பூங்காற்று 39

Image
  பூங்காற்று 39 திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே   அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. " கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா ? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி" என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு   புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் சென்றுவிட்டாள். அங்கே மைதிலி , சீதாலெட்சுமி , மைத்திரேயி , ஸ்ருதிகீர்த்தி இவர்களுடன் அவர்களின் மாமியார்களும் இருக்க பத்மாவதியே முன் நின்று நீரஜாட்சிக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றி சடங்கை ஆரம்பித்தனர். அதே நேரம் மண்டபத்தில் ரகுநந்தன் விரதத்துக்காக தயாரானான். ஹர்சவர்தனும் , அவனது தந்தை , சித்தப்பா மற்றும் சகோதரிகளின் கணவர்கள் என அனைவரும் சூழ்ந்து கேலி செய்ய அவனும் திருமணச்சடங்குகளில் ஐக்கி...

பூங்காற்று 30

 


ரகுநந்தன் அவளிடம் பேச செல்லும் போது நீரஜாட்சி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். ரகுநந்தன் தயக்கத்துடன் காரை அலுவகத்தை நோக்கி விட்டவன் அதன் பின் அவனது வழக்கமான அலுவல்களின் பிஸியாகி விட்டான். மாலையில் அவள் கிளம்பும் நேரத்தில் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டு தான் கிளம்புவாள். ஆனால் அன்று மணி ஆறரையை தாண்டியும் அவள் ரகுநந்தனிடத்தில் சொல்லிக் கொண்டு கிளம்ப வரவில்லை.

அவன் வேகமாக நீரஜாட்சியின் அறையை நோக்க அதில் பூட்டு தொங்கவே "ஓ! மேடம் கிளம்பிட்டாங்களா? சரி வீட்டுல போய் பார்த்துக்கலாம்" என்று எண்ணியவன் வீட்டுக்கு செல்ல தயாரானான். அப்போது ஹர்சவர்தனிடம் இருந்து போன் வர அவர்கள் இருவரும் ஹோட்டலின் விரிவாக்கம் பற்றி பேசிக் கொண்டதில் நேரம் போனதே தெரியவில்லை. ஹர்சவர்தன் தான் வீடு திரும்ப தாமதமாகிவிடும், அம்மாவிடம் கூறிவிடுமாறு சொல்லிவிட்டு போனை வைத்தான்.

ரகுநந்தனும் அதன் பிறகு வீடு திரும்பியவன் தோட்டத்தின் ஊஞ்சலில் அவள் அமர்ந்திருக்கிறாளா என்று நோட்டமிட்டவாறே வீட்டினுள் சென்றவனிடம் அவனது தாத்தாவும் பாட்டியும் பேச அமர்ந்துவிடவே அவனால் அன்று இரவு நீரஜாட்சியிடம் பேசவே முடியவில்லை.

மறுநாள் அலுவலகத்தில் அவன் பேச முயற்சிக்கும் போதெல்லாம் அவள் அதை கண்டுகொள்ளாமல் விலகவே அலுவலகத்தில் மற்ற ஊழியர்கள் முன்னிலையில் அவளிடம் மட்டும் உரிமை எடுத்துப் பேசவும் அவனுக்கு தயக்கம். அன்றைய நாள் முழுவதும் அழுது வடிவது போலவே சென்றது அவனுக்கு. அன்று மாலை அனைவரும் கிளம்பி விட நீரஜாட்சி கிளம்ப எத்தனிக்கையில் ரகுநந்தன் வேகமாக கீழ்த்தளத்தின் கதவை உட்பக்கம் தாழிட்டத்தை அவள் கவனிக்கவில்லை.

வழக்கம் போல சாவியை விரலில் சுற்றியபடி சென்றவள் கதவு பூட்டியிருக்கவே "எந்த இடியட் இப்பிடி என்னை உள்ளே வச்சு லாக் பண்ணுனான்? அவன் நல்லாவே இருக்க மாட்டான்" என்று பொறுமியபடி சுற்றும் முற்றும் பார்க்க அன்று பார்த்து செக்யூரிட்டி கூட சீக்கிரம் கிளம்பிவிட்டார். சனிக்கிழமை அல்லவா!

நீரஜாட்சி எரிச்சலுடன் மொபைலை எடுத்துவிட்டு திரும்பியவள் அங்கே அவளுக்கு எதிரே பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி ஸ்டைலாக நின்று சிரித்துக் கொண்டிருந்த ரகுநந்தனை கண்டதும் அவளது எரிச்சல் இன்னும் அதிகரிக்கவே முகத்தை திருப்பிக் கொண்டாள். அவன் விசிலடித்தபடி அலுவலக சாவியை எடுத்து அவளைப் போலவே விரலில் வைத்தபடி சுற்ற நீரஜாட்சிக்கு எல்லாம் இவன் வேலை தானா என்ற கடுப்பு.

"இப்போ எதுக்கு டோரை லாக் பண்ணிருக்க நீ? மரியாதையா ஓப்பன் பண்ணு. நான் வீட்டுக்குப் போகணும்" என்றவளை உதட்டு சுழிப்புடன் பார்த்தான் ரகுநந்தன்.

கேலியாக "அப்போ நான் மட்டும் வனவாசத்துக்கா போறேன் நீருகுட்டி?" என்று கேட்க

நீரஜாட்சி பொய்யான சிரிப்புடன் "ரகுநந்தன்னு பேர் வச்சிட்டு நீ வனவாசம் போகலைனா தான் அதிசயம். அப்பிடி போனா கூடா பரவால்ல" என்று சொல்ல அவன் மறுப்பாக தலையசைத்தான்.

"இப்போதைக்கு போற ஐடியா இல்ல. அப்பிடி போனா உன்னையும் கூட்டிட்டு தான் போவேன்" என்று கிண்டலாக கூற

"நான் எதுக்குடா உன்னோட வரணும்? என்னால நீ இருக்கிற இடத்துல நிம்மதியா இருக்க முடியாது" என்றாள் நீரஜாட்சி சுள்ளென்று.

"யூ ஹேவ் நோ ஆப்சன் நீரஜாட்சி. பிகாஸ் ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோதி" என்றவனின் கேலியில் அவள் கொதிநிலைக்கே சென்றாள்.

"மண்ணாங்கட்டி! மரியாதையா டோரை ஓப்பன் பண்ணு. எனக்கு எரிச்சலா இருக்கு" என்றவளை நோக்கி அவன் அடியெடுத்து வைக்க அவள் கையைக் கட்டியபடி அவன் எதிரே தைரியமாக நின்றிருந்தாள்.

ரகுநந்தன் அவள் அருகில் நெருங்கியவன் அவள் உயரத்துக்கு குனிந்து "உனக்கு பயமா இல்லையா நீரு?" என்று கேட்க அவள் இல்லையென்று அலட்சியமாக தோளை குலுக்கி கொண்டாள்.

"நீயெல்லாம் ஒரு ஆளுனு உன்னை பார்த்து நான் ஏன்டா பயப்படணும்?" என்று அவள் பேசும் போதே அவனது கரங்கள் அவளது இடையை வளைக்க இப்போது அவளது இதயம் நிஜமாகவே தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு நீரஜாட்சிக்கு.

"இப்போவும் பயமா இருக்காதே" என்றபடி அவள் காதுமடலில் உதடு உரச அவன் பேசவுமே நீரஜாட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் அவளது மாலை நேரத்து மயக்கம், அந்த வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்த என்ற நாச்சியார் திருமொழி எல்லாம் நினைவுக்கு வர அவளால் எதுவுமே பேச முடியவில்லை. விழிகளை அகட்டி அவள் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்க அவற்றை ரகுநந்தனுக்கு மட்டும் புரியும் பாஷையில் மொழிபெயர்த்தது அவனது இதயம்.

ஆனால் எல்லா மயக்கமும் ஒரு காலத்தில் தெளியக் கூடியது தான் என்பதை நீரஜாட்சி அடுத்த சில நிமிடத்தில் அவனை விலக்க முயற்சித்த போது புரிந்து கொண்டான் ரகுநந்தன்.

"நட்டநடு ஆபிஸ்ல இப்பிடி பிஹேவ் பண்ண அசிங்கமா இல்ல உனக்கு?" என்று அவள் வார்த்தைகளை கடித்துத் துப்ப

அவனோ விஷமத்துடன் "சரி அப்போ ரூம்குள்ள போலாமா?" என்று கேலி செய்ய நீரஜாட்சி "செருப்பு" என்றுச் சொல்ல அவன் பக்கென்று சிரித்தான்.

"இதுல்லாம் கெட்டவார்த்தைனு இன்னுமா நம்புற நீ?"

"டேய்! நீ ஓவரா போறடா! மரியாதையா கையை எடு. இல்லைனா எனக்கு வர்ற கோவத்துக்கு நான் உன்னை..." என்றவளின் பேச்சில் இடையிட்டவன் "கொல்லப் போறியா? அப்பிடி கொன்னுட்டா நீ தான் விதவையா போயிடுவ" என்று சொல்ல அவனை விலக்க முயன்று தோற்றாள் நீரஜாட்சி.

"உன்னோட பேச்சு, பிஹேவியர் எதுவுமே எனக்கு சரியா படல! என்ன தான் சொல்ல வர்ற நீ? முதல்ல நீ பேசுன பேச்சுக்கு என் கிட்ட நீ மன்னிப்பு கேக்கவே இல்ல" என்று கடுப்பாக கூற அவன் "ஓகே ஓகே! சாரி நீரஜாட்சி மதிவாணன்" என்று தயக்கமின்றி மன்னிப்பு கேட்கவே இன்னும் என்ன என்று குழப்பத்துடன் அவனைப் பார்க்க அவன் தெளிவான குரலில் கூறிவிட்டான்.

"எனக்கு நீ வேணும் நீரஜாட்சி, லைஃப் ஃபுல்லா என்னோட சரிபாதியா நீ வேணும். ஐ லவ் யூ நீருகுட்டி" என்றவன் அவளின் திகைத்த பார்வையில் விரிந்த விழிகளுக்குள் என்ன கண்டானோ அப்படியே சிலையானான். அவளது இடையிலிருந்த கரங்களை விலக்கியவன் அவள் முகத்தை அதில் ஏந்திக் கொண்டான்.

"எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கை முழுக்க இந்த கோவக்காரி கூட சண்டை போடணும், அப்புறம் உன்னை மாதிரியே ஒரு கோவக்கார பொண்ணை நீ பெத்துக் குடுத்ததும் அதை கொஞ்சனும்னு ரொம்ப ஆசை. என்னை கல்யாணம் பண்ணிக்கறயா?" என்று ஆசை ததும்பும் குரலில் அவன் கூற நீரஜாட்சிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை இவனை தவிர வேறு யாரும் அவளிடம் நெருங்கியதில்லை. அவள் நெருங்க அனுமதிக்கவும் இல்லை. கல்லூரியில் அவளை தழுவிய ரசனைப்பார்வைகளை தடுத்து நிறுத்த முடிந்தவளால் ஏன் இவனை மட்டும் தடுக்க இயலவில்லை என்பது அவளுக்கே புரியாத புதிர்.

ரகுநந்தனின் கேள்விக்கு அவள் பதிலளிக்கவில்லை என்றாலும் அவளது கண்கள் அவனுக்கு குறிப்பால் உணர்த்த தன் எதிரே நின்றவளின் கன்னத்தில் இதழைப் பதித்தான் நீருவின் நந்து. அவனது உதடுகள் இன்னும் ஒருமுறை "ஐ லவ் யூ" என்ற வார்த்தைய உதிர்க்க நீரஜாட்சி அவனது ஆழ்ந்த குரலில் கண் விழித்தாள்.

"உன்னோட மனசுல ஏதோ ஒரு மூலையில என் மேல ஒரு சின்ன க்ரஸ் இருக்குனு எனக்கு எப்போவோ தெரியும். ஆனா ரகுநந்தன் மேல உனக்கு வர வேண்டியது லவ் ஆச்சே நீருகுட்டி! அது எப்போ வரும்னு காத்திண்டிருக்கேன். வந்ததும் சொல்லு! கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றவனிடம் வாயடைத்து நின்றாள் அவள்.

பின்னர் மெதுவாக "நீ இப்பிடி திடீர்னு சொன்னா நான் என்ன பண்ணுறது? அதுவுமில்லாம உங்க ஃபேமிலிக்கே என்னையும் கிருஷ்ணாவையும் பிடிக்காதே" என்று குறை கூற

ரகுநந்தன் அவள் முகத்தின் முன் விரலை நீட்டியவன் "நீ சில விஷயங்களை கவனமா கேட்டுக்கோ! நம்பர் ஒன் எங்க ஃபேமிலிக்கு உங்களை பிடிக்காதுங்கிற மாயைல இருந்து சீக்கிரமா வெளியே வந்துடணும். ரெண்டாவது நீயும் நானும் சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பேசறப்போ மன்னியை, அண்ணாவை, அம்மாவை ஏன் வேற யாரையும் மென்சன் பண்ணக் கூடாது. புரியுதா?" என்று அவன் செல்லமாக ஆனால் அழுத்தமான குரலில் மிரட்ட அவள் தலையாட்டுவாள் என்று எதிர்ப்பார்த்தால் நாம் தான் ஏமாந்து போவோம்.

நீரஜாட்சி அவனது அன்பு(?) கட்டளைகளுக்கு செவி சாய்க்கவும் இல்லை. அவற்றை மறுக்கவும் இல்லை. அவள் உதிர்த்த வார்த்தை "வீட்டுக்கு போவோம்" இது மட்டும் தான்.

ரகுநந்தனும் தான் கொடுத்த அதிர்ச்சி இன்று மிகவும் அதிகம் என்பதால் அவளுக்கு அதற்கு மேல் அதிர்ச்சி கொடுக்க விரும்பவில்லை அவன். சரியென்று தலையசைத்தவன் தன் கைப்பிடிக்குள் அவளை வைத்துக் கொண்டே அலுவலக கதவை மூடியவன் அவளை காரில் ஏறச் சொல்ல அவளோ விழியால் ஸ்கூட்டியை சுட்டிக்காட்டினாள்.

ரகுநந்தன் கேலியாக "அது காம்பவுண்டுக்குள்ள நின்னா யாரும் திருடிட்டு போயிட மாட்டாங்க. நீ இன்னைக்கு என்னோட வா. இன்னைக்கு மட்டும்" என்று உறுதியான குரலில் கட்டளையிட்டுவிட்டு அவளைது ஸ்கூட்டியை நகர்த்தி மறைவான இடத்தில் விட்டுவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான். நீரஜாட்சி வந்து அமர கார் வீட்டை நோக்கி வேகமெடுத்தது.

செல்லும் வழியில் அவன் ஏதெதோ கேட்க நீரஜாட்சியும் அவன் கேட்டதற்கு மட்டும் பதிலிறுத்தவள் அவனது விழிகளை சந்திப்பதை மட்டும் முடிந்தளவுக்கு தவிர்த்தாள். சிறிது நேரத்தில் வீடு வந்துவிட பார்க்கிங்கில் நின்ற காரிலிருந்து இறங்கியவளிடம் "இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை நாளைக்கும் கண்டினியூ பண்ணுவியா நீருகுட்டி?" என்றவனின் கேலியில் காரணமின்றி அவள் கன்னம் சிவந்தது. அதை தேய்த்துவிட்டபடியே வருவித்த சாதாரணக்குரலில் "நான் ஒன்னும் உன்னை ஃபேஸ் பண்ண பயப்படலையே! ஆக்சுவலி எனக்கு கார்ல போறப்போ வெளியே வேடிக்கை பார்க்கிறது எனக்கு ரொம்ப பிடிக்குமாக்கும்" என்று சொல்லிவிட்டு உதட்டைச் சுழிக்க அவளது பாவனையில் மயங்கிப் போனான் ரகுநந்தன்.

அவன் அருகில் நெருங்கவே அவளது மனசாட்சி "நீரு இவன் கிட்ட வந்தா உனக்கு எல்லாமே மறந்து போயிடும். அப்புறம் ஆபிஸில பண்ணுன மாதிரி ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணி வச்சா அவ்ளோ தான்" என்று எச்சரிக்க அவள் கை நீட்டி அவனை தடுத்தாள்.

"ஏய் ஸ்டாப் மேன். எதுவா இருந்தாலும் ஒரு டூ ஸ்டெப்ஸ் தள்ளி நின்னு பேசு. அது தான் நமக்கு நல்லது" என்றவளிடம் வேண்டுமென்றே நெருங்கியவன் அவள் விலகிப் போக அவளைப் பிடித்து நிறுத்தியவாறு "இப்பிடி பேசுனா தான் நமக்கு நல்லது நீருகுட்டி" என்றுச் சொல்ல நீரஜாட்சிக்கு இரண்டாம் முறையாக முகம் சிவந்தது என்றால் மிகையில்லை.

அவள் காதருகே குனிந்தவன் "ஐ லவ் யூ" என்று அழுத்தி கூற நீரஜாட்சிக்கு அந்த குரல் தன்னுள் நிகழ்த்தும் மாயம் புரிபடுவதற்குள் ஹர்சவர்தனின் கார் ஹாரன் கேட்கவே ரகுநந்தனை விலக்கி நிறுத்தினாள் அவள்.

ஹர்சவர்தன் காரிலிருந்து இறங்கியவன் இருவரையும் ஒருங்கே கண்டதும் என்ன சண்டையோ என்று எண்ணியபடி அவர்களிடம் வர அங்கே அவன் கண்டது வழக்கத்துக்கு மாறான காட்சியை தான். எப்போதும் ரகுநந்தனின் பார்வையில் குடியிருக்கும் குறும்புத்தனம் காணாமல் போயிருக்க அங்கே காதல் மட்டுமே பொங்கி வழிந்தது. அதே போல அதிசயத்திலும் அதிசயமாய் நீரஜாட்சியின் முகத்தில் ரகுநந்தனை கண்டால் எழும் முறைப்பு விடுமுறை எடுத்திருக்க அதில் முழுக்க முழுக்க வெட்கம் மட்டுமே நிறைந்திருந்தது.

ஒரு கேலிப்புன்னகயுடன் இருவரையும் நோக்கியவன் "நீரு! குளிர்ல நிக்காதேமா! நீ உள்ளே போ. எதுவா இருந்தாலும் காத்தாலே பேசிக்கோங்க" என்றுச் சொல்ல அவன் பேச்சுக்கு மறுபேச்சின்றி சரியென்று தலையசைத்துவிட்டு அவள் அவுட் ஹவுஸை நோக்கி சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த தம்பியிடம் "என்னடா நம்மாத்துல பெரிய பெரிய அதிசயம்லாம் நடக்கறது!" என்று கேலி செய்ய அவனோ "எல்லாம் காதல் செய்த மாயம்டா அண்ணா" என்று உணர்ச்சியுடன் கூற ஹர்சவர்தன் நகைத்துவிட்டு அவனை தோளோடு அணைத்தபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 30)

    ஓஹோ....! அண்ணனும் தம்பியும் ட்ராவலிங் இன் தி ஷேம் போட்...! அட.. நா லவ்வை சொன்னேன்ங்க. சின்னவன் செம பாஸ்ட் அண்ட் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட். பெரியவன் வெரி ஸ்லோ அண்ட் அழுத்தம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1