Posts

Showing posts from September, 2024

அன்பு 7

Image
  “நெஞ்சில் நிரம்பிய நேசத்தில் ஒரு துளி கோபம் கலந்தேன். மொத்த நேசமும் துவேசமாய் மாறிப்போனது. மீண்டும் அந்நேசத்தை மீட்க எண்ணாது ஈகோவை ஆடையாய் தரித்துக் கொண்டது மூளை” சம்விருதாவின் பேச்சனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுவிட்டான் சாந்தனு. அவள் பேசியது அனைத்தையும் ஒப்புக்கொள்ள இப்போது கூட அவன் மனம் மறுத்தது. ஏன் என்றால் சிறுவயதில் எத்தனையோ முறை தந்தை கோபத்தில் தாயாரை அறைவதைப் பார்த்திருக்கிறான் அவன். ஆனால் அவனது அன்னை ஒன்றும் அதற்காக அவரை விட்டு விலகிவிடவில்லை. நான்கைந்து நாட்கள் பேசாமலிருந்து விட்டு மீண்டும் சமாதானமாகிவிடுவது அவர்களின் வாடிக்கை. எனவே கணவன் மனைவியை அறைவது மாபெரும் தவறு என்று அவனது புத்திக்கு இப்போது வரைக்கும் உறைக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை படிப்புக்காக குழந்தைப்பேற்றை தள்ளிப் போட சம்விருதாவுக்குக் கிடைத்த வாய்ப்பு தான் அந்நிகழ்வு. தான் கோபத்தில் அறைந்ததை சாக்காக வைத்துக்கொண்டு படிப்புக்குத் தடையாக தானோ குழந்தையோ வந்துவிடுவோமென எண்ணித் தான் சம்விருதா விவாகரத்து முடிவுக்கு வந்திருக்கிறாள் என்பது அவனது ஊகம். அப்படி இல்லை என்று சொல்லி அவனுக்குப் புரியவைக்க சம்விருதாவ

அன்பு 6

Image
  “விருப்பா வெறுப்பா என்பது புரியாத நிலையில் மதில் மேல் பூனையாக மனம் தவிக்க ஒரு பக்கம் காதலும் மறுபக்கம் உறவுகளும் நம்மை இணைக்க தவம் இருக்க நாமிருவரோ இருதுருவமாய்! மங்கலநாதம் ஒலிக்க பெற்றோர் பெரியோரின் ஆசி அட்சதை பூக்களாய் தூவ உற்றார் உறவினர் சூழ அஸ்வதியின் கழுத்தில் மாங்கல்யத்தைப் பூட்டினான் அதர்வா. மூன்றாவது முடிச்சை நாத்தனார் தான் இடவேண்டுமென்ற வழக்கத்திற்கேற்ப சஹானா மேடிட்ட வயிற்றுடன் முடிச்சிட இனிதே மாங்கல்யதாரணம் நிறைவுற்றது. சாந்தனுவின் கரங்கள் அட்சதையை மனம் குளிர தூவியது. பின்னர் தங்கையை கர்ப்பவதியாகக் கண்டதும் தன்னிச்சையாக அவனது விழிகள் சம்விருதாவின் பக்கம் சென்றுவிட்டது. அவளும் முகம் மலர அட்சதை தூவிவிட்டு அதர்வாவுக்கும் அஸ்வதிக்கும் வாழ்த்து கூறிக் கொண்டிருந்தாள். கூடவே ஆருத்ராவின் மைந்தன் பிருத்வியைத் தன்னோடு வைத்துக் கொண்டாள். மாங்கல்யதாரணத்துக்குப் பின்னர் மற்ற சடங்குகள் ஆரம்பித்தன. அதில் ஒன்று குடத்தில் மஞ்சள்தண்ணீரை ஊற்றி அதில் மோதிரத்தையும் சாவியையும் போட்டு மணமக்களில் யார் இரண்டையும் எடுக்கிறார்கள் என்று பார்ப்பது. முதலில் சுனில் மோதிரத்தைப் போட்டுவிட்டு

அன்பு 5

Image
  “வாழ்க்கை வயலில் எதிர்பார்ப்புகளை விதைத்து கருத்து வேறுபாடுகளை நீராய் இறைத்து ஏமாற்றத்தை அறுவடை செய்தவர்கள் நாம்! வெறுப்பெனும் மிச்சமீதி நிரம்பியிருக்கும் வாழ்க்கை வயலில் அடுத்த விளைச்சலுக்குப் பயிரிடப் போவது எதை?” “இன்னைக்கு நவீனோட பொண்ணுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே... ஹோட்டல்ல செலிபிரேட் பண்ணுறாங்க... ஈவ்னிங் போயிட்டு வந்துடுவோம் சம்மு” “சரி தனு... என்ன கிப்ட் வாங்கிட்டுப் போகலாம்?” “குழந்தைனா வேற என்ன எதிர்பார்க்கப் போகுது? பிங் கலர்ல ஒரு டெடி வாங்கிட்டுப் போவோம்” “அது எப்பிடி நீ ப்ரீ-டிஃபைண்டா யோசிக்கிற தனு? பொண்ணுனா பிங் கலர் டெடி தான் பிடிக்கணுமா? அவளுக்குனு வேற எதாச்சும் ஆசைகள் இருக்கும்டா” “அச்சோ! குழந்தைக்கு அவ்ளோ தூரம் யோசிக்க வராது சம்மு... நீ ஓவரா யோசிக்காம உன் ஆபிசுக்குக் கிளம்பு” சம்விருதா கிளம்ப எத்தனிக்கையில் சாந்தனு யோசனையில் ஆழ்ந்தான். நவீனுக்கும் ப்ரியாவுக்கும் திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. ஆனால் தனக்கும் சம்விருதாவுக்கும் மணமாகி இரண்டாண்டுகள் கழிந்து விட்டது. இருப்பினும் சம்விருதா திருமணமாகி முடிந்த கையோடு கேட்ட வாக்குக்காக குழந்தை வேண்டாமென அவர்கள

அன்பு 4

Image
  “மிதவாதமாக ஆரம்பித்த பொறுமையின்மை மிதமிஞ்சிய பிடிவாதமாய் விஸ்வரூபமெடுத்து பிரிவெனும் கோர தாண்டவத்தை ஆடி தீர்த்ததால் பரிதவித்து உயிர் போகும் தருவாயை எட்டிய நம் காதலை எப்படி மீட்டெடுப்பது?” “அந்த க்ரீன் கலர் புடவைய எடுங்க” “சாந்தனு கல்யாணத்துக்குத் தானே எல்லாரும் ஒரே மாதிரி க்ரீன் புடவை வாங்குனோம்... இந்த தடவை வேற கலர் வாங்குவோம்” “அது ராமர் பச்சை... இது மாந்துளிர் பச்சை... ரெண்டும் வேற வேற மதினி” திருமணத்திற்கு ஆடை அணிகலன்கள் எடுப்பதற்காக நீலகண்டனின் குடும்பத்தார் அனைவரும் தென்காசி ஹாஜி முஸ்தபா ஜவுளி கடைக்கு வந்திருந்தனர். பெண்கள் புடவை எடுப்பதிலும் முன்னர் எடுத்த புடவைகளின் நிறங்களை நினைவு கூர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பதிலும் நேரத்தைக் கடத்த ஆண்களோ விதியே என நாற்காலிகளில் அமர்ந்து அக்காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சாந்தனு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? சலிப்பாய் அமர்ந்திருந்தவனின் தோளைத் தொட்டான் அதர்வா. அவனது முகத்தைப் பார்க்கவே சாந்தனுவுக்குப் பரிதாபமாக இருந்தது. “என்னடா பாவப்பட்ட பையனாட்டம் முகத்தை வச்சிருக்க? இது ஆரம்பம் தான்... இனிமே ஒவ்வொரு தடவை ஷாப்பிங் வர்றப்பவு

அன்பு 3

Image
  “நொடிப்பொழுதில் காதல் கொண்டோம்; கணப்பொழுதில் கரம் பிடித்தோம்; நிமிடப்பிரிவைக் கூட நொந்து கொண்டோம். இன்றோ முகம் காண பிடிக்காமல் திரும்பி நிற்கிறோம் இருவரும்” “அங்க உக்காந்து என்ன புத்தகத்தைத் திருப்பி திருப்பி புரட்டிட்டிருக்க சம்மு? கல்யாணத்துக்கு லீவ் போட்டுட்டு வந்திருக்கனு பேரு தான்” கீழ்த்தளத்திலிருந்து கேட்ட அன்னையின் உரத்தக்குரலில் புத்தகத்திலிருந்து கவனம் கலைந்தாள் சம்விருதா. “ப்ச்” ஒட்டுமொத்த சலிப்பையும் ஒற்றை ‘ப்ச்’சில் கொட்டிச் சொன்னவளின் குரலைக் கேட்டு மடிக்கணினியும் கையுமாக அமர்ந்திருந்த சாந்தனு அதிருப்தியாய் விழித்தான். “என்ன ப்ச்? நேத்து பொன்னுருக்குனப்பவும் நீ இப்பிடி தான் புக்கும் கையுமா இருந்தியாம்... அத்தை சொன்னாங்க... ஆடிட்டர் ஆகுறதுக்கு இப்பவே பிராக்டிஷ் பண்ணுறிங்களோ?” எகத்தாளமாக வினவியபடி மீண்டும் மடிக்கணினிக்குள் புதையவிருந்தவனை சம்விருதாவின் விரல் சொடுக்கும் சத்தம் நிமிர்ந்து பார்க்க வைத்தது. அவன் முன்னே நின்று கொண்டிருந்தவள் பட்டென அவனது மடிக்கணினியின் திரையை வேகமாக அறைந்து மூடவும் சாந்தனுவுக்குக் கோபம் வந்துவிட “ஏய் அறிவிருக்காடி?” என்று கத்தி