பூங்காற்று 37

Image
  ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும் , ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு ஏதோ மீட்டிங்குக்காக அனுப்பிவிட வீட்டில் தனித்திருக்க பிடிக்காதவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். வழக்கமாக இப்படி வெளியூர் பயணங்களில் அவனுடன் அவளும் செல்வது வழக்கம். ஆனால் அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கருத்தில் கொண்டு ராகுல் அவளை   வரவேண்டாமென்று கூறிவிட்டான். சகோதரனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள பிறந்த வீட்டுக்கு வந்தவள் நீரஜாட்சியிடம் மட்டும் சற்று விலகியே இருந்து கொண்டாள். நீரஜாட்சியும் அவளை புருவ தூக்கலோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவாள். அன்றும் அப்படி நடந்த போது ஸ்ருதிகீர்த்தி நீரஜாட்சியை பார்த்தபடி நடந்து சென்றவள் தரைவிரிப்பில் கால் சிக்கிக் கொள்ள தடுமாறி விழப் போனாள். நீரஜாட்சி பதறிப் போனவளாய் ஓடி வந்து அவள் கையை பிடித்து அவளை விழாமல் நிறுத்தியவள் "உனக்கு அறிவு இல்ல ? ஆகாயத்தை பார்த்து ...

பூங்காற்று 31

 

 


ஹர்சவர்தனும், ரகுநந்தனும் இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த காதலின் பாரத்தை அவரவர் இணையிடம் இறக்கிவிட்ட திருப்தியில் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் அதற்கு எவ்வித பதிலையும் கூறாமல் தங்களது வேலைகளில் பிஸியாகி விட்டனர். இரு சகோதரர்களும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பாமல் சொல்லும் போது சொல்லட்டும் என்று விட்டு விட்டனர்.

கிருஷ்ணஜாட்சிக்கு ஹர்சவர்தனின் மனதில் வர்ஷா மீது எந்த காதலும் இருந்ததில்லை என்று தெரிந்ததே அவளுக்கு பெரும் நிம்மதி. அதே போல தன்னை பிடிக்காமல் ஒன்றும் அவன் மணமுடிக்கவில்லை என்பதும் அவளது மனதில் இத்தனை நாட்கள் இருந்த நெருடலை போக்கியது. கிருஷ்ணஜாட்சியின் தற்போதைய மனச்சுணுக்கத்துக்கு பத்மாவதி மட்டும் தான் காரணம். எக்காலத்திலும் அப்பெண்மணி பேசிய வார்த்தைகளை அவளால் மறக்க இயலாது என்று எண்ணிக் கொள்பவள் ஹர்சவர்தனின் காதல் பேச்சை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் பேக்கரி விரிவாக்கத்தில் மும்முரமானாள்.

நீரஜாட்சியின் நிலையும் அதுவே. ரகுநந்தன் அவளிடம் மனதை வெளிப்படையாக கூறிய நாளன்றே கிருஷ்ணஜாட்சியிடம் அதை தெரிவித்துவிட்டாள் அவள்.

"கிருஷ்ணா! எனக்கு அவனை நினைச்சு குழப்பம் எதுவும் இல்லை. அவன் மேல எனக்கு இன்னும் லவ் எதும் வரலை தான். ஆனா அவனை நம்பலாம். என்னோட பிரச்சனை பத்து மாமி தான். எனக்கும் அவங்களுக்கும் எப்போவுமே ஒத்து வராது. அவங்களை மாதிரி ஒரு கேரக்டர் கூட ஒரே வீட்டுல ஒன்னா இருக்கிறது, தினமும் அவங்களை ஃபேஸ் பண்ணுறதுலாம் என்னால சத்தியமா முடியாது. உன் விஷயத்துல அவங்க நடந்துகிட்ட முறைக்காகவே நான் அவங்களை அந்தளவுக்கு வெறுக்கிறேன். இதுல இந்த புதுசா வந்த லவ்வுக்காக நான் ஏன் மெனக்கிடணும்? நான் அவன் கிட்ட இதுலாம் சரி வராதுனு சொல்லப் போறேன்" என்றவளை பொறுமை காக்குமாறு கிருஷ்ணஜாட்சி தான் அமைதி படுத்தினாள்.

"அவசரப்படாதே நீரு. சின்ன அம்மாஞ்சி உன்னை லவ் பண்ணுறதை என் கிட்ட எப்போவோ சொல்லிட்டார். உன் கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னதால தான் நான் மறைச்சிட்டேன். ஹீ லவ்ஸ் யூ அ லாட். ஒரு மனுசனோட காதலை குறைச்சு எடை  போடுறது தப்பு. அதனால நீ அந்த மாதிரி எதையும் பண்ணி அவர் மனசை கஷ்டப்படுத்திடாதே" என்ற தமக்கையின் அறிவுரையை ஏற்றுக் கொண்டதால் இன்று வரை ரகுநந்தனிடம் எதிர்மறையாக எதையும் கூறாமல் அவள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாள் நீரஜாட்சி.

அதே சமயத்தில் ஹர்சவர்தனின் ஹோட்டல் விரிவாக்கப்பணியில் இரு சகோதரர்களுமே பிஸியாகிவிட அவர்களுக்கும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரம் இல்லை.

இவ்வாறு நாட்கள் பறக்க ஆரம்பிக்க கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் பேக்கரி விரிவாக்கப்பணிகள் முடிந்த நிலையில் விரிவாக்கப்பட்ட பேக்கரியின் உள் அலங்கார நிபுணரை சந்திக்க செல்ல வேண்டுமென்று முடிவெடுத்திருந்தனர். கிருஷ்ணஜாட்சி அன்று அதற்காக பரபரப்பாக தயாராகி நீரஜாட்சியுடன் ஸ்கூட்டியிலேயே சென்று விடலாம் என்ற முடிவுடன் தங்கை கிளம்பி வெளியே வருவதற்காக தோட்டத்தில் ஹேண்ட் பேக்கோடு காத்திருந்தாள்.

அந்நேரம் கோதண்டராமன் வாக்கிங் சென்றுவிட்டு வந்தவர் திடீரென்று தடுமாற கிருஷ்ணஜாட்சி "மாமா" என்ற கூவலுடன் அவரை விழாமல் தாங்கிக் கொண்டாள். அவள் மட்டும் இல்லையேல் அவரது தலை அங்கிருந்த நீருற்றின் பக்கவாட்டு சுவரில் இடித்திருக்கும்.

அவரை கிருஷ்ணன் சிலையின் படிக்கட்டுகளில் அமர வைத்தவள் "ஏன் மாமா இவ்வளவு சிரமப்படுத்திக்கிறிங்க? உங்களுக்கு பி.பி இருக்குனு தெரிஞ்சும் இவ்ளோ தூரம் நடக்கணுமா? நம்ம கார்டன்லயே சும்மா நடந்தா போதாதா?" என்று அக்கறையுடன் கடிந்து கொள்ள

கோதண்டராமன் "நேக்கு ஒன்னும் இல்லடிம்மா! மனுஷாளுக்கு மனநிம்மதி இல்லைனா இப்பிடி தான் சரீரம் அவா சொல்லுற பேச்சை கேக்காது" என்று அவர் விரக்தியுடன் கூற

கிருஷ்ணஜாட்சி "நீங்க பிரஷருக்கு போடுற டேப்ளட்டை போட்டிங்களா? இல்லையா? இருங்க" என்றபடி எழுட்நவள் வீட்டை நோக்கி "சின்ன மாமி! மாமாவோட பிரஷர் டேப்ளட்டை எடுத்துட்டு வாங்க. அவர் போடாம ஓபி அடிச்சிட்டிருக்கார்" என்று சொல்ல உள்ளே சகோதரியுடன் வேலையாய் இருந்த மைதிலிக்கு நீண்டநாள் கழித்து மருமகள் தன்னை அழைத்த மகிழ்ச்சியும், அவள் சொன்னபடியே கோதண்டராமன் சில மாதங்களாக போட வேண்டிய மாத்திரைகளை போடாமல் சுத்துவதால் ஏற்பட்ட சலிப்புமாய் எழுந்தவர் தங்களின் அறை டேபிளில் இருக்கும் அவரது மாத்திரை புட்டியுடன் வெளியே வந்தார்.

அங்கே கிருஷ்ணஜாட்சி அவர் கணவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அவர்களிடம் வந்தவர் "நான் சொன்னா எங்கே கேக்கிறார் உன் மாமா? மருமகள் வந்து மிரட்டுனதும் நன்னா குழந்தை மாதிரி பம்முவார்" என்று முகவாயை தோளில் இடித்துக் கொண்டபடி மாத்திரையையும் தண்ணீரையும் கணவரிடம் நீட்டினார்.

மாத்திரையை விழுங்கிவிட்டு மருமகளைப் பார்த்தவர் "இன்னும் இந்த ஆத்து மனுஷாளை நீ மன்னிக்கலையாடிம்மா?" என்றவரின் கலங்கிப் போன குரல் கிருஷ்ணஜாட்சியின் மனதை உலுக்க மைதிலிக்குமே கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.

"கிருஷ்ணா நோக்கு தெரியாதது ஒன்னும் இல்ல! அத்திம்பேர் இப்போலாம் அக்கா கிட்ட பேச்சுவார்த்தை வச்சுக்கிறதே இல்ல. அவா ரெண்டு பேரும் ஒரே ஆத்துல இருந்தாலும் இரு துருவமா ஆயிட்டா! அவர் உன் வாழ்க்கையை நினைச்சு நினைச்சே பாதி ஆளா போயிட்டார்டி. சமீபமா நீயும் ஹர்சாவும் ஒன்னா போறது வர்றதுலாம் பார்க்க மனசுக்கு நிறைவா இருந்தாலும் இந்தாத்து மாட்டுபொண்ணு அவுட் ஹவுஸில இருக்கறது இன்னும் எங்க எல்லாருக்கும் சங்கடமா தான் இருக்கு. அண்ணனை நினைச்சு இந்த மனுசனும் இப்பிடி தான் ஏதோ போறார் வர்றார். வாழ்க்கையை வெறுத்துட்டா உன்னோட மாமா ரெண்டு பேரும். தங்கையை தான் சாகற வரைக்கும் வீட்டோட அண்ட விடாம பண்ணிட்டா! அவளோட பொண்ணையாச்சும் வாழ வைப்பான்னு நான் நம்புனேன். பெரிய மனுஷானு இருந்து என்ன பிரயோஜனம்?" என்று அவரும் இத்தனை நாள் வேதனை ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துவிட்டார்.

கிருஷ்ணஜாட்சிக்கு தன் மீது இத்துணை அன்பு வைத்திருப்பவர்களை தான் இந்த மூன்று மாத காலமாக வருத்தி விட்டோமே என்ற எண்ணம் கண்ணில் நீரை வரவழைக்க "அவங்க மேல தப்பு இல்ல மாமி. நான் தான் பொதுப்படையா எல்லாரையும் ஒதுக்கி வச்சு பேசிட்டேன். அம்மாவை பேசுனது உங்க அக்கா மட்டும் தான். ஆனா நான் அதுக்கு உங்க எல்லாருகும் சேர்த்து கஷ்டத்தை குடுத்திட்டேன். என்னை மன்னிச்சிடுங்க" என்று கலங்கியவளாய் உரைக்க

கோதண்டராமன் "நீ அழாதடிம்மா! தப்பு பண்ணுனவாலாம் நன்னா சுத்திட்டிருக்கச்ச நீ ஏன் அழணும்? இவ சொன்னபடி தங்கையை தான் அண்டவிடாம பண்ணிட்டோம். நீயாச்சும் எங்களை புரிஞ்சுக்கோடிம்மா. எனக்கோ அண்ணனுக்கோ வைராக்கியமா இருக்கிற வயசு இல்ல. இந்த வயசுல எங்க பசங்க வாழ்க்கை நன்னா இருக்கணுமேனு தான் நாங்க பகவானை சேவிச்சிண்டிருக்கோம். இனியாச்சும் எங்களை பிரிச்சு வச்சு பேசிடாதம்மா" என்று சொல்லிவிட்டு அவள் கையைப் பிடித்து வேண்டினார்.

கிருஷ்ணஜாட்சியும் கண்ணீரை துடைத்துவிட்டு "இல்ல மாமா! இனிமே நான் இப்பிடி நடந்துக்க மாட்டேன். ஏதோ அறியாத்தனமா பெரிய தப்பை பண்ணிட்டேன். எனக்குமே உங்களை எல்லாம் பார்க்காம உங்களண்ட பேசாம இருக்கிறதுலாம் எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?" என்று சொன்னபடி இன்னொரு கையால் மைதிலியின் கரங்களைப் பிடித்துக் கொண்டாள்.

"நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க சின்ன மாமி" என்றவளை தோளோடு அணைத்தவர் அவள் உச்சியில் முத்தமிட்டபடி "பெரிய வார்த்தைலாம் பேசாதடிம்மா" என்றவர் அவர் தோளில் தட்டிக் கொடுத்தார்.

"ஆமா எங்கேடி உன் தங்கை? இந்நேரத்துக்கு அவ ஸ்கூட்டி சத்தம் இந்த காம்பவுண்டை அலற விடுமே" என்று அவர் கேட்கும் போதே நீரஜாட்சி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

வந்தவள் "என்ன கிருஷ்ணா காத்தாலேயே ஒரே கொஞ்சல்ஸ் போல. சின்ன மாமி மூஞ்சி ஏன் இப்பிடி வாடிப் போயிடுச்சு?" என்று கேலி செய்ய மைதிலி "ஆமாடி இத்தனை நாள் சின்ன மாமி, மாமா யாரும் உன் கண்ணுக்கு அகப்படலையோ" என்று குறைபட்டுக் கொண்டார்.

நீரஜாட்சி "அட கோவப்படாதேள் மாமி! இப்போ தான் இங்கே ஒரே குடும்பமா மாறி எல்லாருமா சேர்ந்து கும்மி அடிச்சிண்டிருந்தேள். நான் வந்ததும் மாடுலேசனை மாத்துனா நான் கண்டுபிடிக்க மாட்டேனு நினைச்சேளோ?" என்று கேலி செய்தபடி கோதண்டராமனிடம் வந்தாள்.

"சின்ன மாமா! மூனு மாசத்துல முப்பது வயசு அதிகமானா மாதிரி இப்பிடி இளைச்சு போயிட்டேளே" என்று அவரை கலாய்த்தவள் அவரை மைதிலியுடன் உள்ளே அனுப்பிவைத்துவிட்டு கிருஷ்ணஜாட்சியிடம் திரும்பினாள்.

"அப்புறம் அடுத்து என்ன? அத்திம்பேரை மன்னிக்க போறேளா?" என்று அவளை கேலி செய்தவளின் முதுகில் தனது ஹேண்ட்பேக்கால் நான்கு அடிகள் போட நீரஜாட்சி "அடிக்காதே கிருஷ்ணா! பத்து மாமியை கன்ட்ரோல் பண்ண உனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அதை மிஸ் பண்ணிடாதே" என்றபடி அக்காவுடன் பார்க்கிங்குக்கு சென்றவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு அவளை அமரச் சொல்ல கிருஷ்ணஜாட்சி மவுனமாக அமர வண்டி புறப்பட்டது.

கிருஷ்ணஜாட்சியை இண்டீரியர் டெகரேட்டர் அலுவலகத்தில் இறக்கிவிட்டவள் அவளது அலுவலகத்தை நோக்கி ஸ்கூட்டியை விரட்டினாள். வழக்கம் போல சென்னையின் டிராஃபிக் அவளது பொன்னான நேரத்தை களவாடிக் கொள்ள ரகுநந்தன் அடிக்கடி சொல்வது போல தனக்கு நேரம் தவறமையின் அர்த்தம் கூட தெரியவில்லை போலும் என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டே அவளது அறையை அடைந்தாள்.

நல்ல காலமாக ரகுநந்தனின் அறையில் அவன் இல்லை. ஹர்சவர்தனின் ஹோட்டல் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் சைட்டுக்கு சென்றுவிட "ஹப்பாடா! போயிட்டான்டா, இல்லைனா என்னை இதை சொல்லியே இரிட்டேட் பண்ணுவான்" என்றபடி அவளது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். இருந்தாலும் விழிகள் அடிக்கடி அவன் அறையை நோட்டமிட்டு திரும்பியது என்னவோ உண்மை.

அவர்கள் அலுவலகத்தின் மற்ற ஊழியர்களில் பெண்களும் உண்டு. ஆனால் நீரஜாட்சிக்கு குறிப்பிடும் படி அங்கே தோழிகள் இல்லை. கவிதாவை தவிர வேறு யாரையும் அவள் தோழியாக ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எனவே அலுவலகத்தில் யாராக இருந்தாலும் "ஹாய்"  "ஹலோ" என்னுமளவை தாண்டி அவள் யாரிடமும் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. மற்றவர்களும் அவள் எம்.டியின் உறவுக்காரி என்பதால் அவளிடம் பழக தயங்கவே அவள் அதை கண்டுகொள்ளவில்லை.

அன்று மதியவுணவின் போது அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவள் இருப்பதைக் கவனிக்காமல் வந்து அமர்ந்தனர் சில இளம்பெண்கள், அவர்களும் எஸ்.என் கன்ஸ்ட்ரக்சனின் ஊழியர்களே. அமர்ந்தவர்கள் சாப்பாட்டோடு சேர்த்து ரகுநந்தனை பற்றிய கமெண்டுகளையும் அள்ளிவிட நீரஜாட்சி அவற்றில் எரிச்சல் ஆகிவிட்டாள்.

அவர்களில் ஒருத்தி "ஹேய் இன்னைக்கு எம்.டி வரலைனதும் ஆபிஸே இருண்டு போன மாதிரி ஆயிடுச்சுடி. எனக்கு இன்னைக்கு வேலையே ஓடலை தெரியுமா?" என்று சொல்ல மற்றவர்கள் அதற்கு கொல்லென்று நகைத்தனர்.

நீரஜாட்சி அதைக் கேட்டு கடுப்புடன் "ஏன் அவன் வராம ஆபிஸ்ல பவர் கட் ஆயிடுச்சா? இதுங்களைலாம் என்ன பண்ண?" என்று பல்லைக் கடித்தாள்.

மற்றொருத்தியோ "பேசாம நீ அவரோட செகரட்டரியா போயிடு. ட்வெண்டி ஃபோர் ஹவர்ஸும் அவரோட இருக்கலாம். ஓ சாரி சாரி! எய்ட் ஹவர்ஸ் தானே ஆபிஸ்" என்று சொல்ல நீரஜாட்சிக்கு ஏண்டி இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று தலையிலடித்துக் கொள்ளலாம் போல தோன்றியது.

அவளைத் தொடர்ந்து இன்னொருத்தி "அவருக்கு தான் ஆல்ரெடி ஒரு செகரட்டரி இருக்காங்களே! பட் அவங்க நம்ம விட சின்ன பொண்ணு தான். அவங்க செகரட்டரியா வந்ததுக்கு பதிலா சாமியாரிணியா போயிருக்கலாம். இவ்ளோ ஹாண்ட்சம் பாஸை பக்கத்துல வச்சுக்கிட்டு சைட் கூட அடிக்காம எப்பிடி தான் அவங்க வேலை வேலைனு சுத்துறாங்களோ? நான்லாம் விட்டா அவரை சைட் அடிச்சிட்டே இருப்பேன்" என்றுச் சொல்ல நீரஜாட்சி பொறுக்க முடியாமல் எழுந்துவிட்டாள்.

"ஹாய் கேர்ள்ஸ்! என்ன பேசிட்டிருந்திங்க?" என்றபடி அவள் வரவும் அவர்கள் எழும்ப "நோ நோ! பிளீஸ் சாப்பிடுறப்போ பாதிசாப்பாட்டுல எழுந்தா அது அன்னபூரணியை அவமதிக்கிற மாதிரி. பிளீஸ் சிட் டவுன்" என்றுச் சொல்ல அவர்கள் தயக்கத்துடன் அமர்ந்தனர்.

நீரஜாட்சி "நீங்க சாப்பிட்டிட்டே நான் சொல்லுறதை மனசுல ஆக்கிக்கணும்! சரியா? நம்பர் ஒன் மிஸ்டர் ரகுநந்தன் உங்களுக்கு சேலரி தர்றது அவரை சைட் அடிக்கிறதுக்கு இல்ல, அவர் ஆபிஸ்ல ஒர்க் பண்ணறதுக்கு! சோ அப்பப்போ கொஞ்சம் வேலையும் பார்க்கணும். சரியா?

அண்ட் நம்பர் டூ, இது வரைக்கும் நீங்க சைட் அடிச்சது ஓகே, நோ பிராப்ளம். பட் இனிமே யாரும் அவனை..ம்க்கும்...அவரை சைட் அடிக்க கூடாது. பிகாஸ் ஹீ லவ்ஸ் அ கேர்ள் டீப்லி. அடுத்தவங்களோட காதலனையோ கணவனையோ சைட் அடிக்கிறது நல்ல பழக்கம் இல்ல. ஓகே! இனிமே திருப்தியா சாப்பிடுங்க" என்றபடி அவள் விலகிச் செல்ல ரகுநந்தன் யாரையோ காதலிக்கிறான் என்ற தகவலிலேயே சோர்ந்து போயினர் அந்த பெண்கள்.

அன்று நாளும் வேகமாகச் செல்ல மாலையில் கிளம்பும் நேரத்தில் கூட அவன் அலுவலகம் திரும்பாததால் அவனுக்கு போனில் விவரத்தைச் சொல்லிவிட்டு கிளம்பினாள் நீரஜாட்சி. வீட்டுக்குச் சென்றவள் கிருஷ்ணஜாட்சி வரும் முன்னர் அவுட் ஹவுஸை சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் ஊஞ்சலில் அமரச் செல்ல வீட்டில் பட்டாபிராமன் சத்தமாக வாக்குவாதம் செய்வது அவள் காதில் விழுந்தது.

"ஆமாடா சேஷா! இங்க வாழ வேண்டிய என் பேரன் பேத்தி பிரிஞ்சு போயிருக்கறச்ச நேக்கு கதாகாலட்சேபம் மட்டும் தான் குறைச்சல். நான் எங்கேயும் வரலைடா. எனக்கே அவாளை நினைச்சு மன உளைச்சலா இருக்கு. நீ மட்டும் போயிட்டு வா" என்று அவர் உச்சஸ்தாயியில் பேசுவது அவள் காதில் விழ புருவங்கள் முடிச்சிட எழுந்தாள் நீரஜாட்சி.

கிருஷ்ணஜாட்சியும் அந்நேரம் பார்த்து வந்து விட அவளிடம் சைகையிலேயே என்ன விஷயம் என்று கேட்க அவள் வீட்டை நோக்கி பெருவிரலை காட்டினாள்.


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 31)

    ஆக மொத்தம், ஒட்டு மொத்த குடும்பமே... கிருஷ்ணா & நீருவை அந்த குடும்பத்துக்குள்ள கொண்டு வரதுக்காக ஒட்டு மொத்தமா டிசைட் பண்ணிட்டாங்க போல.
    அதான், ஒவ்வொருத்தரா ப்ளேவை ஸ்டார்ட் பண்ணிட்டாங்களோ ???

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  3. தெளிவான சிந்தனை இருந்தால் பிரிவு வராது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1