பூங்காற்று 42

நீரஜாட்சியை அமர்த்திக் கொண்டு
கற்பனையில் மிதந்தபடி சென்றவனின் பைக் என்னவோ சாலையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் சொந்தக்காரன்
தான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான்.
பைக்கை ஓட்டியபடியே "ஏன் நீரு கன்சாலிடேட்டட் மார்க் ஷீட், புரொவிஷனல் சர்டிஃபிகேட் வாங்க ஏன்
இவ்ளோ ஆர்வமா போற? எப்பிடியும் மன்த் ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட் பண்ணுவாங்களே? மெதுவா வாங்கிக்க கூடாதா?"என்று வாயை விட
அவன் பின்னே கடமையே என்று அமர்ந்து வந்த நீரஜாட்சி "எவ்ளோ
சீக்கிரம் அதை கையில வாங்குறேனோ அவ்ளொ
சீக்கிரமா
நான் ஜாப்கு போயிடுவேன். அதனால தான் இவ்ளோ ஆர்வமா போயிட்டிருக்கேன்" என்க
அவனோ சாதாரணமாக "அவ்ளோ சீக்கிரமா ஜாப்கு போய் நீ என்ன
பண்ண போற?" என்று கேட்டு வைக்க
அவள் "நிறைய பண்ண வேண்டியது
இருக்கு. அதுல முதல் விஷயம் எனக்கு நியூ ஜாப் கிடைச்சு முதல் மாசம் சம்பளம் வாங்குனதும் அவுட் ஹவுஸை
காலி பண்ணிட்டு என்னோட ஆபிஸ் இருக்கிற ஏரியால ஒரு
வீட்டை வாடகைக்குப் பார்த்துட்டு நானும் கிருஷ்ணாவும் போயிடணும். மத்தது எல்லாம் அதுக்கு
அப்புறம் தான்" என்றுச் சொல்லி
ஆகாயத்தில்
பறந்து கொண்டிருந்தவனின் காதைப் பிடித்து திருகி பூலோகத்துக்கு அழைத்து வந்தாள்.
அதைக் கேட்டதும்
ரகுநந்தனின்
மனதில் ஒரு மின்னல் வெட்டி இடியுடன் கூடிய கனமழை பெய்ய ஆரம்பிக்க அங்கே வெள்ளம் வருவதற்குள்
நீரஜாட்சியின் கல்லூரி வந்துவிட்டது.
அவளை
உள்ளே இறக்கிவிட்டவனிடம் "கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் சீக்கிரமா வாங்கிட்டு வந்துடுவேன்" என்க
அவனோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து
வெளிவராமல் "அவுட் ஹவுஸை விட்டுப் போகணும்னு என்ன அவசியம் இருக்கு?" என்று கேட்டு அவளின் உஷ்ணப்பார்வையை
வாங்கிக் கட்டிக் கொண்டான்.
அவனை முறைத்தபடி கல்லூரி படிகளில் ஏறியவள் நேரே அலுவலகத்தினுள்
சென்று அவர்கள் காட்டிய குறிப்பேடுகளில்
கையெழுத்திட்டு விட்டுத் திரும்ப அவர்கள் கல்லூரி அலுவலகத்தின் சீனியர் அக்கவுண்டெண்ட்
அவளை அழைத்தார்.
புன்னகையுடன் வந்து நின்றவளிடம்
ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்து "இந்த கம்பெனியில என்னோட ரிலேட்டிவ் லேடி தான் ஃபினான்ஸ்
டிபார்ட்மெண்டோட ஹெட். இவங்க கன்சர்ன்ல இப்போ
ஃபினான்ஸ் செக்சனுக்கு டிரெயினிஸை செலக்ட் பண்ணுறாங்க. இது உனக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்மா" என்க
அவள் மகிழ்ச்சியுடன் "தேங்க்யூ சோ மச் சார்.
நான் டுமாரோ போய் பார்க்கிறேன்" என்றுச் சொல்லிவிட்டுத் துள்ளலுடன் வெளியே வந்தாள்.
நேரே பார்க்கிங்கிக்குப் போனவளுக்கு கவிதாவிடம் இருந்து போன் வர
"கவி நான் சர்டிஃபிகேட்ஸ் வாங்கிட்டேன்டி.
ஹான்! நானா, நான் அந்த
வீணாப்போனவன் கூட தான் வந்திருக்கேன்டி....அஹான்!
அவன் பக்கத்துலயே இருந்தாலும் நான் இப்பிடி தான் பேசுவேன் போவியா.....ஓகேடி...இல்ல இல்ல
டுமோரோ நான் ஒரு கன்சர்ன்கு போறேன்....தேங்க்ஸ்டி....ம்ம்..பை"
என்று அவளிடம் பெசிவிட்டுப் போனை வைத்தவள் ரகுநந்தன்
நின்ற இடத்தை நோக்கி வர அங்கே அவன் பைக்கை நிறுத்திவிட்டு
கூலர்ஸுடன் நிற்க அவனுக்கு எதிரே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர் சில மாணவிகள்.
நீரஜாட்சி திரும்பி அவனைப்
பார்க்க அவனோ அந்தப் பெண்களின் பார்வையை அறியாதவனாய் போனை நோண்டிக் கொண்டிருக்க மனதிற்குள் "இவன்
இவ்ளோ நல்லவானா நீரு?"என்று தனக்குள்
பேசிக் கொண்டபடி அவன்
அருகில் வந்து நின்றாள்.
கையைக் கட்டிக் கொண்டு அவனைக்
குறுகுறுவென்று பார்க்க அவனுக்கோ அத்தைமகளின் இந்த கொக்கிப் போட்டு இழுக்கும் பார்வையில் துளியளவும் ரசனை
இல்லை என்பது நன்றாகத் தெரிய "எதுக்கு இப்போ
இப்பிடி பார்க்கிறானு தெரியலயே ரகு. இந்தப் பார்வைக்கு அவ டிக்ஸ்னரியில என்ன அர்த்தம்னு புரியலயே.
சரி எதுக்கும் சிரிச்சு
வைப்போம்" என்றவாறு அவளைப்
பார்த்துச் சிரிக்க அவள் அதற்கு எந்த ரியாக்சனும் இல்லாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள்.
பின்னர் மெதுவாக "நான் போறதுக்கு முன்னாடி அவுட் ஹவுஸை விட்டு
ஏன் போகணும்னு நீ கேட்டில்ல? அது ஒன்னும் இல்ல அம்மாஞ்சி! அங்கே இருந்தா
எவ்ளோ டிரை பண்ணுனாலும் நெகட்டிவ் எனர்ஜி தாக்குது.
அதான் போகணும்னு முடிவு பண்ணிட்டோம்" என்றுச் சொல்ல
ரகுநந்தன் "நீ கொஞ்சமாச்சும் தாத்தா பாட்டியைப் பத்தி
நெனைச்சு பார்த்தியா நீரு? அவா ரெண்டு
பேருக்கும் நீனா உயிர் தெரியுமா?" என்க
அவள் தோளைக் குலுக்கிவிட்டு
"தெரியுமே! அதான் நாங்க போகிறப்போ சித்துவையும், பட்டுவையும் எங்க கூடவே கூட்டிட்டுப்
போயிடுவோம். அந்த வீட்டையும், அவுட் ஹவுஸையும் நீ, உங்க அம்மா, உங்க அண்ணா மூனு பேருமா சேர்ந்து
ராஜ்ஜியம் கட்டி ஆளுங்க"
என்றுச் சொல்லிவிட்டு அவன் பின்னே பைக்கில் அமர்ந்தாள்.
ரகுநந்தன் தாத்தா
பாட்டியையும்
அழைத்துச் சென்று விடுவோம் என்பதில் கடுப்பானவன் ஏதோ சொல்லப் போக அதற்குள் அவன் போன் அழைக்கவே அதை
எடுத்து காதில் வைத்தான்.
"சொல்லுடா அண்ணா" என்றவனிடம் ஹர்சவர்தன் உடனே ஹோட்டலுக்கு
வருமாறும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச
வேண்டும் என்றும் சொல்ல அவன் சரியென்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
அவன் பின்னே அமர்ந்திருந்தவளிடம்
"கொஞ்சம் இறங்கிக்கறியா?" என்க அவள் "ஏன்? என்னாச்சு?" என்று கேட்கவும் "ஒன்னுமில்ல!
ஹர்சா என்னை ஹோட்டலுக்கு வரச் சொல்லுறான். சோ
நீ என்ன பண்ணுற ஒரு ஆட்டோவோ கால் டாக்சியோ பிடிச்சு போயிடு" என்றுச் சொல்லிவிட்டு சாவியைத் திருக நீரஜாட்சி
கடுப்புடன் கீழே இறங்கினாள்.
"உன்னை எல்லாம் நம்பி வந்தா நடுரோட்டுல தான் நிக்கணும்"
என்று அவள் வழக்கம் போல அவனை அர்ச்சிக்கத் தொடங்க
அவன் ஏற்கெனவே அவளது பேச்சில் எரிச்சலில் இருந்தவன் அது அதிகரிக்கவே அவனும் பதிலுக்குக்
கத்த ஆரம்பித்தான்.
"ஆமாடி! நீ அப்பிடியே
என்னை நம்பி அமெரிக்காவுக்கு வந்துட்ட. நான் உன்னை பாஷை தெரியாத ஊருல விட்டுட்டு
ஓடுறேன் பாரு" என்றுக் கத்த
அவள் "என்ன சொன்ன 'டி'யா?"
என்று
முறைக்க
அவனும் சளைக்காமல்
"ஆமாடி!
நீ பொண்ணு தானே! நீ மட்டும் வார்த்தைக்கு வார்த்தை 'டா' போட்டுக் கூப்பிடறச்ச நாங்க மட்டும் உன்னை கண்ணே, கண்மணியேனு கொஞ்சணுமா? அப்பிடி தான் சொல்லுவேன்" என்று பதிலளிக்க
அவள் சுற்றி முற்றி எதையோ தேட அவன் அதைக் கண்டுகொண்டவனாக
"என்ன தேடுற? கல் எதாச்சும்
கிடைக்குமானு தேடுறியோ? என் அத்தை பொண்ணை பெத்துக்க சொன்னா
பொறுக்கியை பெத்து விட்டுருக்காங்க!
எப்போ யாரை கல்லால அடிக்கலாம்னு சுத்திட்டு இருக்கு இது" என்று நக்கலாகச் சொல்லிவிட்டு பைக்கை
எடுத்துக் கொண்டு சென்றுவிட நீரஜாட்சி
பல்லைக்
கடித்தபடி "நீ இப்போ தப்பிச்சிட்டடா! ஆனா திரும்பி வீட்டுக்கு தானே வரணும். அங்கே நீ செத்தடா"
என்றுச் சொல்லி காலை உதைத்துவிட்டு
ஆட்டோவைத்
தேடிச் சென்றாள்.
அவள் நல்ல நேரம்
ஆட்டோவும்
உடனே கிடைக்க உர்ரென்று முகத்தை வைத்திருந்தவள் கையில் வைத்திருக்கும் ஃபோல்டரில் இருக்கும்
அந்த விசிட்டிங் கார்டைப் பார்த்ததும்
இதனால்
தன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று எண்ணிப் புன்னகைத்தாள்.
அதே நேரம் ஹர்சவர்தன் ஹோட்டலில்
இருக்க அவனைத் தேடிச் சென்ற ரகுநந்தனுக்கு அண்ணனிடம் இருந்து ஒரு நல்லச் செய்தி கிடைத்தது. அது அவனது
கனவுக்கான முதல் படி என்று சொன்னால்
கூட
மிகையாகாது.
ஹர்சவர்தன் அவர்கள் ஹோட்டல்களில்
இரண்டை மட்டும் ரெசிடென்ஸியல் ஹோட்டலாக மாற்றலாம் என்ற எண்ணத்தில் இருந்தவன் இதைப் பற்றி அந்த
தொழிலில் இருப்பவர்களிடன் தீர விசாரித்தப் பிறகு
தன்னுடைய எண்ணத்தை தந்தையிடமும், சித்தப்பாவிடமும் கூற அவர்களும் இந்த முயற்சிக்கு பச்சைக்கொடி
காட்டிவிட்டனர்.
அதைப் பற்றி பேசுவதற்கு தான்
அவன் ரகுநந்தனை அழைத்திருந்தான். ரகுநந்தன் வந்ததும் அவனை அமரச் சொல்லி எதிர்காலத் திட்டங்களை
விளக்கியவன் இரண்டு ஹோட்டல்களையும்
ரெசிடென்ஸியல்
ஹோட்டல்களாக விரிவுப்படுத்துவதற்கான பில்டிங் காண்ட்ராக்டை அவர்களின் கன்ஸ்ட்ரெக்சன் நிறுவனமான
ஸ்ரீநிவாஸா கன்ஸ்ட்ரெக்சன் பிரைவேட்
லிமிட்டெட்டுக்கு
கொடுக்கலாம் என்று நினைப்பதாகக் கூறவும் ரகுநந்தனுக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.
இன்னும் அதில் அவன் முறைப்படி
பதவி ஏற்கவில்லை தான். ஆனால் லண்டனில் இருக்கும் போதே அதனுடைய நடப்பு செயல்பாடுகள், கடந்தகால புராஜெக்ட்களைப் பற்றிய
விவரங்களை சித்தப்பா மூலம்
தெரிந்துகொண்டிருந்தவன் அவர்களின் கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு இந்த கான்ட்ராக்ட் கிடைத்தால் அதில் நல்ல
இலாபம் ஈட்ட முடியும் என்பதால் உற்சாகத்துடன் அதற்கு
சம்மதித்தான்.
இந்த கான்ட்ராக்ட் மூலம் கிடைக்கும் இலாபம் என்னவோ வலது கையிலிருந்து இடது கைக்கு
பணம் பரிமாறப்படுவதைப் போல
தான் என்றாலும் இது அவர்களின் கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு புது இரத்தம் பாய்ச்சுவதைப்
போல இருக்கும் என்பதில் அவனுக்குச்
சிறிதும்
ஐயமில்லை. இப்போது கம்பெனி வளர்ச்சிக்காக அவன் வங்கிக்கடனுக்கு ஏற்பாடு செய்தாலும் அதற்கு அவன் வட்டி
கட்டியே தீர வேண்டும். அதற்கு பதிலாக
ஹோட்டலின்
மூலம் பணம் கிடைத்தால் அது வருமானம் என்ற கணக்கில் வந்துவிடும் என்ற ஹர்சவர்தனின் கணக்கு அவனுக்கு
மிகவும் சரியாகத் தோன்றியது.
இந்த டீலுக்கான
பேப்பர்களை
தயார் செய்ய கம்பெனி ஊழியர்களை ஏவும் அதிகாரம் இப்போதைக்கு தனக்கு இல்லாததால் ரகுநந்தன்
தந்தைக்குப் போன் செய்து முதலில் ஒரு போர்ட் மீட்டிங் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்
கொண்டான். அதற்கான ஏற்பாடுகளை ஆடிட்டருடன் சேர்ந்து
தான் கவனித்துக் கொள்வதாக அவர் கூறவே இன்னும் இரண்டு வாரத்தில் மற்ற விஷயங்களைப் பேசிக்
கொள்ளலாம் என்று அண்ணனும் தம்பியும்
முடிவு
செய்தனர்.
இருவரும் பேசிக் கொண்டே மதியவுணவுக்காக
வீட்டுக்குக் கிளம்பி வெளியே வர அதே நேரத்தில் கிருஷ்ணஜாட்சி அவர்களின் பேக்கரிக்குச் செல்வதற்காக
வெளியே வந்தவள் அவர்களின் பேக்கரி
விரிவாக்கத்துக்காக வங்கிக்கடன் தொடர்பாக கரோலினுடன் பேசிக் கொண்டு வந்தவள் தனக்கு எதிரே
வந்த ஹர்சவர்தனை கவனிக்காமல் அவன் மீது மோதிக்
கொண்டு கீழே விழப் போக ஹர்சவர்தன் அதற்குள் சுதாரித்து அவளைப் பூக்குவியலாய் தனது கரங்களில் தாங்கிக்
கொண்டான்.
கிருஷ்ணஜாட்சியோ தான் கீழே
விழுந்து விடுவோம் என்று எண்ணி கண்ணை இறுக்கமாக மூடிக் கொள்ள ஹர்சவர்தன் அவளின் விழி மூடி நிற்கும்
தோற்றத்தை ரசிக்கத் தொடங்கினான். கருநிற வானவில்
புருவங்கள் சுழித்திருக்க, அவளின் அழகிய நீண்ட
நயனங்கள் பயத்தில் இறுக்கமாய்
மூடியிருக்க அவனது பார்வை அடுத்து அவள் செவ்விதழ்களில் நிலைத்தது. முகத்தின் குறுக்கே விழுந்த
சுருண்ட முடிக்கற்றை ஒன்று அவளின் உதட்டில் பட்டு
விளையாட அதை மெதுவாக விலக்கிவிட்டவனின் கைவிரல் ஒரு நொடி அவளின் செவ்விதழை வருடிவிட்டுச் செல்ல
கிருஷ்ணஜாட்சிக்கும் ஏதோ உள்ளே குறுகுறுவென்ற உணர்வு
எழுந்து அவளது அழகிய விழிகளை மலர்த்தி அவனை நோக்கினாள்.
புறவுலகை மறந்து அவர்கள் வேண்டுமானால் நிற்கலாம், ஆனால் அண்ணனைத் தொடர்ந்து வந்த
ரகுநந்தன் அப்படி நிற்க முடியாதல்லவா!
எனவே ஒரு கடமை தவறாத கரடித்தம்பியாக தொண்டையைக் கனைத்து அவர்களை மீண்டும் ஹோட்டலிற்கு
அழைத்து வரும் கடமையைச் செவ்வனே செய்துவைக்க இருவரும்
அவனது தொண்டைச்செறுமல் சத்தத்தில் திடுக்கிட்டு விலகினர்.
அவர்களைக் கையைக் கட்டிக் கொண்டு கிண்டலாகப் பார்த்தவன் அவர்களை
சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காக கிருஷ்ணஜாட்சியிடம்
"அத்தங்கா இட்ஸ் டூ பேட்! போயும் போயும் அவன் கையிலயா விழுவ? அவன்
கமிட்டட் பாய். இங்கே ஒரு சிங்கிள் சிங்கம் உனக்காக காத்திருக்குங்கிறதை மறந்திட்டியோ?" என்றுச் சொல்ல அவனது கேலியை உணர்ந்த கிருஷ்ணஜாட்சி சிரிக்க ஹர்சவர்தனோ
தன்னைஏறிட்டுக் கூட பார்க்காதவள் தம்பியிடம் சகஜமாகப்
பேசி சிரிப்பதைக் கண்டு திகைத்தான்.
ரகுநந்தன் அவளிடம்
"அத்தங்கா
நீ உன்னோட வீரபாகு பேக்கரிக்கு தானே போற? வா நான் உன்னை டிராப் பண்ணிடுறேன்" என்றுச் சொல்ல
கிருஷ்ணஜாட்சியும் மறுப்பு சொல்லாமல் தலையாட்ட ஹர்சவர்தன் சிலையாய் சமைந்து நிற்க
ரகுநந்தன் அவனிடம் "டேய் அண்ணா! நீ வீட்டுக்கு
கிளம்புடா. நான் இவாளோட பேக்கரி வரைக்கும் போயிட்டு வர்றேன்" என்றுச் சொல்ல அவன் மனதுக்குள் பொறுமிக்
கொண்டே இருவருக்கும் விடையளித்தான்.
ரகுநந்தன் காரியத்தோடு தான்
கிருஷ்ணஜாட்சியை பேக்கரியில் டிராப் செய்வதாகக் கூறி தன்னோடு அழைத்து பைக்கில் அழைத்துச் சென்றான். போகும்
போதே "அத்தங்கா நீ எனக்கு ஆல்ரெடி ஒரு அட்வைஸ்
குடுத்தல்ல! இப்போ எனக்கு அகெய்ன் உன்னோட அட்வைஸ் தேவைப்படுது" என்க அவளும் "சொல்லுங்க
அம்மாஞ்சி" என்று ஆர்வமாய் கேட்டாள்.
அவன் பெருமூச்சுடன் "நீ சொன்னல்ல பிடிவாதக்காரங்களோட அன்பை
ஜெயிக்கணும்னா ரொம்ப கஷ்டப்படணும்னு.
ஆனா
எவ்ளோ தூரத்துக்கு அதுக்காக பணிஞ்சுப் போகணும்?
ஐ
மீன் சில பேர் இருப்பா கெஞ்சினா
மிஞ்சுற ரகம்னு! அவாளை எப்பிடி சமாளிக்கறது?"
என்று கேட்டு வைக்க
அவளும் உற்சாகமாக
"அம்மாஞ்சி!
ரொம்ப கெஞ்சுனா காரியம் ஆகாது. சில இடத்துல நம்மளும் நம்ம கெத்தை காட்டணும். நமக்கு பிடிச்சவா
நம்ம கையை விட்டுப் போயிடக் கூடாதுனா
நம்ம
தான் அதுக்கு அரண் போட்டுத் தடுக்கணும்" என்றுச் சொல்ல
அவனோ "சத்தியமா புரியல அத்தங்கா. நீ கொஞ்சம் விலாவரியா
சொல்லுறியா?" என்று பரிதாபமாக
பக்கவாட்டுக் கண்ணாடியில் அவளது முகத்தைப் பார்க்க கிருஷ்ணஜாட்சி சத்தம்
போட்டுச் சிரித்தாள்.
பின்னர் சிரிப்பை
அடக்கிக்
கொண்டு "அம்மாஞ்சி! செஸ் விளையாடிருக்கிங்களா? அதுல
ரொம்ப பவர்ஃபுல்லானது
குயின் தான். அதை கன்ட்ரோல் பண்ணுறது கஷ்டம். பிகாஸ் அது அது ஹரிஜாண்டல், வெர்டிக்கல்னு எல்லா சைட்லயும் நகரும்.
பட் அதுக்கு செக் வச்சிட்டா
கிட்டத்தட்ட கேம்ல நம்ம ஒரு ஸ்ட்ராங் பொஸிசனுக்கு வந்துடலாம். அதே மாதிரி தான் ரொம்ப பிடிவாதமா
அடம்பிடிக்கறவங்களுக்கு மூவ் ஆக முடியாத அளவுக்கு
ஒரு செக் வச்சா போதும். அவங்க நம்ம போட்ட அந்த அரணை தாண்டி போகவே முடியாது. அந்த சைக்கிள் கேப்ல நம்ம
அவங்க மனசை மாத்திடணும்" என்று
அறிவுரையை
அள்ளி வழங்க ரகுநந்தனுக்கு நீரஜாட்சியை அவளது பிடிவாதத்திலிருந்து வெளிவரவைக்கும்
டெக்னிக் பிடிப்பட்டு போனது.
அதற்குள் சிக்னல் போடப்பட ரகுநந்தன் பைக்கை நிறுத்திவிட்டு
கிருஷ்ணஜாட்சிக்கு நன்றி கூற அவர்களின் கலகலப்பான
பேச்சை யார் பார்க்கக் கூடாதோ அவர் பார்த்துவிட்டார். அது வேறு யாருமல்ல, பத்மாவதியின்
செல்ல விஜி மன்னி தான்.
அவர்கள் பைக் நிற்கும் இடத்துக்கு
பக்கவாட்டில் தான் பத்மாவதியின் காரும் நின்றது. அவர் நிச்சயதார்த்தத்துக்கு ஜோஸியர் நாள்
குறித்துக் கொடுத்துவிட்டதை நாத்தனாரிடம் நேரில்
தெரிவிக்கப் போய்க் கொண்டிருந்தவர் சிக்னலில் ரகுநந்தனின் பைக்கையும், அதில் அவனுடன் சிரித்தபடி பேசிக்
கொண்டிருந்த கிருஷ்ணஜாட்சியையும்
பார்த்துவிட அவர்களோ இதை அறியாமல் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
விஜயலெட்சுமி மனதுக்குள்
"மதுரவாணியோட
பொண்ணை ஹர்சாவுக்கு முடிச்சிடுவாளோங்கிற பயத்துல நாம ஒன்னு பண்ணுனா பகவான் பிரச்சனையை வேற ரூபத்துல
கொண்டு வராறே! இந்த நந்தனுக்கு ஏன்
தான்
புத்தி இப்பிடி போறது? அப்பிடி என்ன
லோகத்துல இல்லாத அழகி இந்த கிருஷ்ணஜாட்சினு இவ
கூட சுத்திண்டு இருக்கான்? முதல்ல இதை பத்மா
காதுல போட்டு இவா ரெண்டு
பேரையும் கொஞ்சம் விலக்கி வைக்கணும். இல்லனா நாளைக்கு இவ இளைய மருமாளா அந்த ஆத்துக்குப்
போய்டுவா" என்று கருவியபடி சிக்னல் விழுந்ததும்
காரை எடுக்கச் சொன்னார்.
மற்ற மூவரின் நிலை
இவ்வாறு
இருக்க நீரஜாட்சி கல்லூரியிலிருந்து கிளம்பியவளுக்கு கவிதா போன் செய்து அவளின் அம்மா நீரஜாட்சியை
வீட்டுக்கு அழைப்பதாகக் கூற அவளால் அதை மறுக்க
முடியவில்லை. மகளைப் பிரிந்து இருந்த இத்தனை ஆண்டுகளில் மகளுக்கு தோழியாக, உறுதுணையாக
இருந்த நீரஜாட்சியை கவிதாவின் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். அன்று அவருக்கு விடுமுறை
என்பதால் அவளை தங்களது வீட்டுக்கு மதியவுணவுக்கு
அழைத்திருந்ததால் நீரஜாட்சியும் சீதாலெட்சுமிக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட்டு நேரே கவிதாவின்
வீட்டுக்குச் சென்றவள் அதன் பின் மாலையில் தான் வீடு
திரும்பப் போகிறாள்.
அதே நேரம் கிருஷ்ணஜாட்சியுடன்
சென்ற ரகுநந்தன் அவள் ஃபாண்டெண்டில் உருவன் செய்வதைப் பார்த்தவன் கன்னத்தில் கைவைத்தபடி அதில்
இலயித்தவன் அங்கிருந்து இன்னும் கிளம்பாமல்
கரோலினுக்கும், அவளுக்கும்
வேண்டியவற்றை எடுத்துக் கொடுத்துக்
கொண்டு
அங்கேயே மாலை வரை தங்கிவிட்டான்.
இவர்கள் இருவரும் ஜோடியாக சிரித்து பேசியபடி சென்றதைக் கண்டு மனம்
வெதும்பிப் போன ஹர்சவர்தனோ மைதிலிக்குப் போன்
செய்து தான் மதியவுணவுக்கு வீட்டுக்கு வரவில்லை தனக்கு மீட்டிங் இருக்கிறது என்றுப் பொய்
சொல்லிவிட்டு அவனது அலுவலக அறையில்
தஞ்சமடைந்தான்
மாலை வரை.
இவ்வாறு அன்றைய நாளின் மாலை அவர்கள் நால்வருக்கும் ஏதோ ஒரு
விதத்தில் அதிர்ச்சியைத் தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்தது.
பூங்காற்று 15
வீட்டுக்குள் நுழையும் போதே
வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும்
பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச்
சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி
பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார்.
அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை. மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின்
குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால்
அவரிடம்
ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. எப்போதுமே நீ நலமா நான் நலம் என்று பேசிக் கொள்ளும்
அளவுக்கு தான் அவர்களின் உறவின் நிலை
இருந்தது.
விஜயலெட்சுமி இரு
சகோதரிகளிடமும்
"நான் நம்ம குடும்ப ஜோஸியரைத் தான் பார்த்திட்டு வந்தேன் பத்மா. இந்த மாசத்துல நல்ல நாள்
இருக்கிறதால கல்யாணத்துக்கு முகூர்த்தநாள் குறிச்சுக்
குடுத்திட்டார். நிச்சயத்தை இன்னையில இருந்து இரண்டு வாரத்துல குறிச்சு குடுத்திருக்கார். மைதிலி
நீயும் பாருடி. நோக்கும், உன் ஆத்துக்காரருக்கும் இந்த தேதிகள்
வசதிப்படுமானு பார்த்து சொல்லுடிம்மா.
என்ன
இருந்தாலும் மாப்பிள்ளையோட சித்தி இல்லையோ?"
என்று
அவரையும் இழுத்து வைத்து அவர்
குறித்துக் கொடுத்த தேதிகளைக் காட்ட இரு சகோதரிகளுக்கும் அந்த தேதிகளில் எந்த மாற்றுக்கருத்தும்
இல்லை.
பத்மாவதி "மன்னி! அப்பாவும்
அம்மாவும் தூங்கிண்டிருக்கா! நீங்க கொஞ்சம் பொறுத்தேள்னா அவா ரெண்டு பேரும் முழிச்சிப்பா. வீட்டோட
பெரியவா கிட்ட கேட்டிண்டு மத்த விஷயங்களை முடிவு
பண்ணுனா உசிதம்" என்று கடமை தவறாத மருமகளாகச் சொல்ல விஜயலெட்சுமியும் அதற்கு ஒத்துக்
கொண்டார். ஆனால் அதோடு விட்டுவிட்டால்
அவர்
விஜயலெட்சுமி இல்லையே!
கிருஷ்ணஜாட்சி, ரகுநந்தன் விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தே
ஆக வேண்டும் என்று தீர்மானித்தவர் மைதிலி இங்கே
இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதால் அவரைப் பார்த்தவர் "மைதிலி வெயில்ல வந்தது நேக்கு நாக்கு
வரள்றது! நீ எனக்கு ஒரு லெமன் புளிஞ்சு எடுத்திண்டு
வர்றியா?" என்றுக் கேட்க
மைதிலியும் இதற்கு மேல் இவர்களுடன் இருந்தால்
இவர்கள் பேசும் தேவையற்றப் பேச்சுக்களும் தன் காதில் விழும் என்பதால் ஆளை விடுங்கடா சாமி
என்று கிச்சன் கிங்டம்மிற்குள் தன்னை
ஐக்கியமாக்கிக்
கொள்ளச் சென்று விட்டார்.
அவர் சென்றுவிட்டாரா என்று
ஹாலின் நடுவில் நின்று உறுதி செய்துவிட்டு பத்மாவதியின் அருகில் அமர்ந்த விஜயலெட்சுமி அவரது பாணியில்
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல
பேச்சை
ஆரம்பித்தார்.
"ஏன் பத்மா
உங்காத்துக்கு ஒரே நேரத்துல ரெண்டு
மருமகள்கள் வரப் போறாள் போல?" என்று வத்தி வைக்க பத்மாவதி குழம்பியவராய் "ரெண்டு
மருமாளா? என்ன பேசறேள் மன்னி? நேக்கு விளங்கல" என்றுச் சொல்லிவிட்டு
அண்ணன் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
விஜயலெட்சுமி சமையலறையை நோட்டமிட்டவாறே
"உன் நாத்தனார் அழகுச்சிலையா ஒன்னை பெத்து விட்டுருக்காளே அதுவும், நம்ம
நந்தனும் அடிக்கடி ஒன்னா பேசிண்டிருக்கறதை நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கேன்டிமா.
தீபாவளி அன்னைக்கு தோட்டத்துல ரொம்ப நேரம் ஏதோ
பேசி சிரிச்சிண்டிருந்தா. இன்னைக்கு டிராபிக்ல நம்ம நந்தனோட பைக் என் கார் கிட்ட தான் நின்னுண்டிருந்தது.
அவன் பின்னாடி ஒரு பொண்ணு அவனோட ஏதோ
சிரிச்சு
சிரிச்சு பேசிண்டிருந்தா. நானும் யாருடா அதுனு பாத்தா கடைசில அது மதுரவாணியோட மூத்தப் பொண்ணு, அதான் அந்த கிருஷ்ணா" என்றுச்
சொல்ல பத்மாவதிக்கு தலையில்
இடி விழுந்தது போலவாயிற்று.
அவரது அதிர்ந்த
முகத்தோற்றத்தைப்
பார்த்த விஜயலெட்சுமி "நான் அவா ரெண்டு பேரும் பழகறதை தப்பா நெனைச்சிண்டு உன்னண்ட சொல்லலைடி
பத்மா! ஏன்னா மதுரவாணி இந்தாத்தோட பொண்ணு. என்ன தான் அவ
ஓடிப் போய் இந்தாத்துக்கு அவமானத்தைத் தேடிக் குடுத்திருந்தாலும் அது பழைய கதையோன்னோ.
வருஷமும் இருபதுக்கு மேல ஆச்சு. நீயும் அந்த
குழந்தேள் முகத்தைப் பார்த்து பழசை எல்லாம் மறந்து அந்த கிருஷ்ணஜாட்சியை உன் மருமகளா ஏத்துக்க
தயாரியோட்டியோனு..." என்று அவர்
சொல்லிக்
கொண்டிருக்கும் போதே பத்மாவதி கை உயர்த்தி அவர் பேசுவதை நிறுத்துமாறு சைகை காட்ட நாத்தனாரின்
முகத்தில் இருந்த அனலில் பேச்சை நிறுத்தி அமைதியானார்
அவர்.
பத்மாவதி கடுஞ்சினத்துடன்
"என்ன
பேசறேள்னு புரிஞ்சு தான் பேசறேளா மன்னி? நான் செத்தாலும் அந்த மதுரவாணியோட பொண்ணு இந்த ஆத்து மருமகளா
வர நான் ஒத்துக்க மாட்டேன். அருமையா
என்
பிள்ளைங்க ரெண்டு பேரையும் நான் வளர்த்தது அவளோட பொண்ணுங்களுக்காகவா? அப்பிடி மட்டும் ஒன்னு நடந்தது வையுங்கோ
நீங்க இந்த பத்மாவதியை உயிரோட பார்க்க மாட்டேள்.
ஏதோ பெத்தவா இல்லாத குழந்தேள்னு ரெண்டையும் விட்டு வச்சேனே தவிர அவா என்னைக்குமே எனக்கு
ஆகாதவா தான் மன்னி" என்றுச் சொல்ல
விஜயலெட்சுமி "அது என்னவோ வாஸ்தவம்டி பத்மா. ஆனா நான் என்ன சொல்ல
வர்றேன்னா.." என்றுப் பேசிக் கொண்டிருந்தவர்
மைதிலி ஜூஸ் தம்ளருடன் வரவே பேச்சை நிறுத்திவிட்டு அவரிடமிருந்து தம்ளரை வாங்கிக்
கொண்டார். மைதிலி மீண்டும் உள்ளே செல்லவே பத்மாவதியிடம்
"நான் என்ன சொல்ல வர்றேனா நம்ம நந்தனை அந்தப் பொண்ணை விட்டு விலக்கி வைக்கணும். அவன் இருக்கிற
திசைநாமத்துக்கே அவ வரக் கூடாது" என்றுச் சொல்லிவிட்டு ஜூசை குடிக்கத்
தொடங்கினார்.
பத்மாவதியும் தீவிர முகபாவத்துடன்
"அதுல்லாம் சரி மன்னி! ஆனா எப்பிடி அவாளை விலக்கி வைக்கறது?" என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
"சித்தம்மா" என்று அழைத்தபடியே வீட்டுக்குள்
நுழைந்தாள் நீரஜாட்சி.
அவளைக் கண்டதுமே விஜயலெட்சுமியின் மூளை கிரிமினல் வேலையை
ஆரம்பித்தது. அவர்கள் இருவரையும் முறைத்தவாறே
வந்தவளிடம் "ஏன்டிம்மா நீரஜா பாட்டி கிட்ட மட்டும் தான் பேசுவியோ? இங்க
குத்துக்கல்லாட்டம் ரெண்டு பேர் உக்காந்திண்டிருக்கோமே எங்களண்ட பேசுனா ஆகாதா?" என்று குத்தலாகவே பேச்சை ஆரம்பித்தார்
அவளிடம்.
அவளோ இவரைப் பார்த்து
"என்ன
பண்ணுறது பெரியம்மா? எனக்கு கல்லு, மண்ணோட பாஷை தெரியாதே! அதுவுமில்லாம இக்னோர்
நெகட்டிவிட்டிங்கிறது என்னோட பாலிஸி! அதுக்கு ஏத்த மாதிரி நான் எதிர்மறையான மனுசங்க கிட்ட
இருந்து விலகி நின்னுக்கிறேன்"
என்றுச்
சொல்லி ஒரு ஏளனமான உதட்டுவளைவுடன் பத்மாவதியைப் பார்த்துவிட்டு ஹாலின் வலதுபுறத்தை நோக்கி
"சித்தம்மா" என்றுக் கத்த மைதிலி சமையலறையிலிருந்து
வெளியே வந்தார்.
"என்னடி வந்ததும் வராததுமா உன் சித்தம்மாவை ஏலம்
விட்டுண்டிருக்க? என்ன விஷயம்"
என்க அவளோ கண்ணைச் சிமிட்டியபடி
"அதெல்லாம் சித்தம்மா கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்லுவேனாக்கும்" என்க
சீதாலெட்சுமியும் தூக்கம் கலைந்து ஹாலுக்கு வந்துவிட்டார்.
"ஏன்டி இப்போ சித்தம்மாக்காக எந்த ராஜகுமாரனை
அழைச்சிண்டு வந்திருக்கேனு இந்த கூப்பாடு?"
என்று
கேலியாக கேட்க அவரைப் பார்த்து கேலியாக உதட்டை வளைத்த நீரஜாட்சி "உனக்கு என்னோட பட்டுவே ஓவர். இதுல வேற
ராஜகுமாரன் கேக்குதாக்கும்? சித்து திஸ் டூ மச். கொள்ளுப்பேரனை கொஞ்ச
வேண்டிய வயசுல உனக்கு ராஜகுமாரன் கேக்குதோ?" என்றுச் சொன்னபடியே ஹாலின் சோஃபாவில்
கைப்பிடித்தபடி அழைத்துச் சென்று அவரை அமர
வைத்துவிட்டு வழக்கம் போல அவரது காலடியில் அமர்ந்து கொண்டாள்.
ஆவலுடன் தன் கையிலிருக்கும்
ஃபோல்டரிலிருந்த விசிட்டிங் கார்டை எடுத்து சீதாலெட்சுமியிடம்
காட்டியவள் "இது சென்னையிலயே ரொம்ப ஃபேமஸான எக்ஸ்போர்ட் கம்பெனியோடது. இங்கே நான் நாளைக்கு நான்
இண்டர்வியூவுக்கு போகப் போறேனே!"
என்றுச்
சொல்ல பத்மாவதிக்கும் இவள் பிழைத்துக் கொள்வாள் என்ற எண்ணம்.
நீரஜாட்சி "இண்டர்வியூங்கிறது
சும்மா ஃபார்மாலிட்டிக்கு தான். எங்க காலேஜ் சீனியர் அக்கவுண்டண்டோட ரிலேட்டிவ் லேடி தான்
அங்க ஃபினான்ஸ் செக்சனுக்கு சீஃப். சோ
நான்
செலக்ட் ஆன மாதிரி தான். எனக்கு மட்டும் இந்த வேலை கிடச்சதுனா.." என்று அவள் சொல்லும் போதே வீட்டின்
காம்பவுண்டுக்குள் கார் வரும் சத்தமும், ராயல் என்ஃபீல்டின்
சத்தமும் ஒரே நேரத்தில் கேட்க அனைவரின் கவனும் வாயிலை நோக்கித் திரும்பியது.
காரிலிருந்து இறங்கிய ஹர்சவர்தன்
வீட்டை நோக்கி நடைபோட அவனுக்கு எதிரே கிருஷ்ணஜாட்சியுடன் வந்து இறங்கினான் ரகுநந்தன். இருவரையும்
ஏறிட்டவன் இறுகிய முகத்துடன் வீட்டினுள் செல்ல
அவனைத் தொடர்ந்து இருவரும் அவள் செய்த கேக்கைப் பற்றி பேசியபடியே வீட்டினுள் வர அவர்களின் பேச்சு அந்த
வீட்டில் நால்வருக்கு அந்தக் காட்சி
மனதில்
புகைச்சலை உண்டு பண்ணியது.
அதில் ஒருவன் ஹர்சவர்தன். மீதமுள்ள மூவர் விஜயலெட்சுமி, பத்மாவதி கடைசியாக நீரஜாட்சி. அவளுக்கு என்றுமே ரகுநந்தனிடம் நம்பிக்கையோ
நல்லெண்ணமோ இல்லை. அவனுடன் கிருஷ்ணஜாட்சி பேசிக்
கொண்டு வருவதைக் கண்டதும் மனதிற்குள் "இந்த கிருஷ்ணாக்கு புத்தியே இல்லை. இவன் கூட என்ன பேச்சு?" என்று அவள் பல்லைக் கடித்த காட்சி விஜயலெட்சுமியின் கண்ணில் பட அதை
பத்மாவதியிடம் சுட்டிக் காட்டியவர் அவரது அறைக்கு
அழைத்துச் சென்றார் மெதுவாக.
"பத்மா! இந்த சின்னப்பொண்ணுக்கு நம்மாத்து மனுஷா
யாரையும் ஆகாதோன்னோ! நேக்கு ஒரு ஐடியா
தோண்றது"
என்று தனது திட்டத்தை விவரிக்க பத்மாவதி "திட்டம் என்னவோ நன்னா தான் இருக்கு மன்னி. ஆனா இந்த நீரஜா
ஜெகஜால கில்லாடி. நம்ம சொல்லறதை அவ கேட்டுப்பாளா?" என்று வினவ விஜயலெட்சுமி
"அதுல்லாம் கேப்பாடி! அவ அக்கானா
அவளுக்கு
உயிர்" என்க அவருமே அதை ஒத்துக் கொண்டார்.
இருவரும் ஹாலுக்கு வந்த போது
அங்கே பட்டாபிராமனும், சீதாலெட்சுமியும்
அமர்ந்திருக்க சீதாலெட்சுமியின்
காலடியில் அமர்ந்திருந்த நீரஜாட்சியும், அவளுக்குப் போட்டியாக பட்டாபிராமனின் மடியில்
தலைச்சாய்த்திருந்த ரகுநந்தனும் அவர்களை கிண்டல்
செய்து சிரித்து கொண்டிருந்த வேங்கடநாதன், கோதண்டராமன் கிருஷ்ணஜாட்சியிடம் அதைக் காட்டிக் கேலி செய்து கொண்டிருந்தனர்.
விஜயலெட்சுமி பத்மாவதியின் காதில்
"நான் சொன்னேனோல்லியோ? உன் இளைய பையனுக்கும்
அந்த நீரஜாவுக்கும்
சுத்தமா ஆகாது. நம்ம திட்டம் கண்டிப்பா ஜெயிக்கும்னு நேக்கு பூரண நம்பிக்கை இருக்கு" என்க
ரகுநந்தனைப் பார்த்து முகம் சுழித்த
நீரஜாட்சி
அவருடைய நம்பிக்கையை இன்னும் அதிகரித்தாள்.
அதன் பின் விஜயலெட்சுமி வீட்டின்
பெரியவர்களிடம் வணக்கம் சொல்லிவிட்டு வந்த விஷயத்தையும் சொல்ல அனைவருக்குமே இதில் ஆனந்தம் தான்.
கிருஷ்ணஜாட்சி கோதண்டராமனுடன் அமர்ந்திருந்த
ஹர்சவர்தனிடம் "அம்மாஞ்சி கங்கிராட்ஸ்" என்றுச் சிரித்த முகமாகச் சொல்ல அவனுக்கோ எனக்கு இப்பொது
திருமணம் வேண்டாம் என்று வாய்விட்டுக் கத்த
வேண்டும் போல் ஆங்காரம் வந்தது.
ஆனால் மகிழ்ச்சியில் பூரித்த
தாயின் முகம் கண்ணில் படவே அந்த வார்த்தைகள் அவன் தொண்டை குழியிலேயே சமாதி ஆகிவிட அவனும்
சிரமத்துடன் புன்னகைக்க பத்மாவதி அவனுக்கு நெட்டி
முறித்து திருஷ்டி கழித்தார்.
"என் ராஜா! இன்னைக்கு நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா
ஹர்சா?" என்று அவனைப்
பார்த்தவரின் கண்ணில்
சந்தோசக்கண்ணீர் மினுமினுக்க ஹர்சவர்தனுக்கு அதற்கு மேல் வேறு எதுவும் தேவை இல்லை என்றே தோன்ற அவனும்
சிரித்த முகத்துடன் இருந்து கொண்டான்.
அதன் பின் ஒருவர் மாற்றி ஒருவராக அவனுக்கு வாழ்த்து சொல்ல
நீரஜாட்சி இன்னும் சீதாலெட்சுமியிடம்
அமர்ந்திருப்பதை
அறிந்த கிருஷ்ணஜாட்சி அவளிட வந்து "நீரு அம்மாஞ்சிக்கு கங்கிராட்ஸ் சொல்லிட்டு வா"
என்றுச் சொல்ல அவள் முகத்தைச் சுருக்கி கொண்டு மறுத்தாள். கிருஷ்ணஜாட்சி கண்ணை உருட்டி
மிரட்ட வேறு வழியின்றி கடமைக்கு ஒரு வாழ்த்தைச்
சொல்லிவிட்டு வந்தாள்.
அதன் பின் சீதாலெட்சுமியிடம்
சொல்லிவிட்டு அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றவளை பத்மாவதியிடம் விஜயலெட்சுமி
சுட்டிக்காட்ட அவர் தான் இனி பார்த்துக் கொள்வதாகக்
கூறி அவளைத் தொடர்ந்துச் சென்றார். நீரஜாட்சி நீருற்றைத் தாண்டும் முன்னரே "நீரஜா கொஞ்சம்
நில்லுடிம்மா" என்ற பத்மாவதியின் குரல் கேட்க அதை மதிக்காமல் எப்போதும் போல
செல்ல விழைந்தவளை அவரது கரம் அழுத்தமாய் பற்றித்
தடுக்க நீரஜாட்சியால் அதற்கு மேல் நகர இயலவில்லை.
இறுகிய முகத்துடன் அவரை நோக்கி திரும்பியவளை அவர் புன்னகையுடன்
பார்த்துக் கொண்டிருந்தார்.
என்னவென்று ஏறிட்டவளை
"உன்னைப்
பார்த்தா சரியா இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி உன் அப்பாவை பார்த்த மாதிரியே இருக்குடி நேக்கு. அதே
கோவம், அதே பிடிவாதம், அதே வைராக்கியம். சும்மா சொல்லக் கூடாது.
மதிவாணனோட வாரிசுங்கிறதை ஒவ்வொரு தடவையும்
நிரூபிக்கற" என்று பத்மாவதி புகழ அவளோ தன் தந்தையின் பெயரைக் கேட்டதும் சிறிது அமைதியானாள்.
அவரிடமிருந்து கையை உருவிக்
கொண்டவள் "எங்க அப்பாவை புகழ்ந்தது போதும் மாமி. என்ன விஷயம்னு சொல்லுங்க. எனக்கு நிறைய உருப்படியான
வேலைகள் இருக்கு. நாளைக்கு வேற இண்டர்வியூ. அதுக்கு
பிரிப்பேர் ஆகணும்" என்க
அவரோ "போகாத
இண்டர்வியூவுக்கு
ஏன்டிம்மா பிரிப்பேர் ஆகணும்?" என்றுப் புன்னகை
விரிய சொல்லிவிட்டு அதற்கு
அவளின் அதிர்ச்சியை ரசித்தார்.
நீரஜாட்சி கடுப்புடன்
"இங்க
பாருங்க மாமி! நான் ஒன்னும் கிருஷ்ணா இல்ல. நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுறதுக்கு. என் கிட்ட பேசறதுக்கு
முன்னாடி கொஞ்சம் நிதானிச்சு பேசுறது உங்களுக்கு
நல்லது" என்றுச் சொல்லிவிட்டு கோபம் மின்னும் விழிகளுடன் அவரை எரிக்கத் தொடங்கினாள்.
பத்மாவதியோ "அதையே தான்டிம்மா
நானும் சொல்லறேன்! நீ கிருஷ்ணஜாட்சி மாதிரி இல்ல. நோக்கு வைராக்கியம் ஜாஸ்தி. அதனால தான் உன்னால
இன்னும் என்னையோ, என் பசங்களையோ ஏத்துக்க முடியல. ஆனா உன் அக்கா
மதுரவாணியை மாதிரி! அவளால ஈஸியா எங்காத்துப்பசங்களோட
பழக முடியறதுலயே அது தெரியறது. ஆனா என்ன பழக மட்டும் தான் செய்யறாளா இல்ல இந்த
ஸ்ரீனிவாசவிலாசத்துல நிரந்தரமா தங்கிடலாம்னு எதுவும் திட்டத்தோட இருக்கலானு யாருக்கு
தெரியும்?" என்று வஞ்சகத்துடன் உரைக்க நீரஜாட்சி பொறுக்க முடியாமல்
கத்திவிட்டாள்.
"போதும் மாமி! ரொம்ப பேசிட்டிங்க. கிருஷ்ணாவுக்கு செல்ஃப்
ரெஸ்பெக்ட் ஜாஸ்தி. உங்காத்துல போய்
அவ
நிரந்தரமா தங்க பிளான் போடுறானு சொல்லுறிங்களே,
எதை
ஆதாரமா வச்சு என் கிருஷ்ணாவை பத்தி
இப்பிடி அவதூறா பேசிறிங்க?" என்றுச் சீறியவளை
அவளுக்குச் சிறிதும் குறையாத
சீற்றத்துடன் எதிர்கொண்டார் பத்மாவதி.
"உன்னோட அக்கா என் நந்தனோட சிரிச்சு சிரிச்சு பேசிண்டு
சுத்தறானு எனக்கு தகவல் வந்துச்சு.
நன்னா
கேட்டுக்கோடிம்மா! உன் அக்காவை என்னைக்குமே நான் என்னோட மருமகளா ஏத்துக்க மாட்டேன். இப்பிடி என் பையன்
பின்னாடி பல்லை இழிச்சிண்டு போக வேண்டாம்னு உன் அக்கா
கிட்ட நீயே சொன்னாலும் அவ கேக்க மாட்டாடி" என்க
நீரஜாட்சி கடுங்கோபத்துடன் அவரை
விரல் நீட்டி எச்சரித்து "மரியாதையா பேசுங்க மாமி! இவ்ளோ நேரம் நான் உறவுமுறையை நினைச்சும், உங்க வயசை நினைச்சும் அமைதியா இருக்கேன். அதை என்னோட பலகீனம்னு
நினைச்சு பேசாதிங்க. என் கிருஷ்ணா ஒன்னும் உங்க
பையன் பின்னாடி சுத்தலை. அவன் தான் அத்தங்கா அத்தங்கானு அவ பின்னாடி சுத்திட்டிருக்கான். நான் அதைப் பத்தி
கிருஷ்ணா கிட்ட கேட்டதுக்கு கூட அவ
அம்மாஞ்சி
எனக்கு நல்ல ஃப்ரெண்டுனு சொன்னாளே தவிர அவ மனசுல உங்க பையன் மேல நீங்க நினைக்கிற மாதிரி எந்த எண்ணமும்
இல்லை. இவ்ளோ ஏன் இந்த உலகத்தோட கடைசி ஆம்பளை உங்க
நந்தன் தான்னு ஒரு நிலைமை வந்தா கூட என் அக்கா அவனை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டா" என்றுச் சொல்ல பத்மாவதி
சிரித்தார்.
"அக்கா மேல அவ்ளோ
அக்கறை இருக்குதா நோக்கு? அப்போ இதையும் கேட்டுக்கோ! என்னோட
நந்தன் மனசை கிருஷ்ணஜாட்சியோட
அழகு தான் கலைச்சிருக்கு, அவ அப்பிராணினே
வச்சுப்போம். ஆனா என் பையன் அவ்ளோ
ஈஸியா பிடிச்சவாளா விட்டுக்குடுக்க மாட்டான். அவளே விலகிப் போனாலும் என்னோட நந்தன் அவளை
விட்டு விலக மாட்டான். அதே நேரம் உன்னோட அக்கா இந்த
ஆத்தோட மருமகளா வந்தாலும் என்னால அவளை மனப்பூர்வமா ஏத்துக்க முடியாது" என்று
தீர்மானமாகச் சொல்ல நீரஜாட்சி கோபத்தை அடக்கியபடி இனி என்ன செய்வது என்று தெரியாமல்
விழித்தாள்.
"அதனால நோக்கு கொஞ்சமாச்சும் உன் அக்கா மேல அக்கறை
இருந்தா என் நந்தனும் உன் அக்காவும்
நெருங்காம
கவனிக்கிற வேலையை செய். உன் கண் மறைச்சு கூட அவா ரெண்டு பேரும் பழகிடக் கூடாது" என்று அவர் கூற
நீரஜாட்சி கடுப்புடன்
"என்
கிருஷ்ணாவை நான் பார்த்துப்பேன். ஆனா உங்க மகனை என்ன செய்யுறதா உத்தேசம்? வேணும்னா
நான் அவனோட பாடிகார்டா இருந்து 24 ஹவர்ஸும் அவன் கிருஷ்ணாவை சந்திக்கிறானா இல்லையானு
அவனை கண்காணிச்சிட்டே இருக்கவா?" என்று கேட்டுவிட்டு முகத்தைச் சுழித்துக்
கொண்டாள்.
பத்மாவதி "அதுல்லாம் தேவை இல்ல. நீ அவனோட கம்பெனில வேலைக்குச்
சேர்ந்துடு. அதுவும் 24 மணி நேரமும் அவன் கூடவே இருக்கற மாதிரி தான். ஆபிஸ்
நேரத்துல அவன் எங்கே போறான் வர்றானு
உன்னாலயும்
ஈஸியா தெரிஞ்சிக்க முடியும். அவன் உன் அக்காவை சந்திக்கவோ பேசவோ முயற்சி பண்ணுனா அதை உன்னால
தடுக்கவும் முடியும்" என்று பொறுமையாய் தன் திட்டத்தைக் கூற நீரஜாட்சி இவ்வளவு
நாட்கள் தனக்கு வேலை கிடைத்தால் என்னென்ன செய்ய
வேண்டும் என்று கண்டுவைத்திருந்த கனவுகள் அனைத்தும் அவளைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தன.
ஆனால் அந்த ரகுநந்தனால் தன்னுடைய
அக்காவின் நடத்தை கேலிக்குரியதாக ஆகக் கூடாதென்றால் அவள் பத்மாவதியின் திட்டத்துக்கு உடன் பட்டே
ஆகவேண்டும். கனத்த மனதுடன் "சரி
மாமி!
நான் உங்க சின்ன மகனோட கம்பெனியிலயே ஜாயின் பண்ணிக்கிறேன்" என்றுச் சொல்ல பத்மாவதிக்கோ தன் தலை மீது யாரோ
கூடை பூக்களை தூவுவது போன்ற உணர்வு.
மகிழ்ச்சியுடன் "இது போதும்டிம்மா! நான் உன்னை முழுசா
நம்புறேன். நீயாச்சும் இத்தனை நாள் உங்களை கவனிச்சுகிட்ட
மாமா வீட்டுக்கு உண்மையா இருக்கியே" என்றுச் சொன்னபடி அவளது நாடியைப் பிடித்து முத்தமிட்டுவிட்டுச்
சென்றார்.
செல்லும் போதே விஜயலெட்சுமியின்
"பத்மா! அந்த சின்னவளுக்கு நம்ம நந்தனை ஆகவே ஆகாது. கிருஷ்ணஜாட்சியையும் நந்துவையும்
பிரிக்கணும்னா அது அவளாலே மட்டுமே முடியும். நீயோ நானோ
சொன்னா கேக்கறவன் இல்ல உன் இளையப்பிள்ளை. அதனால தான் சொல்லுறேன் இந்த நீரஜாவை நம்ம
கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனியில ஜோலிக்குச் சேர சொல்லு.
அதுக்கு அப்புறம் அவ கண்ணுக்கு தப்பி நந்து எப்படி கிருஷ்ணஜாட்சியைச் சந்திப்பான்?" என்ற வார்த்தைகள் நினைவில் தோன்ற
"திட்டம் போடறதில மன்னியை
அடிச்சிக்க முடியாது" என்று சிலாகித்த வண்ணம் வீட்டுக்குள் சென்றார்.
நீரஜாட்சியோ வேலைக்குச் சென்ற
பிறகாவது இந்த அவுட் ஹவுஸ் வாசத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என்று நம்பியிருந்தவள் அந்த நம்பிக்கை
சிதைந்த சோகத்தில் அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றாள்.
ஆனால் இவர்களின் பேச்சை ரகுநந்தன்
ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்ததை அவர்களில் ஒருவர் கூற அறியவில்லை. அன்னையின் தேவையற்ற பயம் அவனுக்கு
அடக்கமாட்டாத சிரிப்பையே கொடுத்தது. அதே நேரம்
கிருஷ்ணஜாட்சியிடம் இருந்து தன்னை விலக்கி வைக்கிறேன் என்று நீரஜாட்சியுடன் தான் நெருக்கமாவதற்கான
வழியைக் காண்பித்துச் சென்ற அன்னை அவன் கண்களுக்கு
தெய்வமாகவே காட்சியளித்தார்.
ரகுநந்தன் "டேய் நந்து பெரிய அத்தங்கா சொன்ன மாதிரி இந்த
குயினுக்கு செக் வைக்க வேண்டிய நேரம்
வந்துடுத்துடா.
இதுல மெயின் காயினே பெரிய அத்தங்கா தான். தெரிஞ்சோ தெரியாமலோ என் காதலுக்கு உதவியிருக்கா.
இனி அவா பேரைச் சொல்லியே இந்த நீரஜாட்சியை நம்ம
வழிக்கு சுலபமா கொண்டு வந்துடலாம் போல" என்று சந்தோசத்தில் துள்ளிக் குதித்தபடியே
வீட்டை நோக்கி நடைப்போட்டான்.
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14 & 15)
அச்சோ...! அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை யா, அக்காகாரியை நினைச்சு பயந்து ரொம்ப அழகா சின்ன மகனுக்கும் தங்கச்சிக்காரிக்கும்
ரூட் போட்டு குடுத்துட்டாங்களோ
இந்த பத்மாவதியும், விஜயலட்சுமியும்.
நந்தனாவது பரவாயில்லை, மனசுல இருக்கிற எண்ணத்துக்கு உருவம் கொடுக்குறான். ஆனா, இந்த ஹர்ஷா, இப்படியா அம்மா கோண்டுவா இருப்பான்...?
வேஸ்ட் ஃபெல்லொ...! மனசுல இருக்கிறதை கூட சொல்ல முடியாத அம்மாஞ்சி பையன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete