அத்தியாயம் 11

  அத்தியாயம் 11 நாம் அனைவரும் ஒரு ‘ ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி ’ யில் வாழ்ந்து வருகிறோம் . நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும் முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல் நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம் . ஏன் என்னைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்பதற்கான தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்வதில்லை . வளர்ப்பதற்கு இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிப்பதும் இல்லை .                                                           இப்படிக்கு சந்திரிகை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி , மில்லர் மெமோரியல் லைப்ரரி ... சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா . அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடியவாறு மிகவும் மெதுவான குரலில் சந்தோஷிடம் அவனது சோர்வுக்கான காரணத்தைக் கேட்டாள் . “ இன்னைக்கு எங்கண்ணி நான் வச்சிருந்த பி . டி . எஸ் ஆல்பம் கலெக்சன் எல்லாத்தையும் தூக்கி குப்பையில வீசிட்டாங்க சந்து ... நான் இல்லாத நேரத்துல செஞ்சிருக்காங்க ... இன்னைக்கு மானி

அன்பு 13

This story is removed for book printing

Comments

  1. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 13)

    சில பேருக்கு சொல் புத்தி இருக்கும், சில பேருக்கு சொந்த புத்தி இருக்கும். இதுல முதல்ல தனுவுக்கு இருந்தது சொல் புத்தி... அதனாலத்தான் லூஸ் டாக்கிங் விட்டுட்டு, தன் மரொயாதையை தானே காத்துல பறக்க விட்டுட்டான்.
    இதோ இப்ப இருக்கிற தனுவுக்கு சொந்த புத்தி வந்துட்டதால, உடனே சம்முக்கு போன் போட்டு 'சாரி' சொல்றான் பாருங்க. இது நல்ல புள்ளைக்கு அடையாளம்.

    இந்த பாடம் கூட நவீன் பொண்டாட்டி பிரியா சொன்னதாலத்தான் வந்ததுன்னாலும், உடனே பொண்டாட்டிக்கு தாததம் பண்ணாம போன் போட்டான் பாருங்க இது சொந்த புத்தி.

    கணவன் மனைவிக்குள்ள, வெறும் காதல் மட்டும் இருந்துட்டா போதாது... அது கூடிய சீக்கிரமே திகட்டிடும்.
    புரிதலும் இருக்கணும், அப்பத்தான் வாழ்க்கை ஸ்மூத்தா போகாட்டியும், விட்டுக்கொடுத்தலும், அனுசரணையும், அரவணைப்பும், தட்டிக் கொடுத்தலும் வரும்.

    முடிஞ்ச வரைக்கும், ரெண்டு பேருமே சுயமாவும் நிக்கணும், தட்டிக் கொடுத்தும் போகணும்.
    அது தான் புரிதலோட கூடிய காதல். வரப்பு உயர, நீர் உயரும்ங்கிற மாதிரி, தன்னோட பொண்டாட்டி உயர்ந்தா...
    புருசனுக்குத்தான் அங்க நல்லப்பேரு கிடைக்கும்.
    அதே மாதிரி புருசன் உயர்ந்தாலும், பொண்டாட்டிக்குத்தான் அங்க மதிப்பு உயரும்.
    😄😄😄
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. அனுபவத்திற்கும் பிறகு தான் புரிதல் வருமோ

    ReplyDelete

Post a Comment