பூங்காற்று 38

Image
  நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி "அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே பட்டும் படாம நடந்துண்டா நந்து அம்மாக்கு நம்ம மேல அக்கறையே இல்லைனு நினைச்சுக்க மாட்டானா ?" என்று இழுத்துப் பிடித்து அவரை ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட வைத்தார். அதே நேரம் நிச்சயம் மற்றும் முகூர்த்தத்துக்கான புடவைகளை கிருஷ்ணஜாட்சி எடுத்துவிட ஊஞ்சல் வைபவத்துக்கு இன்னும் சில சடங்குகளின் போது அணிய தேவையான புடவைகளை மைத்திரேயியுடன் சேர்ந்து தானே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தார் மைதிலி. இளைய மருமகளுக்கு பேத்திகளின் மீது இருக்கும் பாசத்தை எண்ணி பட்டாபிராமன் தம்பதியினர் மகிழ்ந்து போயிருக்...

அத்தியாயம் 20

 

அத்தியாயம் 20

வராண்டாவில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தரங்கிணி. அவளது மனதைப் போலவே வானமும் கருமேகங்களால் சூழப்பட்டிருந்தது. சூள் கொண்ட மேகங்கள் எப்போது வேண்டுமானாலும் மழையைப் பிரசவிக்கலாம் என்ற நிலமை.

சில்லென்ற காற்று வேறு வீசிக்கொண்டிருந்தது. அதை எல்லாம் ரசிக்கும் மனநிலை தரங்கிணிக்கு இல்லை. அவளது மனதைத் தான் மனோரதி அந்தளவுக்குக் குழப்பிவிட்டாரே!

அன்னையின் தவிப்புக்கும், மைந்தனின் சுதந்திர வாழ்க்கைக்கான கனவுக்கும் இடையே சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாள் தரங்கிணி.

அதிரதனிடம் மனோரதியின் நிலையை எடுத்துச் சொன்னால் அவன் புரிந்துகொள்வானா? அவனது மனதில் தன்மீதுள்ள விருப்பத்தைச் சொன்னதால் துரத்திவிடுவதாக எண்ணிக்கொள்வானோ?

அதிரதன் தன்னைத் தவறாக எண்ணிவிடக்கூடாதே என்ற ஆதங்கம். என்ன தான் செய்வது? இந்தப் பிரச்சனைக்கு யார் தான் தீர்வு சொல்வது?

முந்தைய தினம் முழுவதும் குழம்பித் தவித்தவளுக்கு அனுபமா ஒரு யோசனை கூறினாள்.

என்ன பிரச்சனை என்று அவளிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

“எனக்கு ஒரு பிரச்சனை அனு… இப்போதைக்கு வெளிய சொல்ல முடியாத நிலமை… நான் ரெண்டு பக்கத்துக்கும் பாதிப்பு வராத அளவுக்கு ஒரு முடிவு எடுக்கணும்… எந்த இடத்துலயும் நான் சுயநலமா யோசிச்சிடக்கூடாது… என்னால தெளிவா யோசிக்க முடியல… நான் என்ன முடிவெடுத்தாலும் அது தப்பா மட்டுமே தெரியும்ங்கிற மாதிரி என் மனசு சொல்லுது… யார் கிட்ட இந்தப் பொறுப்பை ஒப்படைக்குறதுனு தெரியாம ரெண்டு நாளா எனக்குள்ள புழுங்கிட்டிருக்கேன்”

முகம் கசங்க தரங்கிணி இவ்வாறு சொன்னதும் அனுபமாவுக்கு மனபாரமாகிப் போனது. இதுநாள் வரை அவள் கலங்கியது சித்தார்த்தைப் பற்றி மட்டுமே. இப்போதுதான் அவன் அவளுடன் இருக்கிறானே! அப்படி என்றால் அதை விடவும் பெரிய பிரச்சனை எதுவோ அவள் வாழ்க்கையில் இப்போது நுழைந்திருக்க வேண்டும் என ஊகித்தாள் அனுபமா.

என்ன பிரச்சனையெனத் தெரியாமல் அதற்கு தீர்வு சொல்ல அவளால் முடியாது. அதே நேரம் மனிதர்களிடம் சொல்ல முடியாத பிரச்சனைகளைத் தரங்கிணியால் இறைவனிடம் சொல்ல முடியுமே!

இமாசலுக்கு மகள் வேலைக்குச் செல்லப்போகிறாள் என்றதும் அன்னை சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

“நீ வேலை பாக்குற இடத்துக்குப் பக்கத்துல காங்ராங்கிற இடத்துல பைஜ்நாதர் மந்திர் இருக்கு… எல்லா நோய்களுக்கும் அவரால தீர்வு உண்டு… மனப்பிரச்சனையையும் அவர் போக்குவாராம்… கட்டாயம் ஒரு தடவை அங்க போயிட்டு வா”

அன்னை தனக்குச் சொன்ன செய்தியைத் தரங்கிணியிடம் கூறினாள் அனுபமா.

“மனுசங்களால தீர்வு சொல்ல முடியாத பிரச்சனைய கடவுள் தீர்த்து வைப்பார் தாரா தி… உங்களால யார் கிட்டவும் ஷேர் பண்ண முடியாதுனு நினைக்குற இந்தப் பிரச்சனைய கடவுள் கிட்ட ஷேர் பண்ணுங்க… தீர்வு சொல்லுங்கனு கேளுங்க... கட்டாயம் உங்க மனக்குழப்பம் தீரும்… நோய் தீர்க்குற பைஜ்நாத் உங்களோட மனக்குழப்பத்தையும் தீர்த்து வைப்பார்”

தரங்கிணிக்கும் அனுபமா சொன்ன இந்த யோசனையைச் செயல்படுத்தினால் என்னவெனத் தோன்றியது.

அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் சற்று தாமதமாகக் கண்விழித்தவள் மொத்த மசோப்ராவும் இருண்ட மேகங்களால் மங்கித் தெரிவதைக் கண்டதும் பருவமழைக்கான அறிகுறி என்பதைப் புரிந்துகொண்டாள்.

அதிரதனையும் சித்தார்த்தையும் காணவில்லை. முந்தைய இரவுணவின் போது அவர்கள் இரகசியமாக ஏதோ பேசிக்கொண்டதைக் கவனித்தவளுக்கு இருவருமாகச் சேர்ந்து எங்கும் சென்றிருப்பார்கள் என்று தோன்றியது.

சோம்பல் முறித்தபடி வராண்டாவில் அமர்ந்து வானத்தைப் பார்த்தபடியே மறுநாள் விடுமுறை வேண்டுமென மனிதவள மேலாளருக்கு விடுமுறை விண்ணப்பத்தை மின்னஞ்சலில் அனுப்பிவைத்தாள். இன்றைய தினம் கோவிலுக்குச் சென்று திரும்ப தாமதமாகிவிட்டால் மறுநாள் வேலைக்குச் செல்ல உடல் ஒத்துழைக்காது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

அப்படியே மொபைலை எடுத்து காலநிலை குறித்த அறிக்கைகளை யூடியூபில் செய்தி சேனல்கள் மூலம் பார்த்தவளுக்கு இந்த முறை பருவமழையின் ஆரம்பமே கடுமையாக இருக்குமெனச் சொன்னதும் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.

மழை தானே என்ற எண்ணம்! அளவாகப் பெய்தால் மட்டுமே மழையை இரசிக்கவும் போற்றவும் முடியும். அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாகும் போது மழை மட்டும் அழிவாகாதா?

இதெல்லாம் சிந்திக்கிற நிலமையில் தரங்கிணியின் மூளை இல்லை. இப்போதைய பிரச்சனை முடியவேண்டும்.

அதிரதன் வருவதற்காக காத்திருந்தாள் அவள்.

அவனும் வந்தான். சித்தார்த்தும் அவனும் ஜாகிங் போயிருந்தார்களாம். இருவரின் பேச்சில் தெரிந்துகொண்டாள்.

“குட்மானிங் ஆன்ட்டி”

சத்தமாக அவன் கத்தவும் அவள் போலியாக முறைத்தாள்.

ஆனால் அதிரதன் அவளது முறைப்பைக் கவனிக்கவில்லை. அவன் சித்தார்த்துடன் ஏதோ சொன்னபடி வீட்டின் முன்னே நடைபயிற்சியை ஆரம்பித்தான்.

இருவரும் எதையோ பேசிச் சிரிப்பதைக் கன்னத்தில் கையூன்றி கவனித்தாள் தரங்கிணி.

“இந்தத் தடவை டேர்ம் எக்சாம்ல நான் தான் க்ளாஸ் டாப்பர்… எனக்கு எப்ப கிப்ட் வாங்கி தருவிங்க அதி?”

“நீ மட்டும் இன்னைக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு ரவுண்ட் ஓடு… நீ என்ன கேட்டாலும் வாங்கி தர்றேன்”

குழந்தைகளைப் படிக்க வைப்பது, தினசரி வேலைகளைச் செய்ய வைப்பது எல்லாம் மிகவும் கடினம். சில பெற்றோர் அதை அதட்டல், மிரட்டல் மூலம் செய்ய வைக்கப் பார்ப்பார்கள்.

அதனாலேயே ‘டாக்சிக் பேரண்டிங்’கை குழந்தைகள் வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.

சில பெற்றோரோ குழந்தைகள் கேட்கும் முன்னரே பொருட்களையும் பரிசுகளையும் வாங்கி குவித்து அவர்களுக்கு நிதர்சனம் புரியாமல் வளர்த்துவிடுவார்கள்.

இத்தகைய குழந்தைகள் வளர்ந்தாலும் ‘நான் நினைக்கும் அனைத்தும் உடனடியாக நடந்தாக வேண்டும்’ என்ற மனப்பான்மையுடன் உலகை அணுகுவார்கள்.

இதுவும் தவறே!

வெகு சில பெற்றோர் மட்டுமே குழந்தைகளைச் சரியாக அணுகத் தெரிந்தவர்கள். அந்த வரிசையில் தரங்கிணி இடம்பிடிக்க முயன்று கொண்டிருக்கிறாள். அதே அணுகுமுறையை அதிரதனிடமும் அவளால் காண முடிந்தது.

கண்களை அகற்றாமல் தங்களையே தரங்கிணி பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டுகொண்டான்

“நீ இன்னும் ரெண்டு ரவுண்ட் நடக்கணும்”

சித்தார்த்திடம் கறாராகச் சொல்லிவிட்டு வராண்டாவை நோக்கி வந்தவன் தரங்கிணியின் அருகே கிடந்த நாற்காலிகளில் ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.

“என்னை சைட் அடிக்குறியா தரு?” குழைவாக வந்தது அவனது குரல்.

தரங்கிணி மறுப்பாக ஏதோ சொல்ல வரவும் கை நீட்டி தடுத்தான்.

“இல்லனு சொல்லிச் சமாளிக்க நினைக்காத… விட்டா கண்ணாலயே நீ என்னைச் சமைச்சு சாப்பிட்டிருவ போல… மேன் ஈட்டர்”

இப்போது தரங்கிணி சத்தமாக நகைத்தாள்.

அதிரதன் அவளது சிரிப்பை ரசித்தபடி தலைக்குக் கைகளை அண்டை கொடுத்து நாற்காலியில் சாய்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டான்.

அவனது கண்களில் அத்துணை கனிவு.

“நான் எடுத்த முடிவு சரிதான்னு ஒவ்வொரு மொமண்டும் நமக்குச் சொல்லுதுல்ல?” என்றான் அவன்.

“ம்ம்ம்”

ஆமோதிப்பாய் தலையாட்டியவள் “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா அதி? பைஜ்நாத் மந்திருக்கு இன்னைக்கு ஈவ்னிங் போகலாம்னு இருக்கேன்… நைட் ஆரத்தி முடிஞ்சதும் அங்க இருந்து கிளம்பிடுவேன்… பட் இங்க எப்ப வருவேன்னு தெரியாது… சப்போஸ் ரொம்ப லேட் ஆச்சுனா வழில ஏதாச்சும் சின்ன மோட்டல்ல தங்கிட்டு மானிங் வந்துடுவேன்… அதுவரைக்கும் சித்தார்த்தைப் பாத்துக்க அதி… சப்போஸ் நான் வர லேட் ஆச்சுனா மானிங் ப்ரேக்ஃபாஸ்ட் மட்டும் அவன் கூட சேர்ந்து சமைச்சிடுவியா?” என்று கேட்க

“வாட்? வானத்தைப் பாத்தியா? எந்த நேரத்துலயும் மழை வரலாம்… அதுலயும் இந்த வீக் ஃபுல்லா மழை இருக்கும்னு நேத்து நைட் வெதர் ரிப்போர்ட்ல சொன்னாங்க… ஆல்ரெடி நிறைய இடத்துல ஹெவி ரெயின்… சப்போஸ் நீ போன இடத்துல மாட்டிக்கிட்டனா என்ன பண்ணுவ?” என்று சற்று கோபமாகக் குரல் உயர்த்தினான் அதிரதன்.

தரங்கிணிக்கும் அது புரிந்தது. ஆனால் மனோரதி இன்னும் ஒரு வாரம் மட்டுமே மசோப்ராவில் இருப்பாரெனக் கூறியிருந்தார். நாள் கடத்தினால் ஒரு அன்னையின் மனம் புண்ணாகுமே என்ற வருத்தம். கூடவே தனது தலையைச் சுற்ற வைக்கும் இந்தப் பிரச்சனையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் விடுபடுகிறோமே அவ்வளவு சீக்கிரம் நிம்மதியாக இருக்கலாமெனத் தரங்கிணி நினைத்தாள்.

“ப்ச்… மான்சூன் ரெய்ன் தானே அதி? அப்பிடி என்ன பெருசா பெஞ்சிடப் போகுது? அப்பிடி பெஞ்சாலும் நான் சேஃபா தங்கிட்டு வருவேன்… நீ என்னை ட்ரீட் பண்ணுற விதம் ஏதோ குழந்தைய ட்ரீட் பண்ணுற மாதிரி இருக்கு”

முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அவள் சொல்லவும் பக்கென நகைத்தவன் “இப்பிடியே உன் ரூமுக்குப் போய் கண்ணாடில உன்னோட முகத்தைப் பாரு… நீ குழந்தை மாதிரி தான் உர்ருனு வச்சிருக்க” என்றான்.

“பேச்சை மாத்தாத அதி”

“இன்னைக்கே போயாகணும்னு என்ன அவசியம்? அதுவும் தனியா போய்த் தீரணும்னு என்ன கட்டாயம்? நானும் சித்துவும் உன் கூட வர்றோம்… மூனு பேருமா போய் பைஜ்நாத்தைத் தரிசனம் பண்ணிட்டு வருவோம்… லைக் அ ஃபேமிலி அவுட்டிங்… என்ன சொல்லுற?”

கண் சிமிட்டிக் கேட்டான் அதிரதன்.

தரங்கிணி முறைக்கவும் கையுயர்த்தி ‘மன்னித்துவிடு’ என்பது போல சைகை காட்டினான் அவன்.

“இது என்னோட தனிப்பட்ட மனக்குழப்பத்தைத் தீர்த்துக்க நான் தனியா போறதுதான் சரியா இருக்கும்… நம்ம மூனு பேரும் இன்னொரு நாள் போகலாம்”

தரங்கிணியை மேற்கொண்டு வற்புறுத்த முடியாமல் அமைதியாகிப் போனான் அதிரதன்.

மாலையில் சொன்னபடி தரங்கிணி வாடகை டாக்சியில் மசோப்ராவிலிருந்து காங்ராவுக்குப் புறப்பட்டாள். செல்லும் முன்னர் அதிரதனுக்குத் தொல்லை கொடுத்துவிடாதே எனச் சித்தார்த்திடம் கூறிவிட்டுத் தான் போனாள்.

தரங்கிணி சென்றதும் வீடு வெறுமையாகத் தெரிந்தது இருவருக்கும். அவர்களின் ஞாயிறுகள் இப்படி இருந்ததில்லை.

தரங்கிணி கண் விழிக்கும் முன்னர் அதிரதனோடு சித்தார்த் ஜாகிங் செல்வான். தரங்கிணி மெதுவாக எழுந்து காபி அருந்துகையில் இருவரும் வருவார்கள்.

காலையுணவு, மதியவுணவு எல்லாம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். வீடு சுத்தம் செய்வது, துவைத்த துணிகளை உலர்த்துவது எல்லாம் மூவரும் சேர்ந்தே செய்வார்கள். வேலைக்கு நடுவே அரட்டையும், சிரிப்புமாகக் கழிந்த ஞாயிறுகளின் கலகலப்பு இந்த ஞாயிறில் மிஸ் ஆகிப்போன உணர்வு இருவருக்கும்.

“அதி நம்ம லக்கார் பஜாருக்குச் சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோமா? தரும்மா இல்லாம வீடு போரடிக்குது”

அதிரதனுக்கும் அதே உணர்வு! சித்தார்த்தை அழைத்துக்கொண்டு தனது ராயல் என்ஃபீல்ட் பைக்கில் லக்கார் பஜாருக்குக் கிளம்பினான் அதிரதன்.

மழைக்கான அறிகுறியாக வானம் தூரல் போட்டாலும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

சித்தார்த்துக்குப் பேல்பூரி வாங்கி கொடுத்த அதிரதன் அவனோடு சேர்ந்து ஒரு மரபெஞ்சில் அமர்ந்துகொண்டான்.

அந்த பெஞ்சுக்குக் கூட ஒரு கதை உண்டு என்று சித்தார்த்திடம் தனது கல்லூரிப்பருவத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

“ஆக்ஸ்வலி எனக்கு இன்ஸ்டிட்டியூட்ல செமயா போரடிக்கும்… வாரத்துல ஆறு நாள் கடனேனு க்ளாஸ் அட்டென்ட் பண்ணுவேன்… சண்டே எனக்கான ரிலாக்சேசன் பாயிண்ட் இந்த லக்கார் பஜார்… இங்க உக்காந்து என் ஃப்ரெண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சிக்கிட்டு வர்றவங்க போறவங்களை எல்லாம் கலாய்ப்பேன்… உனக்கு ஒன்னு தெரியுமா? தருவும் அவளோட கேங்கும் எங்களை விட செம கேடி… அந்தக் கேங்குல எல்லாரும் படிப்ஸ்… அதனால எங்களை விட அவங்களுக்கு இன்ஸ்டிட்டியூட்ல நிறைய ஃப்ரீடம் உண்டு.. படிப்ஸ்னு தான் பேரு… ஆனா எங்களை விட பங்கமா கலாய்க்கும் மொத்த கேங்கும்”

“தரும்மாவுமா?” சித்தார்த் ஆச்சரியமாகக் கேட்டான்.

“அட ஆமாடா! உன் தரும்மா நம்பர் ஒன் வாயாடி… என்னை எப்பிடிலாம் கலாய்ப்பா தெரியுமா? ஒரு ஃபிஷ் என்பாப்புலேட் ப்ராப்பரா செய்யலனு என்னை ஒரு மாசம் கலாய்ச்சவ… பட் ரொம்ப நல்லவடா… ப்ராக்டிக்கல் க்ளாஸ்ல அவ டெடிகேசனா குக் பண்ணுறதைப் பாக்க அவ்ளோ அழகா இருக்கும்… எங்க இன்ஸ்டிட்டியூட்ல தருக்கு நிறைய ஃபேன்ஸ் உண்டு… அதனாலயே அவளோட கவனத்தை என் பக்கம் திருப்ப நான் ஏதாச்சும் செஞ்சுட்டே இருப்பேன்… கலினரி ஒலிம்பிக்சுக்காக நானும் அவளும் ஜெர்மனி போனப்ப அங்க வேணும்னு ஷீ ஃபுட் ரெஸ்ட்ராண்ட்ல ப்ரான் சாப்பிட்டு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி சீனியர் ஒருத்தன் உன் அம்மாக்குப் ப்ரபோஸ் பண்ண விடாம தடுத்தேனாக்கும்”

“அச்சோ? உங்களுக்கு ப்ரான், சோயா பீன்ஸ் எல்லாம் சாப்பிட்டா அலர்ஜி ஆகிடுமே? ஏன் அப்பிடி செஞ்சிங்க அதி?”

சித்தார்த் படபடத்தான். தரங்கிணியின் முகத்தில் அன்று கண்ட அதே பதற்றம்! அவளுடைய குரலில் தொனித்த அதே அக்கறை! அதிரதனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்ற பயம்!

“அம்மாக்குப் புள்ளை தப்பாம பிறந்திருக்கடா”

அவனது கூந்தலைக் கலைத்துவிட்டான் அதிரதன். மறக்காமல் ஜெர்க்கினின் ஹூடியை அவன் தலை மீது இழுத்துவிட்டான்.

“அது என்னமோ தரு ஒரு இடத்துல இருந்தா, அவ என்னை மட்டுமே பாக்கணும், என் கூட மட்டுமே இருக்கணும்னு சைல்டிஷான எண்ணம்… இப்பவும் அது இருக்கு… ஆனா அதை ஷேர் பண்ணிக்க என்னை விட உரிமையுள்ள ஒருத்தன் நீ இருக்கியே?”

சித்தார்த் சிரித்தான்.

“நீங்க என் அப்பாவா வந்திங்கனா உங்களுக்கும் அந்த உரிமை கிடைக்கும்ல?”

அதிரதன் கண்கள் பளபளக்க அவனை நோக்க சித்தார்த்தோ தேநீரை ஊதி ஊதி குடிக்க ஆரம்பித்தான்.

“நீ ரொம்ப புத்திசாலிடா… ஆனா சித்து, சில விசயங்கள் எல்லாம் சொல்லுறதுக்குச் சுலபமா இருக்கும்… நடைமுறைல சாத்தியமில்ல… இதெல்லாம் உனக்குப் புரியாது”

அதிரதன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே தூறலாய் விழுந்த மழை சடசடவென்ற சத்தத்தோடு பெய்ய ஆரம்பித்தது. மழை விட்டதும் வீட்டுக்குப் போகலாமென நினைத்தவர்கள் ஒரு மணி நேரமாகியும் மழை நிற்காமல் வானத்தை உடைத்துக்கொண்டு பெய்ததால் வேறு வழியின்றி நனைந்து கொண்டே பைக்கில் கிளம்பினார்கள்.

பெரிதாக மழை பற்றி கவலைப்படாத இருவருக்கும் மாலையில் ஆரம்பித்து இரவு வரை கொட்டித் தீர்த்த மழையும், துண்டிக்கப்பட்ட மின்சாரமும் கொஞ்சம் பீதியூட்டின.

இங்கேயே இப்படி என்றால் தரங்கிணி வேறு தனியாய் காங்ரா போயிருக்கிறாளே என்று பதறியடித்து அதிரதன் அவளது மொபைலுக்கு விடுத்த அழைப்புகள் அனைத்தும் ஏற்கப்படாத அழைப்புகளாக துண்டிக்கப்பட மெதுவாக அவளது பாதுகாப்பு குறித்த கவலையில் ஆழ்ந்தான் அதிரதன்.

Comments

  1. வெண்பனியாய் சில நினைவுகள்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 20)

    இந்த தரு குழப்பம் தீர்க்கப் போய் இக்கட்டுல மாட்டிக்கிட்டாளோ...?
    அதி அப்பவே சொன்னான் தானே, வெதர் சரியில்லைன்னு
    அப்ப முகத்தைச் சுருக்கி, சின்னப்புள்ளைத்தனமா பண்ணிட்டு இப்ப உண்மையாவே சின்னப் புள்ளைத்தனமா போய் மாட்டிக் கிட்டாளோ...?

    ஆனா, தரு ஒண்ணை புரிஞ்சிக்கலை. இப்பவும் மனோரதி தன்னுடைய பையனை தன்னுடைய இஷ்டத்துக்கு வளைக்கத் தான், தான் நினைச்சதை சாதிக்கத்தான் தரு கிட்ட பிட்டையே போட்டங்கன்னு புரிஞ்சுக்கவேயில்லையே. மனோரதி தரு கிட்ட பேசினது மட்டும் அதிரதனுக்கு தெரிஞ்சது
    தருவையும் திட்டுவானோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. Mano avanga hurt aaga koodathu nu tharu yaru kita prachanai ah share pannurathu nu ipadi climate ah kooda care pannama kovil ku poi iruka enna aaga poguthu nu theriyala

    Sidhu easy ah solluran adi kita appa ah va vandhu du apadi nadantha nalla than oru kum parpom indha climate change avanga life la ethachum change kondu varuthu ah nu

    ReplyDelete
  3. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1