பூங்காற்று 48

அந்த ஆடியோவால்
நீரஜாட்சிக்கும்
ரகுநந்தனுக்கும் இடையே சத்தமே இல்லாமல் ஒரு பனிப்போர் ஆரம்பித்தது. இருவரும் ஒருவரையொருவர்
முறைத்தபடியே திரிய ரகுநந்தன் இப்போதெல்லாம்
பெரும்பாலான நேரத்தை அலுவலகத்திலேயே கழித்தான். ஆனால் அலுவலகத்தில் கூட கணவனும் மனைவியும்
அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை.
நீரஜாட்சி அவனை ஏளனமான உதட்டுவளைவுடன்
கடந்துவிட அவனால் தான் எதையும் மறக்க முடியவில்லை. அவள் இந்த பிரச்சனையை இலகுவாக எடுத்துக்
கொண்டதற்கும் அவனது புத்தி தப்பர்த்தம் செய்து
கொண்டது.
"அது சரி! நான் மட்டும் தானே லவ் பண்ணுனது. அவ தான் என்னை பத்தி
நினைச்சு கூட பார்த்தது இல்லையே. அப்புறம் எப்பிடி
அவளுக்கு வருத்தமா இருக்கும்?" என்று அவன்
நினைத்துக் கொள்ள
நீரஜாட்சியோ "உண்மையை சொல்ல சொல்ல கேக்காம போனா நான் இவன்
பின்னாடியே போய் கெஞ்சணுமாக்கும், பெரிய இவன்! உண்மையை
புரிஞ்சுகிட்டு தானா பேசுனா பேசுறான், இல்லைனா வாழ்க்கை முழுக்க இப்பிடி முசுடாவே
இருந்துட்டு போறான். எனக்கு என்ன வந்துச்சு?" என்று சிறிதும் தனது நிலையை விட்டு
விலகாதவளாய் அவனை சமாதானம் செய்ய முயலவில்லை.
அவளின் விலகல் எங்கே தன்னை
பலகீனமாக்கி விடுமோ என்று பயந்தவன் இனி அலுவலகத்திலும் அவளைச் சந்திப்பதை முற்றிலுமாக தவிர்க்க
எண்ணியவன் அதற்கான ஏற்பாட்டுடன் தான்
வீட்டுக்குச்
சென்றான்.
மெதுவாக தனது அறையினுள் நுழைந்தவன்
விளக்கை போட நீரஜாட்சி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருப்பது கண்ணில் பட இவளால் எப்படி
குற்றவுணர்ச்சி எதுவுமின்றி உறங்க முடிகிறது என்ற எண்ணமே அவனுக்குள் எரிச்சலை மூட்ட
உள்ளுக்குள் ஜிவுஜிவென்று கோபம் மூண்டது.
அதே கோபத்துடன் மேஜை மீது இருந்த தண்ணீர் ஜக்கை தரையில் வீச
அது எழுப்பிய சத்தத்தில் விழித்துக் கொண்டாள் அவள்.
முகம் முழுக்க எரிச்சலுடன் தன்
எதிரே நின்றவன் தனது கணவன் தான் என்று அறிந்தவள் "நிம்மதியா
தூங்க கூட விட மாட்டியாடா? அறிவில்ல, தண்ணி குடிக்க எடுத்த ஜக்கை பிடிக்க கூட உன் கையில பலம்
இல்லையா?" என்று தூக்கம் கலைந்த எரிச்சலில் காச்மூச்சென்று கத்த
துவங்கினாள்.
அவன் நிதானமாக அவளை பார்த்தபடி
சட்டையின் பட்டன்களை கழற்றத் துவங்க நீரஜாட்சி எரிச்சலுடன் முகம் திருப்பிக் கொண்டாள். ரகுநந்தனோ
அவளை எரிச்சல் படுத்திவிட்ட திருப்தியில் உள்ளே
சென்று ஆடையை மாற்றிவிட்டு வந்தவன் தலையணை போர்வையை தரையில் வீசினான்.
கேள்விக்குறியுடன்
பார்த்தவளிடம்
"கீழே போய் தூங்கு. இது என்னோட பெட்" என்று அவன் கூற நீரஜாட்சி அடுத்த நிமிடம் காளி
அவதாரத்துக்கு சிறிது சிறிதாக மாறிக்
கொண்டிருந்தாள்.
அவள் இன்னும் நகராமல் இருக்க
அவன் சொடக்கிட்டு தரையை காண்பிக்க அவள் "கீழேலாம் படுக்க முடியாது. நான் இங்கே தான் படுப்பேன். உனக்கு
என்னோட ஒரே பெட்ல தூங்க கம்ஃபர்டபிளா
இல்லனா
நீ போய் தரையில படுத்து தூங்கு" என்று சொல்லிவிட்டு போர்வையால் முகத்தை மூடிக் கொண்டபடி படுத்துக்
கொள்ள
ரகுநந்தன் அந்த போர்வையை பட்டென்று விலக்கியவன் "இது
என்னோட ரூம்டி. நான் ஏன் தரையில படுக்கணும்?"
என்று
முரண்டுபிடிக்க
நீரஜாட்சி "அப்போ பெட்ல படுத்து தூங்குறதும், தரையில படுத்து தூங்குறதும் உன்னோட
இஷ்டம். நான் இங்கே தான்
தூங்குவேன். சும்மா என்னை எரிச்சல் படுத்தாம போடா" என்று அலட்சியமாக கூறிவிட்டு படுக்கையில்
சரிந்தாள்.
ரகுநந்தன் கோபம்
மாறாதவனாய்
"அது சரி! பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரத்துல தொங்கி தானே ஆகணும்" என்று சத்தமாக கூறிவிட்டு
மெத்தையின் மற்றொரு புறம் வந்து படுத்துக் கொள்ள
நீரஜாட்சி விலுக்கென்று எழுந்தவள் "பேய்னு தெரிஞ்சு ஏன்டா
கல்யாணம் பண்ணிகிட்ட?" என்று கடுப்புடன்
கேட்க
அவனும் அவளுக்கு சளைக்காமல் "தெரிஞ்சுருந்தா நான் ஏன்டி
கல்யாணம் பண்ணிண்டிருக்க போறேன்?" என்று பதிலுக்கு
எகிறினான்.
"இப்போ ஒன்னும்
குறைஞ்சு போகலைடா. நாளைக்கே நல்ல லாயரா பாரு. ரெண்டு பேருமா சேர்ந்து மியூச்சுவல்
டிவோர்சுக்கு அப்ளை பண்ணுவோம்"
"வாட்? டிவோர்ஸா? அது
சரி! காதலிக்கிற மாதிரி நடிச்சவளுக்கு கல்யாணம் எப்பிடி ஈஸியோ அதே மாதிரி
டிவோர்சும் ஈஸியா போச்சுல்ல"
"ஆமா மிஸ்டர்
ரகுநந்தன். என்னை
பொறுத்தவரைக்கும் நான் எதிர்மறையான மனுஷங்க கிட்ட விலகி இருக்க தான் ஆசைப்படுவேன். அதனால எவ்ளோ சீக்கிரம்
முடியுமோ அவ்ளோ சீக்கிரம் லாயரை பாருங்க" என்று
கூறியவள் படுக்கையிலிருந்து எழுந்தாள்.
கையில் மொபைல் மற்றும் ஹெட்போனை
எடுத்துக் கொண்டவள் மேஜையிலிருந்து அவுட் ஹவுஸின் சாவியை எடுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு
வெளியேறினாள்.
அவள் சென்ற பின்னரும் அவளது 'டிவோர்ஸ்' என்ற வார்த்தை ஏற்படுத்திய அதிர்ச்சி
அவனை பீடித்துக் கொள்ள அவனாலும் உறங்க இயலவில்லை.
நீரஜாட்சி அவனிடம்
முறைத்தபடி
வெளியே வந்தவள் அப்போது தான் கையில் தட்டுடன் மாடி வராண்டாவில் நடந்து வந்த கிருஷ்ணஜாட்சியைக் கண்டதும்
"என்ன கிருஷ்ணா, அத்திம்பேருக்கு சாப்பாடு கொண்டு போறியா?" என்று கேட்டுவிட்டு கண்ணை சிமிட்ட
கிருஷ்ணஜாட்சி "ஆமா நீரு! அவருக்கு கையில ஏதோ கிழிச்சிருக்கு.
சாப்பிட முடியலைனு சொன்னாரு. அதான்
நான்
எடுத்துட்டுப் போறேன்" என்று அமைதியாக பதிலளிக்க
நீரஜாட்சி "ம்ம்...நாட் பேட்..ஊட்டி விடுற லெவலுக்கு உங்க
லவ்ஸ் டெவலப் ஆயிடுச்சு போல" என்று கேலி செய்ய
கிருஷ்ணஜாட்சி "என்ன இருந்தாலும் சின்ன அம்மாஞ்சி லவ்ஸ்
லெவலுக்கு அவரோட அண்ணா இல்லை" என்று தங்கையின்
காலை வாரி விட்டபடி புன்னகைத்தாள்.
நீரஜாட்சி எதுவும் கூறாமல் இளித்து வைக்க கிருஷ்ணஜாட்சி
"ஆமா இந்நேரத்துல நீ எங்க போற?" என்று கேட்க
நீரஜாட்சி என்ன பதில் கூறவென்று
புரியாமல் விழித்தவள் "அது..வந்து..ஹான்...என்னோட ஹெட்போன் அவுட் ஹவுஸில மாட்டிகிச்சு. அதை எடுத்துட்டு
வர போறேன்" என்று சமாளித்தபடி "நீ போ கிருஷ்ணா. அத்திம்பேர் பசி பொறுக்காம
கத்த போறார்" என கேலியாய் பேசி
அக்காவை
அனுப்பி வைத்தாள்.
அவள் சென்றதும்
பெருமூச்சு
விட்டபடி ஹாலை அடைந்தவள் அங்கே யாரும் இல்லையென்பதை உறுதிபடுத்திவிட்டு வாயில் கதவு
திறந்திருக்கவும் வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்தில்
கால் பதித்தாள். பத்மாவதி தான் கடைசியாக வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு வாயில் கதவை சாத்துவது
வழக்கம். அதற்கு நேரம் இருப்பதால் அன்று அவள்
வெளியேறுவது சாத்தியமாயிற்று.
வெளியே குளிருவதால் அவள் கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு அவுட்
ஹவுஸை நோக்கி செல்வது மேலே மாடியில்
நின்று
பார்த்துக் கொண்டவனின் கண்ணில் விழ ரகுநந்தனின் விழிகளும் கலங்கியது. சட்டென்று கீழே நடந்து
சென்றவள் உள்ளுணர்வு உந்த திரும்பி
பார்க்க
அவன் வேகமாக அங்கிருந்து மறைந்தான்.
நீரஜாட்சி தலையை
உலுக்கியபடி
அவுட் ஹவுஸை திறந்தவள் உட்பக்கம் தாழிட்டு விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள். அவளின் பார்வை
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து கடைசியில் பெற்றோரின்
புகைப்படத்தின் மீது நிலைத்தது.
அதைக் கண்டதும் தந்தை அடிக்கடி சொல்வது அவளின் நினைவுக்கு
வந்தது.
"என்னோட நீருகுட்டி எப்போவுமே அப்பாவோட பிரின்சஸ் தான்.
நாளைக்கு நீ கல்யாணம் ஆகி போனப்புறம்
அங்கே
நீ தான் மகாராணி. அப்போ இந்த மகாராணிக்கு அப்பாவை நியாபகம் இருக்குமோ? இல்லையோ?" என்றவரின்
கேலிப்பேச்சில் அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு
வந்தது.
யாருமற்ற அந்த அறையில் தாயும்
தந்தையும் இருப்பதாய் பாவித்தவள் "ஒரு பொண்ணை பிரின்சஸாவோ குயினாவோ உணர வைக்கிறது அப்பா மட்டும் தான்.
ஹஸ்பெண்ட்ங்கிறவனுக்கு அவ வெறும் பிராபர்ட்டி மட்டும்
தான்பா. வேணுங்கிறப்போ தலையில வச்சு கொண்டாடுவாங்க, வேண்டான்னா
தூக்கிப் போட்டுட்டு போயிடுவாங்க" என்று வருத்தத்துடன் கூறிவிட்டு படுக்கையில் சுருண்டு
படுத்துக் கொண்டாள்.
எப்போது உறங்கினாள் என்றே தெரியாமல் நித்திரையில் விழுந்தவள்
அதிகாலையில் கதவு தட்டப்படும் சத்தம்
கேட்டதும்
திடுக்கிட்டு விழித்தாள்.
ஒரு வேளை தான் அவுட் ஹவுஸில்
தூங்கிவிட்டது யாருக்கும் தெரிந்திருக்குமோ என்ற அச்சத்துடன் கதவை திறந்தவளின் முன் டிராக்சூட்டுடன்
தரிசனம் தந்தான் அவளது கணவன். அவனைக்
கண்டதும்
எரிச்சலில் கதவை மூடப் போக அவன் குறுக்கே கை வைத்து தடுத்தபடி உள்ளே நுழைந்தான்.
உள்ளே நுழைந்ததும் "நீ நைட் ஃபுல்லா இங்கே தான் தூங்குனேனு
தெரிஞ்சா வீட்டுல இருக்கிறவங்க என்னவோ
ஏதோனு
பதற மாட்டாங்க? அதைலாம் யோசிக்கவே
மாட்டியா?" என்று உணர்வற்ற
குரலில் கேட்க
அவள் அலட்சியமாக "யோசிச்சா அதுக்கு
நான் என்ன பண்ண முடியும்? எப்பிடியும் நம்ம டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணுனா அவங்களுக்கு தெரிய தான்
போகுது" என்று அவனை சீண்டிவிட
ரகுநந்தன்
மீண்டும் அந்த 'டிவோர்ஸ்' என்ற வார்த்தையில் எரிச்சலுற்றான்.
"ஏய் வாயை மூடு.
இன்னொரு தடவை டிவோர்ஸுங்கிற
வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சுனா நான் பொல்லாதவனா ஆயிடுவேன்" என்று விரலை
நீட்டி எச்சரிக்க நீரஜாட்சி அவன் கையை
அலட்சியமாக
தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
உள்ளே செல்லும் போதே
"நீயும்
இன்னொரு தடவை இதே டோன்ல என் கிட்ட
பேசுனா நானும் பொல்லாதவளா ஆயிடுவேன். பீ
கேர்ஃபுல்" என்று அவனை எச்சரிக்க மறக்கவில்லை.
கையில் மொபைலுடன்
திரும்பியவள்
"எதுக்கு தேவையில்லாம நம்ம பேசி பேசி சண்டை போட்டுக்கணும்? உனக்கு நான் தப்பானவளா தெரிஞ்சா ஜஸ்ட்
லீவ் மீ அலோன். நானும் உன் கிட்ட பேச
டிரை
பண்ண மாட்டேன். நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை
பார்க்கிறேன். என்னால டெய்லி சண்டை
போட்டு என் மனநிம்மதியை கெடுத்துக்க முடியல" என்று தீர்மானமாக உரைத்துவிட்டு வீட்டை நோக்கி
சென்றாள்.
அவன் அவள் பேசியதை
யோசித்தவாறே
வாக்கிங் சென்றுவிட்டு திரும்பியவன் அவர்களின் அறைக்குள் நுழைந்தான். அலுவலகத்துக்கு கொண்டு
செல்லும் லேப்டாப் வைக்கும் பேக்கில்
எதையோ
தேடியவன் அதை எடுத்துக் கொண்டு நீரஜாட்சியிடம் வந்தான்.
கையில் வைத்திருந்த பேப்பரை அவளிடம் நீட்ட அவள் வாங்கி
பிரித்ததும் "ரிலீவிங் ஆர்டரா?" என்று அதிர்ச்சியடைய
அவன் "ஆமா! அட்லீஸ்ட் ஆபிஸ்லயாச்சும் நான் நிம்மதியா இருக்க
ஆசைப்படறேன். சோ நீ இனிமே ஆபிஸ் பக்கம்
வந்துடாதே" என்று மட்டும் உரைத்துவிட்டு அலுவலகத்துக்கு தயாராக தொடங்கினான்.
நீரஜாட்சி அலட்சியமாக அதை பார்த்தவள் "ஆமா இவன் பெரிய
பில்கேட்ஸ். இவன் கிட்ட தான் வேலை பார்க்கணும்னு நான்
அடம் பிடிச்சு சேர்ந்த மாதிரி பேசறான்? எல்லாம் இவன் அம்மா பண்ணுன திருவிளையாடல்"
என்றபடி அந்த பேப்பரை தூர வீசிவிட்டு அவளது வேலையை
கவனிக்க தொடங்கினாள்.
அன்று அவன் மட்டுமே அலுவலகம்
செல்வதைக் கண்ட குடும்பத்தினர் நீரஜாட்சியிடம் கேட்க அவளோ "ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை பார்க்கிறது
சரியா வராது. அதான் நான் வரலைனு சொல்லிட்டேன்"
என்று சொல்லி அவர்கள் அனைவரையும் சமாளித்தாள்.
அவளாலும் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் அதே நேரம் இப்போது
இருக்கும் மனநிலையில் வேறு எந்த வேலைக்கும் செல்ல
பிடிக்காமல் இருந்தவள் கிருஷ்ணஜாட்சியிடம் அவளிடம் வேலை செய்ய விரும்புவதாக கூற அவள்
மகிழ்ச்சியுடன் தங்கையை தன்னுடன் அழைத்துச் சென்றாள்.
நீரஜாட்சிக்கும் கஃபேயில் வேலை செய்ய மிகவும் பிடித்துவிட்டது.
அங்கே வேலை செய்யும் ஹரிணி, ஸ்வேதா இருவருமே அவளிடம் தயக்கமின்றி பேசிப்
பழக அவள் அந்த சூழ்நிலையுடன் இரண்டறக்
கலந்து
விட்டாள்.
அவளுக்கு வேலையே ஆர்டரை சரி
பார்த்து பில் போடுவது தான். பின்னர் தினமும் மாலையில் பில்லின் மதிப்பும் அவர்களிடம் உள்ள பணமதிப்பும்
சமமாக உள்ளதா என்று சரிபார்த்து வைப்பாள். அமைதியான
உற்சாகமான சூழ்நிலை அவள் மனதுக்கு பெரும் நிம்மதியை அளிக்க சொந்த பிரச்சனைகளை நினைத்து
வருந்த அவளுக்கு நேரமில்லை.
அன்றும் கஸ்டமர்
ஒருவருக்கான
பில்லை ஸ்வேதாவிடம் கொடுத்து அனுப்பியவள் ஹர்சவர்தன் வரவும் "ஹாய் அத்திம்பேர்! என்ன இந்த நேரத்துல
வந்திருக்கிங்க?" என்று அவனை உற்சாகமாக வரவேற்க அவனும் புன்னகையுடன்
அவளிடம் வந்து அமர்ந்தான்.
அமர்ந்தவனின் விழிகள் அலைபாய்வதிலேயே
அவன் யாரை தேடுகிறான் என்பதை கண்டுகொண்டவள் கிண்டலாக "அது சரி! வேலை நேரத்துல ஆத்துக்காரி
நினைப்பு வந்து ஓடி வந்துட்டிங்க போல" என்று
அவள் கூற
ஹர்சவர்தன் அதைக் கேட்டு சிரித்தபடி "உனக்கு புரியுது.
உங்க அக்காவுக்கு புரியலையே" என்று பரிதாபமான முகத்துடன் கூறிக் கொண்டான்.
பின்னர் "நீரு நான் கிருஷ்ணாவுக்காக ஒரு சர்ப்ரைஸ்
வச்சிருக்கேன். அவளை என் கூட அனுப்பி வையேன் பிளீஸ். பிகாஸ் ஒர்க்கிங் ஹவர்ல அவ
எங்கேயும் வர மாட்டேனு பிடிவாதம் பிடிப்பா. இப்போ தான்
மணி ஆறு ஆகறதே! அவ கிட்ட பேசி ஒத்துக்க வை,
பிளீஸ் பிளீஸ்" என்று மூச்சு விடாமல் அவன்
பேச
நீரஜாட்சி "ஐயோ! பயங்கரமான
லவ்ஸா இருக்கு அத்திம்பேர். வெயிட்" என்று கேலியாகச் சொன்னபடி கிருஷ்ணஜாட்சியை அழைக்க அவளும் வந்து
சேர்ந்தாள்.
வரும் போதே "ஹர்சா நீங்க இந்நேரத்துல இங்க என்ன
பண்ணுறிங்க?" என்ற கேள்வியுடன் வர
அவன் சட்டென்று எழும்பி அவள் கையுடன் தனது கையை கோர்த்தபடி "அது
ஒன்னுமில்ல...நம்ம ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு போக
போறோம்.. வா" என்று அவளை இழுத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சி திகைப்புடன் அவன் கையை விலக்கினாள்.
"என்ன பண்ணுறிங்க
நீங்க? இப்போ என்னால
எங்கேயும் வர முடியாது. இது பீக் ஹவர். இப்போ போய் அங்கே வா இங்கே வானு சொன்னா எப்பிடி? நீங்க கிளம்புங்க" என்றபடி உள்ளே
செல்ல முயல ஹர்சவர்தன் அவளது
ஏப்ரனின் கயிற்றோடு சேர்த்து அவளை இழுத்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொண்டவன் நீரஜாட்சியிடம்
கண்களால் கெஞ்சினான்.
அவளும் அதை புரிந்து கொண்டவளாய்
"கிருஷ்ணா அத்திம்பேர் தான் ஆசையா கூப்பிடுறாருல, போயிட்டு வா. வீ
கேன்
மேனேஜ். பேக்கரியை லின் பார்த்துப்பா. இங்கே நான், ஸ்வேதா, ஹனி மூனு பேரும் பார்த்துப்போம். இப்பிடி வர
மாட்டேனு சொல்லி அவர் இதயத்தை உடைச்சிடாதே"
என்று கேலியாக வசனம் பேசி கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக கூறிய தங்கையை பார்த்தபடி நின்றாள்
கிருஷ்ணஜாட்சி.
ஹர்சவர்தன் "அதான் அவ சொல்லுறாள்ல..கிளம்பு"என்றபடி அவள்
மாட்டியிருந்த கேப்பை கழற்றுகிறேன்
பேர்வழியாக
அவள் கூந்தலை போட்டு பாடாய்ப்படுத்த கிருஷ்ணஜாட்சி "ஸ்ஸ்! நானே வர்றேன் சாமி. என் ஹேரை போட்டு நாசம்
பண்ணாதிங்க" என்றபடி பொறுமையாக கேப்பை கழற்றிவிட்டு
தங்கையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
அவர்கள் செல்வதை வேடிக்கை பார்த்தபடி நின்றவள் ஸ்வேதா ஏதோ
கேட்க "இதோ வர்றேன்" என்றபடி சென்றாள்.
*****
"இப்போ நம்ம எங்கே
தான் போறோம் ஹர்சா?" என்றவளை பார்த்து கண் சிமிட்டியவன்
"சர்ப்ரைஸ்" என்று மட்டும் கூற
கிருஷ்ணஜாட்சி அது என்னவாக இருக்கக் கூடும் என்று யோசித்தபடி அவனுடன் பயணிக்க சிறிது நேரத்தில் கார்
அவர்களின் புதிய ஹோட்டலின் முன் நின்றது.
காரை பார்க்கிங்கில் விட்டவன்
மனைவியின் கையைக் கோர்த்தபடி நடைபாதையில் நடக்க துவங்க இப்போதும் கிருஷ்ணஜாட்சிக்கு தாங்கள் இங்கே ஏன்
வந்திருக்கிறோம் என்று புரியவில்லை.
ஹர்சவர்தன் மனைவியின் முகத்தை
ஓரக்கண்ணால் பார்த்தபடியே போன் பேசிவிட்டு அவளை அங்கே தனியாக இருந்த பார்ட்டி ஹாலை நோக்கி அழைத்துச்
சென்றான்.
ஹாலில் அன்று அவர்களை தவிர
யாருமே இல்லை. அந்த ஹால் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க உள்ளே நுழையவுமே
ரோஜாபூக்களின் நறுமணம் நாசியை நிறைத்தது.
அங்கே ஒரு ஓரமாக மேஜையும் நாற்காலியும் போடப்பட்டிருக்க அந்த
அறையில் ஒரு அழகான மவுனம் தவழ்ந்து
கொண்டிருந்தது.
ஹர்சவர்தன் அவளை பின்னே நின்று அணைத்தவன் "உனக்கு இதுல்லாம் பிடிச்சிருக்கா?" என்று ஆழ்ந்த குரலில் கேட்க அவள்
வெட்கத்துடன் தலையை அசைத்து ஆமென்று
பதிலளித்தாள்.
பின்னர் அவளது கரத்தை பற்றியவன்
அவளின் பெரியவிழிகளுடன் தனது விழிகளை கலக்கவிட்டவாறே "ஐ லவ் யூ கிருஷ்ணா" என்று தனது காதலை
வெளிப்படுத்த கிருஷ்ணஜாட்சியின் இதழ்களில் ஒரு அழகிய புன்சிரிப்பு நெழியத் தொடங்கியது.
"இதை என் கிட்ட சொல்ல
உங்களுக்கு இவ்ளோ நாள் ஆச்சா?" என்று அவள் வினவ
"முதல் நாள் என்னை பார்த்தப்போ தலை குனிஞ்சியே அப்போவே
சொல்லிருக்கணும். பட் அப்போ சிச்சுவேசன்
சரியில்ல. நீயும் அப்போ ரொம்ப சின்னபொண்ணா இருந்தியே" என்று தனது மனைவியிடம் மெதுவாக விஷயத்தை
வெளியிட அவள் கண்கள் ஆச்சரியத்தில்
விரிந்தது.
"அப்புறம் கார்டன்ல
இந்த நூடுல்ஸ் ஹேரை
உலர்த்துனப்போ முழுசா விழுந்துட்டேன். ஆனா என்ன பண்ணறது? உன் தங்கை கண்ணுக்கு அப்போ எங்க
முழுக்குடும்பமும் வில்லன் வில்லி ரேஞ்சுக்கு தெரிஞ்சதால உன் கிட்ட சொல்ல
முடியலை" என்று அந்த நிகழ்வை குறிப்பிட அன்று நீரஜாட்சி செய்த அதகளத்தை நினைத்து
இருவருக்குமே சிரிப்பு வந்தது.
"நான் ஓப்பனா சொல்லிட்டேன் மிசஸ் ஹர்சவர்தன். இனிமே
நீங்க தான் சொல்லணும்" என்றபடி அவளை நோக்க
அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய தன்னை அறியாமல் "ஐ லவ் யூ ஹர்சா" என்று அவளது உதடுகள் முணுமுணுக்க அதைக்
கேட்டு காதலில் கரைந்தவன் அடுத்த நிமிடம் தனக்காக அந்த
அழகிய வார்த்தைகளை உதிர்த்த அவளது இதழுக்கு தனது இதழால் பதில் கூற ஆரம்பித்தான்.
அந்த பதிலின் முடிவில் இரு
இதயமும் இணைய அவளை விடுவித்தவன் அவளை மேஜையை நோக்கி அழைத்துச் சென்றான். கிருஷ்ணஜாட்சி அமர நாற்காலியை
இழுத்தவன் அவள் அமர்ந்ததும் தானும்
அமர்ந்தான்.
அதன் பின் ஊழியர்கள் உணவைக்
கொண்டு வர அவர்களை வைத்துவிட்டு செல்லுமாறு பணித்தவன் "ஒரு காலத்துல என் ஒய்ஃப் என் கிட்ட சொன்னா 'கேண்டில் லைட் டின்னரை தனியா போய்
என்ஜாய் பண்ணிக்கோங்கன்னு'. தனியா எப்பிடி என்ஜாய் பண்ண முடியும்னு
இப்போ அவளுக்கு புரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன்" என்று அவன் குறும்பாக கூறியபடியே தனது கையால் மனைவிக்கு பரிமாறத் தொடங்கினான்.
இருவரும் கலகலப்பாக உரையாடியபடியே
கேண்டில் லைட் டின்னரை முடிக்க கிருஷ்ணஜாட்சி வீட்டுக்கு செல்லலாம் என்று கூறவே ஹர்சவர்தனும்
மறுப்பேதும் கூறாமல் கிளம்பினான்.
அரை மணி நேரத்தில் வீடு திரும்பியவர்கள்
ஹாலில் தாத்தா பாட்டியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த நீரஜாட்சியிடம் புன்னகையை வீசி விட்டுச்
செல்ல, அந்த அரட்டை
கும்பலில் இருந்த பத்மாவதியும்
மைதிலியும் கிருஷ்ணஜாட்சியின் முகச்சிவப்பை பார்த்துவிட்டு
இருவரும் சங்கேத பாஷையில் பேசிக் கொண்டனர்.
கிருஷ்ணஜாட்சி அவர்களின் அறையினுள் நுழைந்தவள் பேக்கை வைத்து
விட்டு குளியலறைக்கு செல்ல எத்தனிக்க
அதற்குள்
அவள் கணவன் அவளை அணைத்திருந்தான். அவளின் கழுத்தின் பக்கவாட்டில் புதைந்திருந்த உதடுகள் அவளுக்கு செய்தி
உணர்த்த கணவனின் அணைப்பில் உருகத் தொடங்கினாள் அவள்.
ஹர்சவர்தன் அவளை அணைத்தவன் தனது மொத்த காதலையும் அவளுக்குப்
புரியவைக்க அன்றைய இரவு அவர்களின் காதல் வாழ்க்கைக்கு சாட்சியானது.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete