அன்பு 8

Image
  “புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை. மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர். “ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?” சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள். “இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்” மருத்துவர

அன்பு 6

 



“விருப்பா வெறுப்பா என்பது புரியாத நிலையில் மதில் மேல் பூனையாக மனம் தவிக்க ஒரு பக்கம் காதலும் மறுபக்கம் உறவுகளும் நம்மை இணைக்க தவம் இருக்க நாமிருவரோ இருதுருவமாய்!

மங்கலநாதம் ஒலிக்க பெற்றோர் பெரியோரின் ஆசி அட்சதை பூக்களாய் தூவ உற்றார் உறவினர் சூழ அஸ்வதியின் கழுத்தில் மாங்கல்யத்தைப் பூட்டினான் அதர்வா.

மூன்றாவது முடிச்சை நாத்தனார் தான் இடவேண்டுமென்ற வழக்கத்திற்கேற்ப சஹானா மேடிட்ட வயிற்றுடன் முடிச்சிட இனிதே மாங்கல்யதாரணம் நிறைவுற்றது.

சாந்தனுவின் கரங்கள் அட்சதையை மனம் குளிர தூவியது. பின்னர் தங்கையை கர்ப்பவதியாகக் கண்டதும் தன்னிச்சையாக அவனது விழிகள் சம்விருதாவின் பக்கம் சென்றுவிட்டது.

அவளும் முகம் மலர அட்சதை தூவிவிட்டு அதர்வாவுக்கும் அஸ்வதிக்கும் வாழ்த்து கூறிக் கொண்டிருந்தாள். கூடவே ஆருத்ராவின் மைந்தன் பிருத்வியைத் தன்னோடு வைத்துக் கொண்டாள்.

மாங்கல்யதாரணத்துக்குப் பின்னர் மற்ற சடங்குகள் ஆரம்பித்தன. அதில் ஒன்று குடத்தில் மஞ்சள்தண்ணீரை ஊற்றி அதில் மோதிரத்தையும் சாவியையும் போட்டு மணமக்களில் யார் இரண்டையும் எடுக்கிறார்கள் என்று பார்ப்பது.

முதலில் சுனில் மோதிரத்தைப் போட்டுவிட்டு “யுவர் கேம் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று ரெஃப்ரியைப் போல குடத்திற்கு மேலே கையை ஆட்டவும் அதர்வாவும் அஸ்வதியும் குடத்திற்குள் கைவிட்டு மோதிரத்தைத் தேட ஆரம்பித்தனர்.

மணமக்கள் தேடுதல் வேட்டைக்கிடையே கள்ளத்தனமாக ஒருவரை ஒருவர் பார்வையால் சீண்டுவதையும், ஒருவர் மற்றொருவரின் விரல் தீண்டலில் நாணுவதையும் பெரியவர்கள் கண்டும் காணாமல் இருவரையும் உற்சாகப்படுத்தினர்.

“அதர்வா விட்டுடாதடா... நம்ம குடும்ப மானமே உன் கையில தான் இருக்கு”

சாந்தனு உசுப்பேற்றுவதைக் கவனித்த சம்விருதாவோ “ஒரு மோதிரத்துல தான் இவங்க குடும்ப மானம் இருக்கு போல” என்று உதட்டைச் சுழித்த அடுத்த நொடி அங்கே மணமக்களில் அதர்வாவின் கரத்தில் சிக்கியது மோதிரம்.

“ஹேய்” என்று கமல், விமல், சுனில் மற்றும் சஹானா உற்சாகக்கூச்சலிட

“அப்ப குடும்பத்தோட செல்வம் எல்லாம் நம்ம அதர்வா கைவசம் தான்” என்று அவனது தோளில் அடித்துக் கூறினாள் ஆருத்ரா.

“ஓ.கே! ஓ.கே! அடுத்த கேமை ஸ்டார்ட் பண்ணுங்க... அதுல நான் தான் வின் பண்ணுவேன்” என்றாள் அஸ்வதி.

உடனே அதே குடத்தில் சாவிக்கொத்தைப் போட்டனர் இளையவர்கள்.

“அதர்வா! அதர்வா!”

இளையவர்கள் அவனுக்கு ஆதரவாக கோஷமிட சம்விருதாவோ அஸ்வதியை உற்சாகப்படுத்தினாள்.

முடிவில் அஸ்வதியே ஜெயித்தாள்.

“ஹேய்” என்று அவள் சாவிக்கொத்தைக் காட்டி உற்சாக கூச்சலிட

“ஹப்பா! அப்ப வீட்டோட கண்ட்ரோல் முழுக்க இனிமே அஸ்வி கையில தான்” என்றாள் சம்விருதா.

இவ்வாறு அடுத்தடுத்து நடந்தேறிய சடங்குகள் சம்விருதாவுக்கும் சாந்தனுவுக்கும் அவர்களின் திருமணத்தை நினைவுறுத்த வழக்கம் போல அதை மனதுக்குள் அசை போட்டபடி இருவரும் திறமையாக வெளிப்பார்வைக்கு மனவுணர்வுகளைக் காட்டிக்கொள்ளாமல் நடமாடினர்.

சடங்கு சம்பிரதாயங்கள் ஒரு பக்கம் நடக்க மற்றொரு பக்கமோ சாந்தனு மற்றும் சம்விருதாவின் பெற்றோர் தங்களின் பிள்ளைகள் இதை பார்த்தாவது மீண்டும் பழையபடி அன்னியோன்யமாகி விடமாட்டார்களா என்ற ஏக்கத்தைக் கண்களில் தேக்கிக் கொண்டு உலாவினர்.

புதுமணமக்கள் சாப்பிடும் போது ஒருவருக்கொருவர் ஊட்டிவிட சாந்தனுவையும் சம்விருதாவையும் பற்றி கேட்கவா வேண்டும்? பழைய நினைவுகளில் ஒருவர் மாற்றி ஒருவர் மூழ்கினர்.

இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருக்க அதர்வா அஸ்வதியின் திருமணம் இனிதே நிறைவுற மாலையில் வரவேற்பு, பலகாரபந்தி என தடபுடலாக மற்ற நிகழ்வுகள் நடந்து முடிந்தன.

புதுமணமக்கள் தங்களின் வாழ்க்கையை ஆரம்பிக்க அன்றே நாள் குறிக்கப்பட்டிருக்க அதற்கான ஏற்பாடுகளை நீலகண்டனின் இல்லத்தில் செய்து முடித்திருந்தனர் இளையவர்கள்.

இதில் கலந்து கொள்ளாது சம்விருதா அவர்களின் மாடியறை இருக்கும் வராண்டாவில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்திருந்தாள்.

கீழ்த்தளத்தில் பெண்களிள் சிரிப்பொலி கலகலவென ஒலிக்க அவளோ வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அப்போது படிகளில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது.

“சம்மு!”

வந்தவர் அவளது அன்னை செண்பகாதேவி.

“என்ன இங்க உக்காந்திருக்க? தூங்கலையா?”

ஆதுரமாய் அவர் கேட்கவும் சம்விருதாவின் கண்களில் நீர் கோர்த்தது. அதை மறைக்காமல் அன்னையை ஏறிட்டவள்

“நீ இவ்ளோ கேரிங்கா என் கூட பேசி எவ்ளோ நாளாகுதும்மா?” என்றாள் குரம் கம்ம.

செண்பகாதேவியின் தாயுள்ளம் தனது பெண் அழுவதை தாங்கிக் கொள்ளாமல் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டது.

அன்னையின் வயிற்றில் புதையுண்டவள் மீண்டும் சிசுவாய் மாறி அந்த மணிவயிற்றிலேயே உறைந்துவிட்டால் கூட நலமென சிந்தித்தாள்.

ஆனால் மீண்டும் பிறந்து வளர்ந்து சாந்தனுவை மணந்து மீண்டும் பிரிவில் வந்து நிற்க எதற்காக அந்த மறுபிறப்பு என மனம் நொடித்துக் கொண்டது.

“நீ கொஞ்சம் விட்டுக் குடுத்திருந்தா இவ்ளோ தூரம் பிரச்சனை வந்திருக்காது சம்மு”

சராசரி தாயாய் பெண்ணுக்கு அறிவுரை கூறினார் அவர்.

சம்விருதாவோ பதிலளிக்கவில்லை. ஏனெனில் அவளுக்குத் தெரியும் அவள் எந்தளவுக்கு விட்டுக் கொடுத்திருந்தாள் என்பது.

“என்ன தான் காலம் மாறுனாலும் ஒரு பொண்ணால தனியா வாழமுடியாது சம்மு... இந்தச் சமுதாயம் அவளைத் தனியா வாழவிடாது... எதாவது ஒரு வகையில அவளை நாசம் பண்ண வக்கிரம் பிடிச்ச மிருகங்களை அனுப்பி வைக்கும்... என்னைக்குமே குடும்பமும் புருசனும் தான் ஒரு பொண்ணுக்குப் பாதுகாப்பு சம்மு... கொஞ்சம் இறங்கி வாடி”

சம்விருதா மெதுவாக அன்னையின் அரவணைப்பிலிருந்து விடுபட்டாள்.

விரக்தியாய் அன்னையைப் பார்த்து புன்னகைத்தவள் “எனக்கும் குடும்பம், குழந்தை, புருசன்னு வாழ தான் ஆசைம்மா... நான்னு இல்ல, எந்தப் பொண்ணும் ஒத்தக்காச்சி பனைமரமா நிக்கணும்னு ஆசைப்படமாட்டா... ஆனா அந்தக் குடும்ப வாழ்க்கை ஸ்மூத்தா போகுறதுக்கு விலையா என் சுயமரியாதைய என் கனவை கேக்குறார் உன் மருமகன்... காதலுக்காக நான் நிறைய மாறுனேன்... ஆனா ஒரு கட்டத்துல படிப்பை தூக்கியெறிஞ்சிட்டு பிள்ளை பெத்துக்குற மிஷினா மாறுனு சொன்னா எனக்கு எவ்ளோ வலிக்கும்னு யோசிச்சுப் பாரு... நான் ஒன்னும் காலம் முழுக்க குழந்தை வேண்டாம்னு சொல்லலை... ஜஸ்ட் ரெண்டு வருசம் அவ்ளோ தான்... ஆனா உன் மருமகன் யாரோ என்னமோ சொன்னதுக்கு என்னைத் திட்டித் தீர்த்தது, டெய்லி சண்டை போட்டது இதுல்லாம் தப்பில்ல... அவன் செஞ்சது தப்புனு அவனுக்குப் புரிய வைக்க நினைச்ச என்னை கன்னத்துல அறைஞ்சது உங்க யாருக்குமே தப்பில்ல... ஆனா நான் எதிர்த்துப் பேசி டிவோர்சுக்கு அப்ளை பண்ணுனது தான் தப்பு... அதை தானே சொல்ல வர்ற?” என்க

“பேசி முடிக்க வேண்டிய பிரச்சனைய சண்டை போட்டு சிக்கலாக்குனது நீங்க தான்... ஏதோ கோவத்துல ஒரு தடவை அறைஞ்சதுக்காக டிவோர்ஸ் அளவுக்குப் போறதுலாம் தப்புடி சம்மு” என்றார் செண்பகவள்ளி.

சம்விருதா நாற்காலியிலிருந்து விருட்டென எழுந்தாள்.

“என்னம்மா பேசுற நீ? எந்த ஆம்பளையும் கோவத்துல தன்னை பெத்த அம்மாவ அடிச்சதா நான் கேள்விப்படல... அம்மாக்கு மட்டும் தான் மரியாதை... பொண்டாட்டினா இவங்களுக்கு இளப்பமா? எங்கயோ எவனோ சொன்னதுக்காக என்னை அறைஞ்சது தப்பு தான்மா... நீ மட்டுமில்ல, தனுவே என்னை அறைஞ்சதை ஒரு விசயமாவே நினைக்கல” என்றாள் வேதனையுடன்.

செண்பகவள்ளியோ “யார் அறைஞ்சது? உன் புருசன் தானே... உன் மேல உயிரையே வச்சிருக்குறவனுக்கு உன்னை அறைய உரிமை இல்லையா சம்மு?” என்று கேட்க

“இல்லைம்மா... இது ஒன்னும் விளையாட்டுக்காக அடிச்சு சிரிக்குறது இல்ல... நீ எனக்குக் கீழ தான், என்னை எதிர்த்து பேச உனக்கு உரிமை இல்லைங்கிற ஆணாதிக்கத்தோட அடையாளம் தான் எல்லா ஆம்பளைங்களும் கோவத்துல பொண்டாட்டிங்களை அடிக்குறதுக்குக் காரணம்... தனு என்னைக் காதலிக்கிற அளவுக்கு நானும் அவனைக் காதலிக்குறேன்... ஆனா இந்த அறை காதலால கிடைச்ச பரிசு இல்ல... பொண்டாட்டினா என்ன வேணும்னாலும் செய்யலாங்கிற டிபிக்கள் ஆம்பளைபுத்தியோட வெளிப்பாடு... அந்த நேரத்துல நான் எவ்ளோ அவமானமா ஃபீல் பண்ணுனேன்னு எனக்கு மட்டும்  தான் தெரியும்... ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கம்மா, காதலும் மரியாதையும் வேற வேற ட்ராக்... ரெண்டையும் போட்டு குழப்பிக்கவோ, ஒன்னுக்காக இன்னொன்னை இழக்கவோ நான் ஒன்னும் உன்னோட ஜெனரேசன் இல்ல... இப்பவும் டிவோர்ஸ் அப்ளை பண்ணுனேனே தவிர ஒவ்வொரு நிமிசமும் இந்த ரெண்டு மாசமா நான் எனக்குள்ள புழுங்கி புழுங்கி செத்துட்டிருக்கேன்... அதுல்லாம் உங்க யார் கண்ணுக்கும் தெரியாது... இப்பவே தனு வந்து நான் உன்னை அறைஞ்சது தப்பு தான் சம்முனு சொல்லட்டும், அவன் என்ன சொன்னாலும் நான் செய்வேன்மா... ஆனா அவன் வரமாட்டான்... ஏன்னா அவனோட ஆம்பளை ஈகோ அவனை வரவிடாது... அவன்னு இல்ல, எவன் ஒருத்தன் பொண்டாட்டிய சகமனுசியா நினைக்காம தனக்குச் சொந்தமான ப்ராப்பர்ட்டியா பாக்குறானோ அவனுக்குலாம் பொண்டாட்டி மேல கை வக்குறது தப்புங்கிறது புத்தியில உறைக்காதும்மா” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென தனது அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள் சம்விருதா.

செண்பகவள்ளி மகளின் ஆதங்கம் புரிந்தாலும் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை எண்ணி கண்ணீர் வடித்தவாறு படிகட்டுகளில் இறங்க ஆரம்பித்த போது, அங்கே சிலையாய் நின்று இவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சாந்தனுவைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்து நின்றுவிட்டார்.

அவனது முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லை.

“சாப்பிடப் போங்கத்தை... நைட் சாப்பிடாம தூங்குனா உங்களுக்கு அல்சர் கம்ப்ளைண்ட் வந்துடும்னு மாமா கூப்பிட்டார்”

இயந்திரம் போல ஒப்பித்துவிட்டு படிக்கட்டுகளில் ஏறியவனை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது என்று புரியாது வழக்கம் போல அனைத்து பாரத்தையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார் செண்பகவள்ளி.


Comments

  1. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 6)

    எனக்கென்னவோ இந்த செம்பகவள்ளி அம்மா சொல்றது கோக்குமாக்கா இருக்குது. பெண்ணுக்கு அவளோட குடும்பமும், புருசனும் தான் பாதுகாப்புங்கறது அபத்தமா இருக்குது. திடீர்ன்னு
    அந்த புருசன் இறந்துட்டா, குடும்பமே அவளுக்கு பக்க பலமா நிக்கலைன்னா, அப்ப அவளோட நிலைமையே அதோகதி தானா...? பெண்ணுக்கு படிப்பும் வேலையும் தான் என்னென்னைக்கும் ஒரு சூரியிட்டியையே கொடுக்குது.
    அதோட தன்னம்பிக்கையும், தன் காலுல நிக்குற சுய மரியாதையும் தான் அவளை தலை நிமிர்ந்து வாழ வைக்குது.

    தவிர, காதலும், உயிரையும் வைச்சிருக்கிறவன் அறையலாம்ன்னு யாரு சொன்னது...? அதே காதலும், உரிமையும் இருக்குதுன்னு
    பதிலுக்கு அவ திருப்பி கொடுத்திருந்தா, அவன் சும்மா இருப்பானா..? ஆம்பிளை பிள்ளை கொஞ்சம் வளர்ந்துட்டாலே, தோளுக்கு மிஞ்சின பிள்ளையை அடிக்க கூடாது, அவனை தோழன்னு சொல்ற சொஸைட்டித்தான், ஒரு பெண் வயசுக்கே வந்து இருந்தாலும், அவளை பெத்தவங்களும் சரி, மத்தவங்களும் சரி ஓரேயடியாவது கொடுத்தா தான் அடங்குவான்னு நினைக்கிறாங்க. இது பார்ஷியாலிட்டி தானே..?
    விட்டா, வடிவேல் மாதிரி
    'பேச்சு பேச்சா இருக்கும் பொழுது, கை நீட்டக் கூடாதுன்னு ' புலம்ப விட்டுடுவாங்க போல.

    ஜோக் அபார்ட்ஸ்.. ! இப்பவாவது தனு தப்பு தன் மேலத்தான்னு ரியலைஸ் பண்ணி புரிஞ்சுக்கிட்டா சரி...!
    😄😄😄
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 6)

    செம்பகவள்ளியம்மா சொல்றது கொஞ்சம் முரண்பாடா இருக்கிற மாதிரி தெரியுது.
    என்னைக்குமே குடும்பமும் புருசனும் தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புங்கறாங்க சரி.
    அந்த புருசனே போய் சேர்ந்துட்டா,..? குடும்பமே துணை நிக்கலைன்னா...?
    அப்ப அவளோட படிப்பும் வேலையும் தானே என்னெனைன்க்கும் அவளுக்கு
    துணை நிக்கும். அவளோட தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் தானே கூடவே வரும்... மத்த வெளிப்பூச்செல்லாம் சாயம் வெளுத்துடும்ன்னு... ஏன்
    இவங்களுக்கு புரிய மாட்டேங்குதோ தெரியலையே..?

    அவ மேல உசிரையே வைச்சிருக்கிறவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாம புருசன்ங்கிற ஆணவத்துல அவளை ஊரடி அடிச்சிட்டான் சரி. அதே மாதிரி சம்மூவும் அதிக காதல்லயோ, இல்லை கோபத்துலயோ பதிலுக்கு அவனை ஒரு அறை அடிச்சிருந்தா சும்மா இருப்பானா....? இருக்க மாட்டான் தானே...?
    காலம்காலமா, பொம்பிளைங்கன்னா ஒரு வார்த்தையில அடங்கலைன்னா ஓரடி கொடுத்து அடக்கி வைன்னு, எந்த பிரம்மானந்தா சொன்னானோ.... அவன் என் கையில கிடைச்சா செத்தான்.
    கடைசியில வடிவேல் மாதிரி 'பேச்சு பேச்சா இருக்கணும், கையெல்லாம் நீட்டக் கூடாதுன்னு' புலம்ப வைச்சிடுவாங்க போலவே..?

    ஜோக் அபார்ட்ஸ்... என்ன இருந்தாலும், பொண்டாடியே ஆனாலும் கை நீட்டறது தப்புத் தானே. அது என்ன, ஆம்பிளை மட்டும் வளர்ந்துட்டா, வயசுக்கு வந்த புள்ளையை அடிக்க கூடாது, தோழனா தான் பார்க்கணும்ங்றது. அதே பெண் பிள்ளையா இருந்தா, வயசுக்கே வந்திருந்தாலும் , அது பெத்தவங்களேயானாலும்
    கை நீட்ட வேண்டியது. ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயம்ன்னு ஏன் பார்ஷியலிட்டி பார்க்கிறாங்களோ தெரியலை ?

    இனிமேலாவது தான் செய்தது தப்புத்தான்னு, தனு ரியலைஸ் பண்ணுவானா ?! எங்க...நிறைய ஆம்பிளைங்க தான் செய்த தப்பைக் கூட இது தப்புன்னு உணரது கூட இல்லை. இதுல எங்கிருந்து பீல் பண்றது ? போங்கடா, நீங்களும் உங்க கூமுட்டை நியாயங்களும்.

    😄😄😄
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment