பூங்காற்று 42

நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற " டாம் ' ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன. ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது. ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத...
அழகில் தொலைந்தேன் ஆருயிரே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 21)
இப்ப ஓடி, ஓடி... தேடித் தேடி...
அவ காதல் உண்மைன்னு தெரிஞ்சுகிட்டாச்சு... இப்ப
என்ன செய்யப் போறான்..?
காதலுக்கான மரியாதைையை
செய்வானோ....????
எப்பா விஷ்வாமித்ரா எதுவானாலும் சொல்லிட்டு செய்யப்பா...! திடீர் திடீர்ன்னு
குண்டைத் தூக்கி போடாதே.
அதிக கோபத்தையும் காட்டுறே, தண்டனையும் (சாபத்தையும்) நீயே கொடுக்கிறே, விமோசனத்தையும் நீயே கொடுக்கிற.
லிட்டில் ஹார்ட், தாங்காதுப் பாரு..!
😆😆😆
CRVS (or) CRVS 2797