீரஜாட்சியும் ரகுநந்தனும் அவர்களை ஏதோ சொல்லி கேலி செய்வது இருவருக்குமே புரிய ஒரு ஊமைச்சிரிப்பு அவர்கள் உதட்டை நிறைக்க இருவரும் காரில் அமர்ந்தனர்.

காரில் செல்லும் போதே தான் வாங்கியிருந்த பரிசை அவனிடம் நீட்டியவள் "இது நீங்க யூஸ் பண்ணுற அளவுக்கு காஸ்ட்லியா இருக்காது. பட் என்னால இதை மட்டும் தான் வாங்க முடிஞ்சுது" என்று தயக்கத்துடன் கூற

அவன் ஒரு கையால் காரை ஓட்டியபடி அதை வாங்கியவன் சாலையின் ஓரம் காரை நிறுத்திவிட்டு அதை திறந்து பார்த்தான். அதிலிருந்த கைக்கடிகாரத்தை கண்டவன் "வாவ்! கிருஷ்ணா வாட்ச் சூப்பரா இருக்கு. ஒன் மினிட்" என்று தனது வாட்சை பார்த்து நேரத்தை சரி செய்தவன் தனது வாட்சை கழற்றிவிட்டு கிருஷ்ணஜாட்சி பரிசளித்ததை அணிந்து கொள்ள அவள் முகம் சந்தோசத்தில் பூரித்துவிட்டது.

அதே சந்தோசத்துடன் "தேங்ஸ்...நான் நீங்க இதை போட்டுக்க மாட்டிங்கன்னு நினைச்சேன்" என்று கூறிவிட

ஹர்சவர்தன் யோசனையுடன் "நீ ஏன் அப்பிடி நினைச்ச கிருஷ்ணா?" என்று வினவ

"நீங்க போட்டிருக்கிற வாட்ச் காஸ்ட்லியானது. அதை விட்டுட்டு இதை போடுவிங்களானு..." என்று இழுக்க

அவன் "நீ எனக்கு பொம்மை வாட்ச் வாங்கி குடுத்தா கூட போட்டுப்பேன். பிகாஸ் அதுல உன்னோட அன்பு இருக்குனு நான் நினைக்கிறேன்" என்றான் அழுத்தமாக.

கிருஷ்ணஜாட்சி அமைதி காக்கவும் அவளது கரத்தை பற்றி முத்தமிட்டவன் "ஐ நோ...இதே வாட்சால நான் உன் கிட்ட ரூடா நடந்துகிட்டேன். பட் அது என்னோட முட்டாள்தனம் தானே தவிர நான் என்னைக்கும் மனுசங்களை பணத்தை வச்சு எடை போடறது கிடையாது. இந்த கொஞ்ச நாள்ல நீ என்னை பத்தி புரிஞ்சுகிட்டிருப்பனு நினைக்கேன்" என்று கூற கிருஷ்ணஜாட்சிக்கு அவன் வார்த்தைகள் மனதுக்கு நிறைவை கொடுத்தது.

புன்னகையுடன் "ம்ம்..நீங்க அதே பழைய அம்மாஞ்சி தான்" என்று அவள் கூற ஹர்சவர்தன் "அம்மா தாயே! தயவு பண்ணி அம்மாஞ்சினு சொல்லாதே. நீ அந்த வார்த்தையை ஏன் சொல்லுறேனு ஒரு விளக்கம் குடுத்தியே, அப்போ இருந்து அந்த வார்த்தையை கேட்டாலே கொஞ்சம் ஜெர்க் ஆகுது" என்று கூற கிருஷ்ணஜாட்சி கலகலவென்று நகைத்தாள்.

அதே சந்தோசத்துடன் இருவரும் அவரவர் அலுவல் நடக்கும் இடத்துக்கு சென்றுவிட அன்றைய நாள் அவர்களின் வாழ்வின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அன்று அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்பும் போது திறப்புவிழாக்களுக்கான தேதிகளுடன் வந்தனர்.

இரண்டு தேதிகளும் அடுத்தடுத்து வர நெருங்கியவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கலாம் என்று பெரியவர்கள் கூறிவிட அடுத்து வந்த நாட்களில் அழைப்பிதழ் கொடுக்கவென்று கணவனும் மனைவியும் ஒன்றாகவே செல்ல அது அவர்களின் புரிதலை இன்னும் அதிகரித்தது எனலாம்.

அதே சமயம் பத்மாவதி இரு மகன்களுக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்தால் நூற்றியெட்டு திவ்வியதேசங்களுக்கும் குடும்பத்துடன் வருவதாக வேண்டுதல் வைத்திருக்க அதே சமயம் அவரது தோழி ஒருவரும் கிளம்ப இருந்ததால் தனது குடும்பத்தாருடன் தானும் அவர்களுடன் இணைந்து செல்லலாம் என்று எண்ணினார்.

அதை மாமனார் மாமியாரிடம் தெரிவித்த போது இருவரும் எந்த ஆட்சேபனையும் கூறவில்லை. இரண்டு திறப்புவிழாக்களும் முடிந்து ஒரு வாரம் கழித்து தான் அவர்கள் ஷேத்ராடனம் செல்வதாக முடிவு செய்திருந்தனர். எனவே பத்மாவதியும் மைதிலியும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

முதலில் கிருஷ்ணஜாட்சியின் கனவான டாம்'ஸ் கஃபேயின் திறப்புவிழா தான் வந்தது. கிருஷ்ணஜாட்சியின் குடும்பத்தினர் அனைவரும் சூழ மெர்லின் தான் ரிப்பன் வெட்டி கஃபேயை திறந்து வைத்தார். பேக்கரியுடன் சேர்ந்தே இருந்தாலும் இரண்டுக்கும் உள்கட்டமைப்பு அலங்காரத்தில் நிறைய வேறுபாடுகள் இருந்தது.

முதலில் உதவிக்கு என்று இரண்டு பெண்களை மட்டுமே அவர்கள் பணியமர்த்தியிருந்தனர். அவர்களுக்கு குடும்பத்தினரை கிருஷ்ணஜாட்சி அறிமுகப்படுத்தி வைத்தாள். அதன் பின் அனைவருக்கும் அவர்கள் கையாளே ஸ்பெஷல் காபி போட்டுக் கொடுக்கப்பட பத்மாவதி கண்ணில் ஆச்சரியத்துடன் அந்த கட்டிடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது கண்கள் கலங்கியிருக்க கிருஷ்ணஜாட்சி "மாமி என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கிங்க?" என்று கேட்க

அவர் "உன்னை படிக்க விடாம பண்ணிட்டேனு நினைச்சு இந்த உண்மை தெரிஞ்சப்புறம் நான் கவலைப்படாத நாளே இல்லடிம்மா. ஆனா ரெண்டு பொண்ணுங்களா சேர்ந்து இதை இவ்ளோ சிறப்பா நடத்திண்டு வந்திருக்கேள்ங்கிறது எனக்கு ஆச்சரியத்தை குடுத்துடுச்சு.

உங்க அம்மா என் கிட்ட அடிக்கடி சொல்லுவா, எந்த விஷயத்தையும் ஜீரோல இருந்து ஆரம்பிச்சு ஜெயிக்கணும் மன்னினு. அவ வார்த்தையை இன்னைக்கு அவ பொண்ணு நிஜமாக்கிட்டா" என்று கூற கிருஷ்ணஜாட்சிக்கும் அன்னையின் நினைவில் முகம் கலங்க ஆரம்பித்தது. சில கணங்களில் முகத்தைச் சீராக்கி கொண்டவள் பத்மாவதியை அழைத்துச் சென்று அந்த கஃபேயை சுற்றி காட்ட தொடங்கினாள்.

இவையனைத்தையும் தூரத்திலிருந்து விழியகல பார்த்துக் கொண்டிருந்தனர் பட்டாபிராமன் தம்பதியினரும் அவர்களின் சீமந்தபுத்திரர்களும்.

வேங்கடநாதன் நிம்மதி பெருமூச்சுடன் "பத்மாவை இப்பிடி பார்க்க எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமாப்பா?" என்று கூற

கோதண்டராமன் "ஆமா அண்ணா! மன்னி முழுசா மாறிட்டா..மதுராவுக்கு தான் இதை பார்க்க குடுத்து வைக்கல" என்று வருத்தத்துடன் கூற அனைவருமே அதை மவுனமாக ஆமோதித்தனர்.

ஒரு வழியாக அந்த திறப்புவிழா முடிந்து ரகுநந்தன் ஹர்சவர்தனை தவிர அனைவரும் வீடு திரும்ப அண்ணனும் தம்பியும் மறுநாள் ஹோட்டல் திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட சென்றிருந்தனர்.

அவர்கள் இரவு திரும்ப நேரமாகி விட பத்மாவதி இளைய மருமகளிடம் "நீரஜா என்னோட போன் சரியாவே வேலை செய்யறதில்லடிம்மா. இதுல என்ன பிரச்சனைனு கொஞ்சம் பார்த்து ரிப்பேர் பார்த்து வாங்கி தர்றியா?" என்று கேட்க நீரஜாட்சியும் சரியென்று தலையாட்டியவள் அதை வாங்கிக் கொண்டு தனது டேபிளில் வைத்து பூட்டினாள்.

மறுநாள் திறப்புவிழாவுக்கு கோலாகலமாக தயாரான குடும்பத்தினர் அவர்களின் ஹோட்டலின் முன் சென்று காரில் இறங்கியதும் கண்கள் விரிய ஆச்சரியத்தில் திகைத்தனர்.

எஸ்.என் கன்ஸ்ட்ரெக்சனின் பொறியாளர்கள் தங்கள் திறமை முழுவதையும் கொட்டி அதை கட்டியிருந்தனர் என்று கூறினால் அது மிகையாகாது.

அங்கே ஊழியர்கள் காத்திருக்க சுபநேரத்தில் ஹோட்டல் ஸ்ரீ கிராண்டெ பட்டாபிராமன் மற்றும் சீதாலெட்சுமி தம்பதியினரால் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளே நுழைந்ததும் கண்ணாடி கதவுகளுடனான கீழ்த்தளம் அது தான் ஹோட்டலின் லாபி கண்ணைப் பறிக்கும் விளக்குகளுடன் சொர்க்கலோகம் போல மின்னியது. அதன் ஒரு ஓரமாக மிகப்பெரிய ரிசப்சன் இருக்க அதன் நான்கு பக்கங்களிலும் அடுத்தடுத்த உணவு உண்ணும் பகுதிகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான உள்கட்டமைப்பு வசதியுடன் செதுக்கப்பட்டிருந்தன.

லாபியின் ஒரு ஓரமாக ஸ்ரீகிருஷ்ணனின் வெண்கலச்சிலை அழகாக வைக்கப்பட்டிருக்க அங்கே வந்து காத்திருப்பவர்களுக்காக கலைநயமிக்க இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.

நீரஜாட்சியிடம் ஒவ்வொரு இடமாக சுட்டிக்காட்டியவன் ஒரு பக்க உணவு உண்ணும் பகுதியின் வழியாக சென்று வெளியே இருக்கும் நீச்சல்குளம் மற்றும் அதை சுற்றியிருக்கும் புல்வெளியை காட்ட அவள் ஆச்சரியத்துடன் ஒவ்வொன்றையும் ரசிக்கத் தொடங்கினாள்.

"நீரு டோட்டலா ஏழு மாடி இருக்கு. ஒரு மாடிக்கு பத்து ரூம், டோட்டலா செவண்டி ரூம்ஸ் இருக்கு. இப்போதைக்கு பட்ஜெட்டுக்கு இவ்ளோ தான் முடிஞ்சது. அப்புறமா அந்த பக்கம் பிஸினஸ் ரூம், இங்கே போனா பார்ட்டி ஹால் வரும்" என்று அவளை தோளோடு அணைத்தபடி விளக்கி கொண்டிருந்தான்.

அதே நேரம் பட்டாபிராமன் ஹர்சவர்தனிடம் "கண்ணா நீ நம்ம குடும்பத்தோட பேரை இன்னும் ரொம்ப உயரத்துக்கு கொண்டு போயிட்டடா. அந்த பகவான் நோக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்" என்று மனதாற கூற ஹர்சவர்தன் "எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாத்தா" என்றான் அடக்கமாக.

ஆனால் பக்கத்தில் நின்ற சீதாலெட்சுமியோ "எல்லாம் மூத்த பேத்தியோட ராசி. அவ கால் வச்சப்புறம் தான் இதுல்லாம் நடந்துச்சு" என்றார் பெருமிதமாக.

பத்மாவதிக்கும் மைதிலிக்கும் பெருமை பிடிபடவில்லை. ஸ்ருதிகீர்த்தி கர்ப்பகால பிரச்சனைகளால் வரவில்லை. எனவே மைத்திரேயியும் அவளது மகனும் வந்திருக்க மைத்திரேயி மகனுடன் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்தவள் அம்மாவையும் பெரியம்மாவையும் விட்டு வைக்கவில்லை.

கிருஷ்ணஜாட்சி கரோலினையும் மெர்லினையும் அழைத்திருந்தாள். மெர்லின் ஹர்சவர்தனிடம் "ஐ அம் ரியலி ப்ரவுட் ஆஃப் யூ மை சன். நீ சொன்னதை சாதிச்சிட்ட..இனிமே கிருஷ்ணா உன்னோட மனைவினு பெருமையா சொல்லிக்கலாம்" என்று வாழ்த்த அவனும் புன்னகையுடன் அவரது வாழ்த்தை ஏற்றுக் கொண்டான்.

கிருஷ்ணஜாட்சி வர மெர்லின் குடும்பத்தினர் புறம் நகர்ந்து விட அவள் ஹர்சவர்தனிடம் கையை நீட்டியவள் "கங்கிராட்ஸ் ஹர்சா" என்று கூற அவனோ கையை நீட்டாமல் அமைதியாக நின்றான்.

அவள் ஆச்சரியமாக பார்க்க அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் "இனிமே என்னை வாழ்த்தணும்னு உனக்கு தோணுச்சுனா இப்பிடி தான் வாழ்த்தணும். சரியா?" என்று கூற

அவள் வெட்கத்துடன் "என்ன பண்ணுறிங்க? முழு குடும்பமும் இங்கே தான் இருக்காங்க. பார்த்துட போறாங்க ஹர்சா" என்று விலக முயல

அவனோ இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டபடி "பார்த்தா பார்க்கட்டும். என் ஆத்துக்காரியை நான் ஹக் பண்ணுறதை யாராலயும் தடுக்க முடியாது" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ரகுநந்தன் நீரஜாட்சியுடன் வர ஹர்சவர்தன் "வந்துட்டாங்கய்யா கரடி கபிள்ஸ்" என்று கேலியுடன் அவர்களை வரவேற்றான்.

ரகுநந்தன் அண்ணனை பொய்யான கோபத்துடன் நோக்கியவன் "டேய் அண்ணா இவளை சொல்லு ஓகே. நான் எப்போடா உங்களை டிஸ்டர்ப் பண்ணிருக்கேன்?" என்று கேட்க அதற்கு ஹர்சவர்தனும் கிருஷ்ணஜாட்சியும் சிரிக்க

நீரஜாட்சி ரகுநந்தனை முறைத்தவள் சலிப்புடன் "அத்திம்பேர் எனக்கு வாய்ச்ச ஆம்படையான் சரியில்ல. என்ன பண்ணுறது? எல்லாம் தலைவிதி" என்று நெற்றியில் கோடிழுத்து காட்டினாள்

இந்த ஜோடிகளின் புன்னகை என்றுமே அவர்களை விட்டு விலகக் கூடாது என்று அவர்கள் குடும்பத்தினர் கடவுளிடம் வேண்டிக் கொண்டனர்.

எல்லாம் நன்றாக தான் சென்றது, ரகுநந்தன் இரவில் அவனது அறைக்கு வந்தவன் மேஜையிலிருந்து அவன் அன்னையின் போனை எடுக்கும் வரை.

அவன் வருவதற்கு முன்னரே நீரஜாட்சி மனதிற்குள் "நீரு எல்லா ஃபங்சனும் முடிஞ்சு இப்போ பீச் மோடுக்கு எல்லாரும் திரும்பியாச்சு. இன்னைக்கு நந்து கிட்ட உண்மையை சொல்லிடு" என்று தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும் போதே அறையில் நுழைந்தான் அவளின் கணவன்,.

உள்ளே வந்தவன் "நீரு எனக்கு சூடா காபி போட்டு எடுத்துட்டு வர்றியா? ரொம்ப டயர்டா இருக்கு. நான் போய் ஒரு குளியலை போட்டுடறேன்" என்று கேட்க அவள் மறுக்காமல் தலையாட்டிவிட்டு சமையலறைக்கு சென்று காபி போட ஆரம்பித்தாள்.

பத்மாவதி மைதிலியுடன் ஹாலில் அமர்ந்து பழைய கதை பேசிக் கொண்டிருந்தவர் மருமகள் சமையலறைக்குள் நுழைவதை கண்டுவிட்டு "இந்நேரத்துல என்னடிம்மா உருட்டிண்டிருக்க?" என்று கேட்க

"உங்க பையனுக்கு காபி வேணுமாம் மாமி. அதான் போட்டிட்டிருக்கேன்" என்று பதிலிறுத்துவிட்டு காபிகப்புடன் மாடிக்கு சென்றாள்.

அதற்குள் ரகுநந்தன் குளித்து விட்டு உடை மாற்றியிருக்க அவன் கையில் இருந்தது பத்மாவதியின் செல்போன். அவள் வரும் அரவம் கேட்டு திரும்பியவன் "அம்மா போன் இங்கே ஏன் இருக்கு?" என்ற கேள்வியுடன் காபி கப்பை வாங்கிக் கொள்ள நீரஜாட்சி அதில் ஏதோ பிரச்சனை என்று கூறவும் போனை ஆன் செய்தான்.

காபியை அருந்தியபடி போனில் கண்ணை ஓடவிட்டவனிடம் நீரஜாட்சி "நந்து உன் கிட்ட நான் ஒன்னு சொல்லணும்" என்று ஆரம்பிக்க அவன் உம் கொட்டியபடி போனில் தேவையற்ற ஆப்களை அழித்தபடி கேட்க ஆரம்பித்தான்.

"நந்து...நான் கல்யாணத்துக்கு ஏன் சம்மதிச்சேன்னா...." என்று அவள் ஆரம்பிக்கும் போது அவன் தனக்குள் "ச்சே இந்த அம்மா ஏன் இத்தனை ஆடியோ ரெக்கார்ட் பண்ணிருக்காங்க" என்றபடி கடைசியாய் பதிவானதை கேட்க ஆரம்பித்தான்.

அதில் நீரஜாட்சியின் குரல் தான் ஒலித்தது. "எங்க அம்மாவோட தயவுல ராஜவாழ்க்கை வாழறேள் போல?" என்று கேலியுடன் பேச ஆரம்பித்தவளின் குரல் அதிலிருந்து கேட்க ரகுநந்தன் இது எப்போது என்ற ரீதியில் அந்த உரையாடலை கேட்க ஆரம்பித்தான்.

நீரஜாட்சியோ "நந்து இதை தான் நான்.." என்று சொல்லவர அவள் உதட்டில் விரல் வைத்து தடுத்தவன் மிச்சமுள்ளவற்றை கேட்க ஆரம்பித்தான்.

அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே "உங்க இளைய பிள்ளை என்னை ரொம்ப காதலிக்கிறான். அவன் இப்போ என்னோட நந்து. அவனை வச்சு தான் நான் இந்த ஆத்துக்குள்ளே உரிமையோட நுழையப் போறேன்" என்ற வாக்கியம் வர ரகுநந்தனால் அந்த வார்த்தையை நம்பவே முடியவில்லை. ஆனால் அந்த வார்த்தை ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவன் கையிலிருந்த காபி கோப்பையை நழுவ விட அது கீழே விழுந்து நொறுங்கியது

அவன் அதோடு ஆடியோவை நிறுத்திவிட நீரஜாட்சி என்ன சொல்லவென்று தெரியாதவளாய் உறைந்து போய் நின்றாள். ரகுநந்தன் அதை கேட்டதற்கு காரணமே இது வழக்கம் போல தாயும் அவளும் போடும் சிறுபிள்ளைத்தனமான சண்டை தான் என்று எண்ணி தான் கேட்கவே ஆரம்பித்தான்.

ஆனால் அந்த ஆடியோ அவனது காதலின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் என்று தெரிந்திருந்தால் அவன் சத்தியமாக அதை கேட்டிருக்கவே மாட்டான்.

உள்ளுக்குள் எதுவோ உடைவது போன்ற வலி. மெதுவாக அந்த வலி விஸ்வரூபமெடுக்க கோபத்தில் கையிலிருக்கும் போனை வீசினான் ரகுநந்தன். நீரஜாட்சி அதிர்ந்தவளாய் கண்ணை விரித்து பார்த்துவிட்டு அவனை நோக்கி வர "ஏய் அங்கேயே நில்லு. பக்கத்துல வந்தா நான் கோவத்துல எதுவும் பண்ணிடப் போறேன்" என்று எச்சரித்தான்.

"நந்து நான் சொல்லுறதை கேட்டுட்டு கோவப்படு. நான் எந்த மாதிரி சிச்சுவேசன்ல இப்பிடி பேசுனேனு உனக்கு நான் சொல்லுறேன்" என்று அவள் பதற்றத்தில் நடுங்கிய குரலில் கூற

அவனோ "இன்னும் என்னடி கேக்கணும்? அதான் உன் வாயால சொல்லிட்டியே! உன் பத்து மாமிக்கு புத்தி வர வைக்கவும், உன் அக்கா வாழ்க்கைக்காகவும் தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டேனு" என்று கத்திவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க நீரஜாட்சி அவனது கரம் பற்றி தடுத்தாள்.

"நீ இன்னும் நான் சொல்லுறதை கேக்கலையே நந்து! பிளீஸ் கொஞ்சம் பொறுமையா கேளு" என்றவளின் கையை உதறினான் ரகுநந்தன்.

"என்னடி சொல்ல போற? இது நீ பேசுனது இல்லைனா?"

"இல்ல நந்து. அது நான் பேசுனது தான். ஆனா அப்போ நான் இருந்த மனநிலை அப்பிடி"

"எந்த மனநிலை மண்ணாங்கட்டியை பத்தியும் இனி நான் கேக்க போறது இல்ல. எனக்கு தெரிஞ்சது எல்லாம் ஒன்னு தான்; நீ என்னை காதலிக்கவே இல்லை. என் அம்மாவை உனக்கு பிடிக்காதுங்கிறதுக்காக அம்மாக்கு பதிலடி குடுக்க தான் நீ என்னை காதலிச்ச மாதிரி நடிச்சிருக்க. யோசிக்கிறேனு மூனு மாசமா எனக்கு பதில் சொல்லாதவ திடீர்னு வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுறப்போவே நான் சுதாரிச்சிருக்கணும்" என்று என்ன பேசுகிறோம் என்று புரியாமல் வார்த்தைகளை விட்டான்.

நீரஜாட்சிக்கு அவன் வார்த்தைகள் நெஞ்சை ரணமாக்க "இல்ல நந்து. எனக்கு நடிக்கலாம் வராது. எனக்கு உன்னை பிடிச்சு தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்னேன்" என்று கெஞ்சலாகவே அவள் குரல் ஒலிக்க அதை கேட்க அவனுக்குமே கஷ்டமாக தான் இருந்தது.

தலையை உலுக்கியவன் "நீ சொல்லுற எல்லாமே எனக்கு இப்போ பொய்யா தான் தோணுது நீரஜாட்சி" என்றவனின் பேச்சில் அவளும் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கிறாள் என்று அறியாமல் அவன் பேச

"நான் ஏன் பொய் சொல்ல போறேன் நந்து? நிஜமாவே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். விரும்பாத ஒருத்தனை எந்த பொண்ணாலயும் புருசனா ஏத்துக்க முடியாதுடா" என்றாள் அவள் தன்னை புரியவைக்கும் வேகத்துடன். எப்போதும் தன்னை காதலுடன் நோக்கும் விழிகளில் அன்று வெறுப்பு மட்டும் தெரிய அவனை அமைதியாக்கி தனது நிலையை விளக்க நினைத்தாள் அவள்.

ஆனால் ரகுநந்தனின் "போதும்! நீ சொல்லுறதை நான் எப்பிடி நம்புறது? நீ என்னை விரும்புனங்கிறதுக்கு உன்னால ஆதாரத்தை காட்ட முடியுமா?" கோபம் கலந்த ஏளனத்தில் இவ்வளவு நேரம் தூங்கிக் கிடந்த அவளின் சுயகவுரம் கண் விழித்தது.

தான் நேசிப்பதை புரிந்து கொள்ள கூட இயலாதவனாய் ஆதாரம் கேட்பவனிடம் மனம் விட்டு போனது அவளுக்கு. தான் எதுவுமே செய்யாமல் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருப்பது தனது இயல்பே அல்ல என்று நினைத்தவள் இதற்கு மேல் இவனிடம் விளக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

கண்ணில் கனலுடன் "ரகுநந்தன்னு பேர் வச்சதுக்கு பொருத்தமா எப்பிடி நம்புறதுனா கேக்குற? ஏய்! நீ நம்பவே வேண்டாம்டா. அவ்ளோ கஷ்டப்பட்டு ஆதாரம் காமிச்சு தான் நீ என்னோட மனசை புரிஞ்சிப்பேனா அதுக்கு அவசியமே இல்ல மிஸ்டர் ரகுநந்தன். நான் நடிச்சு உன்னை கல்யாணம் பண்ணிகிட்டதா நினைக்கிறியா? தாராளமா நினைச்சுக்கோ. ஐ டோண்ட் கேர் அண்ட் ஐ அம் டன். இனி பேசுறதுக்கு எதுவும் இல்ல" என்று அவனுக்கு சிறிது குறையாத கோபத்துடன் உரைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள் நீரஜாட்சி.

இதற்கு மேல் அங்கே நின்றால் அவள் அழுதுவிடுவாள் என்பது அவளுக்கே தெரியும். ஆனால் ஒரு ஆடியோவுக்காக தனது நேசத்தை நாடகம் என்று சொல்பவன் கணவனே என்றாலும் அவன் முன் கண்ணீர் சிந்த அவளது தன்மானம் அவளுக்கு இடம் கொடுக்கவில்லை.

இங்கே ரகுநந்தனின் நெஞ்சமோ உலைக்களமாக கொதித்தது. தலையை பிடித்தபடி படுக்கையில் அமர்ந்தவனுக்கு உலகமே தன்னை பார்த்து கை கொட்டி சிரிப்பது போன்ற உணர்வு.

நீரஜாட்சியின் பேச்சை யாராவது கேட்டுவிட்டு வந்து கூறியிருந்தால் கூட அவன் நம்பியிருக்க மாட்டான். அவளே கூறியபிறகு அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனது காதல் இப்படி கேலிகூத்தாகி விட்டதே என்ற எண்ணமே அவனைக் கொல்ல முதல் முறை அவன் கண்ணில் கண்ணீர் திரள தொடங்கியது.

காதல் என்பது எவ்வளவு சந்தோசத்தை கொடுக்குமோ அவ்வளவுக்கு வலியையும் கொடுக்கும் என்பதை அந்த இரவு அவர்களுக்கு உணர்த்திவிட்டது.


Comments

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 42)

    அச்சோ..! இப்படி ரெண்டு பேரும் அவசரப்பட்டு வாயை விட்டு ஒருத்தரையொருத்தர் காயப்படுத்திக்கிறதுக்கு பதில் ஒரு பத்து நிமிசம் உட்கார்ந்து நிதானமா பேசியிருக்கலாம்..
    இல்லையா, கோபம் தீர்ந்த பிறகாவது பேசியிருக்கலாம்.
    இப்படி ரெண்டு பேருமே எடுத்தேன், கவிழ்த்தேன் முடிச்சிட்டேன்னு ஏன்தான் முறுக்கிட்டு திரியுறாங்களோ...?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. Jolly couples hot and spicy couplesa thirumba marittangale

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1