பூங்காற்று 43

ரகுநந்தனும், நீரஜாட்சியும் ஒரே
நேரத்தில் அதிர ஹர்சவர்தன் அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக "நான் எப்போவோ அவளை
காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன, என் மனசுல இருக்கிறதை நான் யார் கிட்டவும் ஷேர்
பண்ணிக்கல! அப்போ நான் இருந்த மனநிலை
மதி
மேல் பூனை மாதிரி இருந்துச்சு. என்னால கிருஷ்ணாவா, அம்மாவானு முடிவெடுக்க முடியாத சூழ்நிலை. வேற
வழியில்லாம அம்மா சொன்னதுக்கு தலையாட்டினேன்.
வர்ஷாவுக்கு உண்மையா இருக்கணும்னு கிருஷ்ணாவை எப்பிடியெல்லாமோ அவாய்ட் பண்ண நினைச்சு
நான் அதுலயும் தோத்து தான் போனேன்.
என்
இயலாமை பல நேரங்கள்ல கோவமா வெளிவந்ததை நீங்களுமே பார்த்திருப்பிங்க. ஆனா மணமேடையில அவ கழுத்துல தாலி
கட்டுறப்போ முழுமனசோட தான் கட்டுனேன்.
இப்போவும்
முழுமனசோட தான் அவ கூட வாழணும்னு ஆசைப்படறேன்" என்று கூறிவிடவே ரகுநந்தனும் நீரஜாட்சியும் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நீரஜாட்சி ஒரு படி மேலே சென்று
"நந்து! கொஞ்சம் என்னை கிள்ளு" என்று கையை நீட்ட அவனும் நன்றாகக் கிள்ளி பழைய பகையை தீர்த்துக் கொள்ளவும்
அவனை முறைத்தாள் நீரஜாட்சி. இவனைப்
பிறகு
பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவள் ஹர்சவர்தனிடம் "நீங்க பேசுறதுலாம் கேக்க நல்லா தான் இருக்கு.
ஆனா இதை எங்கே கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்? சொல்ல வேண்டியவ கிட்ட சொல்லுங்க. பை த
வே இப்போ கூட எனக்கு உங்க மேல சுத்தமா
நம்பிக்கை இல்லை. இப்போ கிருஷ்ணா கிருஷ்ணானு சொல்லிட்டு ஸ்ரீநிவாசவிலாசத்துல கால் வச்சதும்
பத்து மாமியோட காத்து பட்டு நீங்க மனசு மாறிடுவிங்க.
அதனால லவ்வு, கிவ்வுனு சொல்லிட்டு
என் கிருஷ்ணாவை டிஸ்டர்ப் பண்ணாதிங்க"
என்றாள் தெளிவாக.
ரகுநந்தனும் ஹர்சவர்தனும் அவளது பதிலில் அயர ஹர்சவர்தன்
"ரெண்டு பேருக்கு பாதகம் இல்லாம நான் நடந்துப்பேன்
நீரு. என்னால அம்மாவையும் ஒதுக்கி வைக்க முடியாது, கிருஷ்ணா இல்லாமலும் வாழ முடியாது. ஒரு சராசரி
மனுசனா ரெண்டு பேரையும் கஷ்டப்படுத்தாம ஒரு
நல்ல முடிவா எடுப்பேன் நீரு. அதுக்கு அப்புறம் நீ என்னை நம்புவ" என்றான் உறுதியுடன்.
அதன் பின் நீரஜாட்சி சென்றுவிட ரகுநந்தனுடன் சிறிது நேரம்
பேசிவிட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டான் ஹர்சவர்தன்.
******************************************************************************
கிருஷ்ணஜாட்சி ஒரு
வாடிக்கையாளருக்கு
கொடுப்பதற்காக கேக்கை டப்பாவில் அடைத்து அதில் ரிப்பனை கட்டிக் கொண்டிருந்தாள். அவருடன் நின்ற
சிறுமி ஆவலுடன் அவள் ரிப்பனை வண்ணத்துப்பூச்சி
வடிவில் கட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த சிறுமி அவளது
தந்தையிடம்
"டாடி! இந்த ரிப்பன் நாட் அழகா இருக்குல்ல, இதை
பிரிக்காமலே நான்
வச்சுப்பேன்" என்று கூற கிருஷ்ணஜாட்சி அவள் கன்னத்தில் செல்லமாக கிள்ளிவிட்டு "உங்க இஷ்டம்
மேடம்ஜி! நீங்க சொன்ன மாதிரி மிக்கி மவுஸ் கேக் ரெடி ஆகிட்டே இருக்கு. நாளைக்கு வந்து
அதை வாங்கிப்பிங்களாம்" என்று கொஞ்ச அவள்
கிளுக்கி சிரித்தாள்.
அவளுக்கு சாக்லேட்டுகளைக் கொடுத்தவள் "டெய்லிக்கும் ஒன்னு
ஒன்னு சாப்பிடணும்" என்றுச் சொல்லிவிட்டு கேக் பெட்டியுடன் தந்தையையும் மகளையும்
அனுப்பி வைத்தாள்.
வாயிலில் நிழலாட
வாடிக்கையாளர்களா
என்று எட்டிப் பார்த்தவள் மெர்லின் வரவும் "வாங்க மம்மி!" என்றபடி வேலையைத் தொடர அவரும் அவள்
அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவரிடம் "என்ன மம்மி? திடீர்னு நான் அழகாயிட்டேனா? இப்பிடி வச்ச கண் வாங்காம பார்க்கிறிங்க?" என்று கிண்டலாகக் கேட்க
மெர்லின் "நீ எப்போவுமே அழகு தானே. அதுல எந்த சந்தேகமும்
இல்ல" என்றார் அமைதியான குரலில்.
பின்னர் "நீ ஹர்சவர்தன் விஷயத்துல என்ன முடிவு பண்ணிருக்க பேபி? வீ ஆர் ரியலி வொரியிங் அபவுட் யூ. இப்பிடியே நீ தனியா இருக்கிறது நல்லது
இல்ல. பிகாஸ் உன் சிஸ்டர் உன்னை பார்த்து தான் எல்லா
விஷயங்களையும் தெரிஞ்சுக்கிறா. நீ இப்பிடி சிங்கிளாவே லைஃப் ஃபுல்லா இருக்கப் போறேனு முடிவு
பண்ணுனா அவளும் உன்னோட முடிவையே ஃபாலோ பண்ணுவா. இது
உங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்கும் நல்லது இல்ல. ஐ ஹோப் யூ வில் அண்டர்ஸ்டாண்ட் மை
வேர்ட்ஸ்" என்றுச் சொல்லிவிட்டு அவளது கையை அழுத்திவிட்டு சென்றார் மெர்லின்.
கிருஷ்ணஜாட்சிக்கு அவர் கூறியதில்
நெருடலாக இருந்தது தன்னை மாதிரி தன் தங்கையும் இருந்துவிடுவாளோ என்பது தான். ஆனால் ரகுநந்தன் ஒன்றும்
சாதாரணமானவன் இல்லை என்பது அவள் நன்கு
அறிந்திருந்ததால் அதை நினைத்து அவள் நேரத்தை விரயம் செய்யவில்லை.
சமீபமாக ஹர்சவர்தன் அவளை அழைத்துச் செல்வது வழக்கமாகி விட்டதால்
அன்று இரவும் அவளை அழைத்துச் செல்ல
அவன்
தயாராக தான் நின்றிருந்தான். ஆனால் கிருஷ்ணாஜாட்சியோ இவனது வருகை தான் மெர்லினின் இன்றைய அறிவுரைக்கு காரணம்
என்று எண்ணியவள் இன்று இதற்கு ஒரு முற்றுப்புள்ளி
வைத்தே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் பேக்கரிக்கு எதிர்புறம் நின்றிருந்த ஹர்சவர்தனையும்
அவன் காரையும் ஒரு பொருட்டாக கூட மதியாது முகத்தைத் திருப்பிக் கொண்டுச் சென்றாள்.
இது என்ன திடீரென்று என திகைத்த
ஹர்சவர்தன் காரை எடுத்தவன் அவளைத் தொடர்ந்து சென்றான். வழியில் நடந்தவளின் அருகில் மெதுவாக காரை
ஓட்டியபடி "கிருஷ்ணா! இது என்ன புது பழக்கம்? எப்போவும் நான் கூப்பிட்டதும் குட்
கேர்ளா கார்ல உக்காருவ தானே. இன்னைக்கு என்னாச்சு?" என்று கேட்க அவளோ கண்டுகொள்ளாமல் வேகமாக
நடந்தாள்.
அவளது வேகத்துக்கு ஈடாக காரின்
வேகத்தையும் அதிகரித்தவன் அவள் அருகில் சென்றதும் காரை நிறுத்து அவள் கரத்தை காரினுள் இருந்தபடியே பற்ற
கிருஷ்ணஜாட்சி சட்டென்று பிரேக் போட்டது போல நின்று விட்டாள்.
அவனிடமிருந்து கையை உருவ முயன்றபடி "ஏன் இப்பிடி தேர்ட் ரேட்டட் ரவுடி மாதிரி
பிஹேவ் பண்ணுறிங்க? என் கையை விடுறிங்களா? இல்லனா நடக்கிறதே வேற" என்று அவள்
இயல்புக்கு மாறாக குரலை உயர்த்த ஹர்சவர்தன்
அவள் கையை விடுவித்தான்.
கிருஷ்ணஜாட்சி செல்ல முயல அவன் காரிலிருந்து இறங்கி மீண்டும் அவள்
கரத்தைப் பற்ற முயல இம்முறை கிருஷ்ணஜாட்சி
கவனத்துடன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொள்ளவே அவன் அவளை தூக்கிக் கொண்டான். இதை அவள்
எதிர்பார்க்காததால் சத்தம் போடவே அவன்
"ஷ்ஷ்!
என்ன இது குழந்தையாட்டம்?" என்று அவளை செல்லமாக
கடிந்தவாறே காரினுள் அமரவைத்துவிட்டு
காரின் கதவை சாத்திவிட்டு அவனும் அமர்ந்தான்.
கிருஷ்ணஜாட்சி அவனது தொடர்ந்த
செய்கையால் எரிச்சலுற்றவள் "மிஸ்டர் ஹர்சவர்தன் கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம என் கிட்ட இப்பிடி
பிஹேவ் பண்ணுறிங்களே! உங்களுக்கு அசிங்கமா இல்ல. யாரு
என் கிட்ட இப்பிடி நடந்துக்கிறதுக்கான அதிகாரத்தை உங்களுக்கு குடுத்தது?" என்று கத்த
அவனும் அவளது தொடர்ந்த அலட்சியப்பேச்சில்
கடுப்பில் இருந்தவன் "யாருடி குடுக்கணும்?
நான் அக்னிசாட்சியா உன்னை என் ஆம்படையாளா
ஏத்துக்கிட்டேன். நீ தாலியை தூக்கியெறிஞ்சா
எல்லாம் இல்லைனு ஆயிடுமோ? நானும் சின்ன
பொண்ணாச்சே, கோவப்படக்கூடாதுனு
இத்தனை நாள் நீ பேசுன எல்லா விஷயத்தையும் பொறுத்திண்டு போனா நீ மனுசனை கிறுக்கன் ஆக்கிடுவ போல.
நல்லா கேட்டுக்கோ எனக்கு உன் மேல எல்லா உரிமையும்
இருக்கு. நான் அதை வீணா டெமான்ஸ்டிரேட் பண்ணி காட்ட வேண்டானு நினைக்கிறேன். அதை என்னோட
வீக்னெஸ்னு நினைச்சிண்டிருந்தா பிளீஸ்
சேஞ்ச்
யுவர் தாட் அபவுட் மைசெல்ஃப்" என்று காட்டமாகவே கூறினான்.
கிருஷ்ணஜாட்சி "தயவு பண்ணி நீங்க உரிமையை பத்தி பேசி
என்னையும் பேச வைக்காதிங்க ஹர்சா! கடமையை சரியா
செய்யாதவன் உரிமையை பத்தி யோசிக்கவே கூடாது. என்னை பிடிக்காம தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க? இப்போ என்ன திடீர்னு உங்களுக்கு அக்கறை? ஆடு நனையுதேனு ஓநாய் அழுத கதையா
இருக்கு" என்றாள் வெடுக்கென்று.
ஹர்சவர்தனும் அவளுக்கு சிறிதும்
குறையாத கோபத்துடன் "பிடிக்காதவளா? ஏய் உன்னை எனக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியுமாடி? நான் உன் கிட்ட வந்து சொன்னேனா? நீயா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு
இல்ல கிருஷ்ணா" என்று சூடாக பதிலிறுத்தான்.
பின்னர் கண்ணை இறுக மூடி திறந்து தனது கோபத்தை தணித்துக் கொண்டபடி அவளை ஏறிட்டவன் "எனக்கு எப்போவுமே உன்னை பிடிக்கும் கிருஷ்ணா.
உன்னை மட்டும் தான் பிடிக்கும். என்
மனசுல
நான் முதல் முதலா ஒருத்தியை நினைச்சிருந்தேனா அது நீ மட்டும் தான்" என்று அவன் சொல்ல
கிருஷ்ணஜாட்சி அவனது வார்த்தைகள்
வெளிப்படுத்திய அர்த்தம் புரியாமல் "நீங்க என்ன சொல்ல வர்றிங்க? நீங்க
என்னை..." என்று தந்தியடிக்கும் குரலில் கேட்க
இடைமறித்த ஹர்சவர்தன் "ம்ம்...நான் உன்னை லவ் பண்ணுறேன்.
அதுவும் வருசக்கணக்கா லவ் பண்ணுறேன்" என்றான் ஆழ்ந்த குரலில்.
கிருஷ்ணஜாட்சிக்கு சிறிது நேரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.
பின்னர் சுதாரித்தவளாய் தலையை உலுக்கியபடி
"பிளீஸ் காரை எடுங்க. எனக்கு தலைக்குள்ள ஏதோ பண்ணுது" என்றாள் குழப்பத்துடன்.
ஹர்சவர்தன் "ஏதோ பண்ணுறது தலைக்குள்ளயா? இல்ல மனசுக்குள்ளயா?" என்று கேட்டபடியே காரை எடுக்க கிருஷ்ணஜாட்சிக்கே அது எந்த இடத்தில்
என்று புரியவில்லை.
வீடு வரும் வரை பதுமையாய் அமர்ந்திருந்தவளின் தோளை தட்டியவன் வீடு
வந்துவிட்டதாகக் கூற அவள் அப்போது தான் உணர்வு
வந்தவளாய் கண்ணை இமைத்தாள். வேகமாக காரிலிருந்து இறங்கியவள் அவுட் ஹவுஸை நோக்கி செல்ல எத்தனிக்க
ஹர்சவர்தன் "என் மனசை நான் ஓப்பனா சொல்லிட்டேன் கிருஷ்ணா. இனி முடிவு உன்
கையில தான். எனக்கு எப்போவுமே நெகடிவ்வான ரிப்ளைஸ்
பிடிக்காது. சோ லேட் ஆனாலும் பாசிட்டிவ்வான பதிலையே சொல்லு! ம்ஹூம் சொல்லணும்" என்று
செல்லமாக மிரட்டிவிட்டு விசிலடித்தபடி
வீட்டை
நோக்கி சென்றான்.
கிருஷ்ணஜாட்சி அவனது செய்கைகள்
ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதவளாய் அவுட் ஹவுஸை நோக்கி சென்றாள். அன்றைய இரவு
இருவருக்குமே உறங்கா இரவாக நீண்டது, ஹர்சவர்தனுக்கு தன்
காதலை வெளிப்படுத்திவிட்ட சந்தோசத்தில் உறக்கம் பிடிக்கவில்லை என்றால்
கிருஷ்ணஜாட்சிக்கோ அவன் தன்னை காதலிப்பதாகச் சொன்னதே உறக்கத்தை தூர நிறுத்திவிட்டது.
மறுநாள் அவள் விழிக்க தாமதமாகி
விட்டது. ஆனால் நீரஜாட்சி சீக்கிரமாக எழுந்து தனக்கும் அக்காவுக்கும் சமைத்து
முடித்துவிட்டாள். கிருஷ்ணஜாட்சி எழும்பும் போது அவள் குளித்து உடை மாற்றி
அலுவலகத்துக்கே தயாராகி விட்டாள்.
ஹேண்ட்பேக்கை எடுத்தவள் கிருஷ்ணஜாட்சியிடம்
"கிருஷ்ணா இன்னைக்கு எங்களோட கம்ப்ளீட் ஆன அப்பார்ட்மெண்ட் பில்டிங்கை பார்க்கப்
போறோம். மண்டே ஃபிளாட்டோட ஓனர்ஸ் வந்துடுவாங்க. சோ
இன்னைக்கு ஒரு பார்வை பார்த்துட்டா அவங்க கையில சாவியை நிம்மதியா குடுக்கலாம். நான்
பிரேக்ஃபாஸ்ட், லன்ச் ரெண்டுமே ரெடி பண்ணிடேன். இன்னைக்கு பெரியமனசு பண்ணி
என் சமையலை சாப்பிட்டுக்கோ, பிளீஸ்" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
ஆனால் கிருஷ்ணஜாட்சிக்கு அவளது பிளீஸ் தவிர வேறு எதுவுமே காதில்
விழவில்லை. இன்று ஏனோ மனம் சோர்வாக
இருக்க
கரோலினுக்கு போன் செய்தவள் இன்று தான் பேக்கரிக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள் மீண்டும்
படுக்கையில் விழுந்தாள். அவளது கண்கள்
மூடியிருந்தாலும் சிந்தனை முழுவதும் ஹர்சவர்தனின் வார்த்தைகளே அணிவகுத்தது.
*********************************************************************************************
நீரஜாட்சி பரபரப்புடன் அலுவலகத்தில்
நுழைந்தவள் மற்றவர்கள் அனைவருக்கும் இன்முகத்துடன் காலை வணக்கத்தைக் கூறி விட்டு ரகுநந்தன்
வருவதற்குள் அவன் அலுவலக அறையை ஒழுங்குப்படுத்த
வேண்டும் என்று அங்கே செல்ல அவளுக்கு முன்னரே அங்கே அமர்ந்திருந்தான் அவள் எண்ணங்களின்
நாயகன்.
பரபரப்புடன் வந்தவளை பார்த்து
ஒற்றைபுருவம் தூக்கியவனின் பாவனையில் அவள் எரிச்சலுற்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் "சாரி சார்!
நான் சீக்கிரம் வர டிரை பண்ணுனேன். பட் டிராஃபிக்
கொஞ்சம் அதிகம்" என்று சொல்ல அவன் தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டான்.
இருந்தாலும் அவளைச் சீண்டுவதற்காக
"ஐ கேன் அட்ஜெஸ்ட் மேடம். உங்களுக்கும் பங்க்சுவாலிட்டிக்கும் ரொம்ப தூரம்னு
எனக்கு தான் தெரியுமே" என்றான்
கேலியாக.
அவள் மனதிற்குள்
புகைந்தவளாய்
அவன் டேபிள் மீது சிதறிக் கிடந்த கோப்புகளை ஒழுங்குப்படுத்திவிட்டுச்
சென்றாள். அடுத்த சில நிமிடங்களில் இருவரும் முற்று பெற்ற கட்டிடத்தை பார்வையிட
சென்றனர். பொறியாளர் அவர்களுடன் நின்று ஒவ்வொரு
இடமாக காட்டி அவனது சந்தேங்களுக்குப் பதிலளித்துவிட்டு அவன் போகச் சொன்னதும் சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் ரகுநந்தன் ஒவ்வொரு ஃபிளாட்டாக சென்று பார்வையிட
அவனைத் தொடர்ந்து நடந்தாள் நீரஜாட்சி. அவனுக்கு
போன் வரவே எடுத்துப் பேசியவன் "ஹலோ...ஆமா மோகன் அங்கிள்.....எல்லாம் நல்லபடியா
முடிஞ்சிடுத்து....மண்டே கீயை குடுக்கலானு அப்பா
சொன்னார்.....யா, இதுல கம்பெனிக்கு
நல்ல ப்ராஃபிட்...ஓல்ட் எம்ப்ளாயிஸ்
எல்லாருக்கும் சேலரில ஹைக் குடுக்கலானு நான் சித்தப்பா கிட்ட சொல்லிட்டேன், ரெண்டு பேருக்கும் ஓகே தான்..தேங்க்யூ
அங்கிள்" என்றபடி அவன் போனை வைக்க நீரஜாட்சி
அவன் பேசிய விஷயங்கள் அனைத்தையும் கேட்டுவிட்டாள்.
மெதுவாக அவனுடன்
நடந்தபடியே
"சார் அது என்ன ஓல்ட் எம்ப்ளாயிஸ்க்கு மட்டும் தான் சேலரில இன்கிரிமெண்டா? அப்போ நியூலி அப்பாயிண்டட்லாம் வேஸ்டா?" என்றாள் முகத்தை தூக்கிவைத்தபடி.
ரகுநந்தன் போனை
பாக்கெட்டில்
வைத்தபடி "சே சே! அவங்களுக்கும் உண்டு. உன் ஒருத்தியை தவிர எல்லாருக்குமே இன்கிரிமெண்ட் குடுக்கச்
சொல்லியாச்சு நீரு குட்டி" என்றான் அவன்
கேலியாக.
அவனுடன் வந்தவள் அவனது பதிலில்
அதிர்ந்து போக ரகுநந்தன் நமட்டுசிரிப்புடன் ஒரு ஃபிளாட்டினுள் நுழைந்தான். அவளும் விடாமல் பின்
தொடர்ந்து சென்றவள் "அது என்ன என்னை தவிர?
நான்
மட்டும் என்ன பாவம் பண்ணுனேன்?" என்று கேட்க
ரகுநந்தன் "நீ என்ன வெளியாளா? நீ
குடும்பத்துல ஒருத்தி ஆயிட்ட. உனக்கு சம்பளமே நியாயப்படி குடுக்க கூடாது தான். இருந்தாலும் பத்து
டு ஆறு மாடா உழைக்கிறதால ஒரு நாமினல் சேலரி
குடுக்கிறேன். பட் இன்கிரிமெண்ட்லாம் உனக்கு ஓவர். அதுல்லாம் நமக்கு எதுக்கு நீரு?" என்று சாதாரணமாகச் சொன்னபடி ஒவ்வொரு
அறையாக பார்வையிட்டு
கொண்டிருந்தான்.
நீரஜாட்சி வெகுண்டவளாய்
"என்னது? என்னை பார்த்தா உனக்கு இளிச்சவாய்
மாதிரி தெரியுதா? நான் எப்போடா சொன்னேன் நான் உன்னோட ஃபேமிலினு.
எப்பிடி எப்பிடி சம்பளமே எனக்கு அதிகப்படியோ? இன்கிரிமெண்ட்லாம் நமக்கு எதுக்குனு நீ
என்னையே கேக்கிற, உனக்கு தேவை இல்லடா.
பிகாஸ் நீ எம்.டி. ஆனா எனக்கு வேணும். சப்போஸ் நீ எனக்கு இன்கிரிமெண்ட் குடுக்கலனு வை, நான் உன்னோட ரைவல் கம்பெனியில போய் சேர்ந்துடுவேன்" என்று
மிரட்டினாள்.
அவன் அதைக் கேட்டு ஏதோ நகைசுவையை
கேட்டது போல் விழுந்து விழுந்து சிரித்தவன் "உன்னைலாம் எவனும் வேலைக்கு வச்சுக்க மாட்டான்டி. நான்
தான் ஏதோ பாவப்பட்டு வச்சிருக்கேனாக்கும்.
உன் பங்க்சுவாலிட்டிக்கே உனக்கு மெமோ மேல மெமோ போடலாம்" என்றான் நக்கலாக.
நீரஜாட்சி அவனது கேலியில் முகம் சிறுத்தவள் இறுகிய குரலில்
"எனக்கு இதுலாம் தேவை தான். என் மானம்,
ரோசம், சுயமரியாதை எல்லாத்தையும் விட்டுட்டு
இப்பிடி நீ போற வர்ற இடம்லாம் உன் பின்னாடியே வந்தா
நீ இப்பிடி தான் பேசுவ. இனி நீயே குடுத்தாலும் எனக்கு இன்கிரிமெண்ட் தேவை இல்லை" என்று
சொல்லிவிட அவன் தனது கேலியை அவள் தவறாகப் புரிந்துகொண்டு
விட்டாளோ என்ற ஐயத்துடன் திரும்பி பார்க்க அங்கே நீரஜாட்சி சுண்டி போன முகத்துடன் நின்றாள்.
ரகுநந்தன் மனதிற்குள்
"அடேய்
என்ன காரியம்டா பண்ணி வச்சிருக்க? உன் கிண்டலை அவ
சீரியஸா நினைச்சிட்டா போலயே.
நீருகுட்டி முகமே சரியில்ல! நான் அவ செல்ஃப் ரெஸ்பெக்டை சீண்டிட்டேனு என்னை வில்லன்
ரேன்ஜூக்கு புரொமோட் பண்ணிடுவாளே! சின்ன வயசுல சொன்ன
ஒரு வார்த்தைக்காக நான் இருக்கிற திசைப்பக்கமே திரும்பாதவ எதோ பகவான் புண்ணியத்துல என்
கிட்ட பேச ஆரம்பிச்சா. இப்போ நானே அதுக்கு ஆப்பு
வச்சிட்டேன் போலயே" என்று யோசித்தபடி அவளை எப்படி இயல்புக்கு கொண்டு வருவது என்று யோசிக்க அவளோ
இன்னும் முகம் கறுக்கவே நின்று கொண்டிருந்தாள்.
Humour, family sentiment are the plus point for this story.Kudoos.
ReplyDeleteSelf aappu
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete