பூங்காற்று 42

பத்மாவதியிடம் தான் அவர்கள்
நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்வதாகச் சொல்லிவிட்டு வந்தாலும் நீரஜாட்சிக்கு இப்போதும் அங்கே
செல்வதில் தயக்கமே. தேவை இல்லாத விஷயத்துக்கு மாமி
பயப்படுகிறாரோ என்று எண்ணியவள் இன்னொரு முறை அவரிடம் சென்று பேசிப் பார்க்கலாம் என்ற
எண்ணத்தில் கிருஷ்ணஜாட்சியிடம் சொல்லிவிட்டு வீட்டை
நோக்கிச் சென்றாள்.
விஜயலெட்சுமி இரவாகியும் இன்னும் கிளம்பாமல் பத்மாவதியுடனே
சுற்றிக் கொண்டிருந்தவர் நீரஜாட்சியைக் கண்டதும்
"பத்மா குழந்தே உன்னைத் தான் பார்க்க வந்திருக்கா போலிருக்கு. நேக்கும் நாழியறதுடி. நான் ஆத்துக்கு
கிளம்பறேன்" என்றுச் சொன்னவர்
நீரஜாட்சியிடம்
வந்து அவளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி "சமத்துப்பொண்ணா மாமி சொல்லற மாதிரி நடந்துக்கணும்.
வரட்டுமாடி?" என்றவாறு
வெளியேறினார்.
பத்மாவதி அவரை அனுப்பிவைத்துவிட்டு
வந்தவர் நீரஜாட்சியிடம் சோஃபாவில் அமருமாறு சைகை காட்ட அவள் மறுத்துவிட்டு "மாமி! கொஞ்சம்
யோசிச்சுப் பாருங்க. உங்களோட இந்த பயம் அவசியமே
இல்லாததுனு உங்களுக்கே புரியவரும். உங்களுக்கு இஷ்டமில்லாத எதையும் உங்க பையன் செய்ய மாட்டார்.
நீங்க அவர் கிட்ட நேரடியாவே கிருஷ்ணாவைப்
பிடிக்கலனு சொல்லறது தான் பெட்டர்" என்க
பத்மாவதி சிறுப்புன்னகையுடன்
"இதை எல்லாம் நான் யோசிக்காமலா உன் கிட்ட வந்திருப்பேனு நினைக்கிற? இங்க பாருடிம்மா! என் பிள்ளைகள்ல
ரகுநந்தன் என் பேச்சை அப்பிடியே கேக்கற
ரகம் இல்ல. அப்பிடி கேக்கறவனா இருந்துண்டிருந்தா நான் லண்டன் போகாதேடானு தலைதலையா அடிச்சும்
அவன் போயிருந்திருக்க மாட்டான். அவனுக்கு அம்மா
பாசம்லாம் உண்டு. ஆனா அவனுக்குப்
பிடிச்ச விஷயம்னு வர்றச்ச அம்மாலாம் அவனுக்கு
கண்ணுக்கு தெரிய மாட்டா. அதனால நீ மனசை போட்டுக் குழப்பிக்காம நம்ம கம்பெனிக்கு கிளம்பற
வழியைப் பாரு" என்றுச் சொல்லிவிட்டு அவரது
அறையை நோக்கிச் சென்றுவிட்டார்.
நீரஜாட்சி அவர் செல்வதைக் கடுப்புடன் பார்த்துவிட்டு "அவன்
அடங்காம திரியறதுக்கு நாங்க என்ன பண்ணுவோமாம்? இந்த பத்து மாமி அதுக்குனு ஒரு நீதி
நியாயம் வச்சிட்டு சுத்துது! ஒரு
செகண்ட் கூட அவனோட என்னால இருக்க முடியாது. இந்த லெட்சணத்துல அவனோட ஒரே கம்பெனியில வேலை
பார்க்கணும்னா இதுலாம் ரொம்ப பெரிய
பனிஷ்மெண்ட்"
என்று புலம்பிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள்.
அவுட் ஹவுஸிற்குப் போகப் பிடிக்காமல் தோட்டத்து ஊஞ்சலில்
அமர்ந்து மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தவளின்
அருகே யாரோ வந்து அமர திடுக்கிட்டுப் போனாள் நீரஜாட்சி. முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் அருகே
அமர்ந்து இருந்தவன் ரகுநந்தன். அவனைக் கண்டதும்
எழுந்துச் சென்றுவிடலாமா என யோசித்தவளை அவளது மனசாட்சி தடுத்தது.
"நீரு நீ
சாட்சிக்காரன் கால்ல விழறதுக்குப்
பதிலா சண்டைக்காரன் கால்ல விழுந்துடு. இவன் தானே இந்த பிரச்சனைக்கு மூலக்காரணம். இவன் கிட்டவே
டேரக்டா கிருஷ்ணாவுக்கும் உனக்கும்
இடையில
என்ன நடக்குதுனு கேட்டுடு. ஒன்னும் இல்லைனு இவன் சொல்லிட்டா நீயும் தேவையில்லாம இந்த மூஞ்சில தினமும்
எட்டுமணி நேரம் தொடர்ந்து முழிக்க வேண்டாம்" என்ற
மனசாட்சியின் கூற்றும் அவளுக்குச் சரியாகப் படவே தன்னருகில் அமர்ந்திருந்தவனை நோக்கி சிறு புன்னகையை
வீசினாள் அவள்.
ரகுநந்தனோ "இப்போ எதுக்கு இவ சிரிக்கிறா? டேய் நந்து ஏதோ பிளான் பண்ணுறாடா. பீ கேர்ஃபுல்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டபடி நீரஜாட்சியை
நோக்கிப் புன்னகைத்தான்.
"என்ன குட்டி
அத்தங்கா! நீ என்னையெல்லாம் பார்த்துச் சிரிக்கிற? நோக்கு
உடம்பு எதுவும் சரியில்லையா?"
"நான் நல்லா தான்
இருக்கேன் அம்மாஞ்சி. நான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேப்பேன். அதுக்கு எனக்கு நீங்க
உண்மையைச் சொல்லணும்"
கண்ணை உருட்டி அவள் சொன்ன அழகை ரசித்தபடியே "சொல்லலாமே! நீ
கேட்டு நான் பொய் சொல்லுவேனா?" என்று அவன் பதிலுறுக்க அவள் மனதில் நினைப்பதை
கேட்டு விட்டாள்.
"கிருஷ்ணாவுக்கும் உங்களுக்கும் இடையில என்ன? ஐ மீன் நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா? குளோஸ் ஃப்ரெண்ட்ஸா? இல்ல..." என்று சொல்லி அவள்
தயக்கத்துடன் நிறுத்தினாள்.
ரகுநந்தன் மனதிற்குள் "ஆக இதுக்கு தான் நீ சிரிச்சு வச்சியாடி
செல்லக்குட்டி? பதில் தானே! சொல்லிட்டாப் போச்சு" என்று
எண்ணியபடியே அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே
"பெரிய
அத்தங்காவும் நானும் ரொம்ப குளோஸ். எவ்ளோ குளோஸ்னா இன்னைக்கு நானும் அவளும் சேர்ந்து ஒரு கேக்கை பேக் பண்ணி
டெலிவரி பண்ணுற அளவுக்கு குளோஸ்"
என்றுச்
சொல்லிவிட்டு நீரஜாட்சியின் முகத்தில் தோன்றும் கலவர பாவத்தை ரசிக்க ஆரம்பித்தான்.
நீரஜாட்சிக்கு நன்றாகவே தெரியும், கிருஷ்ணஜாட்சி கேக்கை பேக் செய்யும்
போது யாரையும் அருகில் அனுமதிக்க மாட்டாள்
என்று. அப்படிப்பட்டவள் இவனுடன் சேர்ந்து செய்தாளென்றால்
ஏதோ இருக்கிறது என்று மனதில் பட சட்டென்று ரகுநந்தனிடம் "நீங்க என் கிருஷ்ணா கிட்ட இருந்து
கொஞ்சம் விலகி இருங்க" என்றுச் சொல்ல அவனோ
ஏதோ ஒரு பெரிய ஜோக்கைக் கேட்டது போல வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.
நீரஜாட்சி முறைக்க
ஆரம்பிக்கவுமே
"ஓகே ஓகே! சிரிக்கல. பட் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல? ஆல்ரெடி நானும் அத்தங்காவும் தூரமா தானே
இருக்கோம்" என்றுச் சொல்ல நீரஜாட்சியின்
முகத்தில் சிறு நம்பக்கைக்கீற்று வர ஆரம்பித்தது.
ஆனால் அடுத்த நொடி
ரகுநந்தன்
"ஆமா! அவுட் ஹவுஸ் இங்கே இருக்குனா என்னோட ரூம் அங்கே இருக்கு. அப்போ நானும் அவளும் விலகி தானே
இருக்கோம்" என்று அவனது அறை இருக்கும் திசையை
நோக்கி கையைக் காட்ட அவள் தலையிலடித்துக் கொண்டபடி எழுந்தாள். எழுந்தவள் அவளது ஃபிளாட் ஸ்லிப்பர்
புல்லில் சிக்கி விழப்போக ரகுநந்தன்
அவளைக்
கைப்பற்றி விழாமல் தடுத்தான்.
அவளும் சுதாரித்து நின்று கொண்டபடியே அவனது கையை உறுத்து விழிக்க
ரகுநந்தன் அவள் பார்வை போகும் திசையை அறிந்து
சட்டென்று கையை உருவிக் கொண்டான். அவன் கையை உருவிய வேகத்தில் அமர்த்தலாகச் சிரித்தவள் தனது
கரத்தில் இல்லாத தூசியைத் தட்டிவிட்டபடியே
அவுட் ஹவுஸை நோக்கி நடைபோட
ரகுநந்தன் அவன் தலையிலேயே தட்டிக் கொண்டான்.
"ஏன்டா அவ முறைச்சா இப்பிடி பதறுற? நீ பதறிட்டே இரு. அவ உன்னை முறைச்சு
முறைச்சே காரியம் சாதிச்சுப்பா"
என்று அவனது மனசாட்சி கேலி செய்ய அவனும் இனி அவளது முறைப்பை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று
தீர்மானித்தவனாய் வீட்டை நோக்கிச் சென்றான்.
மாடிக்குச் சென்றவன் வராண்டாவில்
அமர்ந்திருந்த அண்ணனைக் கண்டதும் அவனருகில் ஒரு மோடாவை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
ஹர்சவர்தனின் முகத்தில் சுரத்தே இல்லாமல் இருக்க
"டேய் ஹர்சா! என்னாச்சுடா? எதும் பிரச்சனையா? எல்லாரும் நிச்சயதார்த்த வேலையில பிஸியா
இருக்கறச்ச நீ யாருக்கோ வந்த வாழ்வுனு
இருக்க?" என்று அக்கறையுடன் வினவ
ஹர்சவர்தனோ தாடையை தடவிக் கொண்டபடி தம்பியை நோக்கியவன் "நான்
ஒன்னு கேப்பேன். அந்த நிலமையில நீ இருந்தா உண்மையா நீ
எப்பிடி ஃபீல் பண்ணுவேனு சொல்லணும்" என்க ரகுநந்தனும் தலையை ஆட்டிவைத்தான்.
"நந்து நீ ஒரு பொண்ணை முதல் தடவை பார்க்கிறப்போவே மனசுல ஏதோ
ஒரு சஞ்சலம். அப்புறம் அவளோட ஒவ்வொரு
அசைவும்
உனக்குப் பிடிச்சுப் போகுது. அவ வேற ஒருத்தனோட பேசினா கூட உனக்கு கோவம் வர்றது. இதுக்கு பேர் என்னடா? அந்தப் பொண்ணு நமக்கு வேண்டாதவானு அம்மா சொல்லுறானு வையேன், நீ அந்த இடத்துல எப்பிடி ரியாக்ட்
பண்ணுவ?"
"டேய் அண்ணா அந்த ஃபீலிங்குக்கு பேர் தான் லவ். நான்
முன்னமே சொன்ன மாதிரி லவ் வர்றதுக்கு
ஒரு
செகண்ட் போதும்டா. அப்புறம் கேட்டியே அம்மா அவளை வேண்டாதவானு சொன்னா அது அம்மாவோட பிரச்சனைடா. அதுக்கு நான்
என்னடா பண்ணறது? என் மனசுக்குப் பிடிச்சவாளை நான் யாருக்காகவும்
விட்டுக்குடுக்க மாட்டேன்டா. அம்மாவுக்காக கூட"
என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல ஹர்சவர்தன் அவனது அந்த அழுத்தம் தனக்கு ஏன் இல்லாமல் போனது என்று தன்னை
நொந்து கொண்டான்.
**************************************************************************************
மறுநாள் காலையில்
நிச்சயதார்த்ததுக்கு
வேண்டியவற்றை ஏற்பாடு செய்வதற்கு கோதண்டராமனும், வேங்கடநாதனும்
மெனக்கிடவே கிருஷ்ணஜாட்சி தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக மாமாக்களிடம் பேசிக்
கொண்டிருந்தாள்.
பட்டாபிராமன் அந்த பரந்து விரிந்த ஹாலின் ஒரு மூலையில்
சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடி நீரஜாட்சிக்கு பகவத்கீதையின் ஒரு வசனத்தை விளக்கிக்
கொண்டிருந்தார்.
"யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம்
ஸ்ருஜாம்யஹம் |
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே
யுகே"
"அதாவது எப்போலாம்
தர்மம் சீர் கெட்டுப் போறதோ, அதர்மம் தலை தூக்கறதோ, அப்பாவி மக்கள் எல்லாம் சிரமப்படுறாளோ அப்போலாம் தர்மத்தை நிலை
நாட்ட பகவான் எல்லா யுகத்திலயும் அவதரிப்பார்.
புரியறதா நோக்கு?" என்க நீரஜாட்சி தலையை
ஆட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
பத்மாவதி அவருக்கு
காபியைக்
கொண்டுவந்து வைத்தவர் நீரஜாட்சியிடம் "குழந்தே நீயும் எடுத்துக்கோடி" என்று அவளுக்கும்
ஒரு டபரா டம்ளரை நீட்ட நீரஜாட்சி பிகு
பண்ணாமல்
காபியை எடுத்துக் கொண்டாள்.
அவர் சென்றதும் காபியை ஆற்றியபடியே பட்டாபிராமனிடம் "பட்டு சும்மா
சொல்லக் கூடாது! உங்க மூத்தமருமகளோட
காபிக்கு நான் அடிமை" என்று நாக்கைச் சுழற்றியவண்ணம் சொல்லிவிட்டு சொட்டு கூட மிச்சம்
வைக்காமல் காபியைக் குடித்தவள் இருவரது டம்ளர்களையும்
சமையலறையில் சென்று கொடுத்துவிட்டு வந்து மீண்டும் தாத்தாவின் பகவத்கீதை பிரசங்கத்தை கேட்க
அமர்ந்தாள்.
நிச்சயதார்த்த ஏற்பாடு பற்றி
சீதாலெட்சுமி தன்னுடைய கருத்துக்களைச் சொல்ல பத்மாவதியும் அதை மனதில் குறித்துக் கொண்டார். மாடியிலிருந்து
அலுவலகம் செல்ல இறங்கிவந்த இரு மகன்களையும்
புன்னகையோடு வரவேற்றவர் "ஹர்சா உன் நிச்சயத்தைப் பத்தி தான்டா எல்லாரும் பேசிண்டிருக்கோம்" என்று
வாயெல்லாம் பல்லாகச் சொல்ல அவரது மைந்தனோ
வேண்டாவெறுப்பாகச் சிரித்து வைத்தான்.
கோதண்டராமன் கிருஷ்ணஜாட்சியிடம்
"குழந்தே டி.எம்.எஸ் மஹால் ஓனர் கிட்ட நான் பேசிட்டேன். நீ போய் அட்வான்ஸ் குடுத்து மத்ததை
முடிச்சிட்டு வந்துடு" என்க கிருஷ்ணஜாட்சி அதற்கு
சரியென்று தலையாட்டினாள்.
ரகுநந்தனின் குறுக்குப்புத்தி
வேகமாக வேலை செய்ய ஒரு கணம் அம்மாவையும் நீரஜாட்சியையும் பார்த்தவன் கிருஷ்ணஜாட்சியை நோக்கி
"அத்தங்கா நீ தானே நிச்சயதார்த்த வேலை எல்லாம்
செய்யப் போற! நீ ஏன் தனியா சிரமப்படுற? நானும் உனக்கு
கொஞ்சம் உதவறேன்" என்க
அவளும் தலையாட்டினாள்.
அவனது பேச்சைக் கேட்டு அதிர்ந்தது
இருவர். அந்த இருவரில் மூத்தவர் இளையவளைப் பார்த்து கண்ணால் சைகை காட்ட அவளோ "நான்
பார்த்துக்கிறேன்" என்று அவரிடம் கண்ணால் பேசிவிட்டு மாமா இருவரும் அமர்ந்திருக்கும்
இடத்துக்கு வந்தாள்.
ரகுநந்தன் அவளைக்
கேலியாகப்
பார்த்தபடி "தெரியும்டி நீ வருவேனு. ஆனா இவ்ளோ சீக்கிரம் வருவேனு நான் எதிர்ப்பார்க்கல. தேங்க்யூ
பகவான்" என்று மனதிற்குள் இஷ்டதெய்வத்துக்கு
நன்றி கூறிவிட்டு நல்லப்பிள்ளை போல கிருஷ்ணஜாட்சியை நோக்கி "அத்தங்கா நானும் தி.நகர்
தாண்டி தான் போறேன். வாயேன் உன்னை டி.எம்.எஸ் மஹால்ல
டிராப் பண்ணுறேன். எப்பிடி பார்த்தாலும் இந்த நிச்சயதார்த்ததுல இருந்து கல்யாணம்
வரைக்கும் நீயும் நானும் தானே எல்லா
விஷயத்தையும்
எடுத்துச் செய்ய போறோம்" என்றுச் சொல்லி அவனைப் பெற்றவரின் இதயத்தை ஹிரோசிமா நாகசாகி அளவுக்குத்
தாக்கிக் கொண்டிருந்தான்.
நீரஜாட்சி பத்மாவதியின் முகம்
போன போக்கைப் பார்த்தவள் இதற்கு மேல் இவனை விட்டு வைத்தால் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு
கொண்டு சென்றுவிடுவான் என்று அனுமானித்தவள் வேகமாக
கோதண்டராமனிடம் "மாமா! கிருஷ்ணா ஆல்ரெடி ஹோட்டல், பேக்கரினு நாள் பூரா கஷ்டப்படறா. இதுல
இந்த அரேஞ்ச்மெண்டும் அவளே பார்த்தா
அவளுக்கு
அலைச்சல் ஜாஸ்தி ஆகிடப்போறது. நான் சும்மா தானே இருக்கேன். இந்த அரேஞ்ச்மெண்ட் எல்லாம் நானே
பார்த்துக்கிறேன்" என்றுச் சொல்ல
வேங்கடநாதன் குறுக்கிட்டு
"இல்லடிம்மா!
நீ குழந்தை! உனக்கு எதுக்கு சிரமம்?" என்று மருமகளை வேண்டாமென்று மறுக்க பத்மாவதி
"ஏண்ணா அவ தான் செய்யறேனு சொல்றாளோன்னோ,
கிருஷ்ணாவும்
தான் பாவம். குழந்தே எவ்ளோ வேலையை தான் செய்வா?"
என்று நீரஜாட்சிக்கு பரிந்துப் பேச
பட்டாபிராமன், சீதாலெட்சுமியிடம்
மருமகளின் மாற்றத்தைச் சுட்டிக்
காட்ட தவறவில்லை.
ரகுநந்தனோ ஒரு கேலியான முகபாவத்துடன் இதை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்க பத்மாவதி அவன் புறம் திரும்பியவர்
"நீரஜாவை ஒன்னும் தனியா அனுப்ப வேண்டாம்ணா! நம்ம நந்துவை கூடவே அனுப்புவோம். அவா ரெண்டு பேருமா
சேர்ந்து ஏற்பாடுகள் எல்லாம் கவனிச்சுப்பா. என்னடா
நீரஜா கூட சேர்ந்து கல்யாண வேலையை பார்ப்பியோன்னோ?" என்று
வினவ
அவனும் ஏதோ போனால்
போகிறது
என்பது போல "ம்ம்..பார்த்துப்பேன்" என்று இழுத்தபடி முடித்தான். இருந்தும் தவறாமல் தந்தையிடம்
"அப்பா! போர்ட் மீட்டிங்குக்கு நோட்டிஸ் இஸ்யூ அனுப்பிச்சாச்சா? நம்ம தவிர வேற யார் கலந்துப்பா? கோரம் (QUORUM) வேற வரணுமே?" என்று
தொழிலையும் விசாரிக்கத் தவறவில்லை.
வேங்கடநாதன் "நேத்து முதல் வேலையா அதை தான் செய்யச்
சொன்னேன்டா கண்ணா. என்னோட செகரட்டரி
ஈவினிங்கே
மெயில் அனுப்பிட்டார். கோரம் பத்தி கவலைப்படாதேடா. என் ஃப்ரெண்ட், அவனோட சன் ரெண்டு பேர் அப்புறம் எல்லாமே
நம்மாத்து மனுஷா தான் ஷேர்ஹோல்டர்ஸ்"
என்றுச் சொல்ல அவனும் நிம்மதியானான்.
நீரஜாட்சியை ஓரக்கண்ணால் பார்த்தபடி "அப்பா எதுக்கும் நம்ம
நீருவை உங்க செகரட்டரி மோகன் அங்கிள்
கிட்ட
டிரெயினிங் அனுப்புங்க. பின்னாடி அவளுக்கு யூஸ்ஃபுல்லா
இருக்கும்" என்றுச் சொல்ல
கிருஷ்ணஜாட்சியிலிருந்து அனைவருக்கும் இவன் என்ன சொல்கின்றான் என்ற குழப்பம்.
நீரஜாட்சியோ "நான் ஏன்டா செகரட்டரி வேலைக்கு டிரெயினிங் போகணும்? நான் அக்கவுண்ட்ஸ் தானே பார்க்கப் போறேன்" என்று மனதிற்குள் பொறும
அதை அதிகரிக்கும் விதமாக பத்மாவதி "ஆமாண்ணா! நீரஜா நம்ம
கம்பெனியிலயே வேலைக்குச் சேர்ந்துக்கிறேன் மாமினு நேத்தைக்கே என்னண்ட சொல்லிட்டா.
எனக்கும் குழந்தையை வெளியாள் யார் கிட்டவும் வேலைக்கு
அனுப்ப இஷ்டம் இல்லண்ணா" என்று பதவிசாகக் கூற சீதாலெட்சுமி, பட்டாபிராமன், கிருஷ்ணஜாட்சி மட்டுமல்ல மைதிலியுமே இதை வியப்பாக தான் பார்த்தார்.
கோதண்டராமன் தான் "சும்மா எல்லாரும் மன்னியையே பார்க்காதேள். அவா
பலாப்பழம் மாதிரி. அவா நீரஜா விஷயத்துல நல்ல
முடிவு தான் எடுத்திருக்கா. நேக்கு இதுல பரிபூர்ண சம்மதம் மன்னி" என்று பச்சைக்கொடி
காட்டிவிட வேங்கடநாதனும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
சீதாலெட்சுமி, பட்டாபிராமன்
இருவரின் கவலையே வேறு. நீரஜாவும், நந்தனும் எலியும் பூனையுமாக கம்பெனியில் போல்
சண்டையிட்டுக் கொண்டால் இவர்கள் மூஞ்சியை எங்கே வைத்துக் கொள்வார்கள் என்பதே அவர்களின்
கவலை. ஆனால் இவையனைத்துக்கும் முத்தாய்ப்பாக
நீரஜாட்சியே அதற்கு சம்மதித்துவிட்டாள் என்றால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க
விரும்பவில்லை.
ரகுநந்தன் அவளைக் கேலியாக பார்த்துவிட்டு "எக்ஸ்பீரியன்ஸ்
இல்லாத எம்பிளாயிக்கு டிரெயினிங் குடுக்கிறது வழக்கம்
தானே சித்தப்பா. சோ அப்பாவோட செகரட்டரி மோகன் சார் கிட்ட சொல்லிடுங்கோ நீரஜாட்சிக்கு அவர்
தான் டிரெயினிங் குடுக்கணும்னு. நாளைப் பின்னே என்னோட
செகரட்டரியா அவ வேலை செய்யறச்ச அது தெரியாது இது தெரியாதுனு முழிக்க கூடாதோன்னோ"
என்று நீரஜாட்சியை அதிரவைத்தான்.
அவளோ "இவனுக்கு செகரட்டரியா
இருக்கவா நான் டிஸ்டிங்சன்ல பாஸ் பண்ணுனேன்?
அம்மாவும் பிள்ளையும் என் அமைதியை அவங்களுக்குச்
சாதகமா பயனபடுத்திக்கிறிங்களா? எனக்கும் ஒரு காலம்
வரும். அப்போ காட்டுறேன் இந்த நீரஜா யாருனு" என்று மனதிற்குள் கறுவியபடியே சபதமிட்டுக்
கொண்டாள்.
அவன் அதோடு விட்டால் பரவாயில்லை.
நீரஜாட்சியை தலையிலிருந்து கால் வரை பார்த்தவன் "என்ன குட்டி அத்தங்கா இதே கோலத்திலேயா மண்டபம் புக்
பண்ண வரப் போற? போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டு வா" என்க அவளும் அப்போது
தான் தன்னைக் கவனித்தாள்.
காலையில் குளித்து
முடித்துவிட்டு
வீட்டில் இருக்கும் போது போட்டுக் கொள்ளும் லாங் ஸ்கர்ட் மற்றும் ஷர்ட்டில் இருந்ததைப்
பார்த்தவள் "ஃபைவ் மினிட்ஸ்ல வர்றேன்"என்றபடி அவுட் ஹவுஸை நோக்கி ஓட சீதாலெட்சுமி
சத்தமாக "சுபகாரியத்துக்கு அட்வான்ஸ் குடுக்கப்
போறடிம்மா. ஒரு நல்ல புடவையா கட்டிண்டு வா. எப்போவும் போல அந்த திரைச்சீலையை போட்டுண்டு வந்து
நிக்காதே"என்று அவளது டிரெண்டியான டாப் கலெக்சனை கேலி செய்தார். அவர் சொன்னதைக்
கேட்டு குடும்பமே சிரித்து வைக்க அவர்களுடன்
சேர்ந்துச் சிரித்த கிருஷ்ணஜாட்சியும் தனக்கு ஹோட்டலுக்கு நேரமாவதால் கிளம்புவதாகச் சொல்லி விட்டு
எழுந்தாள்.
பத்மாவதி மிகுந்த
அக்கறையுடன்
"ஹர்சா கண்ணா! நீயும் ஹோட்டலுக்கு தானேடா போற? கிருஷ்ணாவையும் உன்னோட அழைச்சிண்டு போடா" என்றுச்
சொல்ல இவ்வளவு நேரம் பியூஸ் போன பல்பு
போல்
இருந்த அவன் முகம் அப்போது ஆயிரம் வாட்ச் பல்பாக மாறி தகதகத்தது.
கிருஷ்ணஜாட்சியும்
அவனுடன்
கிளம்ப எத்தனக்க சீதாலெட்சுமி "இருடிம்மா! கால்ல சக்கரம் கட்டுன மாதிரி ஓடாம இன்னைக்காச்சும் காத்தாலே
இந்த பாட்டி கையால சாப்பிட்டிட்டுப்
போ"
என்று அவளைச் சாப்பிட அழைக்க அவளும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவருடன் டைனிங் டேபிளை நோக்கிச் சென்று
சீதாலெட்சுமி பட்டாபிராமன் அருகில் ஒரு நாற்காலியை
இழுத்துப் போட்டுக் கொண்டு அமர அவளுக்கு எதிர்புறம் ரகுநந்தனுடன் அமர்ந்தான் ஹர்சவர்தன்.
சீதாலெட்சுமி அவளுக்கு ஊட்டிவிட
அவள் சாப்பிடும் அழகை ரசித்தபடியே தானும் இட்லிகளை உள்ளே தள்ளியவன் அவளுக்கு சிரசில் அடிக்கவே
வேகமாக தண்ணீர் டம்ளரை நீட்டினான்.
அவள்
தண்ணீரை குடித்துவிட்டு "தேங்க்ஸ் அம்மாஞ்சி" என்றுப் புன்னகைத்து வேறு வைக்க ஹர்சவர்தனுக்கு அன்றைக்கு
இட்லியும் சாம்பாரும் பாயாசமாக இனிக்கத் தொடங்கியது.
ரகுநந்தனுக்கு போன் வரவே அவனது தாத்தாவுக்கு சாப்பிடும் நேரத்தில் பேசுவது
பிடிக்காது என்பதால் கொஞ்சம் விலகி நின்று பேச
ஆரம்பித்தான்.
அதற்குள் நீரஜாட்சியும் பேபி
பிங்கில் எளிமையான ஷிபானில் தயாராகி ஹாலுக்கு வந்தவள் குடும்பமே ஒன்றாக அமர்ந்து உண்பதைக் கண்டபின் ஹாலை
நோக்கிச் செல்ல விழைய சீதாலெட்சுமி "சாப்பிட்டிட்டு
போடிம்மா" என்க அவளோ இறுகிய முகத்துடன் "வேண்டாம் சித்தம்மா! நான் அவுட் ஹவுஸிலயே
சாப்பிட்டிட்டு தான் வந்தேன்" என்று பிடிவாதமாக
உரைத்துவிட்டு ஹாலை நோக்கிச்செல்ல திரும்ப போன் பேசிவிட்டு வந்த ரகுநந்தன் மீது மோதவிருந்தவள்
சுதாரித்து நின்று கொண்டாள்.
ரகுநந்தனோ அந்த எளிய புடவையிலும்
கொள்ளை அழகாக இருந்தவளை பார்த்து இமைக்க மறந்து விழிக்க நீரஜாட்சிக்கு அவனது அந்த ஆளை
விழுங்கும் பார்வை வழக்கம் போல அசவுகரியத்தைக்
கொடுக்க அவனை முறைத்துவிட்டு ஹாலின் சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். அவன் அந்த இடத்தை
விட்டு நகராமல் அவளையே இன்னும் ரசித்துக்
கொண்டிருக்க பட்டாபிராமனின் "நந்து சாப்பாட்டை காக்க வைக்கக் கூடாதுடா" என்ற அதட்டலில் அவனது
இருக்கையில் அமர்ந்தான்.
அவனுக்கு அடுத்து
இருக்கும்
அண்ணனிடம் "டேய் ஹர்சா! நீருகுட்டியை மட்டும் சாப்பிட கூப்பிடாம இருக்கேளேடா. இது பகவானுக்கு அடுக்குமா?" என்க
அவனோ கிருஷ்ணஜாட்சியைக் கவனித்தவாறே
"கூப்பிட்டா மட்டும் அவ ஓடி வந்து சமத்தா சாப்பிடுவா பாரு! அவ ரொம்ப பிடிவாதமான பொண்ணுடா! வந்தா நாளுல
இருந்து நம்மாத்துல அவ சாப்பிட்டதே
இல்லடா.
பாட்டியே கூப்பிட்டாலும் மாட்டேனுவா. அதனால நீருகுட்டி அது இதுனு சொல்லி அவளுக்குள்ள உறங்கிண்டிருக்கற
சந்திரமுகியை எழுப்பி விடாம சாப்பிட்டு
முடிடா" என்றுச் சொல்ல ரகுநந்தனுக்கோ ஒரு வாய் சாப்பாட்டுகே இவ்வளவு பிடிவாதம் பிடிப்பவளை எவ்வாறு
சரிகட்டுவது என்ற கவலை.
ஆனால் அது எதையும் போட்டு வருத்திக் கொள்ளாமல் நீரஜாட்சியின்
பக்கவாட்டு தோற்றத்தில் விழியைப் பதித்தவாறு
சாப்பிட்டு முடித்தான் ரகுநந்தன். கை கழுவி விட்டு ஹாலுக்கு வந்தவனிடம் வேங்கநாதன் செக்கை நீட்ட அதை
வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டவன் அனைவரிடமும்
சொல்லிவிட்டுக் கிளம்ப நீரஜாட்சி "நான் மட்டும் புடவை கட்டிட்டு போகணுமாம். இந்த
நெட்டைக்கொக்கு மட்டும் ஜீன்ஸிலயே சுத்துவானாம். இது
எந்த ஊரு நியாயம்?" என்று முணுமுணுத்தபடி
அவனைப் பின் தொடர்ந்தாள்.
ரகுநந்தன் அவள்
முணுமுணுப்பதைக்
கேட்டுக் கொண்டே பைக்கின் சாவியைத் திருகியவன் "உக்காரு" என்க நீரஜாட்சி "போன தடவை மாதிரி
நடுரோட்டுல விட்டிட்டுப் போயிட மாட்டியே?"
என்று
கவனமாகக் கேட்க அதை நினைத்து நாக்கை கடித்துக் கொண்டான் அவன்.
"வாட் இஸ் திஸ் நீரு? இனி நீயே சொன்னாலும் உன்னை விட்டுட்டுப் போற
ஐடியா நேக்கு இல்லையாக்கும். சும்மா என்னை
சந்தேகக்கண்ணோட பார்க்காதேடி" என்று பூடகமாக தனது மனநிலையை விளக்க
அவளோ அதை புரிந்து
கொள்ளாமல்
அவனது 'டி'யில் கடுப்பானவள் "சரி சரி! இது
தான் சாக்குனு என்னை 'டி' போட்டுக் கூப்பிட்டு இரிட்டேட்
ஆக்காதே" என்றபடி அவன் பின்னே அமர பத்மாவதியின்
மைந்தன் அவன் அன்னையின் கண் முன்னரே அவளுடன் பைக்கில் கிளம்பினான்.
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)
ஆக மொத்தம், மாஸ்டர் ப்ளான் போட்டு டேக் டைவர்ஷன் எடுத்து, அம்மா வாயாலேயே நீரு கூட ரகு நந்தனும், ஹர்ஷா கூட கிருஷ்ணாவையும் கோர்த்து விட்டாச்சு. இதான் விதிங்கிறச்ச, அது தன்னால அப்படியேத்தானே நடக்கும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Superu nandhuvuku yogam than
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete