Posts

Showing posts from March, 2025

பூங்காற்று 37

Image
  ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும் , ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு ஏதோ மீட்டிங்குக்காக அனுப்பிவிட வீட்டில் தனித்திருக்க பிடிக்காதவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். வழக்கமாக இப்படி வெளியூர் பயணங்களில் அவனுடன் அவளும் செல்வது வழக்கம். ஆனால் அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கருத்தில் கொண்டு ராகுல் அவளை   வரவேண்டாமென்று கூறிவிட்டான். சகோதரனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள பிறந்த வீட்டுக்கு வந்தவள் நீரஜாட்சியிடம் மட்டும் சற்று விலகியே இருந்து கொண்டாள். நீரஜாட்சியும் அவளை புருவ தூக்கலோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவாள். அன்றும் அப்படி நடந்த போது ஸ்ருதிகீர்த்தி நீரஜாட்சியை பார்த்தபடி நடந்து சென்றவள் தரைவிரிப்பில் கால் சிக்கிக் கொள்ள தடுமாறி விழப் போனாள். நீரஜாட்சி பதறிப் போனவளாய் ஓடி வந்து அவள் கையை பிடித்து அவளை விழாமல் நிறுத்தியவள் "உனக்கு அறிவு இல்ல ? ஆகாயத்தை பார்த்து ...

பூங்காற்று 32

Image
  கிருஷ்ணஜாட்சியிடம் நீரஜாட்சி வீட்டை நோக்கி கை காட்ட பட்டாபிராமனின் குரல் அவள் காதிலும் தெளிவாக விழுந்தது. அவளால் அப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஏனெனில் இந்த விவகாரத்தில் அவளால் இன்னும் சரியான ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. முதலில் அவளால் ஹர்சவர்தனின் காதல் என்ற வார்த்தையையே நம்ப முடியவில்லை எனும் போது மற்றவற்றை யோசிக்க அவளுக்கு இப்போது அவளுக்கு விருப்பமும் இல்லை , நேரமும் இல்லை. எனவே நீரஜாட்சியிடம் பட்டாபிராமனைச் சமாதானம் செய்துவிட்டு வருமாறு கூறியவள் அவுட் ஹவுஸை நோக்கி நடைபோட்டாள். நீரஜாட்சி நீண்டநாட்களுக்குப் பின் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவள் நடுஹாலில் அமர்ந்து தனது நண்பர் சேஷனிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் பட்டாபிராமனை நோக்கி வந்தாள். வரும் போதே "அடேங்கப்பா! பட்டு உனக்கு இளமை திரும்புதுனு நினைப்போ ? மனுஷி நிம்மதியா ஊஞ்சல்ல கண் மூடி பாட்டு கேக்கலாம்னு வந்தேன். உன்னோட சத்தம் என்னோட ஹெட்போனையும் தாண்டி கேட்டுச்சுனா பாரேன் , உன் வாய்ஸ் எவ்ளோ லவுடா இருந்திருக்கும்னு" என்றுச் சொன்னபடி வந்தவளைப் பார்த்ததும் கப்சிப் ஆனார் மனிதர்....

பூங்காற்று 31

Image
    ஹர்சவர்தனும் , ரகுநந்தனும் இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த காதலின் பாரத்தை அவரவர் இணையிடம் இறக்கிவிட்ட திருப்தியில் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க , கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் அதற்கு எவ்வித பதிலையும் கூறாமல் தங்களது வேலைகளில் பிஸியாகி விட்டனர். இரு சகோதரர்களும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பாமல் சொல்லும் போது சொல்லட்டும் என்று விட்டு விட்டனர். கிருஷ்ணஜாட்சிக்கு ஹர்சவர்தனின் மனதில் வர்ஷா மீது எந்த காதலும் இருந்ததில்லை என்று தெரிந்ததே அவளுக்கு பெரும் நிம்மதி. அதே போல தன்னை பிடிக்காமல் ஒன்றும் அவன் மணமுடிக்கவில்லை என்பதும் அவளது மனதில் இத்தனை நாட்கள் இருந்த நெருடலை போக்கியது. கிருஷ்ணஜாட்சியின் தற்போதைய மனச்சுணுக்கத்துக்கு பத்மாவதி மட்டும் தான் காரணம். எக்காலத்திலும் அப்பெண்மணி பேசிய வார்த்தைகளை அவளால் மறக்க இயலாது என்று எண்ணிக் கொள்பவள் ஹர்சவர்தனின் காதல் பேச்சை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் பேக்கரி விரிவாக்கத்தில் மும்முரமானாள். நீரஜாட்சியின் நிலையும் அதுவே. ரகுநந்தன் அவளிடம் மனதை வெளிப்படையாக கூறிய நாளன்றே கிருஷ்ணஜாட்சியிடம் அதை தெரிவி...

பூங்காற்று 30

Image
  ரகுநந்தன் அவளிடம் பேச செல்லும் போது நீரஜாட்சி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். ரகுநந்தன் தயக்கத்துடன் காரை அலுவகத்தை நோக்கி விட்டவன் அதன் பின் அவனது வழக்கமான அலுவல்களின் பிஸியாகி விட்டான். மாலையில் அவள் கிளம்பும் நேரத்தில் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டு தான் கிளம்புவாள். ஆனால் அன்று மணி ஆறரையை தாண்டியும் அவள் ரகுநந்தனிடத்தில் சொல்லிக் கொண்டு கிளம்ப வரவில்லை. அவன் வேகமாக நீரஜாட்சியின் அறையை நோக்க அதில் பூட்டு தொங்கவே "ஓ! மேடம் கிளம்பிட்டாங்களா ? சரி வீட்டுல போய் பார்த்துக்கலாம்" என்று எண்ணியவன் வீட்டுக்கு செல்ல தயாரானான். அப்போது ஹர்சவர்தனிடம் இருந்து போன் வர அவர்கள் இருவரும் ஹோட்டலின் விரிவாக்கம் பற்றி பேசிக் கொண்டதில் நேரம் போனதே தெரியவில்லை. ஹர்சவர்தன் தான் வீடு திரும்ப தாமதமாகிவிடும் , அம்மாவிடம் கூறிவிடுமாறு சொல்லிவிட்டு போனை வைத்தான். ரகுநந்தனும் அதன் பிறகு வீடு திரும்பியவன் தோட்டத்தின் ஊஞ்சலில் அவள் அமர்ந்திருக்கிறாளா என்று நோட்டமிட்டவாறே வீட்டினுள் சென்றவனிடம் அவனது தாத்தாவும் பாட்டியும் பேச அமர்ந்துவிடவே அவனால் அன்று இ...

பூங்காற்று 29

Image
  ரகுநந்தனும் , நீரஜாட்சியும் ஒரே நேரத்தில் அதிர ஹர்சவர்தன் அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக "நான் எப்போவோ அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன , என் மனசுல இருக்கிறதை நான் யார் கிட்டவும் ஷேர் பண்ணிக்கல! அப்போ நான் இருந்த மனநிலை மதி மேல் பூனை மாதிரி இருந்துச்சு. என்னால கிருஷ்ணாவா , அம்மாவானு முடிவெடுக்க முடியாத சூழ்நிலை. வேற வழியில்லாம அம்மா சொன்னதுக்கு தலையாட்டினேன். வர்ஷாவுக்கு உண்மையா இருக்கணும்னு கிருஷ்ணாவை எப்பிடியெல்லாமோ அவாய்ட் பண்ண நினைச்சு நான் அதுலயும் தோத்து தான் போனேன். என் இயலாமை பல நேரங்கள்ல கோவமா வெளிவந்ததை நீங்களுமே பார்த்திருப்பிங்க. ஆனா மணமேடையில அவ கழுத்துல தாலி கட்டுறப்போ முழுமனசோட தான் கட்டுனேன். இப்போவும் முழுமனசோட தான் அவ கூட வாழணும்னு ஆசைப்படறேன்" என்று கூறிவிடவே ரகுநந்தனும் நீரஜாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நீரஜாட்சி ஒரு படி மேலே சென்று "நந்து! கொஞ்சம் என்னை கிள்ளு" என்று கையை நீட்ட அவனும் நன்றாகக் கிள்ளி பழைய பகையை தீர்த்துக் கொள்ளவும் அவனை முறைத்தாள் நீரஜாட்சி. இவனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவள் ...