பூங்காற்று 49

Image
  ரகுநந்தன் சாப்பாடு எடுத்து வைக்குமாறு சாதாரணமாக கூறிவிட நீரஜாட்சி எரிச்சலுடன் "நான் ஒ ன்னும் உன்னோட சர்வெண்ட் இல்ல. வேணும்னா நீயே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கோ" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள். ரகுநந்தன் தானே சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு "நீ சாப்பிடலையா நீருகுட்டி ?" என்று கேட்க அவள் "ம்ம்..அதான் எனக்கும் சேர்த்து நீயே சாப்பிட்டுட்டியே" என்று நொடித்துக் கொண்டவாறு பாத்திரங்களை உள்ளே எடுத்துச் சென்றாள். அவன் திடீரென்று வந்து நிற்பான் என்று அறியாததால் அவள் எப்போதும் போல தனக்கு மட்டுமே சமைத்திருக்க எவ்வளவு தான் அவன் மீது கோபம் என்றாலும் தனக்காக இவ்வளவு தூரம் வந்திருப்பவனை பசியோடு விட அவளுக்கு மனமில்லை. எனவே தனக்கு வைத்திருந்ததை அவனுக்கு கொடுத்துவிட்டு பாலை காய்ச்சிக் குடித்தவள்   மொபைலும் கையுமாக வராண்டாவில் அமர்ந்துவிட   அவள் சாப்பிடவில்லை என்பதை அறியாத ரகுநந்தன் அவளைப் பார்த்தபடியே ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். அலுவலகத்தில் வேலை பாக்கியிருப்பதால்   தனது புதிய செகரட்டரிக்கு போன் செய்து   தான் வருவத...

பூங்காற்று 47

 



ரகுநந்தன் சோஃபாவில் சாய்ந்தபடி  கண்ணாடி கதவுகளின் வழியே வெளியே தெரியும் காட்சிகளைக் கண்டபடியே "இவ்ளோ நடந்தும் எப்பிடி கேதரினை கல்யாணம் பண்ணிகிட்ட? என்னால இதை இப்போ வரைக்கும் நம்ப முடியலைடா" என்று ஆற்றாமையுடன் கூறிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு எதிர்ப்புற சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து காபியை அருந்திக் கொண்டே கண்ணாடிக்கதவின் வழியே தோட்டத்தில் எதையோ சீரமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அழகை கண்களால் பருகியபடியே "நடந்த எல்லா விஷயத்தையும் என்னால மறக்கவும் மன்னிக்கவும் முடிஞ்சதுக்கு ஒரே ஒரு காரணம் தான் நந்து. நான் கேதரினை எந்த அளவுக்கு காதலிக்கிறேனோ அதே அளவுக்கு அவளும் என்னை காதலிக்கிறா" என்று உணர்ச்சிப்பூர்வமான குரலில் கூற

ரகுநந்தன் வெகுண்டவனாய் "நீ லவ் பண்ணுனது டோட்டல் லண்டன் சிட்டிக்கும் தெரியும்டா. பட் அவ உன்னை லவ் பண்ணுனானு நீ எதை வச்சு சொல்லுற? உனக்கே நல்லா தெரியும், அவ உன் லைஃப்ல வந்ததே உன் ஃபேக்டரி ப்ராடெக்டோட ஃபார்முலாவை திருட தானு. அப்புறம் நீ எப்பிடி அவளோடது லவ் தானு நம்புன?" என்று படபடவென்று பொறிய அவனை கையமர்த்தினான் வருண்.

"ஏய் கூல் மேன்., நீ சொல்லுற எல்லாமே சரி தான். நீ சொன்ன மாதிரி அவ எங்க பேக்டரியோட ஃபார்முலாவை திருட தான் வந்தா. பட் அவ என்னை காதலிக்க ஆரம்பிச்சதும் அதை என் கிட்ட மறைக்கல. அவ சொல்லுறதுக்கு எவ்ளோவோ டிரை பண்ணுனா. பட் சிச்சுவேசன் சரியா வரலை.

அந்த விஷயத்தை நானா தெரிஞ்சுகிட்டு அவ கிட்ட கேட்டப்போ அவ மறைக்காம ஒத்துகிட்டா. எனக்கு அப்போதைக்கு கோவம் வந்தாலும் அவளும் நானும் காதலிச்ச நிமிசங்களை, ஒன்னா பேசி சிரிச்ச தருணங்களை நினைச்சு பார்த்தேன். அந்த சமயங்கள்ல அவ கண்ணுல நான் பார்த்தது உண்மையான காதல் மட்டும் தான் நந்து. அந்த காதல் எனக்கே எனக்கு வாழ்க்கை முழுக்க வேணும்னா அவ பண்ணுன இந்த சின்ன தப்பை மன்னிக்கிறது ஒன்னும் எனக்கு பெரிய விஷயமா படல" என்று அவன் விளக்கமளிக்க ரகுநந்தனுக்கு தன் நண்பனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

நண்பனிடம் தன் திருமணத்துக்கான விளக்கத்தை கொடுத்துவிட்டு வருண் சென்றுவிட்டான். ரகுநந்தன் அவனது விளக்கத்தை மட்டும் மூளையில் போட்டு அலச தொடங்கினான். அவனது குடும்பத்தொழிலின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்தவளை தன் நண்பனால்இவ்வளவு சுலபமாக மன்னிக்க முடிந்திருக்கிறதே என்ற ஆச்சரியம் ஒரு பக்கம்.

அமைதியாக அமர்ந்து சிந்தித்தவனுக்கு தன்னுடைய வாழ்க்கையில் இந்த சில நாட்களில் நடந்த நிகழ்வுகள் படமாய் ஓட தானும் வருணை போல அந்த பிரச்சனையை கையாண்டிருக்கலாமோ என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றாமல் இல்லை..

அந்த ஆடியோவில் அவன் கேட்டது அனைத்தும் உண்மை தான் என்று நீரஜாட்சி தன் வாயாலே கூறியதும் அதற்கு விளக்கம் கூற முன்வந்த போது தான் அதை காது கொடுத்து கேட்காததும் நினைவுக்கு வர தான் கொஞ்சம் பொறுமையாக கேட்டிருந்திக்கலாமோ என்ற யோசனை தோன்ற அதன் பின் தாங்கள் இருவரும் வாய்ப்பேச்சினால் செய்து வைத்த அனர்த்தங்களும் அவன் கண் முன் வந்து போனது.

தன்னிடம் அவள் கூற வந்த விளக்கத்தை தான் கேட்காமல் போனதால் தான் அவளுக்கு தன் மீது வருத்தம் என்பது அவனுக்கு இப்போது தான் புரிந்தது. அவள் போட்டிருந்த திட்டம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் அவள் தன் மீது வைத்திருந்த காதல் உண்மையானது தான் என்பது அவனுக்கு புத்தியில் உறைத்தது.

தான் செயின் போட்டு விட்ட போது அவள் அழுதது, திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு தன்னிடம் பேச வேண்டுமென்று கூறியது என ஒவ்வொன்றாய் நியாபகம் வர அவனது மனசாட்சி "நந்து அவ பேசுனது நடந்துகிட்டது அதிகப்படி தான். ஆனா நீ அவ பேச வந்ததை காது குடுத்து கேக்காம லவ் பண்ணுற மாதிரி நடிச்சனு வார்த்தையை விட்டுருக்க வேண்டாம்" என்று அவனுக்கு மிகவும் தாமதமாக ஒரு அறிவுரையை வழங்கியது.

கடைசியாக தான் ஆஸ்திரேலியா திரும்பும் போது அவளிடம் பேசிய வார்த்தைகள் வேறு அவனை இம்சிக்க தானே இப்படி யோசித்தால் நீரஜாட்சியை பற்றி கேட்கவே வேண்டாம்; சும்மாவே அவள் ரோஷக்காரி. தான் பேசிய பேச்சு வேறு அவளை இன்னும் சீண்டியிருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

அவள் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் எண்ணுக்கு அழைத்தான். அவள் தான் போன் செய்ததற்கான காரணத்தை கேட்டால் தான் பத்திரமாக ஆஸ்திரேலியா வந்து விட்டதை கூற அழைத்ததாகச் சொல்லி சமாளித்து கொள்ளலாம் என நினைத்தபடி அவளது குரலை கேட்க காத்திருக்க போனில் ரிங் மட்டும் போய்க் கொண்டிருந்ததே தவிர அவள் எடுக்கவில்லை.

ஏர்ப்போர்ட்டில் வைத்து அழைத்த போதும் அவள் எடுக்கவில்லையென்பதால் துணுக்குற்றவன் உடனே தந்தைக்கு அழைத்து பட்டும் படாமலும் விசாரித்தான். அவரோ நீரஜாட்சி தஞ்சாவூருக்கு சென்றிருக்கிறாள் என்ற தகவலை வெளியிட்டதோடு போனை வீட்டில் மறந்து வைத்துவிட்டாள் என்ற விஷயத்தையும் கூறினார்.

தொடர்ந்து "ஏன் உனக்கு அவ போன் பண்ணலையாடா? நான் கிச்சா மாமா கிட்ட சொல்லி அவளுக்கு புது போன் வாங்கிக் குடுக்க சொன்னேனே..நோக்கு அவ போன் செய்யலையாடா?" என்று கேட்க அவளுக்கும் எனக்கும் மனஸ்தாபம் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவன் கூறுவான்?

அவன் வார்த்தைகளை மென்று விழுங்க வேங்கடநாதன் "டேய் கண்ணா! உங்க ரெண்டு பேருக்கும் எதோ பிரச்சனைனு மட்டும் புரியறது. ஆனா என்ன பிரச்சனைனு மத்தவாளுக்கு தெரிஞ்சிடக் கூடாதுனு நீயும் நீருவும் ரொம்பவே மெனக்கிடறேள். ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுக்கோடா நந்து; உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்க அப்பா ரொம்ப யோசிச்சார். எல்லாத்தையும் மீறி அவர் ஒத்துகிட்டதுக்கு ஒரே காரணம் நீ சொன்ன வார்த்தை மட்டும் தான். அவர் உன் மேல வச்ச நம்பிக்கையில தான் அவரோட பேத்தியை நோக்கு தாரை வார்த்து குடுத்தார்ங்கிறதை மறந்துடாதடா" என்று நறுக்கு தெறித்த குரலில் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

ரகுநந்தன் தந்தை கூறிய வார்த்தைகள் மனதை வருத்த நீரஜாட்சியின் புதிய எண்ணுக்கு அழைக்கும் எண்ணத்தை அப்போதைக்கு கைவிட்டான்.

நேரே வருணிடம் சென்றவன் இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா திரும்ப வேண்டுமென்று கூறியவன் வேலையை சீக்கிரம் ஆரம்பித்துவிடலாம் என்று கூறிவிட அதன் பின்னர் இருவரும் வேலையில் மும்முரமாயினர்.

*******

அதே நேரம் நீரஜாட்சியின் வீட்டு மராமத்து பணிகள் இரண்டு நாட்களில் முடிவடைய அதன் பின் அவள் வீட்டை ஒழுங்குபடுத்துவது பக்கத்துவீட்டு வனஜாவிடம் கதை பேசுவது என்று ஜெகஜோதியாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

தினமும் மாலையில் கிருஷ்ணஜாட்சி ஹர்சவர்தனிடம் வாட்சப்பில் பேசுபவள் இரவு தாத்தா பாட்டியிடம் சுவாமி தரிசனம் பற்றி தவறாமல் கேட்டுவிட்டு தான் உறங்கச் செல்வாள்.

மற்ற நேரங்களில் மொபைலில் பாடல் கேட்பது அவளின் வழக்கம். எப்போதும் சலசலக்கும் ஸ்ரீனிவாசவிலாசவாசத்துக்கு எதிரிடையாக இந்த வீட்டின் அமைதி நிரம்பிய சூழல் அவளது கொந்தளிக்கும் மனதுக்கு இதமாகவே இருந்தது. அன்றும் அப்படி பாடல் கேட்டபடி இருந்தவளை விக்கி வந்து கிரிக்கெட் விளையாட அழைக்க அவளும் உற்சாகமாக சுடிதார் துப்பட்டாவை முடிச்சிட்டபடி கிளம்பிவிட்டாள்.

அங்கே நண்டும் நாழியுமாக இருந்த சிறுவர்கள் அவளைக் கண்டதும் விக்கியிடம் "விக்கிணா! இந்த அக்காக்கு வயசாயிடுச்சு போலயே..இவங்களால விளையாட முடியாதுணா" என்று கூற விக்கி அவர்களை சமாளித்து நீரஜாட்சிக்கு பேட்டிங் கொடுக்க சொல்லவே வேறு வழியின்றி அவர்களும் சரியென்று விளையாட ஆரம்பித்தனர்.

நீரஜாட்சி மனதின் ஆற்றாமை அனைத்தையும் அந்த பந்தை அடிப்பதில் காட்ட நீண்டநாள் கழித்து விளையாடினாலும் பந்து மட்டையில் பட்டு தெறித்தது. அந்த சிறுவர்களுக்கு அவள் விளையாடும்

ஒரு வழியாக அனைத்து ஓவர்களும் முடிய வியர்வையை துடைத்தபடி அந்த நண்டு நாழிகளிடம் வந்தவள் "டேய் குட்டிபசங்களா! ஒரு காலத்துல என்னை இந்த தெருவோட லேடி எம்.எஸ்.டி னு சொல்லுவாங்கடா..வயசானாலும் எம்.எஸ்.டி  எம்.எஸ்.டி தான்டா, புரிஞ்சுதா?" என்று கூறியபடி கண்ணை சிமிட்டிவிட்டு அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டை நோக்கி நடைபோட்டாள்.

அந்த சிறுவர்கள் "அக்கா அப்போ சன்டே மேட்சுக்கும் வாக்கா" என்று அழைப்பு விடுக்க "கண்டிப்பா வர்றேன்டா" என்று சத்தம் போட்டு கூறியபடி வீட்டிற்குள் சென்றாள்.

வீட்டிற்குள் நுழைந்தவள் மீண்டும் போனில் சரணடைய மனதில் இவ்வளவு நேரம் இருந்த உற்சாகத்தை ரகுநந்தனின் நினைவு வந்து துடைத்து போட்டது. இருவரும் அடுத்தவருக்கு பதிலடி கொடுக்கிறோம் பேர்வழியாக அவரவர் மனதையே ரணமாக்கி கொண்டதை எண்ணியபடி அப்படியே அமர்ந்து விட்டாள் அவள்.

*********

இரண்டு நாட்களுக்கு பிறகு...

ரகுநந்தன் சென்னையில் இறங்கியதுமே அவனுக்கு ஏதோ அவசரம் என்று அலுவலகத்திலிருந்து கால் வர வீட்டுக்கு கூட செல்லாமல் நேரே அலுவலகத்தை அடைந்திருந்தான் அவன். பணியாளர்கள் அனைவரிடமும் பேசிவிட்டு தனது அறைக்கு போகவிருந்தவனிடம் "சார் ஹனிமூன் நல்லபடியா முடிஞ்சுதா? நீரு மேம் வீட்டுக்கு போயிட்டாங்களா?" என்று பெண் ஊழியர்கள் சிலர் கேட்க

அவன் புன்னகையுடன் "நான் ஹனிமூன்லாம் போகல. ஆஸ்திரேலியா போனது பிஸினஸ் விஷயமா தான். நீரு மேம் இப்போ தஞ்சாவூர் போயிருக்காங்க" என்று கூறிவிட்டு பெருமூச்சு விட அந்த பெண்கள் நமட்டுச்சிரிப்பு சிரித்தனர்.

அவர்களில் ஒருத்தி "நம்ப முடியலையே சார்., அவங்களுக்கு நீங்கன்னா ரொம்ப பிடிக்குமே! ரொம்ப பொஸசிவ் டைப்பாச்சே. எப்பிடி உங்களை தனியா விட்டாங்க?" என்று கேட்க

இன்னொருத்தி "ஆமா சார்! உங்களை லைட்டா பார்த்ததுக்கு உங்களுக்கு ஆல்ரெடி கேர்ள் ஃப்ரெண்ட் இருக்காங்க, சோ உங்களை சைட் அடிக்க கூடாதுனு எங்களுக்கு ஒரு நாள் அட்வைஸ் பண்ணுனாங்க. அப்போவே நினைச்சோம் அது அவங்களா தான் இருக்கும்னு" என்று கூற இவை அனைத்துமே அவனுக்கு புதிதாக இருந்தது.

ஒரு வழியாக அவர்களிடம் இருந்து விடைபெற்றவனின் மனம் முழுவதும் நீரஜாட்சிக்கும் தன் மீது அளவில்லா காதல் இருந்திருக்கிறது; தான் அதை புரிந்து கொள்ளாத முட்டாளாக இருந்துவிட்டோமே என்ற வருத்தம் நிரம்ப சீக்கிரமாக வீட்டை அடைந்தான்.

ஆளரவமின்றி இருந்த வீடு அவனுக்கே ஒரு வெறுமையை உணர்த்த நீரஜாட்சி சீக்கிரம் திரும்புமாறு வேண்டியதற்கான காரணம் அப்போது அவனுக்கு புரிந்தது. சாவியை போட்டு கதவை திறந்தவன் வீட்டினுள் நுழைந்தான்.

வீட்டின் அமைதி அவனுக்கே புதிதாக தோன்ற தங்களின் அறைக்குச் சென்றவன் அறையை சுற்றி நோட்டமிட நீரஜாட்சி இல்லாத தனிமை முதன் முதலாக அவனை சுட்டது. ஒன்றாக இருந்த போதும் எலியும் பூனையுமாக முறைத்த போதும் இருந்த ஒரு இதம் இப்போது இல்லாமல் போன உணர்வு. தலையை உலுக்கிவிட்டு பயணத்தின் அலுப்பு தீர குளிக்கச் சென்றான் அவன்.

குளித்துவிட்டு வந்தவன் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்று தலைமுடியை சிலுப்பிவிட்டுக் கொள்ள அவன் பார்வையில் விழுந்தது அவனது பெயர் பொறித்த அவன் கையால் நீரஜாட்சிக்கு அணிவித்த செயின். அதைக் கண்டவன் அதிர்ச்சியில் அதை கையில் எடுத்துக் கொண்டான்.

"இதை நான் கழட்டவே மாட்டேன்" என்று உறுதியான குரலில் கண் நிறைய காதலுடன் கூறியவளின் பூமுகம் நினைவில் தோன்ற கலைந்தது அவளின் உறுதி மட்டும் தானா இல்லை தன் மீது வைத்திருந்த காதலுமா என்ற அதிர்ச்சியுடன் தலையை கைகளில் தாங்கியபடி படுக்கையில் அமர்ந்துவிட்டான் ரகுநந்தன்.

"உண்மையை சொல்லணும்னா எனக்கு திரும்பி வர கூட இஷ்டமில்ல. ஒரு வேளை திரும்பி வந்தேன்னா இந்தாத்துல நீ இல்லாம போனேனு வையேன், இன்னும் சந்தோசப்படுவேன்" என்று மிதமிஞ்சிய கோபத்தில் கத்திய வார்த்தைகள் அனைத்தும் அவனைக் கண்டு கைகொட்டி சிரிப்பது போல ஒரு மனப்பிரமை.

எந்த அர்தத்தில் அவள் இல்லாமல் போனால் சந்தோசப்படுவேன் என்று தான் கூறினோம் என்று தன்னையே கடிந்து கொண்டவன் இந்த செயினை கழற்றி வைத்துவிட்டு போனதிலேயே அவளது இப்போதைய மனநிலை ஓரளவுக்கு பிடிபட இந்நிலை இப்படியே தொடர்ந்தால் ஷேத்ராடனம் சென்று திரும்பிய தனது குடும்பத்தார் வந்து பார்க்கையில் நிலமை இன்னும் மோசமாகி விடும் என்ற உண்மை அவன் நெஞ்சை சுட்டது.

எப்பாடு பட்டாவது அவளின் மனதில் இழந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று எண்ணியவன் மறுநாள் தஞ்சாவூர் செல்லும் எண்ணத்துடன் படுக்கையில் விழுந்தான். அவனுக்கு தூக்கம் வருவேனா என்று ஆட்டம் காண்பிக்க கண்ணை இறுக மூடி தூங்க முயற்சித்தான். சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டான்.

மறுநாள் காலையில் விழித்தவனின் மனம் தெளிவாக இருந்தது. நடந்த விஷயங்களை வைத்து பார்க்கும் போது நீரஜாட்சி தன்னை நேசித்ததில் எவ்வித சந்தேகமும் இல்லை. எப்போதுமே ரகுநந்தனை அவளுக்கு பிடித்து தான் இருந்திருக்கிறது.

அவளது இந்த திட்டம் தவறு என்பதை உணர்ந்து தான் தன்னிடம் அவள் கூற வந்திருக்கிறாள் என்பதை அறிந்தவனின் செவியில் "நான் ஏன் பொய் சொல்ல போறேன் நந்து? நிஜமாவே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். விரும்பாத ஒருத்தனை எந்த பொண்ணாலயும் புருசனா ஏத்துக்க முடியாதுடா" என்றவளின் குரல் தெளிவாக விழ வேகமாக தஞ்சாவூர் செல்ல உடைகளை அடுக்க தொடங்கினான் அவன்.

ஷோல்டர் பேக்கை மாட்டிக் கொண்டவன் அவர்களின் திருமண புகைப்படத்தின் அருகில் சென்றவன் அதில் நீரஜாட்சியின் முகத்தை வருடிக் கொடுத்துவிட்டு "நான் சீக்கிரமா வந்துடுவேன் நீருகுட்டி" என்றான் அளவில்லா காதலுடன்.


Comments

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1