பூங்காற்று 43

ரகுநந்தன் இரு சகோதரிகளிடம் வந்தவன்
கிருஷ்ணஜாட்சியின் அருகில் அமரச் செல்ல அதை கண்டுகொண்ட
நீரஜாட்சி இருவருக்கும் இடையில் சென்று நின்று கொண்டாள். ரகுநந்தனுக்கு அவளது செய்கைகள்
வினோதமாகத் தெரிந்தாலும் அவளது அருகாமை மனதுக்கு
இதமளிக்க அவள் புடவை தேர்வு செய்யும் அழகை ரசித்தவண்ணம் இருந்தான்.
நீரஜாட்சி அவளுக்கு அரக்கு
நிறத்திலும் கிருஷ்ணஜாட்சிக்கு நீல நிறத்திலும் நிச்சயதார்த்தத்துக்கு ஆடைகளைத் தேர்வு
செய்துவிட்டு இன்னும் நகராமல் அங்கேயே போன்
நோண்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து "நீ போய் ஜென்ட்ஸ் செக்சன்ல உனக்கு டிரஸ் செலக்ட் பண்ண
வேண்டியது தானே. இங்கே ஏன் உக்காந்திருக்க?" என்று விரட்ட அவனும் தனக்கு
வேண்டியவற்றை வாங்குவதற்குச் சென்றுவிட்டான்.
ஒரு வழியாக மதியத்தோடு பர்சேஷ்
முடிந்துவிட அவர்கள் குடும்பத்தோடு ஹோட்டலிலேயே சாப்பிடலாம் என்று முடிவெடுத்து அவர்களின் ஹோட்டலுக்கே சென்று மதியஉணவை
முடித்துக் கொண்டனர்.
அதன் பின் அனைவரும் கிளம்ப
நீரஜாட்சியும் அவர்கள் பின்னோடு செல்ல அவளைத் தடுத்து நிறுத்தியவன் "நீ வீட்டுல போய் வெட்டியா தூங்க தானே
போற! ஒழுங்கா என்னோட கம்பெனிக்கு வர்ற. அங்கே மோகன்
அங்கிள் வெயிட் பண்ணிண்டிருக்கார். இன்னையில இருந்து உன் டிரெயினிங் ஸ்டார்ட் ஆகுது. நீங்கல்லாம்
கிளம்புங்கோ. அவ என்னோட நைட் ஆத்துக்கு
வந்துக்குவா" என்று அவளுக்கும் சேர்த்து பேச நீரஜாட்சி திகைத்தவாறு நிற்கையிலேயே அனைவரும்
அவர்களுக்கு டாட்டா காண்பித்துவிட்டுச் சென்றனர்.
வர்ஷாவும், கிருஷ்ணஜாட்சியும்
அவளுக்கு அழகு காட்டி கேலி செய்தபடி செல்ல நீரஜாட்சி "உன்னால தான்டா அவங்க என்னை கிண்டல்
பண்ணிட்டுப் போறாங்க. அதான் மதியம்
ஆயிடுச்சுல்ல, ஒரேயடியா நாளைக்கே போயிருந்துருக்கலாம்.
நான் டெயிலர் கிட்ட என் டிரஸ்ஸை தைக்க
குடுக்க போகலானு நினைச்சேன்" என்று பொரும ரகுநந்தன் அதை காதிலேயே வாங்காதவனாய் காரை ஸ்டார்ட்
செய்துவிட்டு அவளை வந்து அமருமாறு சைகை காட்ட வேறு
வழியின்றி அமர்ந்தாள் அவள்.
இருவரும் கம்பெனியை அடைந்ததும்
அவன் அவளை மோகனிடம் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றதோடு சரி. அதன் பின் மோகன் அவளிடம் தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டு அவளது வேலையின் தன்மைகளைப்
பற்றி எடுத்துச் சொல்ல அவளும் அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.
பின்னர் மோகன் அழைத்ததும் உள்ளே வந்த ரகுநந்தன் "என்ன
அங்கிள் எப்பிடி கத்துக்கிறா நீருகுட்டி?"
என்று
கேலியாக வினவ அவர் சிரித்தபடி "நீ சொன்ன மாதிரி கற்பூரமே தான் தம்பி" என்றுச் சிலாகித்தார். அவரிடம் சொல்லிக்
கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பியவன் நேரே
வீட்டுக்குச் செல்லாமல் கிருஷ்ணஜாட்சி வேலை செய்யும் பேக்கரி இருக்கும் இடத்துக்கு காரைச்
செலுத்தினான்.
நீரஜாட்சி கண்ணை மூடி இருக்கையில்
சாய்ந்திருந்தவள் கார் நின்றதும் வீடு தான் வந்துவிட்டது போல என்று கண்ணைத் திறந்தவள் எதிரே தெரிந்த
பொக்கே ஷாப்புடன் இணைந்த பேக்கரியயைக்
கண்டதும் இங்கே எதற்காக அழைத்து வந்திருக்கிறான் என்ற யோசனையுடன் இருக்க அவன் வந்து கார்
கதவைத் திறந்துவிட இறங்கினாள்.
எதுவும் செல்லாமல் உள்ளே நுழைந்தவனைக் குழப்பத்தோடு பார்த்தபடி
அவளும் பின் தொடர்ந்தாள். அங்கே இன்னும் இருள்
கவிழாததால் கூட்டம் இல்லை. அவர்கள் வந்ததும் இருந்த சிலரும் பில் செலுத்திவிட்டுக் கிளம்ப அந்த
இடத்தின் அமைதி கூட ரகுநந்தனுக்கு அழகாகத் தான்
இருந்தது.
அங்கே கேஷ் கவுண்டரில் நின்று
கொண்டிருந்த கரோலின் நீரஜாட்சியைக் கண்டதும் "ஓ மை டியர் நீரு பேப்" என்றபடி அவளைக் கட்டிக் கொள்ள
ரகுநந்தனுக்கு தான் அந்த காட்சி பொறாமையைத் தூண்டியது.
நீரஜாட்சி கரோலினுடன் பேசிக் கொண்டே சென்று ஒரு டேபிளில் அமர்ந்துவிட கிருஷ்ணஜாட்சி உள்ளெ பேன்
கேக் தயார் செய்து கொண்டிருந்தவள் கரோலினின் கூச்சல்
கேட்டு வெளியே வந்து பார்த்து இருவரையும் நோக்கி புன்னகைத்தாள்.
சில நிமிடங்கள்
அவர்களிடம்
பேசிவிட்டு நகரப் போனவளை கரோலின் தடுத்து நிறுத்த அவளிடம் "ஐயாம் பிரிப்பேரிங் பேன் கேக்ஸ் ஃபார்
கிட்ஸ். தே வில் கம் வித் தெயர் மாம். யூ கேரி
ஆன்" என்றபடி கிச்சனுள்
சென்றபடி விழியால் ரகுநந்தனையும் அழைக்க அவனும் அவள் பின்னே சென்றான்.
நீரஜாட்சி பேச்சு சுவாரசியத்தில் இதை
கவனிக்கவில்லை.
உள்ளே வந்தவனிடம் தவாவில் கேக் மாவை ஊற்றியபடியே "நீருவோட
இங்க வந்திருக்கிங்களே! காரணம் இல்லாம
நீங்க
எதுவும் பண்ண மாட்டிங்க. சொல்லுங்க" என்றபடி அவனைப் பார்க்க
ரகுநந்தன் தயக்கமின்றி
"உன்
கிட்ட சொல்லாம உன் தங்கையோட பீச், ரெஸ்ட்ராண்ட்னு
சுத்துனா நன்னா இருக்காது. சோ உன்னோட
வீரபாகு பேக்கரிக்கே கூட்டிட்டு வந்துட்டேன்" என்றுச் சொல்ல கிருஷ்ணஜாட்சிக்கு ஏனோ அவன் பொடி
வைத்துப் பேசுவது போல தோன்ற கேக்கை
திருப்பி
போட்டபடி அவனைக் குறுகுறுவென்று பார்த்தாள் அவள்.
"நீங்க ஏன் நீருவை
பீச், ரெஸ்ட்ராண்ட்னு
கூட்டிட்டுப் போகணும்?" என்றபடி புருவம்
உயர்த்தியவளைப் பார்த்துப் புன்னகைத்தான் ரகுநந்தன்.
பின்னர் பெருமூச்சு விட்டபடி
"நான் அவளை லவ் பண்ணுறேன் கிருஷ்ணா. அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு எனக்கும் ஆசை இருக்குமோன்னோ?" என்று இது வரை நீரஜாட்சிக்கு கூட தெரிவிக்காத தன் காதலை
கிருஷ்ணஜாட்சியிடம் உரைக்க அவளோ அதிர்ந்து விட்டாள். முதல் வேலையாக ஸ்டவ்வை அணைத்துவிட்டு
மாவை ஃபீரிசரில் வைத்தாள்.
பின்னர் கையுறையைக் கழற்றியபடியே
"நீங்க சொல்லுறது..." என்று இழுக்க ரகுநந்தன் "ஹண்ட்ரென் பர்சண்டேஜ் உண்மை தான். எனக்கு அவளைப்
பிடிச்சிருக்கு. நீ திகிலா முழிக்கறதைப்
பார்த்தாலே புரியறது, என்னடா இவன் அவ கிட்ட
ஏட்டிக்கு போட்டி பேசுவான், சண்டை போடுவானே திடீர்னு இப்போ லவ்னு
சொல்லுறானேனு உனக்கு தோணும். ஆனா இது தான்
உண்மை" என்று அவன் வேகமாக மனதில் இருப்பதைச் சொல்லிவிட்டான்.
கிருஷ்ணஜாட்சி தயக்கத்துடன்
"உங்க அம்மாக்கு எங்களைப் பார்த்தாலே பிடிக்காது. நீங்க எந்த தைரியத்துல நீருவை லவ் பண்ணுறிங்கன்னு
எனக்கு இப்போவும் சுத்தமா புரியல. ஆனா ஒரு விஷயம்
நிச்சயமா சொல்ல முடியும். நீரு கூட மனசு மாறி உங்களை ஏத்துக்கலாம், பெரிய மாமி எப்போவுமே அவளைத் தன்னோட
மருமகளா ஏத்துக்க மாட்டாங்க"
என்றுச் சொல்லி முடித்தாள்.
ரகுநந்தன் சாதாரணமாக "அது அவங்களோட பிரச்சனை. அதுக்கு நான் என்ன
பண்ணுறது? எனக்கு பிடிச்சவளை
தான் நான் விவாகம் பண்ணி
அந்த ஆத்துக்கு அழைச்சிண்டு வருவேனே ஒழிய உங்க பெரிய மாமி சொல்லுற எந்த சோளக்கொல்லை
பொம்மையையும் என்னால ஆத்துக்காரியா
நினைச்சுக்
கூட பார்க்கமுடியாது" என்று தீர்மானமாக உரைக்க
கிருஷ்ணஜாட்சி குறுக்கிட்டு
"அவங்க உங்க அம்மா. நீங்க பண்ண போற காரியத்தால அவங்களுக்கு வீணா மனவருத்தம் தான் வரும்" என்க
அவளை கையுயர்த்தி தடுத்தான் ரகுநந்தன்.
"அப்போ அம்மானு
வந்துட்டா அவங்க பண்ணுற எல்லா
விஷயத்தையும் அது நல்லதா கெட்டதானு கூட யோசிக்காம சப்போர்ட் பண்ணனும்னு சொல்ல வர்றியா? சாரி என்னால அப்பிடிலாம் கண்மூடித்தனமா ஒருத்தவங்க சொல்லுற எல்லா
விஷயத்தையும் ஆதரிக்க முடியாது. என்னடா இவன் ஒரு நாள்
அம்மாக்காக நம்ம தங்கையை திட்டுனவன் தானேனு நீ யோசிக்கலாம். யெஸ்! அப்போ நான்
திட்டுனேன் தான். ஆனா அதுக்கு காரணம் அவ பெரியவங்களை
அப்பிடி மரியாதை இல்லாம பேசுனது தான். அதே தப்பை நீரு இப்போ பண்ணுனாலும் நான் திட்டுவேன். ஆனா அவளை
யார் பேச்சைக் கேட்டும் விட்டுக்குடுக்க
மாட்டேன்" என்றுத் தெளிவாக தன் பக்க நியாயத்தை எடுத்துக் கூறிவிட்டு இனி உன் முடிவு என்பது போல்
கிருஷ்ணஜாட்சியைப் பார்க்க அவளோ கையைப் பிசைந்தபடி
நின்று கொண்டிருந்தாள்.
ரகுநந்தனுக்கும் அவளது தயக்கம்
மற்றும் பயத்துக்கான காரணம் புரிந்தாலும் அதற்காக நீரஜாட்சியை விட்டுக் கொடுக்க அவன் தயாராக இல்லை.
இருந்தாலும் கிருஷ்ணஜாட்சி அவளுடைய
சகோதரி
என்பதால் அவளிடம் விளக்க வேண்டிய கடமை அவனுக்கு இருப்பதால் தான் இன்று அவளிடம் விஷயத்தைச்
சொல்லிவிட்டான்,
அவளைப் பார்த்தபடியே "இதை நான் இன்னைக்கு உன் கிட்ட சொல்ல காரணம்
இருக்கு. உங்க அப்பா அம்மா போனதுக்கு அப்புறமா
நீ இவ்ளோ கஷ்டங்களை அனுபவிச்சிருக்கனு எனக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சுது. நீ ஒரு அருமையான
புரஃபசனை செலக்ட் பண்ணிருக்க. இந்த
சின்ன
வயசுலயே ஒரு மீடியம் சைஸ் பேக்கரியை உன்னால மேனேஜ் பண்ண முடியுது. ஆனா இது எதுக்கும் நீருவோட ஃபியூச்சர்
பத்தின கவலை ஒரு தடையா வந்துடக் கூடாதுனு நான்
நினைக்கிறேன். அவளோட வருங்காலத்தைப் பத்தி நீ கண்டிப்பா எதாவது கணக்கு போட்டு வச்சிருப்ப.
அவளுக்காக இன்வெஸ்ட் பண்ணிருப்ப. அதுலாம் இனி
தேவை இல்லனு தான் நான் சொல்ல வர்றேன். இனிமே நீ உன்னோட புரஃபசன்ல கான்சென்ட்ரேட் பண்ணு. இதை டெவலப்
பண்ணுறதுக்காக ஹார்ட் ஒர்க் பண்ணு.
நீரஜாவை
நான் பார்த்துக்கிறேன்" என்றுச் சொல்ல கிருஷ்ணஜாட்சிக்கு அவனது அக்கறையில் கண்ணைக் கரித்துக் கொண்டு
வந்தது.
கண்ணைத் துடைத்தபடியே
"எனக்கு
கேக்கிறதுக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? நீங்க
சொல்லுற மாதிரி நான் அவளோட
எதிர்காலத்துக்காக என்னால முடிஞ்ச அளவுக்கு சேவிங்ஸ் வச்சிருக்கேன். அவளுக்கு அப்பா அம்மா
இல்லாத குறை தெரியாம செம ஜோரா கல்யாணம் பண்ணி
பார்க்கணும்கிறது என்னோட கனவு. என்னோட மூனு வருச உழைப்பும் அதுக்காகவும் அவளோட ஸ்டடிஸ்காகவும் தான்
நான் சேர்த்து வச்சேன். உங்களை லைஃப் பார்ட்னரா அவ
ஏத்துப்பாளானு எனக்கு தெரியாது. ஆனா அவளுக்கு உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சா நல்லா
இருக்கும்னு மட்டும் தோணுது" என்றாள் கிருஷ்ணஜாட்சி.
ரகுநந்தன் அவளது சோகமான முகத்தில்
சிரிப்பை வரவழைக்க எண்ணி "அதுலாம் ஓகே! உன் தங்கைக்கு தான் பெரிய விக்டோரியா மகாராணினு நினைப்பு. அவளா
என்னை ஓகே பண்ணி கல்யாணம் பண்ணனும்னா
எனக்கு
அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும்" என்றுப் பொய்யாக சலித்துக் கொள்ள கிருஷ்ணஜாட்சியின் முகத்தில் சிரிப்பின்
ரேகைகள் பரவத் தொடங்கியது.
அதற்குள் இருவரையும் காணாது கிசசனுக்குள் வந்த நீரஜாட்சி
"என்ன ரகசியம் பேசிட்டு இருக்கிங்க?"
என்று
இருவரையும் அதட்ட
கிருஷ்ணஜாட்சி பேன் கேக்கை
காட்ட "ஓ பேன் கேக் செஞ்சிட்டு இருக்கியா?
அதை
ஏன் இவன் கிட்ட காட்டுற? இது சரியான தயிர்சாதம். இதுக்கு எக்
ஆகாது. எனக்கு குடு. அப்பிடியே அந்த
மேப்பிள் சிரப்பை எடு" என்று தட்டோடு எடுத்துக் கொள்ள
ரகுநந்தன் கிண்டலாய் "உன் அக்கா அதை யாரோ கஸ்டமருக்காக செஞ்சு
வச்சிருக்கா. நீ எடுத்திண்டு போனா என்னடி அர்த்தம்?" என்றுச் சொன்னவனை முறைத்துக் கொண்டே
சென்ற தங்கையைப் பாசமாய் தழுவின
கிருஷ்ணஜாட்சியின் விழிகள். அவளது சந்தோசத்துக்கு என்றுமே குந்தகம் வரக் கூடாது என்று எப்போதும்
போல அன்றும் வேண்டிக் கொண்டாள் அந்த
தமக்கை.
இதே மனநிலையுடன்
வீட்டுக்கு
வந்த மூவருமே நிம்மதியாக உலாவ ஹர்சவர்தன் மட்டுமே தவிப்புடன் இருந்தான். அவன் மனது
கிருஷ்ண்ஜாட்சியின் பால் சாயத் தொடங்க அவன் மூளையோ அன்னையின் கூற்றை நினைவுறுத்திக் கொண்டே
இருந்தது. ஆனால் முடிவில் வென்றது என்னவோ அவனது மூளை
தான்.
ஆம்! இனி கிருஷ்ணஜாட்சி தன்னுடைய
வாழ்க்கையில் எப்போதுமே இல்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள அவன் மனதுக்கு கட்டளையிட்டு விட்டு
கனத்த இதயத்துடன் நிச்சயதார்த்த நாளை
எதிர்நோக்கி
இருந்தான் பத்மாவதியின் மூத்த புதல்வன்.
அதே நேரம் ரகுநந்தன் அந்த வாரத்தில் ஒரு நாளில் நடத்தப்பட்ட
போர்ட் மீட்டிங்கில் எஸ்.என் கன்ஸ்ட்ரெக்சனின்
மேனேஜிங் டைரக்டராகப் பதவியேற்றுக் கொண்டான். அவன் பதவியேற்றதும் செய்த முதல் காரியம்
நீரஜாட்சியை அவனது உதவியாளினியாக பொறுப்பேற்க வைத்ததே.
அதன் பின் அவர்களது ஹோட்டல் காண்ட்ராக்டில் கையெழுத்திட்டவன்
மீதமுள்ள வேலைகள் அனைத்தையும் ஹர்சவர்தனின் திருமணத்துக்குப்
பிறகு என ஒத்தி வைத்துவிட்டு கையில் தற்போது இருக்கும் கான்ட்ராக்ட்களில் கவனம் செலுத்தத்
தொடங்கினான். நீரஜாட்சியையும் ஹர்சவர்தனின்
திருமணத்துக்குப் பிறகே அலுவலகம் வருமாறு கூறிவிட அவள் நிச்சயதார்த்த ஏற்பாட்டை மட்டும்
அவனுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டாள்.
அதோ இதோவென்று நிச்சயதார்த்த நாளும்
வந்துவிட மற்ற ஏற்பாடுகளை முடித்துவிட்டு தாமதமாக தயாராயினர் ரகுநந்தனும், நீரஜாட்சியும். அவள் அவனுக்கு முன்னரே
அரக்கு நிறப்பட்டில்
அடர்பச்சை நிற பார்டர் வைத்து அதே அடர்பச்சை நிற பிளவுஸில் பாந்தமாக தயாராகி நின்றாள். இது
சுபநிகழ்ச்சி என்பதால் அவளது இடையைத் தொட்ட கூந்தலை
பின்னலிட்டு மல்லிகைச்சரத்தை சூடிக் கொண்டாள். காதுகளை வழக்கம் போல ஜிமிக்கிகள் அலங்கரிக்க கழுத்தில்
ஒரு சிறிய டெம்பிள் டிசைன் அட்டிகையை
காதின்
ஜிமிக்களுக்கு பொருத்தமாக அணிந்திருந்தவள் கைகளில் பொன்னிற வளையல்களை அடுக்கிவிட்டு தன்னை
கண்ணாடியில் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டாள்.
மொபைல் போனை எடுத்தவள் நேரமாகி
விட்டதை அறிந்து "இன்னும் நந்து ரெடியாகல போல. பொண்ணு நானே நிமிசத்துல ரெடியாயிட்டேன். இவனுக்கு
என்னவாம்?" என்று முணுமுணுத்தபடி வீட்டை நோக்கிச் சென்றவளின் கையை யாரோ
பற்றி நிறுத்த யாரென்று பார்க்கத் திரும்பினாள்
நீரஜாட்சி.
அந்தி மாலைக் கதிரவன் மறையும்
நேரத்தில் தனது ஆரஞ்சு வண்ணத்தை அந்த தோட்டமெங்கும் வாரியிறைத்திருக்க நேவி ப்ளூ ஷேர்ட்டும், க்ரீம் கலர் பேண்ட்டும் அவனது தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்க தனது
ஆளுமையான சிரிப்புடன் அவள் எதிரே நின்றிருந்தான்
ரகுநந்தன். பார்ப்பவரின் இதயத்தை துளையிடும் அவனது விழிகள் நீரஜாட்சியின் குட்டி இதயத்தையும் கண்டு
பரிதாபப்படாமால் பாரபட்சமின்றி அவளின் இதயத்தின் அடி
ஆழம் வரை சென்று எந்த செய்தியையோ அங்கே பதிய வைக்க முயல தன் எதிரே நின்ற அந்த ஆறடி அழகனின்
குறும்புச்சிரிப்பில் முதல் முறையாக தன்னை மறந்து
நின்றாள் நீரஜாட்சி.
எப்போதும் பார்த்து சலித்த
அதே முகம் இன்று ஏனோ ஒரு வித்தியாசமான உணர்வை தன்னுள் ஏற்படுத்துவதை அவளால் தடுக்க முடியவில்லை. தன்னை அறியாமல் அவனது
முகம் நோக்கி அவள் கைகள் உயரத் தொடங்க
அவளது மொபைல் ரிங்டோன் அவளது அறிவை விழிக்க வைத்தது. சட்டென்று கைகளை தாழ்த்திக் கொண்டவள்
அதை எடுத்து பேசிவிட்டு வைக்க ரகுநந்தன் அவளது
படபடப்பை உணர்ந்தவனாய் "நீருகுட்டி போலாமா?" என்க அதிசயத்திலும் அதிசயமாய் அவள் ஏதும்
பேசாமல் காரில் சென்று அமர்ந்தாள்.
அவனும்
காரில் அமர்ந்து இவ்வளவு நேரம் அவளது ரசனைப்பார்வை உணர்த்திய செய்தியை புரிந்து கொண்டவனாய்
விசிலடித்தபடி காரை ஸ்டார் செய்தான்.
நீரஜாட்சியோ மனதிற்குள்
"நீரு
என்ன காரியம் செய்ய போனடி? அவன் சிரிச்சு வச்சா
நீயும் அப்பிடியே மயங்கிடுவியோ? ஏன் இத்தனை நாள் அவன் சிரிச்சு நீ
பார்த்ததே இல்லையா?" என்று தன்னைத் தானே கடிந்து கொண்டபடி
ரகுநந்தனின் முகத்தைப் பார்க்க வெட்கியவளாய்
சாலையில் விழிபதித்தாள்.
மண்டபம் வரும்வரையிலும் அவள்
அவனைத் திரும்பி பார்க்கவில்லையே. மண்டபம் வந்த பின்னும் அவனைத் தவிர்க்க நினைத்து ஓட முயன்றவளின்
கைப்பற்றி நிறுத்தியவன் அவளுடன் சேர்ந்தே மண்டபத்தினுள்
நுழைந்தான்.
அவர்கள் வரவுமே பத்மாவதி அவசரமாக வந்தவர் "உங்களை தான்
தேடிண்டிருந்தேன். நீங்க ரெண்டு பேரும் மாடிக்குப்
போங்கோ. அங்கே லைட் சரியா எரியலைனு சொல்லிண்டிருக்கா" என்று இருவருக்கும் ஒரு வேலையைத் திணித்தார்
அவர்.
நீரஜாட்சி மாடிப்படியில் நடக்கும் வரை மாலை நேரத்து மயக்கத்தில்
இருந்தவள் மாடியைச் சென்றடைந்ததும்
அங்கே
உச்சஸ்தாயியில் கேட்ட ஹர்சவர்தனின் குரலில் பிரேக் போட்டது போல நின்றுவிட்டாள். ரகுநந்தனும் நிலையும்
அதுவே. ஏனெனில் அங்கே ஹர்சவர்தன் கத்திக்
கொண்டிருந்தது கிருஷ்ணஜாட்சியிடம்.
"உனக்கு அறிவில்லையா? காபி கொண்டு வரச்ச கவனமா கொண்டு வர
மாட்டியோ? இந்த வாட்சோட விலை
என்னனு தெரியுமா? உனக்கு எப்பிடி தெரிய போகுது? ஆஃப்டர் ஆல் ஒரு செஃப் உனக்கு ரோலக்சைப் பத்தி தெரிஞ்சிருக்க
வாய்ப்பில்ல" என்று அவன் கத்தி தீர்க்க கிருஷ்ணஜாட்சி அங்கே கண்ணீர் வழியும்
விழிகளுடன் நின்றிருந்த காட்சி ரகுநந்தன், நீரஜாட்சி இருவருக்குமே ஹர்சவர்தன் மீது
கோபத்தை வரவழைத்தது.
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
அட.. சின்னதா ஒரு மழைத்துளி விழுந்தது போல, ஒரு நேசத்துளி நீரஜா மனசுல உருவாகிடுச்சோ..?
அது சரி, இந்த ஹர்ஷா எதுக்கு இப்ப சும்மாவே வாள் வாள்ன்னு கத்துறான்...?
ஒருவேளை, அந்த நிச்சயதார்த்த இடத்துல இருந்து விரட்டினாத்தான் நிம்மதியா என்கேஜ்மெண்ட்ஸே நடத்த முடியும்ன்ன்னு முடிவு பண்ணிட்டானோ...? ஆனா, அவனோட இந்த திடீர் ஆக்சன் வேற விளைவுகளை உருவாக்கிடும் போலவே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
avanum avanga ammavum onnu.. epo epdi irupanganu avangalukke theriyathu
Delete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeletehello I am here too sister !
ReplyDeletewelcome sis.. happy reading
Delete