பூங்காற்று 48

Image
  நீரஜாட்சி அன்று காலையில் எழும் போதே அவளுக்கு மனது சரியில்லை. முதல் வேளையாக முகம் கழுவி விட்டு வராண்டாவில் சென்று காற்றாட அமர்ந்தவள் டியூசனுக்கு செல்லும் விக்கிக்கு டாட்டா காட்ட அவன் சைக்கிளில் ஏறியவன் "நீருக்கா! நான் இன்னும் ஒன் ஹவர்ல டியூசன் முடிச்சு வந்துடுவேன். அதுக்கு அப்புறம் மேட்சை ஸ்டார்ட் பண்ணுவோம்" என்று அறிவிப்பு விடுத்தபடி சென்றான். அவன் செல்வதை பார்த்துவிட்டு வனஜா "என்னமோ போ நீரு! இவன் பப்ளிக் எக்சாம்ல என்ன மார்க் வாங்குவானோனு அவனுக்கு பயம் இருக்கோ இல்லையோ எனக்கு டென்சனா இருக்கு. ஹாஃப் இயர்லில எய்ட்டி பர்சன்டேஜ் தான் வாங்கியிருக்கான்" என்று வருத்தமாக கூற நீரஜாட்சி "அக்கா எய்ட்டி பர்சண்டேஜ் உங்களுக்கு கம்மியா தெரியுதா ? பப்ளிக் எக்சாம் மார்க் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறது இல்லக்கா. அதை தவிர அவனோட மத்த பழக்க வழக்கங்கள் தான் அவனை நல்ல மனுசனா காட்டும். வெறும் மார்க்கை வச்சு அவனை எடை போடாதிங்க. இப்போ இல்லைனாலும் வருங்காலத்துல அவன் ஒரு நல்ல நிலமைக்கு வருவான்" என்று விக்கியை புகழ்ந்து தள்ள வனஜா "அது சரி! நீ அவனை விட்டுக...

பூங்காற்று 40

 



மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் "நீரு சைட் மாத்திக்கிறியா?" என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் "கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி" என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா, சின்ன மாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

ஆசிர்வாதம் வாங்க வேண்டிய பெரியவர்களின் பட்டியல் சற்று நீளம் என்பதால் ஒருவர் பாக்கியின்றி அனைவரின் ஆசிர்வாதத்தையும் வாங்கி முடித்ததும் நீரஜாட்சி தான் மனதில் நினைத்த திட்டத்தை செயல்படுத்த இது தான் சரியான சமயம் என்று எண்ணியவள் "கிருஷ்ணா" என்று அழைத்தவாறு ஏதோ சொல்லப் போக அது பத்மாவதியின் பெரிய குரலில் அடங்கிவிட்டது.

இவர் எதற்காக கிருஷ்ணஜாட்சியை அழைக்கிறார் என்று புருவங்கள் முடிச்சிட அவள் கேள்வியாய் நோக்கும் போதே ஹர்சவர்தனிடம் சென்றவர் தனது பர்ஸில் இருந்து கிருஷ்ணஜாட்சியின் கழுத்தில் அவன் கட்டிய தாலியை எடுத்தவர் "ஹர்சா இதை எல்லார் முன்னாடியும் கிருஷ்ணா கழுத்துல கட்டி முறைப்படி அவளை உன்னோட மனைவி ஆக்கிக்கோடா. கடந்த முறை ஏதோ நடந்து போச்சு. ஆனா இந்த தடவை என் ரெண்டு மகன்களும், மருமகள்களும் முறைப்படி நம்ம ஆத்துல காலடி எடுத்து வைக்கணும்னு ஆசைப்படறேன்டா கண்ணா" என்று மகனிடம் அதை நீட்ட அவன் மறுக்காமல் அதை கையில் வாங்கிக் கொண்டான்.

தன் அருகில் நின்ற மனைவியிடம் வந்தவன் "லாஸ்ட் டைம் யாருமே உன் விருப்பத்தை கேக்கல கிருஷ்ணா. குடும்ப கவுரம், அது இதுனு பேசி உன்னை மணையில உக்கார வச்சிட்டாங்க. ஆனா இந்த தடவை அந்த தப்பு நடக்க கூடாதுனு நினைக்கிறேன். உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல சம்மதமா? உனக்கு சம்மதம் இல்லைனா சொல்லிடு. நான் எவ்ளோ நாளானாலும் அதுக்காக காத்திண்டிருப்பேன்" என்று கூற அவன் விழிகளோ 'தயவு செய்து சம்மதம் என்று சொல்லேன்' என்று இறைஞ்சுவது கிருஷ்ணஜாட்சியின் கண்ணில் படாமல் இல்லை. ஆனாலும் அவளது விழிகள் தங்கையின் சம்மதத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தன.

நீரஜாட்சி தான் செய்ய நினைத்தது அனைத்தும் எந்தவித ரசாபாசமும் இன்றி பத்மாவதியே செய்து முடித்துவிட்டதை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அவர் இல்லையென்றால் இந்நேரம் அவளது திட்டம் செயல்படுத்தப்பட்டு அவளை மணந்தவனின் கண்ணில் இப்போது இருக்கும் காதல் காணாமல் போயிருக்கும். அப்படி எதுவும் நடக்காமல் அவளது விருப்பம் நிறைவேற கடவுள் துணையிருந்ததே பெரிய விஷயம் என்று எண்ணியவள் கிருஷ்ணஜாட்சியை சரியென்று சொல்லுமாறு கண்ணால் வேண்ட அவள் தங்கையின் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் ஹர்சவர்தனிடம் "எனக்கு சம்மதம் ஹர்சா" என்று கூற அடுத்த சில நிமிடங்களில் ஹர்சவர்தன் மணமேடையில் அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டிருந்தான்.

கடந்த முறை போலன்றி இம்முறை ஒவ்வொரு முடிச்சின் போதும் கடவுளை "பகவானே! இது வரைக்கும் நடந்ததை எல்லாம் மறந்துட்டு நாங்க ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க போறோம். உங்க ஆசிர்வாதம் எப்போவும் எங்களுக்கு வேணும்" என்று வேண்டிக் கொண்டான்.

கிருஷ்ணஜாட்சி தன் அருகில் கண் மூடி அமர்ந்திருந்தவனைப் பார்த்தவள் "போதும் கடவுள் கிட்ட வேண்டுனது. ரொம்ப பெரிய வேண்டுதலா இருக்கும் போல" என்று கூற அவன் தனது புன்னகையை மட்டும் பதிலாக அளித்துவிட்டு அவளது கரம் பற்றி எழுப்பிவிட்டான்.

பின்னர் மனைவியுடன் சேர்ந்து தாத்தா பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன் அவரிடம் "இனியாச்சும் என் கிட்ட முகம் குடுத்து பேசுவேள் தானே?" என்று புருவம் உயர்த்த அவர் மனநிறைவுடன் அவனது முகத்தை வருடிக் கொடுத்து கண்ணாலேயே பதிலளித்தார்.

அதன் பின் இரு தம்பதியினரும் அனைவரிடமும் ஆசி பெற்றுவிட்டு கிரகபிரவேசத்துக்காக வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ரகுநந்தன் காரில் அமரும் போதே "நீரு சீக்கிரமா ஆத்துக்கு போய் ஷேர்ட்டை மாத்தணும்டி. எனக்கு இந்த காஸ்டியூம்ல இருக்க சிரமமா இருக்கு" என்று சலித்தபடி அமர அவனை அடுத்து அமர்ந்தவள் "ஏன் இதுக்கு என்னடா? அருமையா இருக்கு. நீ பார்க்க அம்சமா இருக்க போ" என்று நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க ரகுநந்தன் அவள் தன்னை கேலி செய்கிறாள் என்று எண்ணிக் கொண்டான்.

அவன் முகத்தை திருப்பிக் கொள்ள நீரஜாட்சி கேலியாக அவனது தாடையைப் பிடித்து கொஞ்சியவள் "என்னாச்சு நந்துக்கு? ஓ! கோவப்பட்டுட்டேளாண்ணா? சரி கோச்சுக்கோங்கோ" என்று ராகமாக இழுக்க அவள் கூறிய பாவனையில் பக்கென்று சிரித்துவிட்டான் அவன்.

இவ்வாறு ஒரு தம்பதியினர் அரட்டையடித்தபடி வீடு வந்து சேர மற்றொரு தம்பதி அமைதியுருவாக காரில் இருந்து இறங்கினர். இரு ஜோடிகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்பதற்காக பத்மாவதியும் மைதிலியும் உள்ளே சென்றனர்.

அவர்கள்  திரும்பி வந்து இரு ஜோடிகளுக்கும்  ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்ப நீரஜாட்சி தான் கூறியபடி தனது தமக்கையுடனே அந்த ஸ்ரீனிவாசவிலாசத்தின் மருமகளாக உள்ளே காலடி எடுத்து வைத்தாள்.

அதன் பின் புதுமணத்தம்பதிகளுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் கலகலப்பாக நடைபெற சீதாலெட்சுமி பட்டாபிராமனிடம் "ரொம்ப நாளைக்கப்புறம் நம்மாத்துல இவ்ளோ சந்தோசம் நிறைஞ்சிருக்குண்ணா! நம்ம பேத்திகள் சந்தோசத்துல யாரும் கண்ணும் பட்டுடப்படாது" என்று கூற

பட்டாபிராமன் "நீ ஒன்னும் கவலைப்படாதடி சீதே! நம்ம பத்மா இந்த குழந்தேளை புரிஞ்சிண்டாளே! அதுவே பகவான் அனுக்கிரகம் தான்டி, இனி அவா ரெண்டு பேரும் எந்த சிரமமும் இல்லாம வாழ்க்கையில சந்தோசமா இருக்கப் போறா" என்று மனம் நிறைந்து கூறினார்.

எல்லா சம்பிரதாயங்களும் முடியவே நீரஜாட்சி மைதிலியிடம் "சின்ன மாமி! இந்த மடிசார் எனக்கு கம்ஃபர்டபிளாவே இல்ல. நான் சேன்ஜ் பண்ணிக்கவா?" என்று கேட்க அவர் வீட்டில் உறவினரக்ள் இருப்பதால் இப்போது வேண்டாம் என்று தயங்க பத்மாவதி "நீ போய் மாத்திக்கோடிம்மா. மைதிலி அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். இன்னைக்கு காத்தாலேயே அவளை எழுப்பி விட்டாச்சு. பாவம்! நீ போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோ" என்று அவளை அனுப்பிவைத்தார்.

நீரஜாட்சி ரகுநந்தனிடம் வந்தவள் "ஹப்பாடா! ஒரு வழியா உங்க அம்மா என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க நந்து! நான் தப்பிச்சிட்டேன். நான் என்னோட ரூம்கு போய் ரெஸ்ட் எடுக்கப் போறேன். முடிஞ்சா நீயும் கொஞ்சம் ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டுட்டு போய் தூங்கு. இல்லைனா ரிசப்சன்ல நீ கட்டாயம் தூங்கி விழுந்துடுவ" என்று கேலி செய்துவிட்டு அவள் ஏற்கெனவே தங்கியிருந்த மாடியறைக்கு சென்றாள்.

ரகுநந்தன் அவள் செல்வதைக் கண்டு திகைத்தவன் ஹர்சவர்தனிடம் "டேய் அவளுக்கு மட்டும் என்னடா ஸ்பெஷல்? இப்போ எனக்கும் தூக்கம் வருதுடா. காத்தாலே இருந்து என்னை சடங்கு சம்பிரதாயம்னு போட்டு டார்ச்சர் பண்ணுனியே, இப்போ போய் அம்மா கிட்ட நான் ரெஸ்ட் எடுக்கிறதுக்கு பர்மிசன் வாங்கிட்டு வா" என்று கூற

ஹர்சவர்தன் "அதுக்குள்ள என்னடா உனக்கு ரெஸ்ட்? பாரு சாமா அங்கிள் வந்திருக்கார். எவ்ளோ நாள் கழிச்சு நம்மாத்துக்கு அவர் வந்திருக்கார். ஒழுங்கா கல்யாண மாப்பிள்ளையா லெட்சணமா இருந்து அவரண்ட நாலு வார்த்தை பேசு" என்று ஒரு பெரியவரிடம் மாட்டிவிட்டவன் தானும் ஒரு உறவினர் அருகில் அமர்ந்து அவர்களுடன் உரையாட ஆரம்பித்தான்.

ரகுநந்தன் வேறு வழியின்றி அங்கேயே உட்கார்ந்தவன் பேச ஆரம்பிக்க சிறிது நேரத்தில் பத்மாவதி வரவும் அவரிடம் சென்றவன் "மா! நானும் இன்னைக்கு சீக்கிரமே முழிச்சிட்டேன். இன்னைக்கு நான் ரெஸ்ட் எடுக்கலனு வைங்க, என்னால நாளைக்கு காத்தாலே ஆபிஸ் போக முடியாதும்மா!" என்று கெஞ்ச அவர் அவனை ஓய்வு எடுக்க அனுப்பிவைத்துவிட்டு கிருஷ்ணஜாட்சியிடம் மாலை வரவேற்பு குறித்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

ரகுநந்தன் நீரஜாட்சி தங்களது அறைக்கு(?) சென்றிருப்பாள் என்று எண்ணி கதவைத் தட்ட அது வெளியில் தான் தாழிடப்பட்டிருந்தது. உடனே "ஓ மேடம் அவங்க ரூம்ல தூங்கறாங்க போல" என்று கேலியாக எண்ணிக் கொண்டவன் தனது அறைக்குச் சென்று ஒரு குளியலை போட்டுவிட்டு அக்கடாவென்று தூங்க ஆரம்பித்தான்.

அதே நேரம் நீரஜாட்சி அவளது அறையில் கூந்தல் அலங்காரத்தை மெதுவாக கலைத்துக் கொண்டிருந்தவள் நகைகளை ஒவ்வொன்றாக கழற்றும் போது அவளின் கையில் சிக்கியது ரகுநந்தனின் பெயர் பொறித்த அந்த செயின். அதைத் தொட்டதும் அவள் முகத்தில் புன்னகை பூக்க அடுத்த கணமே அவளது அவசியமற்ற திட்டமும் நினைவில் வர இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி மொத்தமாக வடிய கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள் அவள்.

அதை நினைத்து யோசித்ததால் அவளுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது. அவளது மனம் "இதை நந்து கிட்ட சொல்லிடு நீரு. கணவன் மனைவிக்குள்ள ஒளிவுமறைவு வச்சிக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்க கூடாது" என்று அவளுக்கு அறிவுறுத்த அவளது மூளை "இதை சொல்லி உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கற ரிலேசன்ஷிப்புக்கு நீயே முடிவுரை எழுத வச்சிடாதே நீரு. நீயா சொன்னா மட்டும் தானே இந்த விஷயம் அவனுக்கு தெரியவரும். இல்லைனா அவனுக்கு தெரிய போறதே இல்லை. சோ வாயை மூடிக்கிட்டு அமைதியா இரு" என்று அவளை அதட்டி வைத்தது.

இந்த மனப்போராட்டத்தில் சோர்ந்தவள் அப்படியே உறங்கியும் போனாள். மாலையில் நீரஜாட்சி வந்து எழுப்பும் போது தூங்கச் செல்லும்போது இருந்த மனநிலையே அப்போதும் தொடர முகம் வாட நின்றவளை கண்டு கிருஷ்ணஜாட்சி துணுக்குற்றாள்.

ஆனால் மைத்திரேயி இன்று காலை முதல் நடந்த சம்பிரதாயங்களில் அவள் சோர்ந்திருப்பாள் என்று கிருஷ்ணஜாட்சியை சமாதானம் செய்தபடி நீரஜாட்சியை குளித்துவிட்டு வருமாறு சொல்லிவிட்டு கிருஷ்ணஜாட்சியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.

"நோக்கு ஹர்சா கூட ஏதும் பிரச்சனையா?" என்று வினவ

கிருஷ்ணஜாட்சி "அப்பிடி எதுவும் இல்ல மைத்திக்கா! ஏன் கேக்கிறிங்க?" என்று புரியாமல் கேட்க

மைத்திரேயி "நீ காத்தாலே இருந்தே அமைதியா இருக்கியா, அதான் கேட்டு வச்சேன்" என்று கூறவும்

ஒரு பெருமூச்சை விட்டவள் "எனக்கு ஒன்னும் இல்ல மைத்திகா. எல்லாம் திடுதிடுப்புனு நடக்குதா அதான் எனக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு" என்று கூறும் போதே நீரஜாட்சி ஈரத்தலையுடன் வர "இவ இன்னும் குழந்தையாட்டம் தலையை கூட துவட்ட தெரியாம இருக்கா பாருங்கக்கா" என்று பேச்சு நீரஜாட்சியின் புறம் திரும்பியது.

கலகலப்பாக பேசிக் கொண்டே அவளை வரவேற்புக்கு தயார்படுத்தினர் இருவரும். அதே நேரம் ஹர்சவர்தனும் ரகுநந்தனை சீக்கிரம் தயாராகுமாறு கூறிவிட்டு அவனும் தயாரானான்.

ரகுநந்தன் அண்ணனுடன் தயாரானவன் கீழே சென்று மனைவிக்காக காத்திருக்க அவனது காத்திருப்புக்கு பலனாக தங்க நிற டிசைனர் புடவையில் மிதமான நகைகளுடன் ஜொலித்தவள் படியில் இறங்கும் போதே அவனை பார்த்துவிட "நீ அதுக்குள்ள ரெடியாயிட்டியா நந்து?" என்று வழக்கம் போல அவனை பெயர் சொல்லி அழைத்தபடி ஹாலில் வந்து நின்றாள்.

திருமணத்துக்கு வந்த உறவினர்களோ பத்மாவதியிடம் "என்ன பத்மா உன் மாட்டுப்பொண்ணு ஆம்படையானை பேர் சொல்லி தான் கூப்பிடுவாளோ?" என்று ஏற்றிவிட முயல அவர் இதை அடிக்கடி கேட்டுப் பழகி விட்டதால் அவருக்கு இது ஒன்றும் வித்தியாசமாக தோன்றவில்லை. அவர்களிடன் "அவா ரெண்டு பேரும் எப்பிடியோ கூப்பிட்டு போறா. சின்னவா பேச்சு நமக்கு எதுக்கு மன்னி?" என்று தன்னிடம் கோள் மூட்டிய பெண்மணியிடம் கூறிவிட்டு தனது கணவரை தேடி சென்றுவிட்டார்.

ரகுநந்தன் மனைவியைக் கண்டதும் எழ நீரஜாட்சிக்கு அவ்வளவு நேரம் இருந்த மனக்கலக்கம் அவனைக் கண்டதும் அகன்றது போல தோன்றவே அவன் "அப்போ நம்ம போலாமா நீருகுட்டி?" என்று கேட்டபடி கையை நீட்ட அவள் தயக்கமின்றி தனது கரத்தை அவன் கரத்தில் வைத்து அவனை நோக்கி பூவாய் சிரிக்க ரகுநந்தனுக்கு அதை காண காண தெவிட்டவில்லை.

சிறிது நேரத்தில் வரவேற்புக்கு மண்டபத்துக்கு சென்ற பின்னரும், மேடையில் அவனுடன் உரிமையாக நிற்கும் போதும்அவனது செல்ல சீண்டல்களில் முகம் சிவந்த போதும் அந்த பூஞ்சிரிப்பு  நீரஜாட்சியின் இதழிலிருந்து சிறிது கூட இடம்பெயரவில்லை.

ரகுநந்தனும் அவளும் வழக்கம் போல பேசி சிரித்து கேலி செய்தபடியே இருக்க அந்த வரவேற்பும் வண்ணமயமாகவே முடிவடைந்தது. ஆனால் வீட்டிற்கு வந்தவளை மீண்டும் புடவையை மாற்றச் சொல்லி ரகுநந்தனின் அறைக்கு அவளை அனுப்பி வைக்க அப்போது அவளின் அழகிய வதனம் மீண்டும் வாட்டம் அடைந்தது.

யோசனையுடன் அறைக்குள் சென்றவள் ரகுநந்தனின் கண்ணில் இருந்த காதலை கண்டதும் குற்றவுணர்ச்சியில் என்ன பேச என்று புரியாமல் விழித்தாள். வருவித்துக் கொண்ட குரலில் "நந்து உன் கிட்ட நான் கொஞ்சம் பேசணும்...அது...நான்....கல்யாணத்துக்கு...." என்று தந்தியடித்த வார்த்தைகள் அவன் அருகில் வரவும் பிரேக் போட்டது போல் நின்றது.

ரகுநந்தன் அவளது முகவடிவை விரலால் அளவிட்டவன் "நீருகுட்டிக்கு என்ன டென்சன்? சாதாரணமா நீ இப்பிடி தடுமாறுர டைப் இல்லையே" என்று கேட்டவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் "ஐ திங் இந்த காஸ்டியூம், ஜூவல்ஸ், இந்த அட்மாஸ்பியர் எல்லாமே உன்னை டென்சன் ஆக்கிடுச்சு போல. சோ நீ என்ன பண்ணுற, அதோ அந்த ரூம்ல போய் நார்மலா நைட் போடுற டிரஸ்ஸை போட்டுட்டு வா.  நான் அதுக்குள்ள இதை எல்லாம் கிளீன் பண்ணிடுறேன்" என்று அந்த அறையின் அலங்காரத்தை சுட்டிக்காட்ட அவள் சரியென்று தலையாட்டிவிட்டு விட்டால் போதுமென்று தனது பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றாள்.

முதல் வேலையாக புடவையிலிருந்து தனது வழக்கமான டிசர்ட் பட்டியாலாவுக்கு மாறியவள் புடவையை மடித்துவிட்டு நகைகளையும் பெட்டியில் வைத்துவிட்டு கூந்தலை போனிடெயிலாக போட்டபிறகு தான் இயல்பு நிலைக்கே வந்தாள்.

நிம்மதி பெருமூச்சுடன் வெளியே வந்தவள் அறையும் பழையபடிக்கு மாறியிருக்க அவளது முகம் தெளிவானது. ரகுநந்தனும் நைட் பேண்ட், டிசர்ட்டுக்கு மாறியிருக்க இப்போது தான் இருவருக்கும் இடையே இயல்புநிலை திரும்பியது போல தோன்றியது.

அவன் "உனக்கு தூக்கம் வருதா நீரு?" என்று கேட்க நீரஜாட்சி தான் இருக்கும் குழப்பமான மனநிலை தூங்கினால் மட்டுமே சரியாகும் என்பதால் ஆமென்று மேலும் கீழுமாக தலையை ஆட்டினாள்.

போனிடெயில் அசைய அவள் தலையாட்டிய விதத்தில் தன்னை தொலைத்தவன் "போய் தூங்கு. எனக்கும் இன்னைக்கு செம டயர்ட். அதுவுமில்லாம நாளைக்கு ஆபிஸ்ல உனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. ஹோட்டல் ஒர்க் நடக்கற சைட்டுக்கு வேற நாளைக்கு விசிட் பண்ணனும்" என்று அலுவலக வேலைகளை அடுக்கத் தொடங்க இவ்வளவு நேரம் அமைதியாக நின்றவள் எரிச்சலில் வாயைத் திறந்தாள்.

"நீ ரொம்ப ஓவரா பண்ணுறடா. தெரியாம தான் கேக்கிறேன், ஆபிஸ் போனா மட்டும் நான் உன் கண்ணுக்கு விரோதியா தெரியுறேனோ? வேலையா குடுத்து டார்ச்சர் பண்ணுற? நான் நாளைக்கு லீவ்" என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டு நிற்க

அவனோ "நீ லீவ் லெட்டர் எனக்கு அனுப்பவே இல்லை. சோ உன்னோட லீவை நான் அப்ரூவ் பண்ணலை. இப்போ ஒழுங்கா வந்து தூங்கு. ஏன்னா நாளைக்கு ஃபுல்லா சைட் விசிட்ல உனக்கு உக்கார கூட நேரம் இருக்காது" என்று அமர்த்தலாக மொழிந்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

நீரஜாட்சி செய்வதறியாது நிற்க அவனோ தனது அருகில் படுக்கையில் தட்டி உறங்குமாறு சைகை காட்டியவன் "வாழ்க்கை முழுக்க என்னை முறைச்சுக்கோ. அதுக்கு உனக்கு லைசென்சும் குடுத்தாச்சு. இப்போ வந்து தூங்கு" என்று கூற அவள் அலட்சியமாக தலையை சிலுப்ப இவள் வழிக்கு வர மாட்டாள் என்று எண்ணியவன் அவளது கரம் பற்றி சுண்டி இழுக்க அதை எதிர்பாராதவள் அவன் மீதே பூமாலை போல விழ அவளை தனதருகில் படுக்க வைத்தான்.

"குட் கேர்ளா தூங்கு நீருகுட்டி. ரொம்ப அடம் பிடிச்சனு வையேன் அப்புறம் டுமாரோ எய்ட் ஹன்ட்ரெட் பேஜ் டைப் பண்ண வைப்பேன்" என்று கூற அவள் எரிச்சலில் அவனை அடிக்கத் துவங்க அதை தனது கைகளால் தடுத்தவாறே அவளை அணைத்துக் கொண்டான் ரகுநந்தன்.

"நான் உன்னை அரெஸ்ட் பண்ணிட்டேன். இப்போ என்ன பண்ணுவ?" என்று கேட்டவனிடம் "உன்னை மாதிரி புருசன் யாருக்கும் கிடைக்க கூடாதுடா. எப்பிடிலாம் மிரட்டுற" என்று குறை கூற ஆரம்பிக்க அவன் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

"அதே மாதிரி உன்னை மாதிரி பொண்டாட்டியும் யாருக்கும் கிடைக்க கூடாதுடி. ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு கூட சண்டை போடுற" என்று கேலி செய்தான்.

அவள் பேசாமல் அமைதி காக்க அவளை பொறுமையாக பார்த்தவன் "நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் நீரு. ஃபைனலி நீருகுட்டி என் கிட்ட வந்துட்டா. இனி உன்னை யாருக்காகவும் விட்டுக் குடுக்கறதா இல்ல" என்றவாறு அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட அவளும் கணவனின் அணைப்பில் ஒன்றியவள் 'இவன் என்னுடன் இருக்கும் வரை எதை நினைத்தும் எனக்கு பயமில்லை' என்ற நிம்மதியுடன் அவனது மார்பில் புதைந்தபடி அவனது அன்பான இதழ் ஒற்றலில் கண்ணை மூடினாள்.

அவர்கள் வாழ்வை ஆட்டம் காண வைக்கும் வெடிகுண்டான அந்த ஆடியோ கிளிப்பும் பத்மாவதியின் போனில் அப்போதைக்கு வெடிக்காமல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.


Comments

  1. Timebomb eppo vedikka pogutho

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1